கவியால் ஒரு மாலை

தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு இதயத்திலிருந்து அணிவிக்கிறேன் கவியால் ஒரு மாலை கனிவோடு ஏற்றிடுங்கள் அதிசய நிலவுக்கு அகராதி எதற்கு? ஆலமர நிழலுக்கு ஆணிவேர் எதற்கு இளவேனில் பெண்பறவைக்கு இறக்கைகள் எதற்கு தடை தாண்டும் பெண்மைக்கு தகமைகள் எதற்கு அசைகின்ற மேகங்களுக்கு பாதைகள் எதற்கு சுமையென்றாலும் சளைக்காமல் உழைத்திடும் மாதர் குலத்திற்கு மகுடங்கள் எதற்கு வீசிடும் புயலிற்கு விடுதலை எதற்கு தூரங்களை கணக்கிட்டு தூர்நாற்றங்கள் எதற்கு துணிவினை இழந்து துயரங்கள் எதற்கு பெண்ணிலே பெண்கருவாய் உருவெடுத்த பின்பும் கூண்டுக்கிளி … Read moreகவியால் ஒரு மாலை

நாங்கள் ஏழைகள்

விடுதலை கிடைக்குமா விடையறியா எங்கள் வாழ்வில் அன்றாடம் அலைந்தால்தான் அடுப்பும் எரியும் விதியே இதுதானா தலைவிதி வயிறு கொதிக்கிறது உலை வைக்க அரிசியில்லை வெளியிறங்கி பிச்சை எடுக்கவும் ஊரெல்லாம் ஊரடங்கு உத்தரவு கொரோனாவே நாங்கள் இருக்கிறோம் உன் வாழ்வை எங்களில் வாழ்ந்து விடு தினம் தினம் நடைபிணமாய் அலைவதை உன் காலடியில் சரணடைகிறோம் கொரோனாவால் இறந்தோம் என்ற அடைமொழியாவது கிடைக்கட்டும் ஏழை என்ற வார்த்தை இனியாவது மடியட்டும் கூலித்தொழில் செய்தால்தானே கூழாவது குடிக்க முடியும் கூண்டுக்கிளியாய் நாங்கள் … Read moreநாங்கள் ஏழைகள்

கொரோனாவே கொல்லாதே

கண்காணாக் தேசத்தில் உதித்த அரக்கனே… கண்ணீர்த்துளிகளை இரக்கமின்றி நொடிக்குக் நொடி குடிப்பவனே.. எதற்காக எம்மத்தியில் நுழைந்தீரோ எதை அடைவதற்கு நீ உருப்பெற்றாயோ விடையறியா எங்கள் வாழ்வில் வழியனுப்ப வந்தவன் நீதானா தூங்காமலே அழுகிறது உலகம் துயரிலே மூழ்கிக்கிடக்கிறது மானிட தேசம் தூய்மை பேண மறந்த நவீன தேசத்தை தூசி தட்டி நினைவு படுத்த வந்தாயா உறவுகளின் மகிமையை உணர்த்த வந்தாயா பழமை வாழ்வை மீட்டல் செய்ய வந்தாயா இயந்திர உலகின் தலைக்கனத்தில் மிதந்த எங்களுக்கு ஓய்வு கொடுக்க … Read moreகொரோனாவே கொல்லாதே

கண்ணிலே வைத்து பெண்மையை போற்று

விடியாத இரவுகள் விழிகளுக்கு தூரம்தான் தோன்றாத காட்சிகள் கற்பனைக்கு தூரம்தான்… முற்றாத முதிரைக்கு தோற்றத்தில் விலையில்லை முற்றிய கன்னிப்பெண்ணுக்கு முகவரிக்கு முதலீடு தொல்லை… வீராப்பு பேசிடும் ஆண்மகனே விலைகொடுத்து வாங்குவதற்கு பெண்மை என்ன விலைகொடுத்து வாங்கும் சந்தைப்பொருளா ஆடை விலகிடுகையில் அலங்கரிக்கும் உன்விழிகள் அழகாத்தான் தோன்றுகிறது அடுத்த உன் சந்ததிகள் கட்டிய மனைவிதானே கக்குவதெல்லாம் கேட்டுதான் ஆகனும் கண்டபடி கசக்கி பிழியும் கதாபாத்திரத்தின் நாயகத்தலைவனே அடக்கியாண்டது போதும் சிறகையுடைத்து சித்திரவதை செய்தது போதும் சுதந்திர பறவைகளாய் பறந்திடட்டும் … Read moreகண்ணிலே வைத்து பெண்மையை போற்று

நீ வந்து போன வாசனை நெஞ்சோடு

இமைக்காது விழித்தேன் – நான் இரவுகளை தொலைத்தே பேசாது மௌனித்தேன் – நான் கெஞ்சல்களை ரசிச்தே இரவல்கள் வாங்கினேன் – நான் இதயத்தை தொலைத்தே நூலகம் மறந்தேன் – நான் அவள் நூலியிடை ரசித்தே கருமேகம் சந்திப்பில் – நான் கார்கூந்தல் ரசித்தேன் விண்மீனை விலைபேசி – நான் அவள் கரும்புள்ளி மச்சங்கள் ரசித்தேன் நதிசேரும் பாலமாய் – நான் அவள் விழியிமை ரசித்தேன் பிரமிடுகளின் அதிர்வில் – நான் முன்கோபுரங்களின் அழகை ரசித்தேன் ஒவ்வொரு பக்கமாய் … Read moreநீ வந்து போன வாசனை நெஞ்சோடு

மின்னலின் வெட்கம் நீ

தென்றலாய் நுழைந்தாய் இதயத்தின் வாசலில் தெரிசம் நிறைந்த ஏகாந்தம் சூழ்ந்த வாழ்வில் நீ பௌர்ணமி நிலவாய் ஒளியூட்டி நகர்ந்தாய்… அதரத்தால் வழியே சிறுபுன்னகை செய்தே சிறைப்பிடித்து சென்றாய் அகிலம் நீயேன அடம்பிடித்துக் கொண்டிருந்தேன் அக்கறை மிகுந்ததில்… அனவரதம் உன்னைக்காண விழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன் அடலை சூழ்ந்தபோதும் பேதை உன்னை மறந்திட தெரியவில்லை ஆழ்மனதிற்கு… ஆகாரம் தேடி அழுதிடும் மழலைப்போல உகிர் சுவைத்து உமிழ்தலின் போது பேரழகி நீயே… மடந்தை வயதில் வங்கணம் நுழைந்ததில் தையல் உன்னை தைத்திட்டேன் … Read moreமின்னலின் வெட்கம் நீ

புன்னகை வேலி

தோட்டாக்களின் சத்தத்தில் தொலைந்து போனது என் புன்னகை தேசம் தேடுகிறேன் இணையத்தில் இன்று உதடுகள் எல்லாமே ஊமையாகி விட்டது உதிரம் எல்லாம் உறைந்து விட்டது கண்ணீர் எல்லாம் வற்றி விட்டது சொந்தம் இன்றி அநாதையாகி விட்டேன் பூங்காவனம் என்று என் தாய்ப்பூமியை நம்பியதிற்கு தலைத்தெறிக்க சிதற ஓடக் கண்டேன் இதுதானா என் தேசம் என்று உள்ளுக்குள் பேசிக்கொள்கிறேன் யாரோ தவற விட்ட பித்தளை பாத்திரத்தோடு இன்று முள்வேலிக்குள் கைதியாய் நான் இதுதான் என் அரண்மனையோ என் தேசத்தின் … Read moreபுன்னகை வேலி

தனித்தீவில் நான்

விடியல் இல்லாத தீவு தென்றல் நுழைந்திடாத குடிசை எதிரியுமில்லை எதிரிலும் யாருமில்லை பாசம் என்ற பெயரில் பாசாங்கு காட்டும் உறவுகளும் தேவையில்லை தனித்தீவில் தனிமையில் நீந்திட போகிறேன் உன்னோடு அல்ல உன் நினைவுகளோடு பாசத்தை உன்னிடம் படித்த பாவத்திற்கு கருசுமந்தவளோடு தோள் சாய்ந்ததில்லை கருவிழியில் உன்னை சுமந்திருக்கிறேன் பாசம் என்ற அடைமொழியை கற்ற பாவத்திற்கு உன்னிடம் தாயவள் மார்பில் தூங்கியதில்லை என்றாலும்- இதயத்தை உன்னோடு வைத்து தூங்கிய பழகிய பாவத்திற்கு தவிப்புகளின் நீந்துகிறேன் தினம் கண்ணீர் விட … Read moreதனித்தீவில் நான்

நினைவுகளில் வாழ்கிறாய் நீ

தடுக்கி விழும் போது எல்லாம் தாய்மடியாய் தனியிடம் கொடுத்து தாங்கி பிடித்திட்டாய் தனிமையில் தவிக்கிறேன் உன் துணையின்றி தடுமாறி தடம் புரள்கிறேன் நானடி நிலவு இன்றி கதிரொளியும் சுழன்றிடுமா நீ இன்றி என் நிழலும் வாழ்ந்திடுமா நிதர்சனம் தெரிந்து கொண்ட பின்னும் நீ குறைகுடமாய் தளும்புவது ஏனடி வெற்றுப்பாத்திரமாய் கரல் படிந்து  கிடந்த என்னுள்ளத்தில் சில்லறையாய் வீசி விட்டாய் உன் அன்பினை பொங்கி நிறைகிறது ஏக்கங்கள் என்னுள் உன் நினைவுகளின் கோட்டைக்குள் தனிமையில் நான் வந்து விடு … Read moreநினைவுகளில் வாழ்கிறாய் நீ

பேருந்து பயணம்

விடியற்காலை வேளை விரைந்தோடும் நேரம் தூரப்பயணம் அது ஜன்னல் ஓரத்தில் நான் குளிர்ந்த தென்றல் கீறி கிழித்து மூக்கினை துளைத்து செல்கிறது இருக்கையெல்லாம் நிறைந்திருக்க என் இணையர்களும் அருகருகே அமர்ந்திருக்க துள்ளல் இசையோடு உருண்டோடுகிறது பேருந்து பயணம் செல்லும் வழியிலே தண்டவாளம் ஒன்று தனியே அழுது கொண்டிருக்கிறது தாலாட்ட யாருமில்லையென்று துணைக்கு நான் வரவா மனம் கேட்க தோனியது தேவை ஒன்றிருந்தால்தானே தேடி வருவாய் என்று உள்ளுக்குள் சினுங்கியது தண்டவாளம் வெட்டி விட்ட நீரோடையில் நீந்த மறந்த … Read moreபேருந்து பயணம்

இரட்டை முகம்

நவீன யுலகின் கலையொன்று அவை- காரியம் முடித்திட தந்திரமொன்று வீசியெறிய வாளும் வீராப்பு பேச்சும் தேவையில்லை தேவையில்லை தேவையேயில்லை இலகு நொடியில் இலவசம் அது இவர்களுக்கு-விசம் கக்கும் பாம்பும் நிறமாறும் பஞ்சோந்தியும் ஒட்டிய நேசங்கள் இவர்களுடம்பில் கலந்திட்ட கலவையது கலப்படம் இல்லை கலப்படமேயில்லை சந்தேகமிருந்தால் பழகிக்கொண்டிருக்கும் போதே போதை தெளிவீர்கள்-இவர்கள் யாரென்று எச்சிலும் சீழுயருந்திய தேகம்-இவர்கள் இறந்தாலும் ஈக்களும் மொய்க்காது இவர்களுடம்பை உற்றுப்பாருங்கள்-அவர்கள்தான் இரட்டை முகம் கொண்டவராயென்று. அனுகவி றிப்கான், அட்டாளைச்சேனை-06

நாளை தேர்தல்

விழித்திடு மனிதா விழித்திடு விழிகளை மெல்ல திறந்திடு உறங்கங்கள் கலையட்டும் உன் விரல் நுணியில் நாளை நம் தேசம் நீ இடும் பிழையில்தான் பிழைக்க போகிறது சிந்தித்து வாக்களி சமூதாயம் உன் கையில் நாளை இளம் தலைமுறை இருளில் மூழ்க துரும்பாய் இருந்து விடாதே நின்று கொண்டே நீயும் உறங்கலாம் விழித்திடு உணர்ந்திடு புறப்படு கரும்பாய் இனிக்கும் கறுப்பாடுகளின் வாக்குறுதிகள் மதியிழந்து விதி மறந்தால் வீதியில் கூட உனக்கிடமில்லை சிறுபான்மை என்ற குருதியை உறிஞ்சி குடிக்க துடிக்கும் … Read moreநாளை தேர்தல்

எழுந்து வாடா தம்பி

எழுந்து வாடா தம்பி எழுந்து வா கருவுலகில் காரிருளை வென்றவன் நீயடா ஆழ்துளையில் மரணத்தை வென்று வாடா தம்பி கரு சுமந்த தாயோடு பூலோகமே நம்பியிருக்கு உன் மீள்வருகையை எண்ணி கலைத்து விடாதே தம்பி கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கடித்திடாதே தம்பி அரவணைக்க யாருமில்லையே அருகில் என்று அழுதிடாதே தம்பி எழுந்து வாடா தம்பி ஒரு தேசமே அரவணைக்க காத்திருக்குதுடா தம்பி அனுகவி றிப்கான். அட்டாளைச்சேனை-06

Select your currency
LKR Sri Lankan rupee