இன்றைய நற்பணி

மனது முழுக்க சோகம் மனிதனைக் கொல்லும் கொரோனாவால் மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம் கைத்தொலைபேசியோ தொல்லையாக குவிந்து வரும் செய்திகளே துன்பத்தின் அச்சாணிகள் கனவுகள் தொலைந்து பாடசாலைகள் மூடி போரையொத்த காலமிது கவலைகள் ஈன்றெடுக்கும் நேரமிது மனம் மழுங்கியுள்ளதால் மரத்துப்போனதால் மகிழ்வை மனம் கேட்கிறது மீள்வை உள்ளம் நாடுகிறது நண்பா! நல்லதை மட்டும் பரப்புங்கள் நலவை மட்டும் நாடுங்கள்- இன்றைய நற்பணி என்னவென்றால் நல்லபடி மனதை காப்பதாகும் Binth Ameen

துயில் தொலைக்கும் விழிகள்

துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ கேட்கும் ஒலியொன்று எம் காதில்தான் ரீங்காரமிடும் மரண பயமொன்று ஒட்டிக்கொள்ள மனதில் வடுக்கள் சுட்டுக் கொல்ல மனதோ இழப்பின் உச்சத்தில் மலையேறிவிடும் கொக்கொரக்கோ சத்தத்தில் காலை விடியலை பார்த்துவிட்டு குப்புறப்படுக்காமல் இனியேனும் கண்விழித்தாக வேண்டும் காரிருள் இரவில் கவனமாய் எடுத்தேன் முடிவு … Read moreதுயில் தொலைக்கும் விழிகள்

சொல்லு சொல்லாக

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று மதிப்புக்குரிய நிறுவனமொன்றால் இலவசமாக நடந்தேறியது அன்று இடைக்கிடை போய் பார்த்தேன் அழகிய அர்த்தமுள்ள உரைகள் அரங்கேறியது உணவில் விஷமாம் உடலுக்கு ஆபத்தாம் அடியோடு தடுத்து தோட்டங்கள் செய்வோமென்ற தொனிப் பொருளில் மூழ்கியிருந்தனர் தோட்டப் பாடசாலைக்கு வந்த தொண்டர்கள் கடையிலே வேண்டாம் கருப்பட்டிகூட கைபட உழைத்து சாப்பிடாதவிடத்து கலக்கும் நஞ்சு உடம்பில் கடுமையாய் சொன்னார்கள் கவனித்தனர் குழந்தைகள் கவனம் குவிந்தது என்னில் கவனிக்கவென டீ ஊற்ற முனைந்த கல்வித்தாகம் தீர்க்கும் சகஆசான்களிடமே டீ வேண்டாம் மாவு … Read moreசொல்லு சொல்லாக

சுதந்திரம்

எல்லோர் வாழ்விலும் இயற்கையாக தேவைப்படுவது சுதந்திரம் பறவைகள் சிறைப்பட்டு கூண்டில் கிடக்க – அதன் பார்வை ஏக்கம் நம்மை கலி கொள்ள திறந்து விடும் எண்ணம் நம்மில் நிழலாய் ஓடும் நம் நாடும் சிறைப்பட்டு நிலமும் வளமும் அந்நியர் வசமாக திருநாட்டு மக்களின் ஒற்றுமை அர்ப்பணிப்பு வழிகோலியது சுதந்திரத்திற்கு நாடு நமக்குரித்தாக மலர்ந்தது தேசியுணர்வு வேரூன்றியது நாட்டுப்பற்று ஒன்றுபட்ட உயிர்ப்பித்த திருநாட்டில் இன்றும் ஒன்றுபட்டு என்றும் ஒன்றாயிருங்கள் உலகை வென்று அச்சுறுத்தலை அழிக்க ஒன்றுபடலே ஒளியாயிருக்கும் நாட்டை … Read moreசுதந்திரம்

ரொம்ப முக்கியம்

Binth Ameen SEUSL அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர் வாழ்க்கை. நாட்கள் உருண்டோட தீடீரென இவருக்கு முடிவிலியாய் இருமல். மழை, பனி பழக்கப்பட்ட இவருக்கு அதனால் தொற்றிட வாய்ப்பில்லை. இதுவரை அப்படி தொற்றியதுமில்லை. எதுக்கும்  பீசீஆர் பரிசோதனை என மனைவியின் பயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுத்தார் பரிசோதனை. எதிர்பார்த்தால் போல் நெகடிவ். … Read moreரொம்ப முக்கியம்

முயற்சித்தால் முடியாதென்னவோ

உண்மைக்கதை ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க  ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம்  தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது. அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின்  நாற்பதாம் நாள் வைபவத்தை சிறப்பாய் கொண்டாடவே பஞ்சத்தில் அள்ளுண்ட இக் குடும்பமோ பிள்ளையின் நாற்பதாம் நாளுக்கு பிலாக்காய் சமைத்து  பகிர்கின்றதை பார்க்கும் போது அவர்களின் கஷ்டத்தின் உச்சக்கட்டத்தை உணர முடிகின்றது. குழந்தை வளர வளர  தாயார் பாடசாலை கல்வியை எப்படியேனும் வழங்க இரவிரவாய் கயிறு திரிப்பதை … Read moreமுயற்சித்தால் முடியாதென்னவோ

மணித்துளி

பார் போற்ற வாழ்ந்த பால்நிலவே எம்நபியே பாசாங்கு இல்லாமல் பண்பாக நடந்தவரே பாழ்உலகை புது உலகாய் படைத்தவரே கண்ணியம் காத்து கருணையில் ஊற்றெடுத்த கற்கண்டு எம்நபியே கற்பூரமே களையெறிந்து காத்திரமாய நடந்தவரே மாமனித முழுநிறைவே முத்தான எம்நபியே மணித்துளியே முகமன் சலாம் சொல்லி மனக்கசப்பை உடைத்தவரே தாயிப் தக்வா என தவறாமல் துதித்திட திடசங்கற்பம் பூண்டவரே திருமணம் தினசரி அத்தனையிலும் திருமறை பேணியவரே சாஸ்திரம் சமிக்ஞைகளை சிறுதுளியும் சேர்க்காமல் சீராய் வாழ்ந்தவரே செம்மல்நபி சுயநலமற்ற நபி சமுதாயத்துக்காய் … Read moreமணித்துளி

முகங்கள்

காணாமல் போன அந்த நாட்கள் காத்திருப்புக்கள் இன்னும். குதூகலம் சொறிந்த அக்காலம் கிடைக்காதா மீண்டும் தேடிப்பார்க்கிறேன் பழையவற்றை தொட்டில் தொடக்கம் தொடர்புகள் வரை அத்தனையும் தேய்ந்து விட்டன இயந்திரமில்லா வாழ்வு இருட்டில்லா இதயம் இயல்பான போக்கு இரட்டையடிப் பாதை முயன்று முழுதாய் கொண்டுவரினும் முடியாதல்லோ முழுமதி      முகங்களை மீண்டும் கொண்டு வர மேக்கப்கள் மலிந்துள்ளன மலர்வுகள் மறைந்து கிடக்கிறது. Binth Ameen

ஆசான்

ஆழமாய் வழிகாட்டி ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் சொல்லிக் கொடுத்து அன்பையும் பண்பையும் ஒன்றுசேர எம்முள் புகுத்தி உன்னத வாழ்வை அர்த்தமாக்கியவர்கள் ஆசான்கள். பிறந்தது முதல் சீராட்டி தலாட்டி தடம்புரளாமல் காப்பாற்றும் பெற்றோரும் ஆசானே பெறுமதியுணர்வாய் மகனே உடன் பிறந்த உடன்பிறப்பும் உதவிக்கு நின்ற நண்பனும் ஏன் – எதிரியும் கூட ஆசானே உயரப் பறக்க காரணமனதால் பழைய பிழை அனுபவமாய் உயிர்பெறுகையில் அவமானங்களும் ஆசானே அத்தனையும் ஆழமாய் நோக்கின் எம்மை செதுக்கிப் போட்ட சிறியவையும் … Read moreஆசான்

இரா நேர மின்வெட்டு

இரா நேர மின் வெட்டு அவ்வளவாய் புடிக்குமெனக்கு திடீரென ஓர் அமைதி திசை திருப்பப்டும் இயந்திரவாழ்வு தனிச் சுகமல்லோ அத்தனை வேலைக்கும் ஓர் இடைவேளை அயராமல் உழைக்கும் சாசர்கு (charger) அளிக்கும் அன்பளிப்பது என்னைப் பொறுத்து சிறுசுகளுக்காய் நேரம் ஒதுக்க சிரிப்பொலிகள் வீட்டில் கேட்கும் சிலகுழந்தைகள் பாடி மகிழும் சந்தோசமயாய் ஒன்றாய் கூடும் காத்திருக்காமல் போய்விடு நேரமே குழந்தைகள் மனதால் எண்ணும் கல்விக்கு களவு பண்ண  காரணமாய் இதனை சொல்லும் மின் மினியின் அழகும் மங்கிய மெழுகுவர்த்தியின் … Read moreஇரா நேர மின்வெட்டு

பற்றியெரிந்த கப்பல்

போர் முடிந்த பொழுதுகளில் போற்றிப் புகழ்ந்த முப்படையினரை பகிலிரவு மாறுகையில் பொருட்படுத்தவே மறந்துவிட்டோம் கோரானா வந்திட கவலைகள் கூடிட காக்கும் படை களத்திற்கு வந்திட கட்டுப்பாட்டுக்குள் கொடியவைரஸ் தன் உயிர் மறந்து தாய் நாடு காக்கும் தாய்க்குலம் அவர்கள் தரணிக்கு. நன்றி மறக்க முயல்கையில் நாடுகிறான் கடவுள் ஏதோ பெரிதாய் நடுக்கடலில் பற்றியெரிந்தது கப்பல் நினைவு மீண்டும் நம் முப்படைப்பக்கம் நீள்கிறது. Binth Ameen

கொஞ்சிடுமா?

காட்டிலே வீட்டைக் கட்டி காடையும் அழித்துப் போட்ட காடையர் கூட்டமாய் நாமிருக்க கொஞ்சிடுமா யானைகளும் வளவுக்குள் புகுந்து வெண்டிக்காய் வட்டக்காயென விளைச்சல் செய்த அத்தனையும் வீணாக்கிவிட்டுச் செல்வது வீரத்தை காட்டவல்ல விவரிக்க முடியா கவலையை வடுக்களாய் தந்திடவே தன் இடத்தை பிடித்துக் கொண்டு தண்ணீரையும் நாசமாக்கின் தழைக்கும் தானே கோவமும் தரணியில் வாழ முடியாதென்று யானை மனித மோதல் அடுக்கிக் கொண்டே செல்கிறது எல்லாம் எங்கள் பிழைகளால் தான் அறிந்து அறிவாய் நடந்திடுவோம் BindhAmeen  Seusl

மகிழ்ச்சியின் சங்கமம்

ஒன்றையே பலமுறை கேட்கும் உணுக்கு ஆசையில்லா அன்புள்ளங்கள் ஆராவாரம் ஏதுமின்றி கட்டிலே இருக்கையாய் இவர்களுக்கு என்றும் உடம்போ தளர்வு உள்ளமோ உற்சாகம் அடிக்கடி  விசாரிப்புகள் அடிவயிற்றில் சுமந்த குழந்தைகள் பற்றி மருந்தே வாழ்வென மனது முழுக்க நினைப்பு மூவேளையும் குடித்து முடிந்து மகிழ்ச்சியுடன் தெம்பு மறுக்கமுடியா சொத்து மாளிகையின் முத்து மலரவேண்டும் மனையில் மகிழ்ச்சியின் சங்கமமாக Binth Ameen Seusl மகிழ்ச்சி யின் சங்கமம்

இரா (ரை)

கோரோனா அப்டேட்கள் அடிக்கடி வந்து குவிய கைப்பேசியோ கோரமாக கவலையோடு கட்டிலில் சாய்கிறேன் காதருகே வந்து கிசுகிசுக்கிறது கோபத்தை இருமடங்காக்கிறது கடித்ததால் ஏற்பட்ட தளும்பல் கண்டு கிணத்தாழம் வரை என் விரக்தி எழுந்து கொள்கிறேன் எரியவைத்து விளக்கை ஏடாகூடமாய் என்னில் திட்டிக்கொண்டு அண்ணார்ந்து பார்க்கிறேன் எங்கே அதுவென அலசலொன்று கண்ணால் இரண்டு மூன்றென எண்ணுமளவு கொன்றுவிட்டு இருமாப்புடன் ஓட்டிக்கொள்கிறேன் கட்டிலில் நானும் ஆழமாய் ஓர் தூக்கம் இனியென்ன பிரச்சினை என்று எண்ணி ஆறுதலயாய் மீண்டும் கண்ணயர்கிறேன் அலாரம் … Read moreஇரா (ரை)

பேருதாரணம்

மனித இனத்தை மண்ணோடு அழிக்க வந்த நீ மலரவும் செய்திருக்கிறாய் மங்கிப்போன மனதுக்கிலேதான வாழ்வை ஒற்றுமை குலைந்து இரத்தம் தேய அடித்துக்கொண்டவர்களை ஒரு குடையில் சேர்த்த பெருமையும் உனக்கே தான்.. இனமத ஜாதிகள் அத்தனையும் பொய்யென்று ஓர் நிமிடத்தில் காட்டினாயே அகமகிழ்ச்சிதான் என்றும் நிலைக்குமென ஆழமாய் உணர்த்தினாயே அடுத்தவன் நலவு எமக்கு நல்லது எனும் அற்புதத்தை உலகுக்கு லேபல் இட்டாயே துன்பத்திலும் நன்மையுண்டு கொரோனா நீ பேருதாரணமாய் திகழ்கிறாயே Binth ameen Seusl

விதிவிலக்காகிப்போன விமான சேவையினர்

கோரோனாவின் அகோரம் மக்களின் கேலி நடவடிக்கைகளால் உயர்ந்து போவதனை அவதானித்த அரசாங்கம் “கேபிfயு” வால் எம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இப்போது கோவிட் பற்றிய அப்டேட்கள் அடுக்கடுக்காய்வர மறுமக்கம் தாதிமார், இராணுவத்தினர் என ஒருகுறிப்பிட்ட  சிலரை தியாகிகளாக சித்தரித்து  உற்சாகமளிப்பது சந்தோஷம் அளிக்கிறது. இக் கொரோனாவானது இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததை ஏற்கும்   அனைவரும் தியாகிகள் வரிசையில் விமான சேவை துறையினரை உள்நுளைக்காமை  வேதனையளிக்கிறது. இலங்கைக்கு வரும் அனைவரையும், தம் உயிரை பணயம் வைத்து முற்று … Read moreவிதிவிலக்காகிப்போன விமான சேவையினர்

வைரஸும் வைரல்களும்

இன்றைய நாளில் உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸால் பூமியே மாறுவேடம் போட்டுள்ளது. இன்டநெட், பத்திரிகையென எங்கு பார்த்தாலும் இது பற்றி உள்ளதால் உள்ளமும் ஊணமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எங்கேயோ சென்ற கொரோனா இடையில் நம் நாட்டிலும் தஞ்சம் புகுந்ததால் தட்டுப்பாடுகள் எல்லாவற்றிலும் ஏற்படுமளவு அவதானம் அமோகமாயுள்ளது. அழகிய வார்த்தை கடும் காயம் ஆறப் போதுமானது என்பதற்கமைய உலகம் ஆடிப் போயுள்ள இந்நேரத்தில் தவறியேனும் தாகம் தவிக்கும் வேலையில் ஈடுபட வேண்டாம். காய்ச்சலா கொரோனாதான்; தலைவலியா தலைபோகப் போகுது. இப்படிப்பட்ட … Read moreவைரஸும் வைரல்களும்

அன்பும் அதிகாரமும்

உலகை இயக்கிக் கொண்டிருப்பது அதிகாரம் தான் ஆனாலும் உலகம் இயங்குவது அன்பால்தான் என்றால் அது பொய்யாகாது. சிறுகுழந்தை முதல் பாட்டி வரை அன்புக்காக ஏங்கிக் கொண்டும் ,அன்பால் உலகை அனுபவித்துக் கொண்டுமே இவ்வாழ்வு   எல்லோர்க்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. கைக்குழந்தையை வோக்கரில் போடாமல் தூக்கிக் கொஞ்சுகையில் பேசும் மழலைமொழி, பரீட்சையில் தோற்றவனை சமாதானப்படுத்துகையில் வெளிப்படுத்தும் புன்னகையென அத்தனையும் அன்பின் பின் பாரிய சக்தி உள்ளதென்பதை எடுத்துக்காட்டவல்லன. ஆண்மகன் எவ்வளவு திடமாய் இருந்தாலும் அவன் வேலைமுடிந்து சோர்ந்து வருகையில்  அன்புசெலுத்தி … Read moreஅன்பும் அதிகாரமும்

  சிறகுடைந்த சிட்டுக்கள்

சிறுவர் தினத்தை ஒட்டிய ஓர் ஞாபகமூட்டல் உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மின்விசிறி எவ்வளவு விரைவாக சுழல்கிறதோ அதையும் தாண்டித் தான் இப் பொன்னான காலங்கள் சென்று நகர்ந்துகொண்டிருக்கின்றன. இயந்திர வாழ்க்கையான இவ்யுகத்தில் ஒவ்வோர் உள்ளமும் எதிர்பார்ப்பது அரவணைப்புடன் கூடிய அன்பைத்தான் என்பதில் யாருக்கும்  மாறுபாடில்லை. தன்குடும்பம் தனக்காகவும் செயற்பட வேண்டும், அது எனக்கானதாயும் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு உள்ளத்தினதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்புக்கள் கூடிய இவ்வுலகில் பிள்ளைகள் அதிகம் பெற்றோரையும் பெற்றோர்கள் அதிகம் பிள்ளையையும் தேடுவது … Read more  சிறகுடைந்த சிட்டுக்கள்

தாமரை(றை)க்கோபுரம்

தாமரைக்கோபுரம் தப்ரபேனில் மின்னுது தலைப்புச் செய்தியாய் தாய் நாடு கடந்தும் பலபத்திரிகையில் தொங்குது கச்சிதமாய் பலதும் பொருத்தி கிழக்காசியாவின் உயரமாய் நிறுத்தி கடந்து வந்த பாதைக்கு நல் கதவு இதுவென்று கைச்சின்னம் சொல்லிக் கொள்கிறது. கடனிலே மூழ்கிய நாட்டில் கடல்கணக்கு கடன் திரும்ப  திரும்ப தேவைதானோ கல்விமான்கள் சிந்திப்பு இப்படித் திரும்புகிறது. ஏழைக்கு ஆடம்பரம் அமைதியைக் கெடுக்குமாம் தாமரைக்கோபுரம் ஓர்நாள் தாய்நாட்டை தாக்குமாம் நல்லது வேண்டியே நாங்கள் ஒன்றிணைவோம் கடன்தொல்லை நீங்கவே -இனியாவது கல்வியறிவுடன் செயற்படுவோம் Binth … Read moreதாமரை(றை)க்கோபுரம்

போக்குவரத்தும் போதித்தவையும்

வாழ்வே ஓர் பயணம்தான். அப்படியே போய்க்கொண்டிருக்கின்றது எப்போது முடியுமென்று தெரியாமலே. இப்படி இருக்கையில் நாம்  செல்லும் பிரயாணங்கள் சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பலதை பதியவிட்டு  போகக் கூடியனவாகவும் இருக்கின்றன. பல்கலைக்கும் வீட்டிற்கும் 200km தாண்டிய தூரத்தினால் என்னவோ இப்போதெல்லாம் என் வாழ்க்கை பிரயாணமாகவே போய்க் கொண்டிருக்கின்றது. நாம் சந்திக்கும் மனிதர்களில் பேரூந்துகளில் ரயில்வண்டிகளிலென ஏராளம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் உள்ள எல்லோரும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட சிலராவது ஏதோ ஒரு கருத்தை எம்முள் விதைத்து விட்டே சென்றிருப்பர். … Read moreபோக்குவரத்தும் போதித்தவையும்

நீந்தும் நின் நதி

அன்று அவள் எனக்குப் பிடித்த நீலநிறத்தில் வர்ணிக்கமுடியா அழகியாய் உருப் பெற்றிருந்தாள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் முழு நிலவு   அவள் வடிவில் அன்று புன்னகையின் சொந்தக்காரி பூப்போன்றவள் பட்டு என்னவோ அவள் நிறம் பாவை நானே பரவசமடைகிறேன் பாரினில் ஆண்கள் அவள்மேல் போதைகொள்வதில் ஆச்சரியமில்லை எனக்கொன்றும்…🌼 இளம் கீறல் இதயப்பாடல் இதழ் பூக்கையில் -நின் இருதயம் ஒரு கணம் நின்றிடும் வதனத்தின் வாசணையில் வசீகரமாய் ஈர்ப்பவளே வட்டநிலா நீயே வடிவானவள் உம் முக அழகொன்றே போதும் பாதித் … Read moreநீந்தும் நின் நதி

உஷார் நீங்களும்தான்!

“தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது ” என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது எங்குபோனாலும் சாப்பிட்டாலும் கூட ஓர் போட்டோ எடுத்து போஸ்ட் போடாமல் யாரும் இருப்பதில்லை. தாம் எங்கே செல்கின்றோம், ஒவ்வொருநாளும் என்னென்ன செயல்களில் ஈடுபடுகின்றோம், தம் கவலை திருமணம் ,மறுமணம் என  தேவையற்ற விடயங்களைக்கூட அப்டேட் செய்ய நானும் நீங்களும் தவறுவதேஇல்லை. தூபி மீது ஏறியது, புகைப்படம் எடுத்தது  அவர்களின் … Read moreஉஷார் நீங்களும்தான்!

நிகழ்வுகளும் நினைவுபடுத்தவேண்டியவையும்

ஜனவரி என்பதால் எங்கு பார்த்தாலும் நிகழ்வுகள் அரங்கேறியவண்ணம்தான் இருக்கின்றன. திருமணம் ,களியாட்ட நிகழ்வுகள் என அத்தனையும் நிரம்பிவழிவதை வட்சப் ஸ்டேடஸ்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. நிகழ்வுகளால் அனைவரும் ஒன்றுசேரும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன .அவை பல மகிழ்ச்சிகரமான தருணங்களை அள்ளித்தருகின்ற வேளை கசப்புகளையும் கூட விட்டுச்செல்கின்றன. நிகழ்வுகள் எம் உறவுகளை ,நண்பர்களை இணைக்கும் பாலமாய் தொழிற்படுகின்றன.நீண்ட நாளைக்கு பின்னர் அவர்களை கண்ட மகிழ்ச்சி முழுநாளும் உந்துசக்தியாய் உடல்முழுதும் ஓடிக்கொண்டிருக்கும். அவர்களின் உடல், உள அத்தனை மாற்றமும் குழந்தைகள், கணவன் என … Read moreநிகழ்வுகளும் நினைவுபடுத்தவேண்டியவையும்

பிரியாவிடை

நானும் எட்டிப்பார்கிறேன் பின்புறமாய்  நம் நினைவலைகளை பிரியாவிடைத் தருணம் என் மனசும் பித்துப்பிடித்துவிட்டது பிரிவுத்துயரொன்று எம்மையும் நாடத்துடிப்பதால் முதல் நாள் முற்று முழுதும் புதுஉலகம் மனே என்று அழைக்கையிலே ஒரு மண்ணும் வெளங்காமல் திக்காடிய திகில் தருணம் ஒரியன்டேஷனில் ஓரிருவருடன் பழகி சிரிப்பையெல்லாம் பகிர்ந்து கொஞ்சம் பேரின் நட்பை எப்படியோ சம்பாதித்துக்கொண்டு ரூம்மெட்ஸாய் ஓர்அறையில் ஒருவருக்கொருவர் உயிராய் இருந்து அழகான வாழ்க்கையொன்றை எப்படியோ ஆரம்பித்தோம் ஹொஸ்டல் சாப்பாட்டில் புழு துடிக்க அதைக்கண்ட நண்பி கதற மோனிங் உடன் … Read moreபிரியாவிடை

Select your currency
LKR Sri Lankan rupee