மக்கள் மனங்களை வென்றவன்

ஊர்கள் கடந்து பக்கத்து மாவட்டத்தில் பார் ஆளுமன்றம் செல்ல மனித மனங்களை வென்று வந்தான் மனிதம் கொண்ட மனிதனிவன் நேர்மை கொண்ட நெஞ்சனிவன் மக்களுக்கான குரல் இவன் சட்டம் படித்து ஆட்சி செய்ய அரசியல் கற்று வந்தான் ஊழலின்றி ஊரைக் காக்க ஊடகவியலாளனாய் உள்ளம் கவர்ந்து மாவட்டத்திற்கென மலர்ந்து வந்தான் மனித மனங்களை வென்று வந்தான் “முஷர்ரப் முதுநபீன்” சட்டம் உன் குரலால் உயர வேண்டும் நீதி உன் கைகளால் நிமிர வேண்டும் சமூகம் உன்னால் சமத்துவம் … Read moreமக்கள் மனங்களை வென்றவன்

மௌனியானவள்

மௌனியானவளுக்கு பேசத் தெரியாது என்பதெல்லாம் இல்லை அவள் உள்ளத்தை உடைப்பதை விடவும் உறவை நிலைக்கச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறாள் உங்களை அவள் நேசித்த காரணத்துக்காகவே அதிகம் விட்டுக் கொடுக்கிறாள் அதிகம் கருணை காட்டுகிறாள் அதிகம் சகித்துக் கொள்கிறாள் அவளை நீங்கள் காயப்படுத்தும் போதெல்லாம் அவள் கண்ணீர்தான் பேசிக் கொள்கிறது அவள் மொழிகள் விலங்கிட்டுக் கொள்கிறது நீங்கள் அவள் உணர்வுகளை உடைக்கும் போதெல்லாம் அவள் இதயம் இறந்து போகிறது அவள் இதழ்கள் மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாய் காட்டிக் … Read moreமௌனியானவள்

தலைக்கனம் ஒரு தடைக்கல்

வாழ்க்கையின் சாலைகளில் விழுந்து விழுந்து பயணிப்பதால் இனியொரு கட்டத்தில் விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை நிறுத்தி விடக் கூடலாம் விதி உன்னை அதன் நிர்ணயத்தில் இருந்து நழுவ விடப் போவதில்லை நீ வெறுத்துப் புறந்தள்ளுவதும் கூட உனக்கு நிரந்தரமாகிடலாம் நீ கண்ணீரையே காணாதவன் என்றால் நீ வலிகளையே உணராதவன் என்றால் நீ அடிபட்டு திரும்பாதவன் என்றால் நிச்சயமாக உன் பயணம் உனக்கான சுயநலத்திலேயே அரங்கேறி இருக்கிறது நிச்சயமாக நீ ஒரு நாள் அழுதே தான் தீர … Read moreதலைக்கனம் ஒரு தடைக்கல்

நானானவள்-02

விடியல்கள் விழுங்கப்பட்ட நீண்ட இரவுகளில் ஆழ்ந்து கொண்டிருக்க பழகி ஆண்டுகளாகி விட்டது யாரோ வந்தென்னை துயில் கலைத்து விட வேண்டாம் யாரோ வந்தென்னை தலை கோதிடவும் வேண்டாம் என் நேசச் சஞ்சரிப்புக்கள் என் ஆழ் மனம் தேடல்களைப் போல முடிவில்லாத ஒரு தொடக்கப் புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது என் கறுப்புக் கனவுகளுக்கு கலர் தீட்டியவர்கள் அவர்களாகவே அதை களவாடியும் விட்டார்கள் இனியுமொரு நாளில் வாழ்க்கையின் எந்தப் பாகங்களிலும் அவர்கள் பொதிந்திருந்ததாய் ஒரு பக்கம் புறட்டப் பட போவதில்லை … Read moreநானானவள்-02

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் நாட்டு கலவரம் தீர நிலவரம் மாற நாடே மாற வேண்டும் சட்டத்தின் ஓட்டைகள் இறுக்கி அடைக்கப்பட வேண்டும் சகல மதமும் சமமெனும் மதசார்பின்மை மிளிர வரவேண்டும் நீதி நியாயம் என்று ஒரு பாடத்திட்டமும் அமுலில் வர வேண்டும் கல்வியமைச்சு அதை தன் கடமை என கொள்ள வேண்டும் திருத்த முடியாத யாப்பு வேண்டும் அதில் மனித உரிமைக்கே முதன்மை வேண்டும் இனம் மதம் என்று பிரிவினை புகுத்தும் கைகளில் விளங்கிட வேண்டும் … Read moreமாற்றம் வேண்டும்

ஆயுள் உனக்கு நீளனும்

அன்பே வடிவென உணர்ந்தேன் அழகுத் தாயே! ஆயுள் உனக்கு வேண்டி ஆண்டவனை கேட்கிறேன் ஆயுள் உனக்கு நீளனும் அஞ்ஞனம் தீட்டா அழகு விழி விழிக்குள்ளே ஆசைகள் ஆயிரம் ஆகமனம் அன்பு மக்களிடம் ஆயுள் உனக்கு நீளனும். அன்னம் போன்ற அழகியுன் அன்பின் ஆழம் அளவிட ஆழியளவில்லை அதை விஞ்சிய ஆதரம் உன்னிடம் கண்டேன் ஆயுள் உனக்கு நீளனும். அமுதமூட்டி அன்பாலே அறிவூட்டிய அழகியே! ஆராட்டு ஒலிக்கிறதின்னும் ஆகம் நிறைந்த அன்பு உன்னிடம் ஆயுள் உனக்கு நீளனும் அகமொன்று … Read moreஆயுள் உனக்கு நீளனும்

மாய விதி

மாயப் புன்னகை தாளமிடும் அந்த அசுர வனத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சு ரகங்கள் கணக்கிலடங்கா ரணங்கள் யாரோ ஒருவரின் வரையப் படாத கதையொன்று மெல்லமாய் சுவாசம் கொள்வதாய் அசுரவனத்தின் அகாலங்கள் அவ்வப்போது ஓர் அசரீரியில் அமைதி கொள்கிறது தசாப்தங்கள் விரண்டு யுகங்கள் நீண்டு இன்னுமந்த அசரீரி ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது அந்த கதையை மட்டும் படிக்க இயலவில்லை ஒரு கணம் அந்த மாயாவின் தந்திர லீலை இந்த அசரீரியிலாவது அரங்கேறிய இருக்கலாம் இரவுகளின் நிசப்தங்களுக்குள் கங்குள்களின் … Read moreமாய விதி

கற்ற கல்வியே காதல்

ஏகாந்த இரவுகளின் ஏக்கப் போர்வைக்குள் நான் காணும் நிசப்த கனவுகள் கோடி…. அடைவதே என்னொரு உயர்வு… தடை வர  அனுமதி ஏது தளாராதே கனவே…! நெஞ்சாங் குழியோரம் … பஞ்சாக கொஞ்சும் … அஞ்சாத நெஞ்சம் தந்தது கொஞ்சம்… பட்டமும் வாழ்வும்.. காணாமல் போக . காணலை  காதலிப்பேனோ..? காயங்களை நானாய்… கால்களில் லாடங்களாய் கோர்ப்பேனோ..? கன்னியின் கண்ணழகை பாடி நான்.. பாதை தோய்வனோ…? விழி விழித்து நான் படித்து … பழியாக்கி வலி சுமப்பதோ…? புரியாத … Read moreகற்ற கல்வியே காதல்

யாவுமானவன்

பகல்களை விழுங்கி இரவுகளை விசாலமாக்கும் தனிமையான பொழுதுகளிலும் துணையாக ஒருத்தன் இருக்கிறான் பக்கமிருந்து ஆற்றுவதும் தேற்றுவதும் அவனே மறைவாய் இருந்து இரை தருவான் நிறைவாய் என் வாழ்வில் நிறைந்தவன் அவன் அவனுக்காக நடக்கும்போது என் பாதங்களின் தோள்களில் புன்னகையை காண்கின்றேன் அவனுக்காக தனித்து நிற்கும் பொழுதுகளில் அவன் இல்லத்தின் ஒரு தூணாய் மாறி விட துடிக்கின்றேன் அவனுக்காக தரை மீது நெற்றி பதிக்கயில் அதுபோல் ஆறுதல் ஒன்று இல்லாதது போல் உணர்கின்றேன் தனித்திருந்து அவனோடு பேசுகையில் அவன் … Read moreயாவுமானவன்

ஒரு தாயின் அறிவுரை

கருவில் உரு காணாது உன்னை சுமக்கும் என்னை பொண்ணால் நீ அலங்கரிக்க வேண்டாம் மாடி மனைவில் நீ குடியமர்த்த வேண்டாம் மணி மாலையால் நீ மகுடம் சூட்ட வேண்டாம் சான்றோர் என் மகனை உயர்ந்தோன் என போற்ற சன்மார்க்க வழியில் உன் செயல் காண்தலே என் குளிர்ச்சி பற்பல குணங்களும் உன் பொற்பெயர் ஏந்த தகாத குணங்கள் அத்தனையும் உன் வழி நீங்க குர்ஆனை நெஞ்சில் எடுத்து செயல்களில் இருப்பாட்டி இன்பம் காண் மகனே உலகில் உனக்கான … Read moreஒரு தாயின் அறிவுரை

எனதான தனிமை

கால்களில் லாடங்களோடும் கணத்த கனவுகளோடும் நகரும் நீண்ட தூரப் பயணத்தின் ஒரு சந்திப்பு நீ… சில காலம் அருகில் யாரும் இல்லாது நான் மட்டுமாய் புலம்பிய வேளை என் அத்தனை அசைவுகளையும் ரசித்தவன் நீ என்னோடு நீ இருந்த தருணங்களிலெல்லாம் என் முக சிரிப்பொலி மங்கி நான் கண்டதில்லை என் உள்ளத்து நிம்மதிப் பை நிரம்பி இருந்தது என் செயல்களில் திருப்தி ஊடுருவி இருந்தது எல்லோரும் என்னை நேசித்திருக்க சேர்ந்து பழக ஆசை வைத்திருக்க உணர மட்டும் … Read moreஎனதான தனிமை

ஞாபகத் தீ

உயிர் முனையில் உன் ஞாபகங்கள் உதிரம் கொட்டுதென் எண்ணத்தில் பருகிக் கொள்கிறேன் கண்ணீர் குவளையில் சேர்த்து வைத்த நினைவுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் அல்லாடும் உணர்வுகள் ஆகாய வழியில் ஊஞ்சலிட்டு ஆடுகிறது… நடை பாதை சருகாய் நானும் பொடிநடை போடு உன் கால் பட்டே நான் இறக்கிறேன்…… உன் வாள் வீச்சு வார்த்தை வெட்டிக்குவித்து என்னை, உன்னை தொடரா தொலைவானம் தாண்டி போகிறேன் நான் தொலைவாகிறேன்…. கழிக்கண்ணோட்டம் கண்ணீர் சிந்துது காட்சிகள் பிழைபட கலைபட்டு, காவல் கேட்குது நினைவுகள் … Read moreஞாபகத் தீ

விண்மீன்களின் தேசத்தில்

தாய் வீடு தாண்டும் பெண்ணுக்கு தாங்கிட தாய் போல வேண்டும் மாமியார். தடுக்கி விழுந்திட விடாமல் தன் பிள்ளை போல எண்ணிடும் மாமனார் வேண்டும். சண்டை போட்டி என்றாலும் விட்டுக் கொடுக்கா நாத்தனார் வேண்டும். நண்பனாய் தாங்கிடும் துணைவனாய் நிழல் போல கூடவே நினைக்காத அன்பில் என்னை அழ்த்தும் வாசகனாய் . கவிஞன் போல கணவன் வேண்டும். வீட்டின் விண்மீனாய் சொலித்திடும் மூத்த மருமகளாய். ஆரை போல அன்பைக் கொட்டும் கூட்டுக் குடும்பம் ஒன்றோடு கூடி வாழனும் … Read moreவிண்மீன்களின் தேசத்தில்

காதல் வேண்டாமடி

பள்ளி செல்லும் பிள்ளை உனக்கு பார்த்தவுடன் காதல் கூடாது வேண்டாம் அந்த வழி கண்ணே..! வேண்டாம் அந்த வலி நம்பி விட்ட பெற்றோர் உன் தூணாய் வீட்டிலிருக்க வீதியில் ஆடவரோடு வீண் பேச்சு வேண்டாமடி உனக்கு ஓர் வார்த்தையில் வளைத்திடுவார் ஓர் பார்வையில் மயக்கிடுவார் ஓர் செயலில் இதயத்தின் உச்சியிலே இடம் பிடித்திடுவார்… கவனமாய் செல்.. காண்போர் எல்லாம் நல்லவரில்லை நீ கண்டெடுத்தது எல்லாம் வைரமுமில்லை வாலிப உணர்வுகளுக்கு வசப்பட்டு வாழ்க்கையை இழக்கும் வழி செல்லாதே மூழ்கிப் … Read moreகாதல் வேண்டாமடி

மஹர்

சீதனமும் வேண்டாம் சிறுமைளும் வேண்டாம் மஹர் கொடுத்தொருத்தி என் மனையாளாய் வேண்டும் பணமும் வேண்டாம் வீடு வாசலும் வேண்டாம் அவள் பண்பாடு போதுமெனக்கு அவள் பதி விரதம் போதுமெனக்கு நகைகளும் வேண்டாம் வாகனங்களும் வேண்டாம் அவள் நடத்தை போற்றும் நம்பிக்கை போதுமெனக்கு இல்லறம் சிறக்க…….. மார்க்கம் மறந்து பெண்ணெடுத்து பொருள் கேக்கும் பொல்லா குணம் நபி வழி சொல்லாதது மறந்து நான் போகும் வழி பாவத்தில் நுழைவதுவோ…? முதிர் கன்னிகள் பலரும் மூலைக்குள் முடங்கி அழும் நிலை … Read moreமஹர்

தொழிலில்லா முதலாளி

ஆழ்கடலின் ஆழம் தொட்டு கழிவறைக் காற்றை நுகர்ந்து ஊர் தாண்டிப் பறக்கும் ஆத்மார்த்தமான ஆன்மாவின் அழறல் விக்கித் தடுமாறி திசை பிரண்டு ஓடும் ஊர்க் கைதியின் டயரியின் பக்கங்கள் புண்ணால் அச்சிடப்பட்டு ஆறாத வடுக்களும் அவ்வப்போது வற்றாத கண்ணீரும் அவன் இதயத்தை செல்லறித்துச் செல்லும் வழக்கமாகிப் போன புதிர் மழைச் சாரல்கள் தாலமிடும் சப்தத்தில் புத்தகம் விரித்து பூமியின் புன்னகையில் மேகத்தின் கண்ணீருக்கு இரையானவன் பட்சிகளின் அடர் வனத்தில் சுயம் தொலைத்து காப்பக குழந்தை போல் வினா … Read moreதொழிலில்லா முதலாளி

கரையோரப் பறவைகள்

பாலைவனச் சூட்டில் பாதச் சுவடு பதித்து வாழ்வின் கோலங்களை வரைய வந்தவர்கள் கண்ணீரில் கடன் தீர்க்க கடல் தாண்டி காலெடுத்து வைத்த சொந்த நாட்டின் சோக வரிகள் மனைவி மக்கள் இழந்து வீடு பிரிந்து நாடு துறந்து அயல் தேசத்தில் வயிற்றுப் பிழைப்புக்காய் பாடுபட வந்தவர்கள் வாரிசுகளின் விரல் பிடித்து நடக்கும் வயது தனில் வெப்பத் தணலில் ஆடுகளின் பின்னே வியர்வை தள்ள ஓடிக் களைக்கும் பாசக்காரர்கள் தாகத்தில் கண்ணீர் அருந்தி வாட்சாப்பில் புன்னகை பரிமாறி மழலைகளின் … Read moreகரையோரப் பறவைகள்

நாளை வரும் நாள்

அச்சம் தீர்க்கும் ஓர் நாள் மடமை உடைத்தெறியும் அந்நாள் வரும் என் ஏக்கம் தனிக்க பொல்லாதவர் நிலை பேதலிக்க நல்லவர் வழி அமல் கணத்து நிற்க நியாயங்கள் இழந்து நின்ற இடங்களிலெல்லாம் நீதி நிலைக்க வரும் எனக்கான அந்த நாள் விதியென்போர் அதை மதியேற்பதில்லை உயிர் பிரிந்தால் உண்டு உலகொன்று மறைவாய் செயல் நிறுக்க வரும் நாளதில் நம்பிக்கை இல்லை உருகும் இரும்பு விழுந்து துடிக்கும் வேதனைக்கப்பால் உலக நெருப்பை விழுங்கிக் கொள்ளும் அக்கினிச் சுவாலையில் அவித்தெடுக்கும் … Read moreநாளை வரும் நாள்

தாய்மை

பசுந் தென்றலாய் மேனி சிலிர்க்க மேக மழையாய் புன்னகை தூவ தலைச் சுற்றலில் வந்த சேதி உன் பூ முகம் காணாமல் உன் மழலை மொழி கேட்காமல் தொப்புள் கொடி உறவொன்று உருவானது எனக்குள் உலகமே என்னை தாயென்று ஏற்க என் பெண்மை பெற்ற மகிழ்ச்சி எனக்குள் நீ.. உன்னை நான் சுமக்கையில் என் தாய்மை நான் உணர்ந்தேன் உனக்கு வலிக்காமல் நான் நடக்க எட்டி உதைக்கிறாய் தடாவிப் பார்க்கிறேன் தள்ளிப் போகிறாய் தங்கமே உன் பாதம் … Read moreதாய்மை

