முயற்சி செய்

முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே இதை மறந்து விடாதே மனிதா! நீ முயற்சியுடன் எட்டி வைக்கும் ஒவ்வொரு எட்டும் – உன் எதிர்காலத்தினை ஒளியேற்றும் ஒளி விளக்கே! தொட்ட காரியத்தை இடையில் விட்டு விடாது முயற்சித்தால் நாளைய விடியலும் பொன்மயமாகுமே! முடியவில்லை என முடங்கிக் கிடக்காமல் முழு … Read moreமுயற்சி செய்

சமூகத்தின் கண்

பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும் தாய்மையும் நீ களைப்புற்று வந்த கண்மணி நபியையும் களை நீக்கி தெளியச் செய்தார் கருணை மிகு கதீஜா சீமாட்டி பொருளேற்றி பொருளிறக்கி பொருளீட்டி இஸ்லாத்திற்கு வளமூட்டினார் ஈமானில் முந்திய முதற் பெண் ஆணுக்கும் அறிவூட்டினார் ஆளுமை மிக்க ஆயிஷா பிராட்டி பெண்ணுக்கே … Read moreசமூகத்தின் கண்

ஈராண்டுகள் இன்றோடு

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று ஈராண்டுகள் இன்றோடு! கண்ணீரும் கண்ணை மறைக்க சொந்தம் பந்தம் பிரிந்து புது உறவுடன் சங்கமித்து வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே! சொந்தம் பிரிந்த சோகம் தாங்க முடியவில்லை வீட்டுக்கு வரும் விடுமுறைக்காய் நம் உள்ளம் ஏங்கியதே! பந்தம் விட்டு பல்கலை சென்றேன் நிமிடங்கள் கூட நாட்களாய் நகர்ந்ததே! பந்தம் காண இல்லம் வந்தேன் நாட்கள் கூட நிமிடங்களாய் ஓடியதே! பெற்றோரின் பரிவையும் ஏழையின் பசிப்பிணியையும் வீடு விட்டு வந்த … Read moreஈராண்டுகள் இன்றோடு

சினிமாவில் சீரழியும் சமூகம்

சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச் சென்று வந்தேநடுநிசி கடந்ததும்நாளை திரையில் ஏது நடக்கும்எதிர்பார்ப்புடன் நீழ்கின்றதே இன்றைய வாழ்வு பெண்ணை தலைவியாக்கிஅவள் துணையைகைப்பொம்மையாக்கிவன்மங்களை காட்சிப்படுத்திவிவாகரத்துக்கு வழிவகுக்குதே சினிமாத்திரை கலாசாரத்தை நாகரிகத்தைபண்பாட்டை உடைத்தெறிந்துநவஜாஹிலிய்யத்தைதோற்றுவிக்குதே சினிமாத்திரை ஆபாசத்தை அழகாக்கிநேரத்தை வீணடித்துசஞ்சலங்களை ஏற்படுத்திசெலவினை அதிகரித்துநிம்மதியை போக்கும்சினிமாவில் சிக்கிசீரழியத்தான் வேண்டுமா?சிந்தியுங்கள் சொந்தங்களே! Faslul Farisa AsadhSecond YearFIA facultySEUSL

மனித உரிமைகள் மறுப்புத் தினம்

இன்று மனித உரிமைகள் தினமாம் விரும்பிய விதத்தில் இறக்கும் உரிமையும் இல்லாத தேசத்தில் இப்படியும் ஒரு தினம் இருப்பதுவும் ஆச்சரியம்தான் ஏழு தசாப்தங்கள் கடந்து விட்டது ஐநாவின் உரிமைப்பிரகடனத்திற்கு ஆனாலும் இன்றுவரை தொடர்கின்றது உரிமைக்கான குரல் உலகெங்கும் கருணைக்காகவும் மரியாதைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஐநாவே எழுபது ஆண்டுகள் கண்ட பலன் என்னவோ? அறியாத வயதுப் பச்சிளம் குழந்தையையும் நெருப்பில் வேக வைக்கிறார்கள் விளங்கவில்லையா உன் கண்ணுக்கு இந்தக் கொடூரம் பிரச்சாரங்களும் விவாதங்களும் பேரணியும் நடத்தியும் கிட்டவில்லையே … Read moreமனித உரிமைகள் மறுப்புத் தினம்

