ரமழானும் எமது பணியும்

வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ வல்லோன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் மனிதனை இவ்வுலகில் தனது பிரதி நிதியாக படைத்தான். அவன் மனிதனை படைத்ததன் நோக்கத்தை அல்குர்ஆனில் தெளிவாக கூறுகிறான். “மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்தேன்..” அல்லாஹ்வின் நோக்கமே மனிதன் தன்னை வணங்க வேண்டும் …

அகந்தை எனும் மமதை

அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின் முதல் வேலை. மனிதனுடைய வளர்ச்சிப்படியில் மமதை கால் நீட்டி படுத்துக் கொண்டிருக்கும்.இது தான் கடைசி படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாற துவங்கும் போது வெற்றியின் கதவுகள் துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். அகந்தை மனிதர்களின் வேகமான கால்களை வெட்டி வீழ்த்தும் ஓர் ஆயுதமாகும் இது கண்களுக்கு தென்படாது. …

இரு வகை பெண்கள்

மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என தன் வாழ்வை தெரிவு செய்யும் பெண்களும் உள்ளனர். காதலித்தவன் கலங்குவான் என எண்ணி தன்னை பெற்றெடுத்தவர்களை மறந்து தன் எல்லை தாண்டியவளும் உண்டு. எவனோ அழுவதற்கு ஏன் நான் கலங்க வேண்டும் என நினைத்து பெற்றோரை சிரிக்க வைப்பவளும் உண்டு. தன் கணவன் தொட வேண்டிய கையை எவனோ …

பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களே நாட்டின் இன்றைய தேவையாகும்

உலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது  இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும். சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களால் மாத்திரமே சிறந்தோர் சமூகத்தைச் சிந்திக்க முடியும். பயிற்சியும் மீள் கற்கையும் மாத்திரமே ஆலிம்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் ஆலிம்கள் நாட்டின் புலமைச் சொத்து. இது உறுதி செய்யப்படுவதில் தொடர் பயிற்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருப்பினும் அதை இலங்கைச் சூழலுக்கு சிறப்பாக ஒப்புவிக்கும் ஆற்றலை ( …

உஷார் நீங்களும்தான்!

“தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது ” என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது எங்குபோனாலும் சாப்பிட்டாலும் கூட ஓர் போட்டோ எடுத்து போஸ்ட் போடாமல் யாரும் இருப்பதில்லை. தாம் எங்கே செல்கின்றோம், ஒவ்வொருநாளும் என்னென்ன செயல்களில் ஈடுபடுகின்றோம், தம் கவலை திருமணம் ,மறுமணம் என  தேவையற்ற விடயங்களைக்கூட அப்டேட் செய்ய நானும் நீங்களும் தவறுவதேஇல்லை. தூபி மீது ஏறியது, புகைப்படம் எடுத்தது  அவர்களின் …

பல்கலை ப்(f)ரஷர்களுக்கு ஓர் மடல்

பல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என்  இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…! உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டும்! நீங்கள் பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக்கல்விதனைக் கற்று உயர்கல்விதனைக் கற்க பல்கலை வந்தீர். ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் ஏராளமானோரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் நீங்களும் ஒருவராய் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! புகழனைத்தும் இறைவனையே சாரும். அல்ஹம்துலில்லாஹ்! ஆம்! நீங்கள் நினைப்பது மிகச்சரிதான். இது சுதந்திரம் நிறைந்த இடம். தவறில்லை.  உங்களைப்பார்க்கவோ ஏன் என கவனத்துடன் கேட்கவோ …

இஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை

பல்கலைக்கழகம் என்றாலே நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுவது பகிடிவதை என்ற கடும் சொல் தான். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என சந்தோஷப்பட்டாலும் பகிடிவதை என்ற நாமம் ஒருபுறம் உள்ளத்தைப் பயத்தால் வாட்டி வதைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே. பெருங் கூட்டமாய் பாடசாலையில் முதன் முறையாக ஒன்று சேர்ந்த நம்மில் ஒரு சிறு தொகையினரே பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகிறோம். அவ்வாறு செல்லும் பண்பாடுகள் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டிய நாம் பகிடிவதை எனும் பெயரில் செய்யும் அட்டகாசம் …

நமது உயிரை நாமே வாழ வைப்போம்.

  இவ்வுலகில் மனித மற்றும் மிருகங்களின் உடல்கள் இயங்குவதற்கான அடிப்படைச் சக்தியே உயிராகும். இந்த உயிரை இதுவரைக்கும் யாருமே கண்டதும் இல்லை, அதன் பாரத்தை நிறுத்ததும் இல்லை. அது எங்கிருந்து வந்து எமது உடலில் குடிகொண்டது, அது எப்பொழுது எம் உடலை விட்டுப் பிரியும் என்ற அறிவும் யாருக்கும் இல்லை. செவ்வாய்க் கிரகம் வரைக்கும் சென்றுவர எத்தனிக்கும் இந்த நவீன வளர்ச்சி கண்ட உலகத்திற்கு, இந்த உயிரியல் வேட்டையானது இன்று வரைக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த …

காதலர் தினம் எனும் கற்பு கொள்ளையர் தினம்…

இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான நோக்கம் எதிர் வரும் 14ம் திகதி நம் முஸ்லிம் சமூக இளசுகள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு விபச்சார, அனாச்சார நாள் ஆகும். பெப்ரவரி 14 எனும் திகதி காதலர் தினம் எனும் பெயரில் ஏராளமான பெண்களின் கற்பு பறிபோகும் ஒரு தினமாக இருக்கின்றது என்பது கண்ணீர் வடிக்க வேண்டிய விடயம். உலகம் போற்றும் இந்த காதலர் தினம் எவ்வாறான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளது என்பதை எம்மில் பலர் அறியாமலே இந்த தினத்தை …

நிகழ்வுகளும் நினைவுபடுத்தவேண்டியவையும்

ஜனவரி என்பதால் எங்கு பார்த்தாலும் நிகழ்வுகள் அரங்கேறியவண்ணம்தான் இருக்கின்றன. திருமணம் ,களியாட்ட நிகழ்வுகள் என அத்தனையும் நிரம்பிவழிவதை வட்சப் ஸ்டேடஸ்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. நிகழ்வுகளால் அனைவரும் ஒன்றுசேரும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன .அவை பல மகிழ்ச்சிகரமான தருணங்களை அள்ளித்தருகின்ற வேளை கசப்புகளையும் கூட விட்டுச்செல்கின்றன. நிகழ்வுகள் எம் உறவுகளை ,நண்பர்களை இணைக்கும் பாலமாய் தொழிற்படுகின்றன.நீண்ட நாளைக்கு பின்னர் அவர்களை கண்ட மகிழ்ச்சி முழுநாளும் உந்துசக்தியாய் உடல்முழுதும் ஓடிக்கொண்டிருக்கும். அவர்களின் உடல், உள அத்தனை மாற்றமும் குழந்தைகள், கணவன் என …

ஜீலைபிப் (ரழி) அவர்களின் வரலாறு சொல்லும் பாடம்

மனித தோற்றத்தை பார்த்து மனிதர்களுடன் உறவாடாதீர்கள். ஜீலைபீப் ரழி அவர்கள் அலங்கோலமான ஒரு மனிதர். ரொம்ப அலங்கோலமானவர் என ஹதீஸில் வருகின்றது ஆனால் எப்படி என்று குறிப்பிடப்படவில்லை. சில மனிதர்கள் அலங்கோலமானவர்களுடன் உறவு வைக்க மாட்டார்கள். ஏழைகளோடு, பலவீனமானவர்களோடே உறவு வைக்க மறுக்கும் இந்நவீன யுகத்தில் இது ஒன்றும் பெரிதல்லையே( அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர). சில மனிதர்களின் கையில் குஷ்டம் இருக்கும் எனவே யாரும் அவர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள். சில மனிதர்களின் கால் யானைக்காலாக இருக்கும் இதனால் யாரும் …

நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும்

பெண்கள முழு உடலையும் மறைத்து அணியும் ஆடைக்கே அபாயா என்று செல்லப்படும். பெண் விட்டினுல்ளே இருப்பதில்தான் அவளுக்குறிய அனைத்துச் சிறப்புக்களும் கண்ணியங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. தான் செல்ல வேண்டும் என்ற தேவைக்கும் , கற்பதற்கும் , தொழில்காகவும் தவிர பெண்கள் வீணாக வீதியில் உலா வருவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெண்கள் வெளி செல்ல தேவைகள் அற்ற நிலையில் அவர்களை வீட்டில் இருக்கும் படி இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. “இன்னும் (நபியுடைய மனைவியரே) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்.முன்னைய …

சீறிய சுறா

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி அங்கு வாசிக்கப்படுகின்றது.bஏதும் அறியா நானோ ஆந்தையாய் முழித்துக்கொண்டிருக்கிறேன். மாற்றும் செனல் எல்லாம் அதுவாய் ஒளிக்க கடைசியில் நானே ஓர் முடிவு எடுகிறேன்.ஆம் அது சுறாமீன் தாக்கமொன்றாமென்று.. புரியா வயதது. அடிக்குறிப்பை வாசிக்காமலேயே செய்திவாசிப்பாளரின் முகப் பக்கமே என் முழுக்கவனமும்  இருக்கும். ஏதோ பேரழிவு என்பதை  படங்களும் திரைகளும் வெளிச்சம் …

ஒட்டிக்கொண்ட நவீன நாற்றம்

திருமணம் வெகுவிமர்சையாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சிறுசுகள் தம்முள்சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள். பலூனிலோ பம்பாய்முட்டையிலோ (இனிப்பு) அவர்கள் கவர்ந்திழுக்கப்படவில்லை. புதுமணப்பெண்ணைச் சுற்றி அவர்கள் உட்கார முன்வரவில்லை. ஆராவாரங்கள் எல்லாமே ஓர் தாய் விட்டுச்சென்ற கைத்தொலைபேசியில் உள்ள கேமுக்காகத்தான் இருந்தது அப்போதுதங்கே. பெரிசுகளை நோக்கி என் கண் திசைதிரும்பத்தொடங்கிற்று. தன் குழந்தை ஜ எம் மோ வில் பேசிய கதைகளும் பேரக்குழந்தைகளின் வீடியோக்களுமென அங்கு வாய்நிறைய நவீனகோலக்கதைகள் சாப்பிட்டுக்கொண்டே சொல்லப்படுகின்றது. நவீனமோகம் நம்முள் இணைந்தவிதம் நோக்கி என்மனசு அலாவ என்னையொத்த உறவுகளுடன் உட்கார எத்தணிக்கிறேன் . அவர்கள் செல்பியெடுக்க …

விமர்சிப்பது எப்படி???

இன்றைய உலகில் இஸ்லாமிய சமுதாயத்திலும் சரி இஸ்லாம் அல்லாத சமுதாயத்திலும் சரி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கத்துவத்தை இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த இயக்கங்களில் ஆரம்ப கால கட்டம் எவ்வாறு காணப்பட்டது? அவை நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? அவற்றின் செயற்பாடுகள் எவை? என்ற பல வினாக்களுக்கு மத்தியில் சிறப்பான ஒரு வழிமுறையை கைக்கொண்டு இஸ்லாத்தை முன்வைத்தனர். இதன் ஆரம்ப ஆசான்களின் வழி முறைகளை மாற்றி யோசனை செய்து அதன் பின்னர் வந்த தலைவர்கள் …

எதிர்காலம்

எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று முன்னைய காலங்களை விட மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகது. எனது எதிர்காலம் எப்படி அமையும்? எனது எதிர்காலத் தொழில் என்ன? இவ்வாறு மனிதர்கள் எதிர்காலம் குறித்து அதிகம் அலட்டிக் கொண்டதனால் எதிர்கால சவால்கள், பிரச்சினைகள் பற்றி அதிகம் சிந்திக்கத் துவங்கியதால், அளவு கடந்த திட்டமிடல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். அதேபோன்று எதிர்காலம் பற்றிய ஓர் அச்ச உணர்வுடன் வாழ ஆரம்பித்துள்ளனர். எனினும் அன்றைய கால …

பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். நீங்கள் கற்ற விடயங்களைக் கொண்டு பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பாட ரீதியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். இப்போது உங்களுக்குத் தேவை பரீட்சையை வெற்றி கொள்வது தொடர்பான விடயங்கள், எனவேதான் இது விடயம் தொடர்பாக …

பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். அதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனையே இப்பதிவாகும். எந்த ஒரு பரீட்சையாக இருப்பினும் அதற்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளுதல். உதாரணமாக செமினார் , குறிப்பிட்ட பரீட்சைக்கு ஏற்கனவே முகங்கொடுத்தோர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல். பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கான தன்னம்பிக்கையும் முயற்சியும் அவசியம். பின்வாக்கக் …

முயற்சி செய்

இன்று பலர் என்னால் முடியாது ,எனக்கு கஷ்டம் ,எனக்குத் தெரியாது என்று தம் வாழ்வில் முயற்சி செய்யாமலே தம்மை தாழ்த்திக் கொண்டு பின் வாங்குகின்றனர். ஏன் உன்னால் முடியாது ?,உன்னால் சிறு வயதில் தவழ்ந்து எழுந்து நடக்க முடியும் என்றால் ஏன் இப்பொழுது வளர்ந்த பிறகு உன்னால் முடியாது ? மற்றவர்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்றா? மற்றவர்கள் உன்னை பார்த்து கேலி செய்வார்கள் என்றா? ஆம்,இன்று பலரின் பிரச்சினை அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்பது தான் …

எண்ணங்கள்

எண்ணங்கள் என்றும் சிறப்பாக இருந்தால் எமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு .இன்று அநேக பேரின் எண்ணங்களில் உள்ள பற்றாக்குறையே வாழ்வியல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன. எண்ணம் இரண்டு வகைப்படும் .அது நாம் சிந்திக்கும் விதத்தை பொறுத்து வித்தியாசப்படுகிறது. ஒன்று positive thoughts இன்னொன்று negative thoughts . இன்று அநேகமானோரின் பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களின் மனதில் எழும் தவறான எண்ணங்களே! ஏனெனில் இன்று சிறு பிள்ளை தொடக்கம் வளர்ந்தோர் வரை மறை எண்ணத்துடன் சிந்திக்கும் மனப்பான்மை …

துன்பமா??? துயரமா????

ஆம் மீண்டும் ஒரு ஆக்கத்தில் உங்களை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆய்வுகள் கூறும் போது எட்டு மணிநேரம் தூங்க வேண்டுமாம். நிச்சயமாக நாம் தூங்கத்தான் வேண்டும். ஆனால் மனதில் பாரத்துடன் அல்ல. மனநிம்மதி உடன் தூங்க வேண்டும். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் வாழுபவர் பலர். தூக்கமின்றி தவிப்பவர் பலர். கும்பகர்ணன் போன்று தூங்குபவர் பலர். தூக்கமும் ஓர் வரம் தான். ஓர் மனிதனால் தூங்காமல் இருக்க முடியுமா? என ஆய்வு நடாத்தாப்பட்டது. பல நாள் தொடர்ந்த …

அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா?

சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் . இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை பார்ப்பதோடு இஸ்லாம் இந்த சினிமா சம்பந்தப்பட்ட எத்தகைய விமர்சனங்களை முன்வைக்கின்றது சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இஸ்லாம் அனைத்து விதமான சினிமாக்களையும் ஒதுக்கி உள்ளதா அல்லது சினிமாவிற்கும் இஸ்லாம் ஓர் இடம் வழங்கியுள்ளதா …

சமூக ஊடகங்கள்

நவீன உலகில் ஊடகங்கள் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை  என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனினும் பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னங் களாக எம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி? தம் கருத்துக்களை, நோக்கங்களை,கொள்கைகளை மனித சமுதாயம் மத்தியில் புகுத்தும் ஒரு ஆயுதமாக ஊடகங்களை பயன்படுத்தும் சக்திகள்  இன்று அதிகம் காணப்படுகின்றன. கல்வி, அரசியல், சமயம், பொழுது போக்கு என அனைத்து வழிகளிலும் ஊடகங்கள் புறக்கணிக் க முடியாத அம்சமாக காணப்படுகின்றன.அறிவுக் களஞ்சியமாகவும், …

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான பென்தோட்டை துவக்கம் கிழக்கிலே இறுதிப் புள்ளியாகிய கிரிந்தை வரையில் பரந்த நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.  காலி மாவட்டத்தை பொறுத்தவரை பென்தோட்டை, துந்துவை, அஹுங்கல்லை, பலப்பிடிய,.பனாபிடிய, மற்றும் காலி மாநகரை சூழவுள்ள கிந்தோட்டை, தடல்ல, நாவின்ன, ஹிரும்புரை, கட்டுகொடை போன்ற பிரதேசங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிலும், சில …

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை முழுமையாக மறைத்துக்கொள்வதுதான் பெண்களுக்கான ஹிஜாப். அதோடு சேர்த்து பார்வைக்கும் ஹிஜாப் போட வேண்டும். பார்வையின் ஹிஜாப் என்பது பார்வையை தாழ்த்திக் கொள்ளல் ஆகும். அபாயா என்பது இஸ்லாமிய பெண்களுக்கான உடையா? இல்லை,அப்படி இஸ்லாமியர்களுக்காக வரையறுக்கப்பட்ட தனித்துவமான ஆடையல்ல அபாயா. நாமாக உருவாக்கிக்கொண்ட …