மாறுதல்களோடு பயணி

ஒரு பிரிவுக்கப்பால் அந்த வலியை மறக்க நீ போராடுகிறாய் உன் கண்ணீரைத் துடைக்க யாரோ வரலாம் என எதிர்பார்க்கிறாய் உன் விரல்களைப் பிடித்து நடக்க உன் புன்னகையைப் பரிமாற உனக்கொரு தோல் தார உனக்கொரு துணையை எதிர்பார்க்கிறாய் தொலைந்து போன அதே நபர்களிடம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே பொய்யான புன்னகையோடு வாழப் போகிறாய்…? உன் காத்திருத்தல் மெல்ல மெல்லதாய் கரைவதை நீ இன்னும் உணரத் தொடங்கவில்லை உன்னை விட்டு தொலைந்தவர்கள் எப்போதோ உன்னை மறந்தும் … Read moreமாறுதல்களோடு பயணி

நானானவள்

இந்த பிரபஞ்சத்தின் காய்ந்து போன துகல்களை விட்டும் என்னை வெளியேற்றி விடுங்கள் இனி இந்த பிரபஞ்சத்தின் இரத்தக் கரைகளில் நனைந்து கொண்டு என்னால் பயணிக்க முடியாது நான் மட்டுமான ஒருத்தி பொய்களை ஏற்க முடியாமல் அநீதிகளை பொறுக்க முடியாமல் தூரோகங்களை தாங்க முடியாமல் தவறுகளை தட்டிக்களிக்க முடியாமல் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே எனதான உணர்வுகளோடு போராடித் தொலைப்பது சுதந்திரம் என்ற பெயர் சூட்டி உரிமைகளை பறித்தெடுக்கும் தேசத்தில் நானொருத்தி நீதிக்காய் எங்கே போவது என் முகத்திரையையும் … Read moreநானானவள்

விலை மகள்

இராப் பகலுக்கு புரியாத பொழுதொன்று போர்த்திக் கொண்ட போக்கத்தவள் இரவின் மடியிலும் பகலின் பகட்டிலும் பதுங்கிக் கொண்டவள் விலை பேசி விற்கப்பட்ட பொருளொன்றாய் வீதியிலும் விடுதியிலும் காமுகனின் விளையாட்டு பொம்மையானாள் பெண்மை பறி போனது அறிந்தே தான் தொலைந்தாள் நேரத்திற்கு விருந்துண்டு நேரகாலமின்றி விருந்தானாள் விரும்பாமலே வந்து மாட்டிக் கொண்டாளோ…? விலை மகளாய் விரும்பியே தான் வதைகிறாளோ..? விதியும் நொந்து கொள்ள சதியும் சூழ்ந்து கொள்ள பத்தினித் தன்மை இழந்தாள் பணம் தான் காரணமோ..? பசிதான் வயிற்றை … Read moreவிலை மகள்

ஆசை தான் எனக்கும்

ஆசை தான் எனக்கும் அன்பான தந்தை இருந்திருக்க ஆசை தான் எனக்கும் அவர் அரவணைப்பில் வாழ்ந்திருக்க அன்பு முத்தத்தில் நனைந்திருக்க ஆசை தான் எனக்கும் தந்தை புராணம் பாடிட தங்கம் போல் தந்தை அமைந்திருக்க ஆசை தான் எனக்கும் சிறியவளாய் இருக்கயில் அவர் தோளோடு சாய்ந்து உறக்கம் கண்டிருக்க அவரோடு அடம் பிடித்து அழுது கதை கேட்டிருக்க ஆசை தான் எனக்கும் என் தந்தை என்று உரிமை கொண்டாடிட உலகம் மறந்து அவர் உத்தரவில் தலையசைத்திட தாய் … Read moreஆசை தான் எனக்கும்

சாபச் சங்கீதம்

பருவங்களின் அலை மோதல்களை காலங்கள் கைகளுக்குள் சுருக்கி கனவுப் பைகள் வீங்க இறை கணக்கு மறந்து வீதியோரம் விதி எழுதுகிறாள் உணர்வுகளின் பரிமாற்றல்களை உயிர்களுக்குள் புதைத்து கண்ட நொடிப் பொழுதில் காரணமின்றி தொற்றிக் கொள்ளும் வியாதியின் புரிதலை காதல் என்கிறாள் வெட்டவெளி நிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் காலாற யாரும் காசு கொடுப்பதில்லை அழுகையின் அடிக்கல்லும் வாழ்க்கையின் வடுக்கலும் சிந்திக்க மறந்த ஓர் வார்த்தையால் நிர்பந்தமாகிப் போவதை மறந்து போகிறாள் கல்வி தொலைத்து காதலை தேடினாள் உறவுகள் இழந்து … Read moreசாபச் சங்கீதம்

Select your currency
LKR Sri Lankan rupee