முதிர்கன்னி

பெண் என்று பிறந்திட்ட பாவமோ… நானறியேன்… சீதனம் எனும் சந்தையில் சிக்கித் தவிக்கின்றேன்… நானும் ஓர் உணர்வுள்ள பெண் என்பதை உணர மறுக்கும் ஊனமுற்ற உள்ளங்கள் சில….. மனதின் ஏக்கங்கள் ஏமாற்றங்களாக… ஆசைகள் அநாதரவாகிட….. விழிகளில் கண்ணீராய் காலங்கள் கரைகின்றன…. அழகுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்ட உலகத்தில் பந்தாடப்படும் பாவை இவள்…… என் சகபாடிகள் கையிலொன்று வயிற்றுலொன்று என சுமந்து நிற்கையில் என் மனசும் சுமையாகி தான் விடுகின்றது… நிறை மாதக் கர்ப்பிணியான கல்லூரி நண்பியைக் கண்ட மறு […]

Read More

அன்பின் மகன் உயிரின் தாய்

பணியில் உயர்ந்த அன்பில் நிறைந்த உன் உண்மையான நேசம் என்றும் வேண்டும் மகனே!!! காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் மறந்திடாதே!!! இந்த தாயை நீ மறந்தால் மரணிக்கும் என் மனம் மறு நிமிடம!!! என்றும் உன் உறவை வேண்டி கலங்கி நிற்கும் உன் அன்னையிவள். M.N.M.Sanoos (இர்பானியா வளாகம்) வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

Read More

இலட்சியம்

வாழ்வெனும் போரிலே இலட்சியம் மெனுமா பனித் துளிகள் ……! தொட்டு ரசிக்க ஆசையாய் வாழ்ந்து பார்க்க விருப்பமாய் மனதைத் கிள்ளிடும் மலரின் இதழே …! ரோஜா மலரே …! சொக்கத் தவிக்கும் சொக்கத் தங்கமே …! விண்ணின் ஒளியே …! ஆகாய நிலவே இந்த இலட்சியம். M.N.M Sanoos (இர்பானியா வளாகம்) வெளியீடு வியூகம் வெளியீட்டு மையம் NAFEES NALEER Rambuk ela kandy

Read More

எது நல்லாட்சி????

நல்லாட்சியெனும் பெயரில் யுகமான அரசியல் தலைப்பட முன்னே விழுமோ என்னவோ…ஓட்டுப்போட்டு ஒத்தாசை வழங்கி பிரச்சினைகளுக்கோ விடிவு பிறக்க வந்தவனையோ காணவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்…பதவி பேதையில் மயங்கிய அறக்கர்கள் விரித்திருக்கும் வலைதானென்ன?…பொழுதினை எண்ணிக்கொண்டிருக்கிறேன் தீர்வினை நோக்கியவண்ணம் 0. ஹனீஸ் இப்றாஹிம்(இர்பானியா வளாகம்) வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம் Rambuk_Ela , Kandy

Read More

சுயநலம்

சிரியாவின் பாலை நிலத்தில் சிறுவர்களை கொன்று குவிக்கும்போது ஐ நாவின் கூல் அறையில் ஐ நாய்கள் சிறுவர் உரிமைக்காக சிங்காரமிட்டு கூடியது. நானும் கள்ளன் நீயும் கள்ளன் பாராளுமன்றத்தில் உளறும்போது பகல் கொள்ளைக்காக வட்டாரத்து சிறுவனை வற்புறுத்தி அடைத்தனர்- சிறையில் இனவாதிக்கு இரவை ஒதுக்கிவிட்டு பாராளுவோர் பகலில் கூடினர் பாரைப் பாதுகாப்போம் – நீதியை பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம் – என பகிடிப் பேச்சுக்களுடன் – பாராளுமன்றத்தில் மானிடத்தில் அரசுகள் உருவாகின மாண்டோர் உரிமையை பாதுகாக்க அரசுகள் இன்று […]

Read More

சமூகத்தின் கண்ணாடி

சமூகத்தின் கண்ணாடி சமூகவளைத்தள முன்னாடி நிண்டு பார்த்தாலடி தெரியும் விம்பம்தானடி அவலட்சண வதனம்தானடி நீரும் தென்பட்டாலடி கண்ணாடியை திட்டுகிறாயடி முகத்தை மாற்றுகிறாயடிசமூக பிளவுகளுக்குத்தானடி சமூகவலைத்தளம் காரணமடி என பிதற்றாமலடி சமூகத்தை சீரமைக்கத்தானடி முன்வந்தால் சரிதானடி Ibnu Asad

Read More

முஹர்ரம்

முத்தான இஸ்லாத்தின் முதலாவது மாதம் முஹர்ரம் முஹம்மது நபி இஸ்லாமிய முன்னேற்றத்திற்காக ஹிஜ்ரத்திற்கு முரசறிவித்த மாதம் முஹர்ரம் மூர்க்கன் பிர்அவ்னின் மூடப்பிடியிலிருந்து முஸ்லிம்கள் மீண்ட மாதம் முஹர்ரம் முன்னேறத் திட்டமிட முறையான மாதம் முஹர்ரம் முயற்சியும் ஈமானும் முன்னேறத் தன்னம்பிக்கையும் முழுதாய் இருந்தால் முன்னேறலாம் உன்னாலும் முஹசபா செய்து முறையாக திட்டமிட்டு முழுதாய் முயற்சி செய்ய முஹர்ரத்தில் களத்தை அமை Ibnuasad

Read More

மதவெறி

தன்னிலை மறந்து தவமிருந்து தம்முடையும் காவியானது கௌதம புத்தரின் தன்குணம் மறந்து தாறுமாறாய் ரத்தம் ஓட்டி அதில் தன்னுடை கழுவி காவியாகுது அசின் விராது மாட்டின் உயிரை பறிக்காதே – என கோஷமிட்ட சமுகம் மனித உயிரை பறிக்க போராடுது இனம் இனத்தை சாரும் அதற்காகவே போராடும் மதங்கள் உள்ளது மன நிம்மதிற்காக மரணங்கள் நிகழுது மதத்தின் பெயரில் மன நிம்மதியின்றி மயானத்தில் அரசமைக்க Ibnu Asad

Read More

இறை நம்பிக்கை

தள்ளாத முதுமையிலும் புரியாத பாலகத்திலும் பலவீனமான பெண்ணாகினும் சாதனைகள் படிக்கலாம். இறை நம்பிக்கையில் முழு உறுதியும் அதற்கான தியாகமும் எம்முள் நிறைந்தால் புது வரலாற்றை நாமும் படைக்கலாம் நபி இப்ராஹீம் நபி இஸ்மாயில் ஹாஜரா வரலாறு எடுத்தியம்பும் உன்னத போதனை இதுவே! Ibnu Asad

Read More

புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது Ibnu Asad

Read More

இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம் “சந்தூக்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் வண்ண ஆடைகளை அணிந்தாய் – உன் இறுதி ஆடை “கபன்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் மாடி வீடுகளில் வாழ்ந்தாய் – உன் இறுதி வீடு […]

Read More

பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத உள்ளோம் பயணங்கள் பல சென்றோம் பகிடிகள் சில செய்தோம் பள்ளித் தோழர்களையும் பெற்றோம் பாரினையும் வெல்ல உள்ளோம் பகிடிகள் சில செய்தோம் பட்டங்கள் சில செய்தோம் பாசனை நோக்கி கேட்கிறோம் பாவத்தை மன்னிக்கும்படி வேண்டுகிறோம் பள்ளியை பிரிய உள்ளோம் பாரினை நோக்கி செல்கிறோம் பள்ளித் […]

Read More

மறுமை

மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே சுவனமாய் அமைந்திடும் செயலில் தீங்கு நிறைந்திடும் போதே இடக்கரத்தில் கிடைத்திடும் அதுவே நரகமாய் அமைந்திடும் குர்ஆனை வாழ்வாய் அமைத்திடும் வாழ்வும் நன்றாய் அமைந்திடும் மறுமையில் சுவனமும் நிரந்தரம் Ibnu Asad

Read More

மனித நேயம்

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம்  கொண்டு சுய நலத்தை செயலால் நீக்கி சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி கருணையை உன் சிந்தனையில் புகுத்தி மகிழ்சியை உன்னில் ஏற்படுத்தி மனித நேயத்தை புவியில் பரவச் செய்திடு Ibnu Asad

Read More