அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களது எளிமையும் பணிவான வாழ்வும்

ஒரு நாள் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பள்ளிவாயலுக்கருகாமையில் நின்றவாறு சில மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு அவர்களது மார்க்க கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த போது, விலையுயர்ந்த ஆடம்பர வாகனம் ஒன்று வந்து நின்றதுடன் அதிலிருந்து சாரதி ஒருவர் இறங்கி “இந்த வாகனம் இன்னார் (பெயர் குறிப்பிடப்பட்ட) உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று கூறியவாறு அதன் திறப்பை வழங்கினார். இமாமவர்கள் அவ்வாகனத்தை பெற்றுக்கொள்ள மறுத்த போது, மீண்டும் மீண்டும் அச்சாரதி கட்டாயப்படுத்தி வேண்டியதன் காரணமாக, அதன் திறப்பை … Read more

பொறாமைக்காரனின் அடையாளங்கள்

லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன: யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான். அவரை நேரில் சந்தித்தால், அன்பு வார்த்தை கூறி புகழ்ந்து பணிவுடன் செயற்படுவான் அவருக்கு ஏதும் தீங்கு/சோதனை ஏற்பட்டால் மகிழ்வடைவான்” நூல்: ஹில்யதுல் அவ்லியா (4/47) அஸ்ஹான் ஹனீபா

இத்தா இருக்கும் பெண் வெளியே செல்லலாமா?

இவ்விடயத்தை மூன்று வகைப்படுத்தலாம் தேவையின்றி வெளியே செல்லல்: இது முற்றுமுழுதாக தடையானது. உ+ம் சுற்றுலா செல்லல் இன்றியமையாத அத்தியவசியத் தேவைக்காக வெளியே செல்லல்: இவ்வேளையில் இரவோ பகலோ எந்நேரமாக இருப்பினும் வைத்தியரிடம் செல்லவேண்டியேற்படுமிடத்து கட்டாயம் செல்ல வேண்டும். உ+ம் திடீரென்று சுகமில்லாத நிலை ஏற்படுதல். தேவைக்காக வெளியே செல்லல்: உ+ம் உதவி செய்வதற்கு ஆளில்லாத சந்தர்ப்பத்தில் உணவகத்திற்கு சென்று உணவு வாங்குதல், ஆசிரியையாக இருக்கும் பெண் இச்சம்பளம் தான் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பகலில் பாடசாலைக்கு … Read more

மார்க்கத்தை தரமான மார்க்க அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “வீடுகள் மற்றும் ஏனையவற்றில் உள்ள மக்கள் வீரியமான மார்க்கத் தீர்ப்புகளைத் தவிர்த்து சரியான மார்க்கத் தீர்ப்புகளின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆதலால் நாம் பெரும்பெரும் மூத்த மார்க்க அறிஞர்களை சார்ந்திருத்தல் மற்றும் பிக்ஹ் (இஸ்லாமிய சட்டத்துறை) அறிவுள்ளவர்கள் என சாட்சியமளிக்கப்பட்டவர்களின் பால் எவ்வளவு தேவையுடையவர்களாக உள்ளோம்! மார்க்க சட்டதுறை சாராதவர்கள் அதன் சட்டங்களைப் பற்றி பேசினால், நீ அபூர்வங்களைத் தான் செவிமட்டுப்பாய். மார்க்கத்தின் மூலாதாரங்களது மூல வாக்கியங்களை மதிப்பளிக்கும் … Read more

மன அழுத்தம் ஒரு குறுகிய பார்வை

வரைவிலக்கணம்: இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும். மன அழுத்தத்தின் அறிகுறிகள்: நாளாந்த நடவடிக்கைளை மேற்கொள்வதில் ஆர்வமின்மை வழமைக்கு மாற்றமான பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படல் நம்பிக்கையற்ற உணர்வு வெளிப்படையான எவ்வித காரணமும் இன்றி இடைக்கிடை அழுதல் தூக்கக் கலக்கம் ஒன்றில் உன்னிப்பாக கவனம் செலுத்துவதில் சிரமம் முடிவுகளை எடுப்பதில் சிரமம் பதட்டமான … Read more

செல்வந்தர்கள் ஸகாதின் நோக்கத்தை உணர வேண்டும்!

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையில் இறுக்கமான இணைப்பை ஏற்படுத்தி தோள் கொடுக்கும் அழகிய முயற்சியை இஸ்லாம் அதன் பிரதான நான்காவது கடமையாக ஸகாதை அடையாளப்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஸகாதின் பிரதான நோக்கம் ஸகாத் பெற தகுதியானவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, மேலெழுந்து முன்னேறி வந்து மீண்டும் ஸகாத் பெறும் நிலை வராமல் இருக்க உதவுவதாகும். ஸகாத் நாளாந்த உணவுத் தேவைகள் மற்றுமுண்டான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக பொருளாதார ரீதியாக அடித்தளத்தில் இருப்பவரை ஒரு உயரிய நல்ல நிலைக்கு கொண்டுவந்து … Read more

அழகிய அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள்!

பிள்ளைகளுக்கு பெயர்கள் சூட்டும் போது அழகிய அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள், மொழிவதற்கு இலகு அல்லது modern அல்லது internet இல் நல்ல அர்த்தத்தில் இருந்தது எனும் பெயரில் தவறான கருத்துள்ள பெயர்களை சூட்டாதீர்கள். எடுத்துக்காட்டாக நடைமுறையிலுள்ள சில தவறான பெயர்கள் பர்ஜானா- இரு மர்மஸ்தானங்கள் மஸ்(z)னா: விபச்சார விடுதி ஸா(z)னியா: விபச்சாரி மிக்னஸா: தும்புக்கட்டை மஸ்பலா: குப்பைத் தொட்டி ஆஸியா: பாவி ஆக இத்தகைய தவறான கருத்துக்களைத் தவிர்த்து நல்ல அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுவது சாலச்சிறந்ததாகும். நபி … Read more

மனிதாபிமானத்தை விதைப்போம்.

சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு இஸ்லாம் வலியுறுத்தும் மனிதாபிமானத்தை விதைப்போம். இஸ்லாத்தில் கறுப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடு கிடையாது. கறுப்பு நிற பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அத்தனை ஆயிரக்கணக்கான ஸஹாபாக்களுக்கு மத்தியில் முஅத்தினாக நியமித்து கௌரவித்த மார்க்கம் புனித இஸ்லாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலம் முழுவதும் முஅத்தினாக இருந்து உயரிய பணியாற்றிய பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபியவர்கள் பல விடுத்தம் விழித்துக்கூறி அழைத்து கௌரவித்திருக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதி, இனம், பிரதேசம், … Read more

தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர்

தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர் நினைவிருக்கட்டும்! அனைத்து முஸீபதுகளும் குடிகொண்டுள்ள ஒரே மனிதர் தொழுகை இல்லாதவர். தொழுகை இல்லாத வீட்டில் பரகத், நிம்மதி, மகிழ்வு என்பவை சாத்தியமற்றவை. தொழுகை, இறைப் பொருத்தத்தை ஏற்படுத்துகிறது. வாழ்வாதாரத் தேவைகளுக்கான அடிப்படைக் காரணி. தனிமனித, குடும்ப, சமூக சீர்திருத்தத்தை உண்டுபண்ண வல்லது. சுவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியமான திறவுகோள். மண்ணறையில் பாதுகாக்கும் பிரதானமான கேடயம். சந்தோசம், நிம்மதி, பரகத் என்பவற்றை தனிமனித, குடும்ப, பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தக்கூடியது. தீய குணங்கள், தவறான … Read more

%d bloggers like this: