மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்

ஈழத்திருநாட்டின் உதய சூரியனாய் உமருலெப்பை கதீஜா தம்பதியினர் ஈன்றெடுத்த மாமுத்து தும்புளுவாவையூர் புனிதர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் ஹனீபா ஹஸ்ரத் உலமா தலைமுறையில் உத்தமராய் உதித்தவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் கலாம் கல்வி செல்வங்களை கல்பில் சுமந்த குடும்பமதில் கல்விமான் வாரிசாய் கண்ணியமாய் பிறந்தவர் கச்சிதமாய் கடமையிலும் கல்லூரியில் வென்றவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் இளமையிற் கல்வியதை அல் அஸ்ஹரில் பெற்று பயிற்றுனர் பயிற்சியால் பட்டமும் பெற்றவர் மறையை மனதிலேந்திய மங்காத ஆலிமவர் […]

Read More

நீர்

இயற்கை எனும் பச்சை கம்பளத்தில் மூன்றில் இரண்டாய் தனக்கென்று இடம்பதித்து உய்யாரமாய் ஊடுறுவி தாவரங்கள் தழைத்து தாகம் தீர்க்க உயிர்கள் நிலைத்திருக்க விண்ணவனின் அருள் விந்தையாய் வந்துதிக்க வீணடிக்காதீர் நீரை வீழ்வீர் நீரே! அஸ்மா மஸாஹிம் பாணந்துறை

Read More

கறுப்பு ஜூன்

2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை சொத்துக்கள் எரிக்கப்பட்டு சொந்தங்கள் தூரமாக்கப்பட்டு சொல்லணா துயருற்ற சொந்தங்களுக்கு சமர்ப்பணம் பிரிவினை பேரினவாதமாகி பிரச்சினைகளாக உருவெடுத்த பிரிவினைவாதமாம் கவலையாக கரைந்திட்ட கறையாக படிந்திட்ட கறுப்பு ஜூனுக்கு அகவை ஆறாம் மனங்கள் மாற மனிதம் தழைக்க மாநிலம் செழிக்க மண்ணில் சமாதானம் நிலைக்க மறையணும் வேற்றுமை மலரணும் ஒற்றுமை… ASMA MASAHIM […]

Read More

ஷவ்வால் கீற்றிலே

மூ பத்துக்களை முத்தாய்ப்பாய் – சுமந்து மானிடர் கறையகற்ற வந்த மகத்தான மாதமே! இருமதிக்கிடையில் முழு மதியாய் – உதித்து பாவங்களை சுட்டெரித்து நன்மைகளை சம்பாதித்து மனிதனை புனிதனாக்கி மறையை ஏந்தவைத்து மறுமையில் ஏற்றம் பெற மாந்தர் நலம் பெற நவ திங்களாய் வந்துதித்த ரமழானே – நீ விடைபெறும் தருணமதில் வல்லோனளித்த பரிசு ஷவ்வால் கீற்றிலே ஈகைத் திருநாளாம் இன்பப் பெருநாளை உவகையுடன் வரவேற்றிடுவோம்! ஈத் முபாரக் ASMA MASAHIM PANADURA SEUSL

Read More

முஃமினின் வாழ்க்கையில் சோதனையும் இறைநெருக்கமும்

நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு ஏற்படும் சோதனையின் முடிவுகளை நாம் முன்கூட்டியே அறியும் ஆற்றலுள்ளவர்களாக இருந்திருந்தால் எவ்வித கலக்கமுமில்லாமல் நாம் அமைதி காத்திருப்போம். ஆதலால் அல்லாஹ் சோதனை எனும் அம்சத்தையும் அதன் முடிவுகளையும் தன் வசமே வைத்துள்ளான், கஷ்டத்திலும், ஆரோக்கியத்திலும், நோயிலும், வறுமையிலும், செல்வத்திலும் சோதனை இருந்து […]

Read More

வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம்

மதியை மறைக்கும் முகில் கூட்டம் மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும் மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி மதி போல் மீண்டும் ஒளிர்வோம் மலைபோல் துன்பம் வந்தாலும் மன உறுதியால் வெல்வோம் மாசுகளற்ற நம் வாழ்வில் மனிதம் தழைக்க வாழ்வோமே வாழ்க்கை என்பது நாணயம் போன்று இரண்டு பக்கங்களை உடையது. இன்பமும், துன்பமுமே அவை. அவ்வாறே விளையாட்டில் வெற்றி தோல்வி, குடும்ப வாழ்வில் ஊடல் கூடல், நாட்டில் ஒற்றுமை வேற்றுமை சகஜமானவை. சவால்களை சாதனைகளாக மாற்றும் மனிதர்களால் மாத்திரமே வாழ்வில் […]

Read More

பல்கலை பயணத்தின் ஈராண்டில்

பல்கலை பயணத்தின் ஈராண்டில் பலகலை புகட்டும் பல்கலையின் பசுமையான நினைவுகளுடன் இலட்சிய வேட்கைகளை இதயத்தில் சுமந்து உறவுகளையும் பிரிந்து காலடி வைத்த – என் இரண்டாம் இல்லமது தென்கிழக்கு பல்கலையுமது விடுதியறியா எனை விடுதியில் தவழவைத்த நாளுமது கண்டிராத அனுபவங்களை நிஜங்களாய் கற்றுத்தந்தது வாழ்வின் வசந்தங்களாக என் விடுதி வாழ்க்கை கவலைகளும் கானல்நீராக துயரங்களும் துவண்டு போக கைகொடுத்தது நட்பு வட்டாரம் ஓயாத விரிவுரையும் விடைபெறும் விடுமுறையும் மங்காத ரகசியங்கள் அறிமுகமில்லா தோழமைகள் அனைத்தும் கைகோர்த்து இணைந்த […]

Read More

திவ்யா கொலையாளியா?

அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். கொலை நடந்த இடத்தை பரிசீலித்த பொலிஸ் உளவுப் பிரிவிற்கு கொலைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை பார்த்தீபன் ஸேரின் கையடக்கத் தொலைபேசியைத் தவிர. நகரத்தின் பிரபல ஆசிரியர் பார்த்தீபன் ஸேரை கொலை செய்த குழுவை கண்டுபிடிக்கும் நோக்கில் களத்தில் இறங்கிய பொலிஸ் […]

Read More

மழைப் பொழுதினிலே

நீல வானும் கருமுகிலாய் கருக்கொள்ள தென்றல் காற்றும் இதமாய் வீசிட வானத்து மழைத்துளி தரணியை பதம் பார்க்க ‘சோ’ வென்று அழுதது கறுத்த வானம் சில்லென்ற குளிர் காற்றும் மழையுடன் போர் புரிந்து தென்றலாய் வருடிச் செல்வதில் அகம் குளிருதே! Asma Masahim SEUSL Panadura

Read More

எரியும் ரணங்கள்

வீசுகின்ற தென்றல் என்றும் பேதம் பார்ப்பதில்லை வண்ண வண்ண மலர்களும் வாசம் தர மறுப்பதில்லை இறையளித்த உரிமை பலவிருக்க இயற்கை கொடைகளும் நிறைந்திருக்க இப்பாரினில் எம்மாத்திரம் இலங்கை திருநாட்டினில் மாத்திரம் மனித உரிமை நாமமதில் மாறுபாடுகள் உண்டோ? மத உரிமை மறுப்பது மனித இனத்துக்கு தகுமோ? பதறிய காஸா போல் எரியும் பல ரணங்கள் பலியாகும் பிஞ்சு மனங்கள் பண்பாடற்ற அகங்களில் பாசமும் இராது- கல்நெஞ்சங்கள் மனமிளக மறுப்பதேனோ? ASMA MASAHIM PANADURA SEUSL

Read More

மாற்றுத்திறனாளிகள்

அங்கம் ஈனமாயினும் அகம் ஊனமன்று அகத்தால் உறுதி பூண்ட அவர்களோ மாற்றுத்திறனாளிகள்! இறைவன் படைத்த அருள் படைப்பில் அத்தாட்சிகளை உணர்ந்திடுவீரே! சவால்கள் நிறைந்த இப்பாரினிலே சிகரம் படைத்திட கைகொடுப்பீரே! Asma Masahim SEUSL Panadura

Read More

முஸ்லிம் பெண்களும் உயர் கல்வியும்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாம் பல்கலைக்கழகம் செல்வோமா? என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது பற்றியும் சிந்திக்கும் இத்தருணத்தில் இக் கட்டுரையை எழுதுவது மிகப்பொருத்தம் என்று நினைக்கிறேன். மேலும் சிலருடன் கலந்தாலோசித்து பெற்ற கருத்துக்களையும் இத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகிலே பெண்களுக்கு பலவாறான உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிய ஒரு மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. வல்லோன் கட்டளைகளும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது நடைமுறைகளும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் […]

Read More

என் இரு சுடர்கள்

அவனின்றி அசையாத இப்பூவுலகில் என் சுடர்களின்றி நானுமில்லை இப்பாரினில் இறை மறை போற்றும் உன்னத சுடர்கள் வாழ்வுக்கு இலக்கணமாய் வரமாய் கிடைத்த என் சுடர்கள் அர்ப்பணிக்கு அர்த்தமாய் தியாகத்திற்கு தீபமாய் பிரகாசமாய் ஒளிரும் என் சுடர்கள் துயரத்தால் துயருற்று-நான் துவண்டழுத போதும் துயரை துடைத்தெறிந்த என் இரு சுடர்கள் கல்பும் கவலையால் நிறைந்திட கண்ணீரும் விழியை நனைத்திட கண்ணிமையாய் எனை காக்கும் என் இரு சுடர்கள் காத்திருந்து தவம் செய்திடினும் விழித்திருந்து உமை காத்திடினும் உம் அன்புக்கு […]

Read More

வெள்ளை மாளிகையின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த 46 ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவிகளின் படி  ஜோ பைடன் அவர்கள் ஜனாge), டிரம்ப் 214 தேர்தல் கல்லூரிகளிலும் (electrical college) வெற்றி பெற்றுள்ளார். ஜோ பைடன் திபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜோ பைடன் 290 தேர்தல் கல்லூரிகளிலும் (electrical colle75,022,908 வாக்குகளும் டிரம் 70,698,785 வாக்குகளும் பெற்றுக் கொண்டுள்ளார். 270 தேர்தல் கல்லூரிகளில் வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். மேலும் 34 தேர்தல் கல்லூரிகளின் முடிவுகள் வர வேண்டும் என்பது […]

Read More

இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம்.

வாய்ப்புக்கள் தேடி வந்து எமது கதவுகளை தட்டப் போவதில்லை. நாம் தான் நமக்கான பாதைகளை செதுக்க வேண்டும் இப்பாரிலுள்ள அனைவரும் ஒரே மாதிரியானவர்களல்லர். அனைவரும் செய்ய வேண்டிய வேலையும் ஒரே மாதிரியானவைகளல்ல. நம் இலக்கு நோக்கியே நம் பயணம் தொடர வேண்டும். ஒருவர் இன்னொருவரிடமிருந்து இயல்பிலேயே வித்தியாசமானவர் என்பதை உணர வேண்டும். இதுவே நம் வழியில் நம்மை பயணிக்க வைக்கும். மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் தான் போராடினார். ஆனால் நெப்போலியன் வாள்முனையில் போராடி உலகை வென்றான். […]

Read More

சர்வதேச எழுத்தறிவு தினம்

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற வாக்கானது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. எழுத்தறிவென்பது ‘எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட கருத்துக்களை இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல் ஆகியவற்றின் தொகுப்பு’ என UNESCO வரைவிலக்கணப்படுத்துகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ் அடிப்படையில் ‘Covid 19 நெருக்கடியிலும் அதற்கு அப்பாலும் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடு’ […]

Read More

பெண் வலுவூட்டல்

“பெண் என்பவள் ஒரு முழுமையான வட்டம் போன்றவள். படைப்பதற்கான, மாற்றியமைப்பதற்கான ஆற்றல் அவளுக்குள் பொதிந்துள்ளது.” (Diane Mariechild) பெண்கள் தம் பிள்ளைகள், குடும்பம் முதல் சமூகம் வரை கட்டியெழுப்பக்கூடிய ஆளுமை கொண்டவர்கள். பெண் வலுவூட்டலானது இன்றைய நவீன காலத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். இதன் மூலம் நிலைபேறான மாற்றங்களை உருவாக்கலாம். பெண் வலுவூட்டல் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்ட வலிமையை மேம்படுத்தவும், அவர்களின் உரிமையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் குறிக்கிறது. அதாவது ஒரு பெண் தனக்கும் […]

Read More

ஷஹ்ருல்லாஹ்

துல்ஹஜ் மறைந்தது முஹர்ரம் பிறந்தது இஸ்லாமிய புத்தாண்டு மலர்ந்தது உன்னத மாதம் இறையோனின் மாதம் ஷஹ்ருல்லாஹ் நாமம் பெற்ற புனித மாதம். சரித்திர நிகழ்வுகளும் சத்திய தீனின் பொன்னான பதிவுகளும் நிகழ்ந்த முதன்மை மாதம் புத்தாண்டில் புதுத்தெம்பு பெறு திட்டம் தீட்ட தருணமிது. ஈமானிய மலர்களாய் மலர்ந்து செழிக்க அருள் மழையால் வாழ்வு ஜொலிக்க இனிய முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்! ASMA MASAHIM PANADURA SEUSL

Read More

சர்வதேச இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் தினம்

இத்தினமானது முதன் முதலில் 1976 இல் Dean R Campbell என்பவரால் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயினும் 1992 ஆகஸ்ட் 13 ஆம் திகதி Left Handers Club இனால் இடது கைப்பழக்கமுடையோர் எதிர் நோக்கும் சாதக, பாதகங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதன் பின் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நம் சமூகத்தில் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் சற்று வித்தியாசமாக நோக்கப்படுகிறார்கள். இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலக்கை பழக்கமுள்ளவர்களை விடவும் பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறன்று. நமது மூளையானது 3 […]

Read More

செம்மைத் திருநாள்

தியாகத்தின் தாற்பரியம் தியாகத் திருநாள் உணர்த்திற்று கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் தியாகச் செம்மல் நபி இஸ்மாயீல் ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம் நினைவூட்டப்படும் நாளல்லவா இறையோன் இறையில்லம் பைத்துல்லாஹ்வும் சாதிபேதம் ஏதுமின்றி சகோதரராய் கூடுமிடம் அறபா மைதானமும் நினைவூட்டப்படும் நாளல்லவா ஒரே குரலில் ஒன்றாக ஒலிக்கும் தல்பியா முழங்கும் பொன்னான நாளல்லவா பெருநாள் உதித்ததுவே கால்நடையும் கண்முன்னால் நிழலாடுதே அந்நாள் தியாகத் திருநாள் இந்நாள் ஹஜ்ஜுப் பெருநாள்.. ஈத் முபாறக்! ASMA MASAHIM PANADURA SEUSL

Read More