சுகாதார வழிமுறைகளுடன் கல்வியைத் தொடர்வோம்

தளத்தில் பயணிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய தாய் தந்தையர் உங்களின் கவனத்திற்கு என் அன்பான வேண்டுகோள். கல்வி என்பது எப்போதும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம். அது வயது எல்லை கிடையாது அதை கற்க நாம் வாழ வேண்டும். இப்போது இலங்கைத் திருநாட்டில் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பபட்டிருக்கிறது. அது சந்தோஷம் என்றாலும் எமது சமூகம் இந்த நாட்டில் என்ன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. … Read more

கபுரில் உறங்கவும் அனுமதியில்லை

பிறப்பையே இன்னும் ருசி பார்க்க முடியாத எனக்கு இறப்பு வந்து நேர்ந்தது மண்ணிலே பாதம் பதிக்கும் முன்னே தீ குழம்பிற்கு உணவானேன் பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து மார்போடு கட்டி அணைத்த தாய்க்கும் கொரோனா இல்லை தோள் மீது சுமந்த தந்தைக்கும் கொரோனா இல்லை வேஷம் போடும் அநியாய அரசே துவேஷம் தான் உன் வாழ்நாள் லட்சியமோ மண்ணில் வாழத்தான் முடியவில்லை மண்ணறையில் உறங்குவதற்கவது அவகாசம் தராமல் போனது ஏனோ கல்லிலும் ஈரம் உண்டு உங்கள் இதயத்தில் … Read more

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஏக இறைவனின் இறுதித் தூதராய் இவ் வையகம் காக்க வந்த நாயகமே இம்மையில் எப்படி வாழவேண்டும் என்று கற்றுத் தந்து மறுமை வாழ்வுக்காய் வாழ வழிகள் பல சொல்லிச் சென்ற தூதரே உலகம் அழியும் வரை காக்கப்படும் அல்குர்ஆனை பெற்ற நாயகமே இறுதித் தூதரை இறைவழி போற்றும் நாயகமே உம்மை படைக்கவில்லை என்றால் இவ்வுலகமே இல்லை நபியே உம்மி நபியாய் உலகில் அன்னை ஆமினாவின் கருத்தரித்து உலகின் பொக்கிஷமாம் பாத்திமாவின் தந்தையான எம் நபியே சிறுவயதிலேயே நம்பிக்கையாளன் … Read more

பக்ரீத் திருநாள்

ஹஜ்ஜுப் பெருநாள் தியாக திருநாள் மக்கா மண்ணில் தவாப் செய்ய இஃராம் ஆடையோடு புறப்படும் ஹாஜிகள் கூட்டம் இப்ராஹீம் நபியின் உறவுகள் செய்த தியாகம் இஸ்மாயில் நபி தியாகங்கள் பல செய்து தியாகத்தில் வந்தது இந்த ஹஜ்ஜுப் பெருநாள் பால் சுரக்கும் மார்புகளோடு பாலைவனத்தில் இறைவனுக்காக தஞ்சம் புகுந்த பெண்மணி மார்பகங்களில் பாலின்றி தன் குழந்தைக்குக் பசியாற்ற தவிக்கும் வேளையில் வறண்டு கிடந்த பாலைவனத்தில் எடுத்த ஓட்டம் ஸபா மர்வா மலைகளுக்கு அங்கும் இங்குமாய் தொங்கோட்டம் ஓடிய … Read more

எளிமையில் பெருநாள்

வீறிடும் இரவில் விழித்திடும் நாட்கள் பசியை பகடைக் காயாய் மாற்றி நோன்பு நோற்கும் புனித ரமழான் ஏழையின் உணர்வுகள் உணர்விழந்த உறக்கம் அத்தனையும் உலகமக்கள் வாழ்வுதனை ஊற்றிடும் ரமழான் நுண்ணங்கிகளின் விளையாட்டில் நூதனமாய் கடக்கும் ரமலான் கூடிநின்று உறவாட முடியாமல் பிரிந்திருக்கும் நாட்கள் உதவிடு ரமழானே கண்ணுக்கு தெரியாத எதிரிகள் உயிரை பறிக்கும் நாட்களில் வந்தாயே எம்மோடு கைகோர்க்க புனித ரமழானே உதவிடு இறைவனை நெருங்கும் இம்மாதம் கூட இறை இல்லங்களை நெருங்க முடியாமல் போனதே உதவி … Read more

மனிதமுள்ள ஊடகங்கள்

மறைக்கப்படும் நீதியை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் இனவாத இயக்கங்களாய் மாறிப் போனது ஏனோ உலகையே கோரோனா உழுக்க இலங்கை மட்டும் ஏன் இனக் சாயம் பூசும் அரசியலாய் மாறிப்போனதே அறிவுக்கு எட்டாத அபூர்வமான விஷயங்ளும் ஒரு இனத்தின் அடையாளமாய் மாறிவிட்டது இன்று சில ஊடகங்களில் வழிநடத்தால் கேட்பவர்கள் எல்லாம் கோமாளி என நினைத்து விட்டாயோ இல்லை உனக்கு எதிராய் அவர்களும் குரல் கொடுக்க தொடங்கி விட்டார்கள் பொய் வதந்திகளை கூறி எதையும் சாதித்துவிட முடியாது கேட்கும் … Read more

ஒன்று சேர்ந்த குடும்பங்கள்

ஆடி ஓடி விளையாடிய கால்களை கட்டி போட்டு கோரோன வந்து நம்மை ஒன்று சேர்த்தது ஊரடங்குச்சட்டம் என்ற பெயரில் பிரிந்திருந்த குடும்பங்கள் அத்தனையும் ஒன்றாய் மாரி குதூகலம் இன்றி போனாலும் குடும்பத்தோடு வாழும் நிலையை தந்து சென்றது இன்றைய ஊரடங்குச் சட்டம் தினக்கூலியாக உழைத்து உண்ணும் உறவுகளுக்கு உண்ண உணவு இன்றி போனாலும் உள்ளத்தில் ஏதோ சற்று இன்பம்தான் தந்து செல்கிறது இன்றைய ஊரடங்கு சட்டம் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த உறவுகள் இன்று வீடுகளில் அடைபட்டு வாழ … Read more

வீட்டுத்தோட்டம்

ஊரடங்கு நாட்கள் கடந்து வாரங்களாக மாற கால் வயிற்று கஞ்சிக்கு கூட இல்லை இன்னும் அதற்கான முன்னேற்பாடு கொஞ்சம்கூட இல்லை வீட்டுல வேலையும் இல்ல கறிக்கு போட தக்காளி வெங்காயமும் இல்லை மண்ணு தான் இருக்கு மழைத்தண்ணி தான் நமக்கு மண்தான் கிடைக்குதே மனந்தான் தடுக்குதே கைபேசியை கொஞ்சம் தள்ளிப்போடு மண்வெட்டியை கொஞ்சம் கையிலேந்தி மண்ண கொஞ்சம் கேத்தி விதை போடு வீரட்டெலும் மரக்கறிய கொஞ்சம் எட்டிப் பாரு சோம்பல் தான் உனக்குன்டு வீட்டிலா சும்மா கிடந்தவனே … Read more

இபாதத்

ஏனோ நாம் இன்னும் நெருங்க வில்லை எல் அளவும் பயமில்லை மறுமைக்கான தேடலும் இல்லை முதுமையடையும் வரை காத்திருப்பு எதற்கு ஐவேளைத் தொழுகைக்கா விரைந்து செல்வது எப்போது கோரோனா வந்தும் குர்ஆன் நம் கையில் இல்லை அயல் வீட்டின் தேவை அறியாமல் நாம் இருப்பது எப்படி இபாதத் தோடு இணைந்திடுவோம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம் உலகிற்கு வந்த நோக்கம் மறந்தோம் உலகமே கதி என வாழ்ந்தோம் மறதியில் மடிந்து கிடந்தோம் மறுமைக்காக வாழ துணிவோம் கைபேசியோடு கடந்து … Read more

%d bloggers like this: