சரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்

10/09/1997 மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஏ பாக்கிர் மாக்கார் அவர்களின் 24வது வருட நினைவுதினக் கவிதை. மண்மீது பிறக்கும் மனிதரெல்லாம் மனதோடு நிலைத்து இருப்பதில்லை. கண்ணோடு கடமை பேணி நின்றோர் மண்ணோடு மறைந்து போவதில்லை. சமுதாயப் புரட்சியொன்றின் சரித்திர நாயகன் அவர். அமுதான திட்டங்களின் ஆளுமை வித்தகர் அவர். மும்மொழிப் பாண்டித்தியம் அவர் சிறப்பு எம் மொழி மக்களுக்கும் அவர் மனதில் இருப்பு. ஆசிரியப் பணியினிலே சில காலம் வாழ்வு சட்டக்கல்லூரி நோக்கி முன்னோக்கி நகர்வு. சட்டம் கற்றார் … Read moreசரித்திர நாயகன் – பாக்கிர் மாக்கார்

ஒரு மருத்துவரின் வாக்குமூலம்

ஒவ்வொரு நொடியும் மரணம் எனை அழைத்துக் கொண்டிருக்கின்றது. நானோ! உங்கள் வீடுகளில் இருந்து மரணத்தை துரத்திடப் போராடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் உல்லாசமாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் நானோ! உணவருந்திடவோ இயற்கைக் கடன்களை நிறைவேற்றிடவோ நேரமின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் பிறந்த தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள். நானோ தினம் தினம் இறப்புக்களின் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றேன். உங்கள் அலட்சியமும் உங்கள் அசமந்தத்தனமும் மருத்துவத்தை தோல்வியுறச் செய்து கொண்டிருக்கின்றன. நீங்கள் புரிந்து கொள்ளாதவரை உங்கள் தவறுகளுக்காகவும் தண்டணை அனுபவிப்பது நாங்கள் … Read moreஒரு மருத்துவரின் வாக்குமூலம்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில் நடாத்துகிறார்கள் புதையல் போல ஆடை அணிகலன் வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை காலையுணவு ஒரு நாட்டிலும் பகலுணவு இன்னொரு நாட்டிலும் எடுத்துக் கொள்கிறார்கள் சற்றே சளி பிடித்தாலும் வீட்டில் மருத்துவர்களை நிறைத்து விடுகிறார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை வசிப்பதற்கென்று சொர்க்கபுரியே வடிவமைத்துக் … Read moreஅவர்கள் ஏன் சிந்திப்பதில்லை

வறுமைச் சுழி

பத்துப் பாத்திரம் தேய்ச்சித் தானே நித்தம் எந்தன் காலம் போச்சி லாக்டவுன் ஆன நொடி எனக்கோ பேரிடி வேலை தேடிப் போக முடியல்ல என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்ல ஊண் இன்றி தவிப்பு ஒருபக்கம் போன் இன்றி பிள்ளை படிப்பு மறுபக்கம். பக்கத்து வீட்டுப் பலாமரம் பல நாட்களாய் எனக்குப் பெரும் வரம் அமுதசுரபியாய் தண்ணீர் பாத்திரம் துணையெனக்கு கண்ணீர் மாத்திரம். திரும்பிடும் திசையெல்லாம் தனிமை திரும்பி வருமா எம் வாழ்வில் இனிமை விடிகின்ற பொழுதெல்லாம் … Read moreவறுமைச் சுழி

நிகழ்நிலைக் கல்வி முறையில் சமகால மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.

நிகழ்நிலைக் (Online கல்வி முறையானது இன்றைய நாட்களில் மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது மிகையில்லை. கொரோனா எனும் கொடிய நோயின் அவதாரம் உலகினை முடங்கச் செய்துவிட்ட இக்காலகட்டத்தில் பல அசாத்தியங்களைச் சாத்தியங்களாக்கிவிடும் நோக்கோடு நிகழ்நிலைக் கல்வி முறை மிக வேகமாகப் பாவனையில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஒரு தொடர்புச் சாதனமே கதி என்றாகிவிட்ட மாணவர்கள் தங்களின் வகுப்பறைக் கற்றலின் அத்துணை இன்பங்களையும் சுவாரசியங்களையும் தொலைத்துவிட்டு ஜடம் போல ஒரு தொடர்புச் சாதனத்தின் முன்னே அமர்ந்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய … Read moreநிகழ்நிலைக் கல்வி முறையில் சமகால மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்.

தேடல்

மனிதநேயம் தேடியொரு நெடுந்தொலைவுப் பயணம். மயங்கி வீழ்வேனோ என்றெண்ணும் தருணம். வன்முறை வளைக்குள் அன்பு நெறி சுருக்கிக் கொண்ட மனிதர்கள். கரம் கொடு எனும் பலவீனப் பார்வைக்கிங்கே இல்லை அங்கீகாரம் உதவி எனும் எண்ணத்தில் ஏதிங்கே உபகாரம். கனிவொழுகப் பார்க்கும் பார்வை கலைந்து போன தேசம் இது தனித் தனி தீவென்றே புதைந்து போன தேசம் காட்டுக்குள் காணுகின்ற காருண்யம் வீட்டுக்குள் காணவில்லை மனிதநேயம். கழுத்தறுத்து குழி பறித்து வீழ்த்திடவே மனிதர் இன்று தோள்கொடுத்து கரம் கொடுக்கும் … Read moreதேடல்

ஹைக்கூ

சேற்றில் முளைத்த செந்தாமரையல்ல தம் உறவுகளின் குருதியில் முளைக்கின்றன பலஸ்தீன் றோஜாக்கள் யா நப்ஸ் என்னைக் காப்பாற்று மஹ்ஷரை நினைவூட்டுகிறது கொரோனா துப்பாக்கி முனையிலும் தப்பாமல் ஈமான் பலஸ்தீன் பூமியில் பிறர் முன்னேற்றம் உன்னில் தடுமாற்றம் பொறாமை வரண்ட நிலத்தில் மழைத்துளி ரசிக்க முடியவில்லை விதவையின் கண்ணீர் உனக்காய் சிரிக்கிறேன் எனக்காய் அழுகிறாய் இடம் மாறியது இதயம் மக்கொனையூராள்

எதிரியாகும் எதிர்மறை எண்ணங்கள்.

வருடம் 1980 நாடு அமெரிக்கா. சென்ட் லெண்டி என்பவருக்கு தொண்டையில் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. மருத்துவரை நாடிப் போகிறார். லெண்டியைப் பரிசோதித்த மருத்துவர் லெண்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். இது மூன்றாம் நிலைப் புற்று நோய் என்றும் இதற்கு எவ்விதமான மருந்துகளும் இல்லை என்றும் கூறுகிறார். விருப்பமான உணவுகளை உண்டு நேசத்திற்குரியவர்களை சந்தித்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையை வாழச்சொல்கிறார். எதிர்பாராத இந்நிகழ்வு லெண்டியை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. லெண்டியை துயரம் பற்றிக்கொள்கின்றது. தனது மனைவியைக் காணும் பொழுதெல்லாம் அழுகை வந்து விடுகிறது. … Read moreஎதிரியாகும் எதிர்மறை எண்ணங்கள்.

அன்பு எதனாலானது

….. அன்பு மெழுகாலானதா ஆன்மா இப்படி உருகுகின்றதே அன்பு பூக்களால் ஆனதா ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே அன்பு காற்றால் ஆனதா ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே அன்பு மழையால் ஆனதா பாசத்துளிகளில் இதயம் குளிர்கிறதே அன்பு தீயால் ஆனதா ப்ரியம் பிரிகையில் சுடுகின்றதே அன்பு மரங்களால் ஆனதா ஆறுதல் வார்த்தைகள் நிழலாகின்றதே அன்பு ஒளியால் ஆனதா தனிமை இருள் கலைக்கின்றதே அன்பு வானவில்லால் ஆனதா நொடிப்பொழுது தரிசனமும் அழகாகின்றதே அன்பு தேனால் ஆனாதா முரண்பாடுகளுக்குப் … Read moreஅன்பு எதனாலானது

மீண்டும் வருவாயே ரமழான்

அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள் இதயத்தில் இல்லை வீண் பழுதுகள் விதைத்தோம் மறுமைக்காய் நன்மை விழுதுகள் ஸதகாவில் மனம் குளிர்ந்தோம் ஸக்காத்தில் தூய்மை அடைந்தோம் தவ்பாவால் உள்ளம் மீண்டோம் தக்வாவுடன் வாழ்வைத் தொடர்வோம் பண்ணிய பாவம் பறந்திடச் செய்தாயே புண்ணியம் வாழ்வில் நிலைத்திட வைத்தாயே கண்ணியம் ஆன்மாவில் … Read moreமீண்டும் வருவாயே ரமழான்

வல்லோனே வல்லமை தாராயோ

இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின் வீரமது கரை யெட்டும் நாளெதுவோ இரும்புத் தொப்பியும் இறுகப்பற்றிய துப்பாக்கியுமாய் இஸ்ரேலியப் படைகளின் இரத்தவேட்டை தொடர்கின்றதோ சூரியோதயம் தொலைத்து உன் தேசம் சூன்யமான மாயமென்ன சூழ்ச்சிகள் பல செய்தே இஸ்ரேல் சூடிக்கொண்ட நாமம் என்ன ரோஜாவின் அழகு கொண்ட மென்சிட்டு ராஜாக்கள் … Read moreவல்லோனே வல்லமை தாராயோ

ஆதலால் தாமதம் வேண்டாம்

இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும் பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும் இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு விடுதலை கொடுத்திடவும் வீணாக்கிய காலங்களுக்காய் வருந்தியழுதிடவும் இனியும் தாமதம் வேண்டாம் உத்தமராக வாழாவிட்டாலும் பரவாயில்லை பாவியாக மரணித்து விடாதிருப்போம் மூச்சு சிறைப்பட்டுப் போகும் நொடி யாரறிவர் ஆதலால் இனியும் தாமதம் வேண்டாம் மக்கொனையூராள்.

ஆதலால் தாமதம் வேண்டாம்

இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும் பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும் இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு விடுதலை கொடுத்திடவும் வீணாக்கிய காலங்களுக்காய் வருந்தியழுதிடவும் இனியும் தாமதம் வேண்டாம் உத்தமராக வாழாவிட்டாலும் பரவாயில்லை பாவியாக மரணித்து விடாதிருப்போம் மூச்சு சிறைப்பட்டுப்போகும் நொடி யாரறிவர் ஆதலால் இனியும் தாமதம் வேண்டாம் மக்கொனையூராள்

நீ வருக என் தேசம்

அல்குர்ஆனின் வாசம் அகிலமெங்கும் வீசும் அல்லாஹ்வின் பாசம் அளவில்லாத நேசம் அழுது தொழுது பேசும் அழகிய ரமழானே நீ வருக என் தேசம் பசியிலே கழியும் பகற்பொழுதுகள் இறைவணக்கத்தில் கழியும் இராப் பொழுதுகள் இதயத்தில் இல்லை வீண் பழுதுகள் இவை யாவும் சுவனத்திற்கான வைர விழுதுகள் பண்ணிய பாவமெல்லாம் பறந்தோட புண்ணியம் அருளாக நிறைந்தாட சைத்தானியம் விலங்குகளுக்குள் மறைந்தோட ஈமானியம் இதயமெங்கும் இலைந்தோட அழகிய ரமழானே நீ வருக என் தேசம் மக்கொனையூராள்

சேரிப்புறச் சேறு

அன்றொரு நாள் சேரிப்புறம் சென்றேன். சின்னஞ்சிறுசுகள் கூடி விளையாடக் கண்டேன். மேலாடை இல்லை காலணிகள் இல்லை. பேச்சினில் நெளிவு சுளிவு இல்லை. ஓலைக் கூரையிலும் ஓராயிரம் ஓட்டை. சேறு சகதிகளுடன் அங்கே வறுமையின் கோட்டை. ஆனால். ஒற்றைப்பந்துடன் பத்துப்பேர் விளையாடி மகிழக் கண்டேன். பழைய சாதத்தையும் பகிர்ந்துண்ணும் பெருந்தன்மை கண்டேன். குச்சிமிட்டாயில் கோடியின்பம் குடியிருக்கக் கண்டேன். நுனிநாக்கு ஆங்கிலத்தில் மறைந்து தாக்கும் விஷம் அங்கில்லை. தொலைபேசிகளுடன் தொலையும் பொழுதுகளில்லை. அடுக்குமாடிகளில் சிறைப்படுத்தல்களில்லை. விரைவுணகளில் பருத்த தேகங்களில்லை. ஒட்டு … Read moreசேரிப்புறச் சேறு

வளமான சமூதாயத்தைக் கட்டி எழுப்புவோம்

கடந்த வாரம் இலங்கையின் சில  பகுதிகளில் இடம் பெற்ற கொலை, தற்கொலை என்பவை பண்பாட்டு வீழ்ச்சியை நமக்கு  படம்பிடித்துத் காட்டுகின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அந்தவகையில் ஒரு சிறந்த குடும்பம் சிறந்த சமூகத்தின் ஆணிவேர் எனலாம். குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல் பலவகையான குற்றச் செயல்களுக்கு ஏதுவாகின்றது. கணவன் மனைவியரிடையே ஏற்படும் மனமுறிவு, மணமுறிவு வரை சென்று விடுவது பிள்ளைகளின் ஏதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என்பது மறுப்பதற்தில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மீறப்படுதலே இன்றைய அனைத்துப் … Read moreவளமான சமூதாயத்தைக் கட்டி எழுப்புவோம்

மடமையினால் கொடுமை

தாயவள் உயிரில் கருவானது நோய் எனும் பெயரில் சருகானது மடமையின் பிடியில் பழியானது மண்ணுக்கு மழலை உறவானது புன்னகை அங்கே களவானது புண்களால் பூ ஒன்று ரணமானது மனிதமும் அங்கே புதிரானது மனதினில் கொடுந்துயர் உருவானது பூங்குயிலின் மூச்சு முடிவானது பூகம்பமாய் இதயம் பிளவானது யாரைச் சொல்லி நோவது காலம் எங்கோ போகுது மக்கொனையூராள்

வாழ்க்கைப்படிகள்

பெற்றோரின் கூண்டுக்குள் குறையாத சந்தோஷம் மற்றோரின் துணையோடு குழந்தையின் பருவங்கள் மூப்பெய்தி விட்டாலோ கேளாத நோயெல்லாம் தோள் தேடி வந்துவிடும் தேவைகள் நிறைவேற்ற பிறர்தயவு தேவையாகும் குழந்தைக்கும் முதுமைக்கும் இடையில் ஒரு நீரோட்டம் வாலிபம் என்னுமோர் அழகான பூந்தோட்டம் இதில் இமைக்கின்ற பொழுதெல்லாம் இயக்கச்சக்தி உந்தம் பெறட்டும் பிறர் சுமக்கின்ற சுமைகளுக்கும் தோள் கொடுத்திட மனம் வரட்டும் சிந்தனைச்சிறகுகள் எல்லையின்றி விரியட்டும் என்சமுதாயக் கனவுகள் ஒவ்வொன்றாய் மலரட்டும் இறைமறை வசனங்களால் நாவுகள் இனிக்கட்டும் கேளிக்கை கூத்துக்களை உள்ளங்கள் … Read moreவாழ்க்கைப்படிகள்

புத்தகங்களை காதல்கொள்

புத்துலகம் உன்வசமாகும். இத்தலத்தில் இனிமைகள் கரம்சேரும். உதயம் உன்மனவானில் காட்சியாகும். இதயம் தினம் புதுமைகளுக்கு சாட்சியாகும். புத்தகங்களை காதல்கொள்! நினைவுகளில் எல்லாம் கார்கால மழைதூறும். கனவினிலும் கவிதைகள் ஊர்கோலம் போகவரும். புத்தகங்களை காதல்கொள்! தனிமையின் தவிப்பில் துணையாக நிலைக்கும். இருள் சூழ்ந்த இரவில் விளக்காக ஜொலிக்கும். புத்தகங்களை காதல்கொள்! மனசுகனத்த பொழுதுகளில் தாய்மடியாய் மகிழ்விக்கும். புதுசுபுதுசாய் எண்ணங்களை சேய்போல ஒப்புவிக்கும் புத்தகங்களை காதல்கொள்! நல்லெண்ணங்கள் உன் சுவாசமாகும். வாழ்க்கை அமைதியின் தேசமாகும். புத்தகங்களை காதல்கொள்! மக்கொனையூராள்

இந்து சமுத்திரமுத்தும், இலங்கை வாழ் மக்களின் பண்புகளும்

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ்க்கரைக்கு அப்பால், இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களைக் கொண்ட தீவு ஆகும். இலங்கை பல்வகைமைக் கலாசாரத்துடன் காணப்படுவதானது சிறப்பம்சம் ஆகும். பல்லின மக்களும் தத்தமது கலாசாரங்களைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது இலங்கைத் திருநாட்டின் புகழை எட்டுத்திக்கும் எட்டச்செய்திருக்கின்றது. “புன்னகைக்கும் மக்களின் தேசம்” எனவும் அழைக்கப்படும் இலங்கையானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கக் காரணம் எழில் கொஞ்சும் இயற்கையின் அழகு மட்டுமன்றி, இலங்கை மக்களின் சிறந்த விருந்தோம்பல் பண்பும்தான் … Read moreஇந்து சமுத்திரமுத்தும், இலங்கை வாழ் மக்களின் பண்புகளும்

நாம் இலங்கையர்

மக்கள் நாங்கள் யாவரும் ஒன்றாய் வாழ்ந்திருந்தோம் மணங்கமழ் பூச்செண்டாய் பிரிவினை நீயும் தீயாய் வந்தாய் ஆறாத வடுக்கள் எம் மனதில் தந்தாய் சமத்துவம் கலைந்தது பரிதாபம் நித்தம் உயிர்கள் பறிபோகும் இன்னல் தொடர்ந்தது அநியாயம் இதயம் எங்கும் பெரும் காயம் பொய்ம்மை கோஷம் தலைமேல் ஏற்று என் தாய் தேசம் எரிந்திடலாமோ தலைமை எல்லாம் தலை கவிழ்த்திருந்தால் உண்மை இங்கே உறங்கிடலாமோ நித்திலம் எந்தன் தாய்நாடு மத்தியில் இந்து சமுத்திரத்தில் புத்தியில் சிறந்த மானிடர் நாங்கள் நித்தமும் … Read moreநாம் இலங்கையர்

முள்ளோடுதான் ரோஜா

பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான் உனை பல வாட்டங்களில் இருந்து காக்கும் காவலரண். நாணம் உனக்கு வேலியாக வேண்டும் நாணயம் உனக்கு தோழியாக வேண்டும். இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது இன்பங்கள் இல்லை. இனியோர் சொல் கேட்டொழுகுதல் இன்பத்தின் எல்லை. எப்படியும் வாழலாம் என்றிருந்தால் வாழ்க்கை முல்லை வனம் … Read moreமுள்ளோடுதான் ரோஜா

நிலையாமை

அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன் அவன் வசம் ஆட்சியாகுமேஓரவாரம் இன்றிய தீர்ப்புக்களுக்காய்ஔதாரியம் கொண்டே வாழ்ந்திடுவோமேஇஃது உணர்வோம் எல்லாம் நலமாகிடுமே. மக்கொனையூராள்

கையர்

எத்துணை நன்மை பயக்கினும். எட்டுணை என்றே யுரைப்பர். அட்சரம் பிசகாமல் வாழ்ந்திடினும். உட்பகைச் செயலே செய்வர். ஒட்டாரம் மிக்கதாய்ப் பேச்சிருக்கும். கட்டரத்தில் நட்டிய தடியாய் வாழ்விருக்கும். குட்சி நிறைந்திட்ட போதும் சிட்டுக் கீந்திடும் மனமங் கில்லை. சிட்டர் பேச்சுப் பழித்து தட்டிக் கழிப்ப தவர் குணமாம். தட்டுக்காரராய்த் திரியும் இவர் போல் மானிடர் நட்புக்குத் தகார் ஒரு போதும். Farhana Abdullah Maggona. (மக்கொனையூராள்)

மாற்றம் தேடி

வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதமை அழித்து ஏதம் தான் ஒழித்து ஊதியம் செய்திட முயல்வோம். மிடிமையை ஒழித்திட மடமையை கொழுத்திட மதி வளர் வழியினில் செல்வோம். வேற்றுமை கலைத்து ஒற்றுமை விதைத்து நாற்றிசை வளம்பெற வாழ்வோம் குவலயம் சிறக்க குதூகலம் பிறக்க அன்பினால் அனைத்தையும் வெல்வோம் பிரிவினை நீக்கி புரிதலைத் தேக்கி புதியதோர் உலகினை ஆள்வோம். மக்கொனையூராள்

Select your currency
LKR Sri Lankan rupee