தாயோடு பட்டதாரியாகினேன்

இன்று என் அன்னைக்கு பட்டமளிப்பு விழா இல்லையில்லை என் அன்னையோடு எனக்கும் பட்டமளிப்பு விரிவுரைக்கு தாயோடு சென்றேன் இல்லை தாய் என்னை கருவாக சுமந்து சென்றாள். மூன்றாண்டுப் பயணமிது கருவரையில் ஈரைந்து திங்கள் கற்றேன் மீதியை பல்கலை நண்பிகளோடு அமுதாக ஊட்டினாள் என் அன்னை. கருவரைக்கல்வி உன்னதமானதென்பதை உலகறியச் செய்துவிட்டாள் என் அன்னை Farisa Asadh

உம்மா யுனிவர்சிட்டிலதான் வேல

அவள் புன்னகை முகத்தழகி. குணத்துக்கேற்ற பெயர். நீங்களே பெயரை தீர்மானித்துவிட்டீர்களா? “தீனத்” தான் அவளது பெயர். கண்டவுடன் புன்னகைத்து ஸலாம் கூறி விடுவாள். பல்கலை தந்த உறவுகளில் அவளும் ஒருத்தி. அறைத்தோழியாய் அவளை அடையாவிட்டாலும் பல்கலைத்தோழியாய் கிட்டியது பாக்கியம் தான். Hostel வாழ்க்கை வாழ விரும்பியவளுக்கோ நடை தூரத்தில் இருக்கும் பல்கலை தான். ஒவ்வோரு நாளும் நடந்து வருவாள். கடற் காற்றை சுவாசித்தபடியே, ஏதேச்சையாக அன்று அவளுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இறுதியில் அவள் வீட்டுக்கு ஒரு … Read moreஉம்மா யுனிவர்சிட்டிலதான் வேல

முஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை

இந்து சமுத்திரத்தின் முத்துஅதுவே ஈழத் திருநாடுபல்லினத்தவர் கூடி வாழும் நாடுநாலினத்தவருள்ஓரினத்தவர்நல்லோரான முஸ்லிம்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள்சிறுபான்மையாக வாழ்ந்தாலும்சிறுமையானதல்லநம் முன்னோரின்சிறப்பான சேவை வளர்த்த கலை பொற் கலைஅதிலே ஒன்று நுண்கலைஅழகும் கலையும்இன்பமும் இரசனையும்உண்மையும் நன்மையும்இணைந்த கலைகளேஇஸ்லாமிய கலைகள் இஸ்லாத்தின் வரையறையில்இலங்கை முஸ்லிம்கள்இசைக் கலையை வளர்த்தனரே!நாட்டாரிசையும்வானொலி இசையும்வான் முழங்க ஒலித்ததுவே! வியக்க வைக்கும் மாடங்களும்விசாலமிக்க குப்பாக்களும்விவேகமிக்க நம் முன்னோரின்விண்ணைத் தொடும்வேலைப்பாடுகள் பூவேலைப்பாட்டு ஜன்னல்களும்புதுமைமிகு நுட்பங்களும்பரவசமூட்டும் முகப்புக்களும்பார்க்க மெருகூட்டும் மிஹ்ராபும்பண்பாட்டு வடிவங்களே! அலங்காரத்தள விரிப்பும்அலங்காரப் பின்னல்களும்பன்னாலான பாய்களும்பாரம்பரியக் கலைகளே! சிலை சிற்பம் … Read moreமுஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை

இறையோனை நினைத்திடு!

உலகம் அது விளைநிலம் அகிலம் அது சோதனைக் களம் சோதனையக் கடந்து சாதனை புரியப் பிறந்த நீ சோகத்தை எண்ணிக் கவலைப் படாதே! நீ உன்னை அறிந்ததை விட உன் இறைவன் உன்னை அறிந்தவன் கல்பின் கவலை மறந்து கடைசி வரை வாழனுமா?? கண்ணியமானவனை கல்பில் நிறுத்தி கனிவோடு பிரார்த்தி! உள்ளம் அமைதியடைய இறையோனை நினைத்திடு! உன் கவலைக்கு மருந்து இறைவனிடமே Binthi Asadh

ஷஃரு ரமழான்

சத்திய மார்க்கமிது சத்தியவானின் மாதமிது ஷஃரு ரமழானது முப்பது நாட்களது முதற்பத்தில் இறையருளைப் பெற்றே நடுப்பத்தில் பாவக்கறை அகற்றி இறுதிப்பத்தில் சுடும் வேதனை அளிக்கும் நரக விடுதலை பெற்றிடு! இறுதிப்பத்தின் ஒற்றை இரவினிலே இருளகற்றி அருளளித்து இரு ஐநூறு திங்கள்கள் இறை தியானம் செய்திட்ட இறை கூலியை பெற்றுத்தரும் இறையருள் லைலத்துல்கத்ரிலே இறைவனை நின்று வணங்கி இரு ஐநூறு திங்கள்கள் இறைவனை நினைவுகூர்ந்த இறையருளைப் பெற்றிடு! ஒரு மாதம் பயிற்சி பெற்றே பதினொரு மாதம் சீர்திருத்தியே இறையச்சத்தை … Read moreஷஃரு ரமழான்

கொரோனாவின் கோரம்

கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக் குடித்தது கொரோனா ஜாதி மதம் பார்த்தே எதிர்விணை செய்தோம் இன்று ஜாதி மதம் பார்க்காமல் எதிர்க்குதே கொரோனா ஓய்வின்றி உழைத்தனர் உறவுகளை மறந்தே ஓய்வெடுத்துக் கொண்டனர் கொரோனாவுக்குப் பயந்தே உலகம் என்றும் நிரந்தரமில்லை உயிரும் என்றும் நிலையில்லை உலகுக்கு உரைக்க வந்ததே … Read moreகொரோனாவின் கோரம்

குண்டு வெடிப்பில் முடிந்த போர்வையின் தேசிய மீலாத் விழா

போர்வையின் 21ம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை அன்று 2009.03.10 வாழ் நாளில் மறக்க முடியாத நாளாகும். குண்டு வெடித்தாலும் தனக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றிய நாளகும். அன்றைய தினம் தேசிய மீலாத் தினத்திற்காக ஊரே கலைகட்டியிருந்தது. தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலே பள்ளி முற்றவெளிக்கு சென்றிருந்த எல்லோரையும் பாதுகாப்பு பிரிவினர் பரிசோதனை செய்து உட்செல்ல அனுமதி அளித்தனர். அதிதிகள் வருகைதரும் நேரம் … Read moreகுண்டு வெடிப்பில் முடிந்த போர்வையின் தேசிய மீலாத் விழா

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் சேவைகள்

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாகும். இங்கு பெரும்பான்மையாக பௌத்தர்களும் சிறுபான்மையினர்களாக இந்துக்கள்¸ முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் அவர்கள் தாம் தேசத்திற்கு நல்கியுள்ள பங்களிப்புக்களை சிறுமையானவை என மதிப்பிடுவது தவறானதாகும். முஸ்லிம்கள் தாம் வாழும் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டு நலனுக்காக ஒத்துழைப்பது கடமையாகும். அந்த அடிப்படையில் வியாபாரிகளாக வருகை தந்து இங்கு குடியேறிய முஸ்லிம்களும் தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தேசிய¸ கலாசார¸ பொருளாதார¸ அரசியல் பங்களிப்புக்களை வழங்கி … Read moreஇலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் சேவைகள்

முஹர்ரத்தை வரவேற்போம்

முஸ்லிமின் முதல் மாதம் இங்கிலீஸி ஜனவரியல்ல இந்து தையுமல்ல முன்னோக்கும் முஹர்ரமே முஸ்லிமின் முதல் மாதம் மலர்கின்ற புத்தாண்டை மலர்ச்சியுடன் வரவேற்று கடந்தாண்டை கணிப்பீடு செய்து இவ்வாண்டுக்கு திட்டமிடு ஒருமுகத்துடன் – மறவாமல் போட்ட திட்டத்தை பொறுப்பாய் நிறைவேற்று திட்டமில்லா செயல்கள் நட்டத்தை ஏற்படுத்தும் விட்ட தவறு மிட்டி நடவாமல் பட்ட வேதனை வட்டமாகாமல் இட்ட திட்டத்தை சட்டப்படி நடத்து இஸ்லாமிய சரித்திரங்கள் பல படைத்த சத்திய மாதத்தில் சாதனைகள் பல புரிய சங்கற்பம் பூணுவோம் Banu … Read moreமுஹர்ரத்தை வரவேற்போம்

Select your currency
LKR Sri Lankan rupee