மனித நேயம் கொண்டு பார்ப்போம்

ஒரு வீட்டு வாசலில் சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் வந்து நிற்கின்றார். அவரைப் பார்த்து முகம் சுழித்த மகன் தன் தந்தையை நோக்கி, “குப்பைக்காரர் வந்திருக்கின்றார்” என்று கூறினான். அதற்குத் தந்தை மிக நிதானத்தோடும் உறுதியோடும், “இல்லை மகன். நாம்தான் குப்பைக்குச் சொந்தமானவர்கள்; அசுத்தமாக்குபவர்கள். அவரோ சுத்தம் செய்பவர். எமக்கு உதவுவதற்காக வருகை தந்துள்ளார்” என்று கூறினார். எவ்வளவு அழகான, ஆழமான, பண்பாடும் ஒழுக்கமும் உள்ள பிள்ளை வளர்ப்பு. எந்தவொரு மனிதனும், தன்னுடைய நிறம், குடும்பம், பிறப்பிடம், … Read moreமனித நேயம் கொண்டு பார்ப்போம்

பெண் எனும் பெரும் அமானிதம்

பிள்ளைகள் வளர்ப்பது கடினம்தான். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்த்துக் காப்பது மிகக் கடினமானது. நுட்பமானது கொஞ்சம் சறுக்கினாலும் முடிவு விபரீதமாகும். பெண் ஓர் அத்தியாயத்தின் ஆணிவேர். வெளியில் நடமாடும் போது பெண் பிள்ளைகளின் ஆடைகளைக் கவனியுங்கள் ; நடவடிக்கைகளைப் பாருங்கள். ஆடையென்பது விருந்தல்லஅது பெண்களுக்கான தடுப்பு வேலி. வேலி எந்தளவுக்கு வலுவானதோ அந்தளவுக்கு பாதுகாப்பானது. வீட்டிலிருப்போர் மஹ்ரமான ஆண்களாக இருந்தாலும் நினைத்த மாதிரியான ஆடைகளில் பெண்கள் இருக்க முடியாது. வரம்புகள் உள்ளன. சொல்லிக் கொடுங்கள். இல்லையேல் விரும்பத்தகாத … Read moreபெண் எனும் பெரும் அமானிதம்

அல் ஷேக் அஹ்மத் ஷபீஃ பின் பரகத் அலி அல் பன்காலி

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞர். கடந்த 18-9-2020 வெள்ளிக்கிழமை தனது 104 வயதில் தலைநகர் டாக்காவில் இறையடிசேர்ந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 1916 ஆம் ஆண்டு பங்களாதேஷ் கிராமமொன்றில் பிறந்தார். தன் ஆரம்பக் கல்வியை தனது கிராமத்தின் அருகிலுள்ள பாடசாலைகளில் பயின்றார். சிறு வயது முதல் மார்க்கக் கல்வியில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் வேகமாகவே கற்றுக்கொண்டார். பின் பங்களாதேஷின் சிட்டகோங் நகரில் உள்ள பிரபலமான மிகப்பெரும் தனியார் பல்கலைக் கழகமான … Read moreஅல் ஷேக் அஹ்மத் ஷபீஃ பின் பரகத் அலி அல் பன்காலி

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

உயிர் மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் அமானிதம். அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தினால் அடையாளம் செய்யப்பட்டுள்ள மிக முக்கிய ஐந்து விடயங்களுல் உயிரும் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தனது உயிரையும் பிறர் உயிரையும் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கின்றான். உயிர்களை எக்காரணத்துக்காகவும் சேதப்படுத்தவோ மாய்த்துக்கொள்ளவோ மனிதனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அவ்வாறு தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலையானது மிகப்பெரும் பாவமாகவே மார்க்கத்தில் கருதப்படுகின்றது. “நீங்கள் உங்களை அழிவின் பக்கம் இட்டுச் செல்ல வேண்டாம்” (அல்குர்ஆன்- 2:195) “உங்களை … Read moreஇஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை

காணிப் பிரச்சினைகளால் கல்லாகும் உள்ளங்களும் காணாமல் போகும் உறவுகளும்.

[edsanimate_start entry_animation_type= “zoomInUp” entry_delay= “1” entry_duration= “2” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “” custom_css_class= “”] இன்றைய காலத்தில் போலிஸ், நீதி மன்றம், மத்தியஸ்த சபை, உலமா சபை, பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் மிகக் கூடுதலாக நிலுவையில் உள்ள விசாரணைகள் காணிப் பிரச்சினை தொடர்பானவையாகும். உறவுகள் முறிந்து சிதறிப்போவதற்கு மூலக் காரணியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதும் காணிப் … Read moreகாணிப் பிரச்சினைகளால் கல்லாகும் உள்ளங்களும் காணாமல் போகும் உறவுகளும்.

எலிகளுடனும் கரப்பான் பூச்சிகளுடனுமே நான் தூங்கினேன் – கதறியழும் தாய்

அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஏழு வருடங்களாக கவலையோடும் கண்ணீரோடும் ஒரு தாய் இருக்கின்றாள். உள்ளத்தை உருக்கும் தன் வலிகளை பகிர்ந்து கொள்கிறார். நான் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். என் வலது கால் முழங்காலுடன் கழட்டப்பட வேண்டுமென்று வைத்தியர்கள் அறிவுரை வழங்கினார்கள். சில நாட்களின் பின் என் மகனுடன் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்றேன். மகனுடனும் மருமகளுடனும் மகனின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்தேன். போகப்போக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்டேன். அவர்கள் இருவருக்கும் நான் … Read moreஎலிகளுடனும் கரப்பான் பூச்சிகளுடனுமே நான் தூங்கினேன் – கதறியழும் தாய்

பிள்ளைகளே! தந்தைகளே! இது உங்களுக்குத்தான்

சற்று சிந்திப்போமா.  மார்க்கம் எமது உயிர். பண்பாடும் ஒழுக்கமும் எமது மூச்சு. உயிரான மார்க்க விடயங்களும், மூச்சான உயர் பண்பாடும் ஒழுக்கமும் படிப்படியாக எம்மிடம் அழிந்து வருவதை அவதானித்தோமா. நபிகளாரின் நற்போதனைகள் அகன்று நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் பேச்சும் செயலும் வேரூன்றி வருகின்றதே. உண்மை உதிர்ந்து கற்பனை முளைக்க ஆரம்பித்து விட்டதே. விழித்துக் கொள்வோம். நம் பிள்ளைகள் தலைமுடி வெட்டும் முறையை அவதானித்தீர்களா. அதில் பல முறைகள் தடுக்கப்பட்டவைகள் என்பதை உணர்ந்தீர்களா? மார்க்க வரையறையைப் பேணி நேர்த்தியாக … Read moreபிள்ளைகளே! தந்தைகளே! இது உங்களுக்குத்தான்

ஊழல் மோசடி

 ஊழல் மோசடியின் விபரீதம். ஊழல்மோசடி செய்தவர்களின் மறுமை நிலை. அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்புகளும் தடுக்கப்பட்டவையே. பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பணிக்கு மட்டுமே உரியது. இஸ்லாம் தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டுமென வலியுறுத்தும் இறை மார்க்கம். அதற்காக பல விடயங்களை ஏவியுள்ளதைப் போல் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் அநீதியிழைக்கும் பல விடயங்களை தடைசெய்துமுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட விடயங்களுல் ஊழல் மோசடி முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஊழல் மோசடியின் விபரீதம் ஊழல் மோசடி இன்று உலகத்துக்கே … Read moreஊழல் மோசடி

தேன் துளியும் எறும்பும்

தேன் துளியொன்று பூமியில் விழுந்தது. அவ்விடம் வந்த சிறியதோர் எறும்பு அந்தத் தேன் துளியின் ஓரத்தில் நின்று சுவைக்க ஆரம்பித்தது. பின் அங்கிருந்து செல்வதற்கு நினைத்தது எறும்பு. ஆனால் தேனின் சுவை எறும்பை மிகவும் கவர்ந்து விடவே மீண்டும் தேனை சுவைக்க ஆரம்பித்தது. இரண்டாம் முறையும் திரும்பிச் செல்ல நினைத்த எறும்புக்கு தேன் துளியின் ஓரத்தில் இருந்து கொண்டு தேனை ருசி பார்த்தது திருப்தியாக இருக்கவில்லை. இதை நன்கு உணர்ந்த எறும்பு இன்னும் நன்றாக அனுபவிக்க தேன் … Read moreதேன் துளியும் எறும்பும்

பண்பாடுகளுக்கான பாதை.

பண்பாடும் மனிதமும் விருத்தியான வாழ்வுக்கான வளங்கள். ஜப்பானின் விருத்தி பண்பாடுகளினதும் மனிதத்தினதும் அடையாளம். ஜப்பானிய பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில், “பண்பாடுகளுக்கான பாதை” என்ற பாடம் கற்பிக்கப்படுகின்றது. மாணவர்கள் அதனூடாக பிறருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொள்கின்றனர். அதனால் இன்று உலகில் மரியாதை பண்பாடுகளைப் பேணி நடப்பதில் ஜப்பான் முதலிடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாகும். தமது புதிய பணியாளர்களின் காலணிகளை நிறுவனங்களின் அதிபர்கள் மக்களின் முன்னிலையில் துடைத்து விடுவது ஜப்பானில் பரவியிருக்கும் மற்றுமொரு கலாச்சாரமாகும். உயர்ந்தவன் … Read moreபண்பாடுகளுக்கான பாதை.

சகோதரா! உன் ஆடை பற்றி ஓரிரு நிமிடங்கள்

இன்று பொதுவாகவும் வளர்ந்து வரும் இளைஞர்களிடம் குறிப்பாகவும் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்பட்டு வருகின்றன. இஸ்லாம் ஆடை தொடர்பாக பெண்களுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான வரையறைகள் போன்று ஆண்களுக்கும் சில வரையறைகளை போதித்திருக்கின்றது. அதன் அடிப்படையில் ஆண்களின் ஆடைகளுக்கான நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம். அவ்ரத்தை மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆண்களுக்கான அவ்ரத்தாக இஸ்லாம் தொப்புளில் இருந்து முழங்கால் வரையான பகுதியை அடையாளம் காட்டியுள்ளது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் நாம் தேர்வு செய்யும் … Read moreசகோதரா! உன் ஆடை பற்றி ஓரிரு நிமிடங்கள்

வெள்ளிக்கிழமைகளில் நபிகளார் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுவோம்

“உங்களின் நாட்களில் மிகவும் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். இத்தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத்தைக் கூறுங்கள். நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது” ஹதீஸ் “என்மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான்” ஹதீஸ். சிறந்தது அத்தஹிய்யாதில் இடம்பெறும் ஸலவாத்து. எம் உயிரிலும் மேலான உத்தம நபியவர்கள் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுவோம். பிறரையும் கூறத் தூண்டுவோம். அதன் மூலம் நன்மைகளைப் பெறுவோம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வஅலா … Read moreவெள்ளிக்கிழமைகளில் நபிகளார் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுவோம்

சிரிக்கும் முகங்களும் அழும் உள்ளங்களும்

அது பல வீடுகளைக் கொண்ட பகுதி. அந்த வீடும் கணவன், மனைவி, இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் வாழும் சிறியதொரு வீடு. அந்த வீட்டில் வாழ்வாதாரம், வருமானக் குறைவு போன்றவற்றின் காரணமாக கணவனுக்கும் மனைவிக்குமிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. ஒருநாள் பிரச்சினை கடுமையாகவே வெடித்தது. தொடர் பிரச்சினையைத் தாங்கிக் கொள்ளமுடியாத மனைவி வீட்டை விட்டும் வெளியேற முடிவு செய்து இரவை எதிர்பார்த்திருந்தாள். கணவனும் பிள்ளைகளும் தூங்கியதன் பின் ரகசியமாக வெளியேறினாள். யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீடுகளின் கதவுகளையும் … Read moreசிரிக்கும் முகங்களும் அழும் உள்ளங்களும்

மோசடி மூலமான பதவிகள்

பதவிகள், பொறுப்புகள், பதவி உயர்வுகள் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுவதே அடிப்படையும் மார்க்க வழிகாட்டலுமாகும். நபிகளார் அவர்கள் தம் தோழர்களில் இருந்து மிகப் பொருத்தமான தகுதியுள்ளோரை மட்டுமே பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்வு செய்திருக்கின்றார்கள் என்பதை பல நபிமொழிகள் உணர்த்துகின்றன. தமக்கு மிகவும் பரிச்சயமான, மிகத்தெரிந்த, நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக்கூட பொருத்தமற்றவர்கள் என நபிகளார் காணும் போது பதவிகளை வழங்கவில்லை. அபூதர் (ரலி) கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் பொறுப்பு தரக்கூடாதா?” … Read moreமோசடி மூலமான பதவிகள்

என் கணவன் தற்போது பஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்கிறார்

கணவனுக்காக உருகிய மனைவியும். அருளாளன் அல்லாஹ்வின் கருணையும். சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன் மனைவிக்கான உண்மைச் சம்பவம். டீவியில் மார்க்க நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெரும் அறிஞர்களில் ஒருவரான எமிரேட்ஸ் நாட்டின் மார்க்க அறிஞர்கள் சபைத் தலைவர் அஷ் ஷேக் அப்துல்லா அவர்கள் மார்க்க விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு விடயத்தில் மார்க்கத் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள அல்ஜீரிய பெண்ணொருத்தி அவருடன் தொடர்பை ஏற்படுத்துகின்றார். “நான் அல்ஜீரியாவைச் சேர்ந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிம் பெண். ஆனால் … Read moreஎன் கணவன் தற்போது பஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்கிறார்

மனிதநேயமும் பண்பாட்டு மாற்றமும்

மனித நேயமும் பண்பாடும் வளமான வாழ்வுக்கான வளங்கள். பெருமையும் பொறாமையுமற்ற மக்களினால் சமூகமும் ஜொலிக்கும் நாடும் செழிக்கும். பிறரை மதிக்கும் பண்பாடும் வெற்றியை தட்டிக் கொடுத்துத் தோல்விக்குத் தோள் கொடுக்கும் குணமும் வாழ்வுத் தரத்தை உயர்த்தும் வழிகளாகும். ஜப்பான் எகிப்தை விட சிறிய நாடு. மக்கள் தொகை சுமார் 125 மில்லியன். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுப் பேரழிவை சந்தித்த நாடு. அப்படியிருந்தும் ஏழ்மை, வறுமை, பட்டினி எதுவுமே அங்கில்லை. தொழில்நுட்பத் துறையில் உச்சம் தொட்ட நாடு. … Read moreமனிதநேயமும் பண்பாட்டு மாற்றமும்

உனக்கெதிராக இறைவனிடம் உயரும் கைகள்

தனக்கு அநியாயம் செய்தோரை தன் இறைவனிடம் முறையீடு செய்வதற்காக பள்ளிக்குச் சென்றார் ஒரு மனிதர். (அங்கே அவருக்கு அநீதியிழைத்த) அந்த அநியாயக்காரர்கள் முதல் வரிசையில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார். -மொழி பெயர்ப்பு – பிறரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் திருடியோர். பொறாமையில் சிக்குண்டு அடுத்தவர் சந்தோஷத்தை சீர்குலைத்தோர். மானத்தில் களங்கம் ஏற்படுத்தியோர். கோள் சொல்லி, புறம் பேசி சந்தோஷம் அடைந்தோர். தோற்றத்தில் தம்மை உத்தமர்களாகக் காட்டி பிறர் உரிமைகளில் அத்துமீறியோர். தானும் தன் பிள்ளைகளும் மாளிகையில் வசிக்க பிறரையும் … Read moreஉனக்கெதிராக இறைவனிடம் உயரும் கைகள்

ஆஷுரா நோன்பு

அல்லாஹ் அவனது பேரருளின் காரணமாக நன்மைகளை அள்ளித் தரும் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவற்றைப் பயன்படுத்தி அமல்களை அதிகம் செய்பவன்தான் உண்மையான பாக்கியவான். அப்படியான காலங்களில் தற்போது எம்மை அடைந்திருக்கும் முஹர்ரம் மாதமும் ஒன்று. ‘முஹர்ரம்’ மாதம் அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களுல் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் உங்களுக்கு நீங்களே … Read moreஆஷுரா நோன்பு

நீயும் மாற வேண்டும்.

நான் சிறியவனாக இருந்தபோது என் தந்தை மீது கோபப்பட்டேன். நான் தந்தையானபோது என் தந்தை சரியாகத்தான் நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் சிறியவனாக இருந்தபோது பெற்றோரை மீறி நடந்தேன். நான் பெற்றவனாக மாறிய போது என் பிள்ளை மூலம் அந்த வலியை அனுபவிக்கின்றேன். என் பெற்றோரின் வலியையும் புரிந்து கொண்டேன். நான் மாணவனாக இருந்தபோது என் ஆசிரியரை விமர்சித்தேன். நான் ஆசிரியரான போது அவர் சரியாகத்தான் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். காலங்கள் சுழல்வதற்கு … Read moreநீயும் மாற வேண்டும்.

வார்த்தையில் பக்குவத்தை கற்றுக் கொள்

பயனில்லாத வார்த்தைகளும் உண்டு. ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் மௌனங்களும் உண்டு. சிலநேரம் பேசுவது அழகு. சிலநேரம் மௌனிப்பது அதை விட அழகு. “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவர் நல்லதைப் பேசவும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.” என்ற நபிமொழி எவ்வளவு ஆழமானது அர்த்தமுடையது நமக்குத்தான் புரியவில்லை போலும். நாம் முரண்படுவது, மன்னிப்புக் கேட்பது, கண்டிப்பது, இணைவது, பிரிவது அனைத்தும் இயல்பானவையே. ஆனால் அழகு என்னவென்றால் நளினமாக முரண்படுவதும் பணிவுடன் மன்னிப்புக் கேட்பதும் மென்மையாகக் கண்டிப்பதும் அன்புடன் இணைவதும் … Read moreவார்த்தையில் பக்குவத்தை கற்றுக் கொள்

பெண்மை – தாய்மையின் இருப்பிடம்.

அனைத்து ஆண்களையும்கவர்வது பெண்மையல்ல.தன் கணவனை நேசித்துஉயர்வாகக் கருதுவதே பெண்மை. ஆடவர் கண்களுக்கு கவர்ச்சிகளைவிருந்தளிப்பது பெண்மையல்ல.நாற்குணத்தின் மறுபெயரே  பெண்மை. பெண்மைக்கு இஸ்லாம் தந்தமகிமையை மறந்திருக்கும் பெண்ணே! மறைந்திருக்கும் உன் பெண்மையை திறப்பதுதான் அழகென்று நினைத்தாயோஅரைகுறை ஆடையும் ஆபரணமும்தான்பெண்மை என்றிருந்தால் உன் தாய்மையின் மகிமையை நீயே தரம்  குறைத்து விட்டாய் ஆண் மகனே! நீயும்பெண்மையை நேசிஅதுதான் தாய்மையின் இருப்பிடம்.உன்னைப் பெற்றதும் பெண்தான்உனக்கான தந்தை அந்தஸ்தைபெற்றுத் தருவதும் பெண்தான். பாஹிர் சுபைர்

உள்ளம் உடைந்து விட்டால்

அது ஒரு ஹோட்டல். நேரம் காலை 10.30. அங்கு பலர் பொருட்களை கொள்வணவு செய்துகொண்டிருந்தனர். ஒருசிலர் உட்கார்ந்திருந்தனர். அந்த நேரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடும் களைப்புடனும் வியர்வையுடனும் உள்ளே நுழைகிறார். மிகவும் மெலிந்த, சோர்வடைந்த தோற்றம். அவரது ஏழ்மை நிலையை அவரது தோற்றமே காட்டியது. வந்தவர் பேன் காற்றின் கீழே உட்கார ஆசைப்பட்டு அருகிலிருந்த இரண்டு கல்விமான்களிடம் சற்று தள்ளியிருக்குமாறு கேட்கின்றார். அப்போது அவ்விருவரில் ஒருவர் “அப்பா வீட்டில் எப்போதும் AC … Read moreஉள்ளம் உடைந்து விட்டால்

பேஸ் புக் பேக் ஐடிகள் நிறுத்தப்படுவது. சமூகத் தேவை

இன்று பேஸ் புக் பாவனை மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனையில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணுவதுடன் நம்மீதுள்ள கடமைகளை செய்வதற்குத் தடையாக அவை இருக்காத வகையில் நலவுகளுக்காக மட்டும் அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டும். அருள்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. ஆனால் இன்று அவற்றின் பாவனையில் பாரியளவில் மார்க்க வரையறைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக தவறான நோக்கங்களுக்காகத் திறக்கப்படும் பேக் ஐடிகள் மிகப்பெரும் பொய் மற்றும் ஏமாற்றும் மோசடியுமாகும். பொய் நயவஞ்சகர்களுக்கே உரித்தான … Read moreபேஸ் புக் பேக் ஐடிகள் நிறுத்தப்படுவது. சமூகத் தேவை

பெண்ணே! உன் ஆடை பற்றி ஒரு நிமிடம்

ஒரு மகள் தன் தந்தையிடம் ஆடை பற்றி கீழ்வரும் கேள்வியைத் தொடுக்கின்றாள்: “தந்தையே! என் உடம்பில் எதை மறைக்க வேண்டும் எதைத் திறக்கவேண்டும்.” அதற்குத் தந்தை: “உன் உடலில் நரக நெருப்பைத் தாங்கமுடியுமான அளவு வெளிக்காட்டு.” என ஆழமான பதிலொன்றை வழங்கினார். இது அனைத்து ஆடைகளிலும் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம். வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளிடம் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்படுகின்றன. தற்காலத்தில் குறிப்பாக லெகின்ஸ், டெனிம் ட்ரௌஸர், … Read moreபெண்ணே! உன் ஆடை பற்றி ஒரு நிமிடம்

இன்றைய காலத்தில் நடப்பது என்ன?

வீடுகள் பெரிதாகிவிட்டன. குடும்பங்கள் சிறிதாகிவிட்டன. மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆரோக்கியம் மோசமடைந்துள்ளது. சொத்து செல்வங்கள் அதிகரித்துள்ளன. மன நிம்மதி தொலைந்து விட்டது. வசதிபடைத்தவர்கள் பெருகியுள்ளனர். வறுமையும் உயர்வடைந்துள்ளது. விவேகம் உயர்ந்திருக்கின்றது. உணர்வுகள் குன்றிவிட்டன. அறிவு பெருகியுள்ளது. சமயோசிதம் குறைந்து விட்டது. கல்விமான்கள் அதிகரித்துள்ளனர். பண்பாடுகள் அகன்றுவிட்டன. விதவிதமான கடிகாரங்கள் உள்ளன. நேரம் கிடைப்பதோ அரிதாகி விட்டது. மனிதர்கள் அதிகரித்துள்ளனர். மனிதநேயம் செத்துவிட்டது. மார்க்கம் படிப்பதற்கான வழிகள் நிறைந்துள்ளன. ஆனால் மார்க்கப் பற்று குறைந்து விட்டது. சுவனத்துக்கான வழிகள் தாராளம். … Read moreஇன்றைய காலத்தில் நடப்பது என்ன?

Select your currency
LKR Sri Lankan rupee