எண்ணங்களின் சிதறல்கள்

சில சமயங்களில் பல விடயங்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன – பயம் எதிர்பார்ப்பு வலி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து வாழ்வின் சில நாட்களை இரசிக்கத் தவறிய நாட்களாக்கி விடுகின்றது. மனிதன் ஒன்றும் தனிமையில் இங்கு வாழ்வதில்லையே! அது சாத்தியமும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் சக மனிதர்களின் ஆதிக்கம் உயர்ந்து நிற்கும். அத் தருணங்களில் சில புரிதல் அற்ற மனிதர்களின் செயல்களில் புரட்சியேதும் இல்லையே! சொன்னால் … Read moreஎண்ணங்களின் சிதறல்கள்

தேவதைகளின் பயணமிது

வானவில் வாழ்க்கையிது பல வண்ணப் பயணமிது பாதைகளுக்கு முடிவிருக்கலாம் பயணங்களுக்கு முடிவில்லை பெண்ணே! காற்றிற்கு யாரும் வழிகாட்டுவதில்லை அது தன் பயணத்தை நிறுத்துவதுமில்லையே நீயும் காற்றைப்போல் பயணப்படு உன் தேடலின் வேட்கை உன் செயல்களில் தெரியட்டும் ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்கள் இருப்பதைக்கண்டு நிலவு தன் வரவை நிறுத்துவதில்லையே அது ஒற்றை என்றும் ஒளிரும் நீயும் அது போல் துணிந்து நில்! நடந்து முடிந்தவை பற்றி ஒருபோதும் எண்ணாதே மழையே நின்ற பின் தூறல் பற்றிய கதை ஏன்? உன்னால் … Read moreதேவதைகளின் பயணமிது

வானம் கூட வசமாகும்

மனிதா! வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள் புன்னகைப்பது உன்னை பார்த்து தான் உனக்கு நல்வழி காட்டத்தான். பலநூறு முட்களின் நடுவே பசுமையான ரோஜா மலரவில்லையா சேற்றின் பகுதியில் செந்தாமரை இதழ் விரிக்கவில்லையா? மரக்கிளைகள் வெட்ட வெட்ட தளர்ந்து வளரும் அதன் வேரினை வெட்டாதவரை தடைகள் எல்லாம் முட்டுக்கட்டைகள் அல்ல ஓர் இலட்சியவாதி ஏறும் படிக்கற்கள் சில நரம்பில்லாத நாவுகள் உன் மனதைக் கீறிடலாம் கலங்கிவிடாதே. சோதனைகளைத் தாண்டாமல் யாரும் சாதிப்பதில்லை உன் துன்ப துயரங்களை மூட்டை கட்டிவிடு … Read moreவானம் கூட வசமாகும்

இவை தான் வேண்டும்

இறைவா! என் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாமிய வழிமுறை வேண்டும் என் ஒவ்வொரு மூச்சிலும் சுன்னாவின் அங்கிகாரம் வேண்டும் என் ஒவ்வொரு வார்த்தையிலும் இறை பக்தி வேண்டும் என் ஒவ்வொரு கேட்டலிலும் இறை நம்பிக்கை வேண்டும் என் ஒவ்வொரு எட்டிலும் இறை சிந்தனை வேண்டும் என் உடலிலன் ஒவ்வொரு முடிச்சிக்களிலும் ஈமானியப் பற்று வேண்டும் என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் உன் திருநாமங்கள் முழங்கிடும் ஒலி வேண்டும் என் சொல், செயல் முழுவதுமே தூய இஸ்லாத்திற்கு அடிமையாகிட வேண்டும் … Read moreஇவை தான் வேண்டும்

நிலவு தொடும் பயணத்தின் சாரல்கள்

எண்ணங்கள் எங்கே சென்றாலும் நினைவுகள் வேறு இடம் நின்றாலும் -நெஞ்சின் நினைவலைகளில் எல்லாம் நிறைந்து நிற்கின்றது கடந்து வந்த பயணத்தின் சுவடுகள். தவிர்க்க முடியாத சில கணங்கள் கடந்து தான் ஆக வேண்டும் என்கிற நாட்கள் இவற்றையெல்லாம் தாங்கும். தாண்டும் வேலைகளில் மனதின் கற்பனைகளுக்கெல்லாம் நிஜமான ஓர் உருவம் தோன்றி- அந்நாட்களை அழகாக்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம் ஆயிரம் கோடி கனவுகள் – பல ஆயிரம் எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள் இவற்றிற்கெல்லாம் நடுவே- சில கோட்பாடுகளும் விதிமுறைகளும் – பல … Read moreநிலவு தொடும் பயணத்தின் சாரல்கள்

பதில் – “தெரியவில்லை”

வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஓர் சம்பவம் இந்த உலகின் நிஜ உருவம் பற்றிய உண்மை நினைவை எம் மத்தியில் எழுப்பி விட்டுத்தான் செல்கிறது. ஆனால் மனிதன்தான் நடந்தது நடக்காதது மற்றும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தது என அனைத்தையும் சேர்த்து ஒரு கற்பனையிற்குள் கொண்டு வந்து அதற்கு கதவு, ஜன்னல், கூரை வைத்து ஒரு மாயை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றான். நிஜமாகவே மறந்துதான் போய்விடடோமா? அல்லது ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் … Read moreபதில் – “தெரியவில்லை”

ஒரு முறை தான் வாழ்க்கை

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றும் கண்னைக் கட்டுக்கொண்டு கடந்து போடக்கூடிய இலகுவான பாதையை கொண்டது அல்ல; மாறாக நிறையவே மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது என்பது நாம் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் புரிந்து கொண்ட உண்மை. இந்தப் பயணத்தின் நமக்கான ஒவ்வொரு பக்கத்தையும் நாம் தான் எழுத வேண்டும். நம் வாழ்க்கையை ஓர்  அழகான ஓவியமாய் வரைய வேண்டும். அனைவரது வாழ்விற்கும் ஓர் அழகான அர்த்தம்  (பொருள்)உண்டு அதை அவர் அவர் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நம்மிடத்தில் … Read moreஒரு முறை தான் வாழ்க்கை

தொலைவின் தேடல்கள்

வாழ்வின் சில நிமிடங்கள் கனவாகிவிடாதா என்ற அற்ப எதிர்பார்ப்பு நிஜமாய்த் தெரியும் நினைப்பது எதுவும் நடந்தது விடாது என்று கடந்த நாட்களின் சில தருணங்கள் மிகத் தெளிவாய் உணர்த்தி விட்டன இவ்வளவு தான் வாழ்க்கை இதற்காக தான் அனுப்பப்பட்டாய் என்று. கடந்து வந்த பாதையை நின்று நிதானமாய் திரும்பிப் பார்க்கையில் எங்கோ ஓர் தொலைவில் ஏதோ ஓர் முடிவில் – அது முடிவா தொடக்கமா என்று கூட தெரியவில்லை- அங்கு சிறு கீற்றாய் பல வினாக்கள் தேடல்கள்… … Read moreதொலைவின் தேடல்கள்

தோழி

இறைவன் தந்த பெறுமதியான பரிசுகள் ஏராளம்-அவற்றில் ஒன்று உயிருள்ள உயிரான ஓர் உறவு – நட்பு  (தோழி)…. காலத்தின் வேகத்தில் கட்டுண்ட கைதியாய் வாழ்வின் பாதையில் முடிவில்லா தேடல்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் வேலையில் பொக்கிஷமாய் பரிசாய் கிடைத்தவை பல அவற்றில் ஒன்று உன்(நம்) நட்பு… காலங்கள் உருட்டிவிடப்பட்ட கல்லாய் உருண்டோடுகின்றன, வயதும் விரும்பியோ விரும்பாமலோ கூடிக்கொண்டே போகிறது, தேவை எண்ணம் ஆசை இலக்கு கனவு இலட்சியம் எல்லாவற்றையுமே காலமும் நேரமும் சந்தர்ப்பமுமே முடிவு செய்கிறது எனும் பக்குவமும் … Read moreதோழி

உணர்ந்து வாழ்….

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் என்னும் பக்குவம் இருந்தால் போதும் சந்திக்கும் எல்லா மனிதர்களிடம் இருந்தும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். எந்த நிலையிலும் உனது மனதிடத்தை நீ இழந்து விடாதே உனக்கு நீ உண்மையாக இரு நீ ஒரு தனித்துவமான மனிதன் உனக்கென்று இவ்வுலகில் ஒரு பெறுமதி இருக்கின்றது, அதை நீ உணர்ந்துகொள். உனக்கு இறைவன் என்ன பலன்களை நன்மைகளை வைத்திருக்கின்றான் என்பதைத் தேடு, மாறாக உன் பலவீனங்களை நினைத்து … Read moreஉணர்ந்து வாழ்….

உன் வாழ்க்கை, உன் திருப்தி, நீ வாழ்.

வாழ்க்கை அழகு, வாழ்வதும் அழகு இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய நியதி யாதெனில் தனக்கென எது கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் (Allow yourself to accept the reality) தனக்கு கிடைக்காததை நினைத்து வருத்தம் கொள்ளாது இருப்பதுமே. முதலில் நீ உன்னை புரிந்து கொள்ள வேண்டும், நீ உன்னை நேசிக்க வேண்டும், நீ உன்னை மனப்பூர்வமாய் உணர வேண்டும்; வாழ்க்கை பேரழகாகும் வாழ்வதும் பேரின்பமாகும். நான் செலவிடும் ஒவ்வொரு வினாடியும் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்பதில் … Read moreஉன் வாழ்க்கை, உன் திருப்தி, நீ வாழ்.

Select your currency
LKR Sri Lankan rupee