வெலிகமயில் பக்கவாதம் ஏற்பட்டு கொரோனாவில் மரணித்த பரிதாபம்

இன்று வெலிகமையில் கொரோனாவில் பெண் ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றிய தேடலை லங்கா நெட் நிவ்ஸ் மேற்கொண்டது. வெலிகம கல்பொக்க பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பாத்திமா சம்ஸியா என்ற பெண்மணியே இவ்வாறு மரணித்துள்ளார். குறித்த பெண் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாதத்திற்கு (Paralysis) உள்ளாகியிருந்தார். இந்நிலையில் இறுதியாக 17.01.2021 ஆம் திகதி காலை 8:30 மணியளவில் வீட்டில் நோய்வாய்ப்பாட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணமடைந்துள்ளார். மரணமடைந்ததன் பின்னர் பிரதேச … Read more

முள்ளோடுதான் ரோஜா

பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான் உனை பல வாட்டங்களில் இருந்து காக்கும் காவலரண். நாணம் உனக்கு வேலியாக வேண்டும் நாணயம் உனக்கு தோழியாக வேண்டும். இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது இன்பங்கள் இல்லை. இனியோர் சொல் கேட்டொழுகுதல் இன்பத்தின் எல்லை. எப்படியும் வாழலாம் என்றிருந்தால் வாழ்க்கை முல்லை வனம் … Read more

அகுரஸ்ஸயில் வேகமாக பரவும் கொரோனா

17 ஆம் திகதி வெளியாகியுள்ள பிசீஆர் பரிசோதனை முடிவுகளின்படி மாத்தறை மாவட்டத்தில் அகுறஸ்ஸ பிரதேச சபை, அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 34 தொற்றாளர்களுள் 24 பேர் அகுறஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவ்வாறு இணங்காணப்பட்ட 24 பேர்களும் அகுறஸ்ஸ சந்தைத் தொகுதியில் மேற்கொண்ட பீசிஆர் பரிசோதனைகளில் இனங்காணப்பட்டவர்களாகும். எனவே அகுறஸ்ஸ பிரதேச சபை, அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் அபாய பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

நட்பால் உலகை வெல்வோம்

நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டலாம் சண்டையும் போடலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட சந்தேகம் எனும் கொடிய அரக்கனை உள்ளே விட கூடாது அவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்! நீ தடுமாறி கீழே விழும் முன் உன்னை தாங்கி பிடிப்பவனும் நீ தடம் மாறும் போது உன்னை தட்டிக் கேட்பவனும் தான் உண்மையான நண்பன்! நட்பை தேவைக்காக மட்டும் நேசிப்பதை விட்டு விடு உண்மையாக நேசித்துப் பார் அதன் ஆழம் … Read more

பாடசாலை கட்டிடமொன்றை திறக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த ஆச்சரிய சம்பவம் மெதிரிகிரியவில் இன்று இடம்பெற்றது. பொலனறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஜனாதிபதியும் கலந்துகொண்டனர். பாடசாலையொன்றில் கட்டிடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி திரும்பி இது கட்டப்படுவதற்கு காரணமாகயிருந்தவரே இதனை திறந்துவைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இனியும் வேண்டாம் இக் கொடுமை

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய் நீ அன்று இறந்த பொழுதினில் அந்த ஈனச் செய்தியை அறியாமல் தவிக்கிறார் தனிமையில் கொன்றுவிடும் கொரோனாவிற்காய் – குழந்தாய் கொஞ்சும் உனை தாயிடமிருந்து கொடுரமாய் பிரித்தது நீதியா? இரண்டரை நாளேயாயினும் ஈன்றவளை பிரிந்த ஏக்கம் இளம் பிஞ்சுப் பாலகனை ஈற்றில் துடிக்கச் … Read more

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல் இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடருக்கு ஆயத்தமாகிற இவ்வேளையில், இலங்கையிலுள்ள … Read more

நவயுகத்தில் பெண்ணியம்

கம்ப்யூட்டர் கல்லாக்கிப் போட்டதே நம் பெண்களை நவீன கலாச்சாரம் நாசமாக்கிப் போட்டதே நம் பெண்களை வீணான விளையாட்டுக்களையும் வேடிக்கைகளையும் பார்வையிட்ட பெண்களை கொஞ்சம் புதுமைப் பெண்ணாய் மாறச் சொன்னார் நம் பாரதி வேடிக்கை பார்த்தவள் வீரம் கொண்டாள் வீணான விளையாட்டில் இருந்தவள் வியப்படைந்தால் கல்வி கற்றாள் விண்வெளி தேசம் இன்று சென்று விட்டாள் அடுப்பங்கரை மிதித்தே வளர்ந்தவள் புகை மண்டலங்கள் பல தாண்டி புகழ் மண்டலங்களான பல்கலைக்கழகங்கள் பல சென்றாள் சமையல்காரி என்னும் பெயர் வாங்கியவள் சாதனைக்காரி … Read more

வெலிகம குழந்தை – உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத கொரோனா மரணித்ததன் பின்னர் வெளிப்பட்டதன் மர்மம் என்ன?

வெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதன் உண்மைத்தன்மை மற்றும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ் தேடலை மேற்கொண்டது. குறித்த குழந்தை மரணமடைய முன் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதியாகியுள்ளது. என்றாலும் மரணித்ததன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தை மரணமடையும்போது குழந்தையின் தாய் அருகில் … Read more

%d bloggers like this: