தகுதி – Qualification

எல்லாவற்றிலும் சிறந்ததை, தரமானதைத் தேடுகிறோம். மருந்தெடுக்கச் சென்றால் நிபுணரை (specialist) நாடுகிறோம். ஆசிரியர்களின் தகுதி (qualification) பற்றி அலட்டிக் கொள்கிறோம். மார்க்கெட் அல்லது சந்தைக்குச் சென்றால் தரமான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். துணி வாங்கச் சென்றால் பல கடைகளுக்கு ஏறி இறங்கி தரமானதைத் தேடி அலைகிறோம். எல்லாவற்றிலும் தரம் பார்க்கிறோம். சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதில் அனைத்தையும் தரமான வகையில் நிறைவேற்றுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவர். தம்மைப் பற்றி யோசிக்காமல் … Read moreதகுதி – Qualification

கற்றலும் பின்னடைவும்

குழந்தைகள் இயல்பாகக் கற்கக் கூடியவர்கள். பிறந்த குழந்தை புலன்களால் கற்கிறது. அது இயல்பாகவே நடைபெறுகிறது. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் அறிவு கூர்மையடைவதோடு, அனுபவங்களையும் அது சேமித்துக் கொள்கிறது. பிறந்தது முதல் ஆய்ந்து தேடிக் கற்றலில் ஈடுபடும் குழந்தை, இயல்பாக விருப்பத்தோடு அறிவு மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குழந்தை ஏன் பின்னர் கற்றவில் பலவீனப்படுகிறது ?காலப்போக்கில் கல்வியில் அக் குழந்தை ஏன் பின்னடைகிறது? குழந்தைகளது கற்றலில் எப்போது வயது வந்தவர்களது தலையீடு இடம் பெறுகிறதோ வற்புறுத்தல்கள், தொந்தரவுகள், தொல்லைகள் … Read moreகற்றலும் பின்னடைவும்

“அல் அத்ல்” – நீதி

“அல் அத்ல்” என்றால் நீதியாகும். இஸ்லாமும் நீதியாகும். அது நீதியையே போதிக்கின்றது. குழந்தைகளுக்கு அது கூறும் அகக் கருத்து பற்றி சிறந்த தெளிவை ஏற்படுத்த வேண்டியுள்ளோம். நீதி என்பது குறிப்பிட்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் வைப்பதாகும். அதற்குரிய உரிமையை அதற்கு வழங்குவதாகும். அல்லாஹ்வை நிறுத்த வேண்டிய இடத்தில் இன்னொன்றை வைத்தல். தாய் தந்தைக்குரிய இடத்தில் நண்பர்களை வைத்தல். தொழுகின்ற நேரத்தில் வேறொன்றில் ஈடுபடுதல். தூங்கும் நேரத்தில் இன்னொன்றை செய்தல். படிக்க வேண்டிய காலத்தில் அதற்கு முரணான காரியத்தில் … Read more“அல் அத்ல்” – நீதி

முஸ்லிம் திருமணப் பதிவுகள்.

திருமணம் என்பது ஈஜாப் கபூல் என்பதுடன் தொடர்புபட்டாலும் திருமணப் பதிவுகள் அரச, சட்ட பணிப்புரைகளுக்கமைய இடம்பெறுகின்றன. திருமண விபரங்களை சட்ட ரீதியாக பதியும் ஒருவராகவே திருமணப்பதிவாளர் உள்ளார். உள்நாட்டு அலுவலக அமைச்சின் கீழேயே திருமண பதிவாளர்கள் தெரிவுகளும் அவர்களது விடயங்களும் உள்ளன. பெரும்பாலும் அரசியல் பின்புலத் தெரிவுகளாகவே அவர்களது நியமனங்கள் இடம் பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு சில ஊர்களில் பல முஸ்லிம் திருமணப் பதிவாளர்களது முறையற்ற அட்டகாசங்கள் அதிகரித்து உள்ளன. இவர்களைக் கண்கானிக்கவோ அல்லது … Read moreமுஸ்லிம் திருமணப் பதிவுகள்.

விழிகளைத் திறந்தால் வழிகள் பிறக்கும்.

இடியப்பச் சிக்கல் போல் வாழ்வில் பல்வேறு குழப்பங்கள் வரலாம். எதிர்பாராத அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் எம்மைச் சூழ நிகழலாம். இடி வீழ்ந்தது போல் சுக்கு நூறாகி சிதறிக் கிடக்கலாம். எழும்பவே முடியாததாகிவிட்து என்றெல்லாம் கவலைப்பட்டு அவதிப்படலாம். தனக்கு மட்டுமே அனைத்தும் இவ்வாறு நிகழுகின்றது என்றும் சிலவேளை ஒப்பாரி வைக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் நம்பிக்கை அறுந்து போய், சடலமாக, முடமாக கிடந்து விடுகின்றோம். அசைவற்று, இயக்கமற்று கண்ணீரையும் கவலைகளையும் நாம் தத்தெடுத்துக் கொள்கின்றோம். இச் சூழ்நிலையில் பிரச்சினை சிறியதோ … Read moreவிழிகளைத் திறந்தால் வழிகள் பிறக்கும்.

தாம்பத்திய உறவும் மனநிலையும்

காமத்தை சதைகளோடு மட்டுமே பார்க்கும் மனப்பாங்கு வாய்த்தால் மனிதனை உயிர்ப்பிக்கும் உள்ளார்ந்த மெல்லிய உணர்வுகள் அவனுக்குள் வரண்டு விடுகின்றன. எனவே, அத்தகைய பூமியில் மணம் வீசும் அன்புப் பூக்கள் உருவாக வாய்ப்பில்லை. சதைகளோடு மல்லுக்கட்டுகின்ற கலாசாரத்துக்குள் அடிமைப்பட்டு வாழுகின்றவனிடம் பெண் குறித்து புரிதலுடைய உணர்வுகளையோ மனிதாபாமான விழுமியங்களையோ எதிர்பார்க்க முடியாது. பெண் என்பவள் ‘போதையூட்டும் வஸ்து’ என்ற புலக்காட்சியே அவனில் குடிகொண்டிருக்கும். அதனாலேயே இன்னும் பல பெண்கள் கட்டிலை விட்டும் கரையேற முடியாத அவஸ்தையில் தொடர்ந்தும் வாழ்கின்றனர். … Read moreதாம்பத்திய உறவும் மனநிலையும்

ஆழ்மனம்

மனிதருக்குள் இருக்கும் ஒருவன் அவனது நண்பனாகவும் எதிரியாகவும் பாத்திரம் ஏற்பவனாக உள்ளான். அவனைக் கையாளும் விதத்தில்தான் அவன் எவ்வாறு என்பது தீர்மானிக்கப்படுகிறது. அது அவனது பலமாகவோ அல்லது பலவீனமாகவோ ஆகப் போகின்றது. அந்த ஒருவனை கையாளத் தெரியாமலேயே தனக்குள் மனிதன் தனக்குரிய எதிரியை உருவாக்கிக் கொள்கின்றன். உண்மையில் அது இலவசமாக கிடைத்த ஒரு வரம்; ஒரு புதையல். அது ஒரு சாம்ராஜ்யம். அதை ஆளத் தெரிந்தவன் உலகை ஆள்வான். அதுதான் அவனது ஆழ்மனம்.( subconscious Mind) அதனை … Read moreஆழ்மனம்

தொப்பையான வாழ்வு

வட்டாரமெங்கும் தண்ணீரில் கண்டம். நாடு கிடைத்து விட்டது ‘தண்ணீர்த் தேசம்’ சந்து பொந்துகளில் தண்ணீர் செத்துக் கிடக்கிறது. குப்பைன்று கொட்டியதில் வாழ்வு வழுக்கி விழுந்தது. இரண்டாவதான ஓரு கருப்பை வாழ்வு இந்த தண்ணீர் பையில். அநாதையானோம் ஓர் அழையா விருந்தாளியால். மூச்சுத் திணறலில் தத்தளிக்கிறது உடமைகளும் எம் வாழ்வும். நீர் ஜாதி என்பதால் வழிகின்ற கண்ணீர்த் துளிகளும் உயிர் கொல்லி உருவத்தில். ‘நீர்’ இஸ்ரேலி போல் ஒரு கொடூர ஆக்கிரமிப்பில் எம். ரிஸான் ஸெய்ன்

ஒரு மனநல அமர்வு

மனதில் பல கவலைகளையும் வெறுப்புகளையும் சொல்லாத பல துயரக் கதைகளையும் மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அடக்கி, அமுக்கி வைத்திருக்கின்றோம். அவற்றை வெளிப்படுத்த முயற்சிப்பதில்லை. பொய்யாக புன்னகைத்துக் ( (Fake Smile) கொண்டு உள்ளுக்குள் அழுகின்றோம். மனதளவில் மறைவாக சோகத்தில் உழன்று கொண்டிருக்கின்றோம். மற்றவர்கள் தம்மைப் பற்றி இழிவாக நினைப்பார்கள் அல்லது தப்பாக கணக்குப் போடுவார்கள் என்பதற்காக மனதளவிலும் திரைமறை வாழ்வை வாழ முனைகின்றோம். அனைத்து மனக் கிலேசங்களையும் ரகசியமாகப் பத்திரப்படுத்தி இருப்பதால் பல்வேறுபட்ட உடலியல் உபாதைகளுக்கும் உள்ளாகும் … Read moreஒரு மனநல அமர்வு

நாம் சடலங்கள் அல்ல

நாம் வாழ ஒரு வாழ்க்கையை விரும்புகின்றோம். பெற்றோரோ, கணவன், மனைவியோ அல்லது உறவினர்களோ வேறொரு வாழ்க்கையே நாம் வாழ வேண்டும் என்று சிலவேளை விரும்புகின்றனர். அதனையே எமக்காக அவர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வாழ்வே எமக்கு சிறப்பு என்றும் கூறப்படுகிறது. சிலவேளை அது ஓரளவு சரிப்படலாம். ஆனால் பலருக்கு அது முரண்படலாம். பல மனங்களால் அதை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு அப்போது ஏற்பட்டு விடுகிறது. சிலவேளை எமது சப்தங்கள் ஊமையாகும். அதை தடுக்க முடியாது. அச் சந்தர்ப்பத்தில் … Read moreநாம் சடலங்கள் அல்ல

தரித்திர வாழ்வு

செத்து செத்து வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா..? மரணத்திற்கு முன்னர் எத்தனை முறைதான் இறப்பது..? விரும்பாத பல நிகழ்வுகளால் உயிரோடு புதைக்கப்படுவதை எம் மரத்த நிலை உணர்த்தி விடாமலா போகும்..? கவலைகளாலும் மனஅழுத்தங்களாலும் பிரச்சினைகளாலும் நாம் வாழ்வை வாழாமல் விடுகின்றோம். நடக்கின்ற ஒவ்வொரு வழியிலுமுள்ள பல புதை குழியில் வீழ்ந்து எழுவது தலைவிதியாகி விட்டது. வாழ்வின் நியாய தர்மங்களை ஏற்காமல் சிதைந்து போகிறோம். வாழ்வின் பிரச்சினைகளை சமாளிக்கத் தெரியாமல் அல்லது அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாமல் முகவரிகளை இழந்து … Read moreதரித்திர வாழ்வு

சிறு பிரிவில் ஒரு மறு பிறவி

அழகான நினைவுகளால் நீ ஆடை கட்டி விட்டாய் என் இலையுதிர்காலம் வசந்தமானதாக. நினைவுக் குழந்தையாய் நீ நான் கொஞ்சியபடி நாம் வாழ்ந்த இந்த அறை ஒரு கருவறையாக. சிதறவிட்ட உன் சிரிப்பில் ஒரு முத்துமாலை கோர்ப்பவளாய் நான் உன்னை அதில் அணிவதற்காக மலராகப் பூத்தன உன் நினைவுகள் தூக்கலான வாசனை என்னைச் சுற்றி. நீ காற்றாக வந்து என்னைத் தொடுவதால் நீ இருக்கிறாய் என்னை தழுவிக் கொண்டு தற்போதும் எப்போதும். எம்.ரிஸான் ஸெய்ன்

நானே தலை சிறந்தவன்.

மனிதன் தனக்கு தானே உட்செலுத்திக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. வெறும் வார்த்தைகளாலல்ல. உள்ளுணர்வால். அப்போதே எம்மை இயக்கும் அந்த உந்து சக்தி பிறக்கும். திராணியற்ற ஜடமாக வாழ்வதில் ஏது பயன்..? முயலைப் போல் பயந்து பயந்து நீ வாழப் போகிறாயா..? சிறுத்தையைப் போல் தினவெடுத்த புஜங்களோடு உன் வாழ்வில் நீ ஓடப் போகிறாயா..? நீ நினைப்பதே உனக்கு சரியாக இருக்கும். அதனையே வாழ்வில் நீ பெறப் போகிறாய. அதிகாலையில் வாழ்க்கை உன்னை அழைக்கிறது. எப்படி நீ … Read moreநானே தலை சிறந்தவன்.

இப்படிக்கு தந்தை

சோற்றுக்கு கஷ்டப்படும் தந்தைகளும் பிள்ளைகளும் அழுது கொண்டும் சோகத்திலும் இருக்க வேண்டுமென்பதில்லை. கூரை இடிந்து போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிராமல் மேலே நேரடியாகவே தெரியும் உதிக்கும் நிலாவை ரசித்துக் கொண்டு கடந்து போய்விடு என்றால் நாளை மழை பெய்து, பிள்ளைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தந்தை யோசிக்க வேண்டி இருப்பதால் அதை ரசிக்கவா முடியும்.,? என்று கேட்க முடியும். நாளை மழை பெய்தால் நனைத்து கொண்டு ஆனந்தக் கூத்தாடுஅல்லது இப்போது அதை ரசிதுக் கொண்டு போய் விடு என்று ஒருவர் … Read moreஇப்படிக்கு தந்தை

Select your currency
LKR Sri Lankan rupee