தொடரை கைப்பற்றியது இந்தியா

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, 4 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என வெற்றி கொண்டுள்ளது. பிரிஸ்பனில் இடம்பெற்ற 4ஆவதும் இறுதியுமான குறித்த போட்டியில் 328 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய (19) இறுதி நாளன்று, இறுதி மணித்தியாலத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த மொஹம்மட் சிறாஜ் (2ஆம் இன்னிங்ஸ்) … Read more

பெண் மாறினால்

எண்ணம் கொண்டால் எட்டாத் திசையும் எள்ளளவுமின்றி களைத்தெறிவாள் – பெண் கறைகளால் கண் குளிர்ச்சி காணும் – இந்த கானலுலகை அன்பால் அரவணைக்கும் அன்னை ஆயிஷா அவளின் அழகிய முன்மாதிரி உயிரன்றி என்னுணர்வன்றி என்னிறைவன் போதுமானவன் என்ற சுமையாவின் வழித்தோன்றளவள் சிறப்பாக்கப்பட்டவள் மகளாகும் போது மனைவியாகும் போது அன்னையாகும் போது கவர்ச்சி என்று காட்சி காட்டும் பெண்ணே மறந்து விடாதே நிலைமாறிச் செல்லும் இம் மாற்றம் தரும் மார்க்கமல்ல நமது உன்னால் மாற்றப்பட வேண்டும் உனக்காக என்றிறாமல் … Read more

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் ரிஷாட் முறைப்பாடு

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (18.01.2021) நேற்று முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு … Read more

காணி சுவீகரிக்க முயன்றதால் மக்கள் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப் பகுதியில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மண்டைதீவு ஜே107கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29பேரின் 18ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு போது நில … Read more

இரு மாத குழந்தையின் தகனம்; அலி ஸாஹிர் மெளலானா தந்தையுடன் உரையாடல்

   வெலிகமவில் பெற்றோரின் சம்மதத்தை பெறாமல் இரண்டு மாத குழந்தையின் உடலை அதிகாரிகள் தகனம் செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தனது ட்விற்றரில் பதிவொன்றை இட்டுள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, வெலிகமவில் கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு மாத குழந்தை மொஹமட்டின் தந்தை நியாசுடன் உரையாடினேன். பிறந்த முதல் குழந்தை முகமத், சுவாச இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலும் காலி, கராப்பிட்டிய … Read more

இன்றும் நாளையும் கூடவுள்ள பாராளுமன்றம்

நாட்டில் நிலவும் கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளையும், பாராளுமன்றத்தில் தற்போது பரவியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணிகளையும் கருத்தில் கொண்டு இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் நாளையும் என இரு தினங்களுக்குள் மட்டுப்படுத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்க கடந்த 13 ஆம் திகதி  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடவிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் பணியாளர்கள் சிலருக்கும், சபாநாயகர் காரியாலய ஊழியர்கள் ஒரு … Read more

தனிமைப்படுத்தப்பட்ட கம்புறுப்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்

கம்புருபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய 65 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன ஹேரத் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் 34 பேர் முதல்கட்ட தொற்றாளர்கள் என பிசிஆர் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதே நேரம் நேற்றைய தினம் கம்புறுபிட்டிய போலீஸ் நிலையம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து தற்காலிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்டு பொலிஸ் … Read more

ரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடம் – சட்ட மாஅதிபர்

நீதிமன்ற அவமதிப்பு குற்றம் தொடர்பில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சட்ட மாஅதிபர் முடிவு செய்துள்ளார். குறித்த முடிவு, சட்ட மாஅதிபரினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் (12) உச்சநீதிமன்றத்தினால் … Read more

வெலிகமயில் பக்கவாதம் ஏற்பட்டு கொரோனாவில் மரணித்த பரிதாபம்

இன்று வெலிகமையில் கொரோனாவில் பெண் ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றிய தேடலை லங்கா நெட் நிவ்ஸ் மேற்கொண்டது. வெலிகம கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பாத்திமா சம்ஸியா என்ற பெண்மணியே இவ்வாறு மரணித்துள்ளார். குறித்த பெண் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாதத்திற்கு (Paralysis) உள்ளாகியிருந்தார். இந்நிலையில் இறுதியாக 17.01.2021 ஆம் திகதி காலை 8:30 மணியளவில் வீட்டில் நோய்வாய்ப்பாட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணமடைந்துள்ளார். மரணமடைந்ததன் பின்னர் பிரதேச … Read more

%d bloggers like this: