சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம்

        பாறுக் ஷிஹான் உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மூவரை  கடைக்குள் திடீரென பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள்  வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.  இந்தச் சம்பவம் இன்று(7)  பிற்பகல் 4  மணியளவில்  சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச்   சந்தியில் உள்ள உணவகத்தில்  இடம்பெற்றுள்ளது. குறித்த   வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக  சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆறு இளைஞர்கள் உணவகத்துக்குள் திடீரென   உட்புகுந்து … Read moreசாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம்

நோன்பு மாதம் வரும் நிலையில் பேரீச்சம் பழ விலை அதி­க­ரிப்பு

  ARA.Fareel – பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள்   – அரசின் மீது ம.வி.மு. குற்­றச்­சாட்டு முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு பிடிக்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப் போகின்­றனர். முஸ்லிம் அமைச்­சர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று … Read moreநோன்பு மாதம் வரும் நிலையில் பேரீச்சம் பழ விலை அதி­க­ரிப்பு

Application called for Investigative Video Journalism Program

Investigative journalism is taking its ground with social media platforms becoming increasingly popular among the people in Sri Lanka. Several online news websites and news castings sites have begun various web-based experimentations in achieving ‘fairness’ in their journalism. One of the recent developments, is that several civil society organizations that are predominantly using media tools … Read moreApplication called for Investigative Video Journalism Program

மியன்மார் முஸ்லிம் அகதிகள் மே ௦2 வரை விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட   மியன்மார் முஸ்லிம் அகதிகள் மற்றும் இரு இந்தியர்களை எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மியன்மார் அகதிகள்  ஏப்ரல் 3௦ம் திகதி யாழ்  காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட  30  மியன்மார் அகதிகள்  காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களுடன் வந்த  இரு … Read moreமியன்மார் முஸ்லிம் அகதிகள் மே ௦2 வரை விளக்கமறியலில்

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

 தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டைய வரலாற்றுக் காலம் முதல் மானுட சுதந்திரம், தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்த, இரத்தத்தை வியர்வை சிந்திய உலகத்தின் அனைத்து தொழிலாளர் தோழர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். மனித உழைப்பின் உன்னதத்தை போற்றி புகழும் வகையில் இந்த … Read moreதொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , … Read moreமுஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்

ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று … Read moreஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரை

(அஷ்ரப் ஏ. சமத்) இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று கொழும்பு அலறி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம் மாநாடு இஸ்லாமிய யதாத்தமும், அதற்கான சவால்களும் என்ற தலைப்பில் நடாத்தப்படுகின்றது. ஆரம்ப வைபவத்தில் இஸ்லாமிய தலைவா் ஹூசைன் முஹம்மத், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, முஸ்லீம் சமய தபால் அமைச்சா் எம்.எச். … Read moreசர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரை

இஸ்லாமிய மதத் தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக

 ARA.Fareel அமைச்சர் சாகலவிடம் ஹலீம் கோரிக்கை நாடெங்­கு­முள்ள இஸ்­லா­மிய மத மர­பு­ரிமைத் தலங்­க­ளான ஸியா­ரங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிரந்­த­ர­மான பாது­காப்­பினை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாது­காப்பு செய­லாளர் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் மத மர­பு­ரிமை ஸ்தல­மான ஸியாரம் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் தாக்கி சிதைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அமைச்சர் ஹலீம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். முஸ்லிம் சமய … Read moreஇஸ்லாமிய மதத் தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துக

பாதையை மாற்றும் போதை

“பாதையை மாற்றும் போதை”  என்ற கருப்பொருளில் கொடபிடிய பிரதேச மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை செம்மைப்படுத்தும் நோக்கில் சமூகத்தின் முக்கிய மூன்று கூறுகளாகிய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை இணைத்த ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை |”தேசத்தின் ஆதரவாளர் சங்கம்” மாறை/கொடபிடிய ஸாதத் மகா வித்தியாலத்தில் 24.௦4.2௦17ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வளவளராக Ash-Sheikh M.H.M.Rashadh (Naleemi, Lecture of Fathih institute) கலந்து சிறப்பித்தார். “இளம் சந்ததியினரை குறிவைக்கும் ஆட்கொல்லி போதை” என்ற தலைப்பில் உரையாற்றினர். அவர் … Read moreபாதையை மாற்றும் போதை

போர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

 ARA.Fareel இன­வா­திகள் மீண்டும் நாட்டில் அழி­வு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றனர். கொட­பிட்­டிய போர்­வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. இச் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. போர்­வையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் கவுன்ஸில் … Read moreபோர்வை நகர் சம்பவம் : முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்  

விசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

ARA.Fareel கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (16)  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்­கு­தல்­க­ளுடன்  சம்­பந்­தப்­பட்ட சந்­தேக  நபர்கள் இது­வரை  கைது  செய்­யப்­ப­ட­வில்லை. போர்வை நகர்  வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு  தொடர்ந்தும்  பொலிஸ்  பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் (16) இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர்  ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து ஆய்­வு­களை  மேற்­கொண்­டனர். பள்ளிவாசலின் சி.சி.ரி.வி. கமெரா பதி­வுகள்  தெளி­வாக  இன்­மையால் அருகிலுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றின்  பதி­வு­களை பெற்றும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.  … Read moreவிசாரணை தீவிரம் : இதுவரை எவரும் கைதாகவில்லை 

முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

A.RA.Fareel முஸ்­லிம்­களை வர்த்­தகத் துறை­யி­லி­ருந்து தூர­மாக்கும் நட­வ­டிக்­கைகளை இன­வாதக் குழுக்கள் மேற்­கொண்டு வரு­கின்­றன என்­பதற்கு போர்வை நகரில் நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் சான்றாகும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வடிக்கைகள் மீது அர­சாங்கம் மௌனித்து இருப்­பதே இதற்கு காரண­மாகும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இதற்­கெ­தி­ராகக் குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார். கொட­பிட்­டிய, போர்வை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­குதல் … Read moreமுஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்

போர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

A.R.A.Fareel 2017.04.16 அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. சம்­பவம் அறிந்து ஸ்தலத்­துக்கு விரைந்த அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். பெற்றோல் நிரப்­பப்­பட்ட போத்­த­லொன்று வெடிக்­காத நிலையில் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் கைவிரல் அடை­யா­ளங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அரு­கி­லுள்ள பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி கமரா பதி­வுகள் பொலி­ஸாரால் … Read moreபோர்வை நகரில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

காலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்.” ஸியாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; காலி கோட்டை மக்கள் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் சிறந்த நல்லுறவும் நல்லிணக்கமும் நிலவுதாகவும் இந்த நல்லுறவைச் சிதைப்பதற்கு … Read moreகாலி ஸியாரத்தை இனவாத குழுவே சேதப்படுத்தியது

2016 பரீட்சை பெறுபேறுகள்.

2016ம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 50% மானோர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும் சாதாரணதரப் பரீட்சையில் 85% மானோர் சித்தியடைந்தனர். இது எமது பாடசாலையின் வளர்சிக் கட்டமாகும். 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சிதியடைந்தமையும் குறிப்பிடத்தக்க ஓர் சாதனையாகும். சித்தியடைதோர் விபரம். Name index No Marks Result M.F.Kadheja 6154980 166 pass M.F.Safwath A 6155146 161 pass F.C.Ameema 6155162 160 pass A.A.A.Aneef 6154808 158 … Read more2016 பரீட்சை பெறுபேறுகள்.

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு.   மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு!   தமிழ் பாட ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புதல்.   அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் 3௦.௦3.2௦17ம் திகதி மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் ஓர் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. இது ஓர் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இத்திட்டத்தின் நோக்கமே கிராமிய மாணவர்கள் உயர்தரம்வரை கிராமத்து பாடசாலையிலே கற்பதாகும். என்றாலும் ஓர் கவலையான விடயம், எமது பாடசாலையில் கலைப்பிரிவில் … Read moreஆசிரியர் பற்றாக்குறை

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டது. அதில் சில பிரச்சினைகள் நில்வள கங்கை சார்த்தது. குறிப்பாக முதலை, மண்ணரிப்பு, வெள்ளம் என்பன நில்வள கங்கையின் பிரச்சினைகளாக இனங்காணப்பட்டது. இதில் எமது பிரதேசத்திற்கு அருகாமையில் இன்றுவரை தீர்க்காமல் உள்ள ஓர் பிரச்சினையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் நில்வள கங்கையோரமும் A17 பிரதான வீதியும் … Read moreதீர்க்கப்படாத பிரச்சினைகள்

குப்பைகளாகிய குடும்பங்கள்

“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு…குபு…வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர், பல வீடுகளின் மீது குப்பை மலை, அப்படியே சரிந்துவிட்டது” கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், கடந்த 14ஆம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற, குப்பை மலை சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயர்தப்பிய ஒருவர், தன்னுடைய அனுபவத்தை மேற்கண்டவாறே விவரித்தார். குப்பை மலை அடிவாரத்தில் இருந்த வீடுகளின் மீது, சுமார் 300 அடி … Read moreகுப்பைகளாகிய குடும்பங்கள்

வதந்தி

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை தனது twitter, Web side என்பவற்றில் பதிவு செய்தேன்.   “போர்வை பிரதேச 1௦கும் மேற்பட்ட தொடர் கடைகளை இலக்காக கொண்டு 2 பெற்றோல் குண்டுத்தாக்குதல். 2 கடைகளுக்கு மாத்திரம் சிறு சேதம் time 1:45 am” இது எனது twitter பதிவு. இதற்கு … Read moreவதந்தி

2017 Godapitiya Muslim Family list

2017ம் வருட அதுரலிய பிரதேச சபைக்கு உற்பட்ட 308 A  கொடப்பிடிய கிராமப் பிரிவின் முஸ்லிம்களின் குடும்ப அறிக்கை. இவ் அறிக்கையின்படி எமது கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. என்றாலும் 400க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இது எனது முதலாவது தனி முயற்சி. அடுத்த கட்ட தகவல் சேகரிப்புக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். online book for Godapitiya Muslim family details… familylist Family Graph

தீடீர்தாக்குதல்…

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நான்கு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம். உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

* வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி உத்தரவு * காடழிப்பில் ஈடுபட்டால் அபராதம், தண்டனை * குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கண்காணிப்புக் குழு வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Source: வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தல்  Tamil Sinhala English வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் … Read moreவில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

Select your currency
LKR Sri Lankan rupee