உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

அரபு மொழியில்: உஸ்தாத் ஸலாஹ் ஆபிதீன் தமிழாக்கம்: அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ) பயங்கரக் காட்சி (தயவுசெய்து, இதனை வாசிக்கும் போது  மனதையும், சிந்தனையையும் ஒருமைபடுத்திக் கொள்ளுங்கள்) சிந்தனைக்கான பதிவு: اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ. ( سورة الجاثية ٢٩) நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்). என்ற அல்குர்ஆன் வசனத்திற்கான கருத்து. நான் அமெரிக்காவின் (நியூயோர்க் நகரில்) வசித்தபோது, ​​எனக்கு தபாலில் ஓர் கடிதம் […]

Read More

பெண்களுக்கும் ஓய்வு நேரம் இல்லையா?

ஒரு பெண்ணின் ஆறுதல் வீட்டிற்கே ஒரு ஆறுதலாகும், அமைதியாகும். அப் பெண் ஆறுதலாக, ஓய்வாக இருந்தால், அவள் அமைதியாக தன் கணவரின் சோர்வைப் பெற்று, அவனது கோபத்தையும் சோர்வையும் உள்வாங்கிக் கொள்வாள். பெண் ஓய்வாக இருந்தால்தான் , அவள் தன் குழந்தைகளை அன்பாகவும், பண்பாகவும் பாசத்துடனும் அரவணைப்பாள். அப் பெண் ஓய்வாக இருந்தால் மாத்திரமே, அவள் தனது வீட்டிற்கு பணிவிடை செய்வாள். வீடு என்பது ஒரு நிறுவனம் மற்றும் ஒரு தயாரிப்பு நிலையம் போன்றதாகும். அங்குதான், அவள் […]

Read More

ரமழானுக்குப் பிரியா விடை கூறுகையில் பாவங்களுக்கு பிரியா விடை கூறி விட்டோமா?

ஒவ்வொரு வருடமும் ரமழானை நாம் சந்திக்கின்றோம். அதில் கற்றவைகள் பல, அவைகளை எமது அன்றாட வாழ்வில் தொடராக அமுல்படுத்துவது முக்கியம் வாய்ந்ததாகும். உலகளாவிய முஸ்லிம்கள் ஒருமாத காலம் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இறை பொருத்தத்தை பெறுவதற்காக எடுத்துக்கொண்ட சிரமத்தை இறைவன் பொருந்திக்கொள்வானாக! நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்லமல்களுக்கு பின்னா் இஸ்திக்பார் பாவமன்னிப்பு தேட வேண்டும்! இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இனிய வழிகாட்டலாகும். எனவே தற்போது ரமழானின் கடைசிப் பத்தில் இறுதித் […]

Read More

ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “யார் புனிதமிகு அல்குர்ஆனை (கத்ம்) ஓதி நிறைவு செய்து விடுகின்றாரோ, அவருக்கு ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது. (நூல்: முக்தஸர் மின்ஹாஜுல் காஸிதீன் ‏قال ابن مسعود رضى الله عنه مَن ختم القرآن فله دعوةٌ مستجابة . مختصر منهاج القاصدين١/٥٣ ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

Read More

ரமழானில் கோமான் நபியின் கொடைவள்ளல்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு)  ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட […]

Read More

நோன்பின் நோக்கமும் பத்ர் யுத்தம் தரும் படிப்பினைகளும்

மிக வேகமாக எம்மை வந்தடைந்த இந்த ரமழான், இன்னும் சில நாட்களில் எம்மை விட்டும் விடை பெறப் போகின்றது. உலகச் சக்கரம் மிக வேகமாக அதன் பாதையில் சுழன்று கொண்டிருக்கிறது. காலங்களுக்கு சொந்தக்காரன் அதை நினைத்த படி இயக்கிக் கொண்டிருக்கின்றான். இந்த புண்ணிய ரமழானில் எம்மை கடந்து சென்ற கண்ணியமான நாட்களை பயன்படுத்தினோமா அல்லது வீணாக்கி விட்டோமா என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை நமக்குள் நாமே கேட்டுக் கொள்வோம். எம்மை பன்படுத்தி […]

Read More

ரமழான் அமல்களின் பருவ காலமாகும். சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புனித ரமழான் எம்மை வந்தடைந்தடைந்திருக்கின்றது. எவ்வாறு ஒரு விருந்தாளி எம் வீட்டை நோக்கி வருகின்ற பொழுது மகிழ்ச்சியாக இருக்குமோ, அதைவிட பன்மடங்கு ரமழான் என்கின்ற விருந்தாளி வந்தடைந்தபோது ஒருவித குதூகலம், சந்தோசம் எம்மில் தென்பட்டது. ஆனால் ரமழானில் சிலநாட்கள் எம்மை அறியாமலே உருண்டோடிவிட்டன. சென்ற நாட்களை பயன்மிக்கதாக அமைத்துக்கொண்டோமா இல்லையா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. வருடாந்தம் ரமழான் மாதத்தை சந்திக்கின்றோம். சிலநேரம் இந்த ரமழான் எமது வாழ்நாளின் இறுதி ரமழானாகக் கூட இருக்கலாம். […]

Read More

இறை நெருக்கம் வேண்டுமா?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “நிச்சயமாக இறைவனின் பால் மிக நெருக்கத்தை உண்டாக்கக்கூடிய அமலாக, அன்னைக்கு பேருபகாரம் செய்வதைவிட வேறு எந்த ஒரு வனக்கத்தையும் நான் அறிய மாட்டேன்.”  (நூல்: அல் அதபுல் முப்ரத்) அன்னைக்கு உபகாரம் செய்வது அல்லாஹ்வின் நெருக்கத்தை உண்டாக்கும்! ‏بـر الـوالدة يـقرب إلـى الله تعـالى قـال ابن عبـاس رضـي الله عنـهما : « إنـي لا أعـلم عـملاً أقـرب إلـى الله مـن بـر […]

Read More

அருட்கொடைகள் அமானிதங்களாகும்

அல்லாஹ்வின் பேரருளால் அவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை நாள்தோறும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். மனிதனால் கணக்கிட்டுச்சொல்ல முடியாத, எண்ணற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள் எம் முன்னால் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல கண்ணுக்குப் புலப்படாது மறைந்தும் இருக்கின்றன. இறைவன் குர்ஆனில் இப்படிக் கூறுகின்றான். وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا “அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”. அதே அத்தியாயத்தில் இன்னொரு இடத்தில் பின்வருமாறு கூறுகிறான். وَمَا بِكُمْ […]

Read More

புறம் பேசுவது நோன்பை துளையிட்டுவிடும்

முன்னோர்களான நல்லோர்களில் சிலர் கூறியதாவது: “புறம் போசுவது நோன்பை துளையிட்டுவிடும், “இஸ்திக்பார்” பாவமன்னிப்புத் தேடுத‌ல் அத் துளையை அடைத்துவிடும். உங்களில் எவரேனும் துளையுள்ள நோன்பை  நோற்காமலிருக்க முடிந்தவர் அதை அவ்வாறே செய்து கொள்ளட்டும்.!!” (நூல்: சுஃஅபுல் ஈமான் 1433) قال بعض السلف – رحمهم الله تعالى – : « الغيبة تخرق الصيام والإستغفار يرقعه ، فمن استطاع منكم ألا يأتي بصوم مخرّق فليفعل » (شعب الإيمان […]

Read More

நிய்யத் சிகிச்சை செய்யப்பட வேண்டும்!

இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி( ரஹ்) அவர்கள் கூறியதாவது: “என்னுடைய நிய்யத்திற்கு நான் சிகி்ச்சை அளிப்பதற்கு சிரமப்பட்டதைப்போன்று, வேறு எதற்கும் நான் சிரமப்பட்டதில்லை! ஏனெனில், எனது நிய்யத் அடிக்கடி புரண்டுகொண்டே இருக்கிறது.” (நூல்: இமாம் இப்னு ரஜப் அல்ஹம்பலி அவர்களின் ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் பக்கம் – 69) معالجة النية قال سفيان الثوري رحمه الله تعالى : «مَا عَالَجْتُ شَيْئًا أَشَدَّ عَلَيَّ مِنْ نِيَتيِ ، إنَّها تَقْلَّبُ عَلَيَّ […]

Read More

அருள்மிகு ரமழானை பயனுள்ளதாக மாற்றுவோம்

இறைவனின் அருளால் வருடாந்தம் ரமழானை அடைந்து வருகிறோம். ஈமானிய உள்ளம் இம்மாதத்தை எதிர்பார்த்து நிற்கும். ஏனெனில், இந்த மாதம் பல நன்மாராயங்களை தன்னகத்தே கொண்ட இனிய மாதமாகும். வாழ்வில் பல ரமழான்களை சந்தித்திருக்கிறோம். அந்த ரமழான்கள் எம்மை விட்டும் நகர்ந்து விட்டன. அந்த ரமழான்களை உரிய முறையில் பயன்படுத்தினோமா இல்லையா என்பது எமக்குத்தான் தெரியும். ஆனால், இந்த ரமழானை சென்ற வருடங்களில் போன்றல்லாது, மிகத் திட்டமிட்டு, இறைவனின் நற்கூலிகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த ரமழான் இறை […]

Read More

மதுபோதையின் வகைகள்

இஸ்லாமிய அறிஞர், அல்லாமா இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது ; உடம்பில் ஏற்படும் போதை: மது பானம் அருந்துவதாகும். அது அவரை போதையில் மயக்கத்தில் ஆழ்த்திவிடும். உள்ளத்தில் ஏற்படும் போதை: ஆபாசப் புகைப்படங்களை பார்வையிடல், கல்லக் காதலில் ஈடுபடல் போன்றன, இருதயத்தை போதையாக்கிவிடும். ஆன்மாக்களின் போதை: இன்னிசை பாடகர்களின் பாடல் ஓசை, மற்றும் அதை சொவிசாய்தல், போன்றன ஆன்மாவை போதைக்குள்ளாக்கிவிடும். (ஜாமிஉல் மஸாஇல் -88/8) ‏أنواع الخمور فاحذر منها قال العلامة الشيخ ابن_تيمية […]

Read More

நபித்தோழர்களுக்கு தமது சிறார்களை நோன்பு நோற்க வைப்பதற்கு இருந்த பேராசை

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது; “நபித்தோழர்கள் தமது  சின்னஞ் சிறார்களை, நோன்பு நோற்க வைப்பார்கள். எதுவரையெனில், அப்பிள்ளைகள் பசி உணர்வால் அழுவார்கள். அப்போது விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து, திசை திருப்பிவிடுவார்கள். அதனால், சூரியன் மறையும் வரைக்கும் அவர்கள் பராக்காகிவிடுவார்கள்.” (நூல்: அழ்ழியாஉல்லாமிஉ, பக்கம் :589) ‏حرص الصحابة على صيام أولادهم قال العلامة ابن عثيمين رحمه الله : «فقد كان الصحابة رضي الله عنهم […]

Read More

ஏன் இரவில் நின்று, வணங்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை…?

எங்களால் இரவில் நின்று வணங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை எழும்ப விடாமல் உட்கார வைத்து விட்டனவா…? எனப் பகர்ந்தார்கள். நாங்கள் இரவில் நின்று வணங்க இயலாமல் போய் விடுகிறது. அதற்கான காரணத்தை, ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உங்களின் பாவங்கள் உங்களை தொழுகைக்கு, எழும்ப விடாமல் முடிச்சுப் போட்டு விட்டன. எனக் கூறினார்கள். புழைல் பின் இயாழ் (ரஹ்) […]

Read More

ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்த நபிகளாரின் மீது அதிகம் ஸலவாத்து சொல்லுங்கள்!

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பெரும் சோதனைகளில் ஒன்றான கொளரா போன்ற, ஆட்கொல்லி நோயை தடுப்பவைகளில் முக்கியமானது, நபி (ﷺ) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்வதாகும். (பத்லுல் மாஊன் – பக்கம் – 333) ‏● قال الإمام ابن حجر – رحمه الله – : 《 مِن أعظم الأشياء الدافعة للطاعون وغيره مِن البلايا العِظام كثرة الصلاة على النبي ﷺ 》. المصدر […]

Read More

செல்வந்தர்களுக்கு அல் குர்ஆன் கூறும் உபதேசங்கள்

இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் செல்வச் செழிப்பும் ஒன்றாகும். சிலபோது இந்த செல்வம் ஒரு சோதனையாகவும் இருக்கலாம். ஒருவேளை செல்வம் எமது அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடலாம். பொதுவாக செல்வத்தை திரட்டுவதில் சகல மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பேராசை இருக்கத்தான் செய்கிறது. யாரை எடுத்துக்கொண்டாலும் சொத்து செல்வத்துடனான ஈர்ப்பு நெருக்கமானதாகவே இருக்கிறது. அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை படித்துப் பார்க்கும்போது, சொத்து செல்வம் அல்லாஹ்வின் அருள் என்ற கருத்துக்களையே தரக்கூடியதாக உள்ளன. நபித்தோழர்களில் அதிகமானோர் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துள்ளனர். ஆனால் செல்வத்தை […]

Read More

அனுதினமும் அல்லாஹ்வை அழையுங்கள்!

இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னு தைய்மிய்யா (றஹ்) அவர்கள் கூறியதாவது; “நிர்ப்பந்தங்களின் போது இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை, அழைத்தால் கூட, அவர்களது அழைப்பிற்கும் பதில் கூறும் அவன், எப்படி இறைவிசுவாசிகளின் அழைப்பிற்கு அவன் பதிலளிக்காமல் இருக்கு முடியும்..?” (நூல் : ஜாமிஉல் மஸாஇல் – 1/71) قال ابن تيمية رحمه الله : « المشركون كانوا يدعون ﷲ إذا اضطروا فيجيب دعاءهم، فكيف بالمؤمنين؟! » جامع المسائل – 1/71 ஐய்யூப் […]

Read More

சோதனைகளின் போது இஸ்லாம் கூறும் போதனைகள்

உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கி பயணிக்கிறது. மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதியும், பதட்டமும் அதிகரித்து வருகின்றது. உலகையே அடக்கி, ஆள நினைத்த, வல்லரசுகள் கூட அமைதி பெற்றன. உலகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றதென வெளியுலகத்திற்கு அவர்கள் படம் பிடித்துக் காட்டினாலும், அந்தரங்கம் என்னவெனில், உலகமே பாரிய வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வளவு கண்டுபிடிப்புகள், நவீன ரக இயந்திரங்கள் இருந்தும்கூட உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி நோய்க்கு முன்னால் அனைவரும் […]

Read More

மனிதனின் கௌரவம் (பெறுமதி) மூவ் விடயத்தில் இருக்கிறது.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உனது பத்தினித் தனத்தால் நீ ஒரு செல்வந்தன் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் ஏழ்மை நிலையை மறைக்க வேண்டும்! நீ பொருந்திக் கொண்டு விட்டாய் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் கோபத்தை நீ மறைக்க வேண்டும்! நீ சுவண்டியாக வாழ்கிறாய் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் கஷ்ட, நஷ்டத்தை மறைக்க வேண்டும்! (மனாகிபுஷ் ஷாஃபிஈ – 188/2) […]

Read More