தாய்மை

பெண்மையின் உன்னதமான நிலை தாய்மையாகும். ஆணைவிடக்கூடுதல் அன்பு, இரக்கம், பொறுமை, பெண்மையில் காணப்படுவது அதன் சிறப்பம்சமாகும். உலகில் தாய் செலுத்தும் அன்புக்கு ஈடாக எதுவும் அமைய முடியாது. யாராலும் இவ்வளவு இரக்கத்துடனும் அன்புடனும் இருக்க முடியாது என்ற உண்மையை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்தளவு தாய்மை மிகவும் மகத்தான ஒன்றாகும். ஒரு உயிருக்கு முழு அன்பையும் வாழ்க்கை முழுவதும் கொடுக்கும் ஒரு ஜீவன் என்றால் அது தாய் மட்டும் தான் அந்த பாசம் விலைமதிக்க முடியாதது. தாய்மை … Read moreதாய்மை

பிள்ளைகளை வளரவிடுவதா? அல்லது வளர்ப்பதா?

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆற்றல் உள்ளவர்களாகவும், நல்ல குழந்தைகளாகவுமே பிறக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீயவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பிலேயே தங்கியுள்ளது. இதனை இஸ்லாமும், இன்றைய உளவியலும் கூறுகின்றதைப் பார்க்கலாம். அந்த வகையில் உங்கள் குழந்தைகள் தனித்துவமானவர்கள், மற்றவர்கள் போன்று அவர்கள் இல்லை. எனவே மற்ற குழந்தைகள் செய்வது போன்று தன் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்ப்பார்ப்பது மடமைத்தனமான செயல் என்பதை உணர்ந்து அவர்களை தனித்துவமாக வளர்க்கவேண்டும், அதே போல் பயிற்றுவிக்கவும் வேண்டும். … Read moreபிள்ளைகளை வளரவிடுவதா? அல்லது வளர்ப்பதா?

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 05

சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும் இறைமார்க்கத்திலே சுவாசிக்கும் அலங்கார குழந்தைகளாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பும் கடமையுமாகும். இந்த உணர்வானது ஒரு குழந்தை கறுவுற்றதிலிருந்து ஆரம்பமாகிறது. எனவே அந்த அருள் சிற்பங்களைச் செதுக்க கருவைச் சுமக்கும் தாயும் காலமெல்லாம் சுமக்க தயாராகும் தந்தையும் திட்டமிட வேண்டும். அந்த வகையில் … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 05

விதியின் விளையாட்டு

இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம். அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான் அதேபோல் விரக்திநிலைக்கு செல்வதை காணலாம். ஆனால் அதற்கு ஏற்றாற் போல் அந்த மாற்றங்களுடன் வரும் அருள்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இன்று நாம் தவறவிடுகிறோம். எம்மில் பலரின் புலம்பல் எதிர்பார்த்தது ஒன்று கிடைத்தது ஒன்று என்று வாழ்க்கை முழுவதும் புலம்பிக்கொண்டிருப்பவர்கள் எம்மில் … Read moreவிதியின் விளையாட்டு

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 04

நேசம் கலந்த பயிற்றுவிப்பு இல்லங்களையும் உள்ளங்களையும் உயிரூட்டும் இந்த ரமழானிலாவது பிள்ளைகளுடன் நேசம் கொண்டு முறையான பயிற்றுவிப்பை வழங்குங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் நேசம் கொள்ளுங்கள் அதுவே சிறந்த பிள்ளைகளாக மாற்றுவதற்கு உந்துகோலாக அமையும். அன்பின் பெற்றோர்களே! பிள்ளைகள் மீது வெறும் அன்பு, பாசம் கொடுத்து வளர்த்தால் மட்டும் போதாது. உபதேசம் செய்வது, கல்வி ஞானத்தை வழங்குவது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பாகும். நாம் வழங்கும் அறிவு இம்மையிலும், மறுமையிலும் பயனுள்ளதாக அமைய வேண்டும். இல்லாவிடின் ஈருலகிலும் … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 04

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 03

இறைவனுடன் இரு இதயங்களின் இணைவு கணவன் மனைவி உறவில் அன்பு, நெருக்கம், புரிந்துணர்வுடன் வாழும்போது நிம்மதி, சந்தோஷம் குடிகொள்ளும் என்ற விடயத்தை சென்ற தொடரில் பார்த்தோம். என்றாலும் இந்த நெருக்கத்தோடு இறைவனுடன் நெருக்கம், அவனின் திருப்திக்காக செயற்பட்டு இலட்சியக் குடும்பமாக மாறும் போதே இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஈருலகிலும் வெற்றி பெறும் தம்பதிகளாகத் திகழ்வோம். எனவே இறைவனுக்காக வாழும் துணைவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ். குடும்ப வாழ்க்கை என்று வரும்போது, பணம், பதவி, … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 03

இலட்சியக் குடும்பத்தை நோக்கி தொடர் – 02

கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து கொடுத்தால் நிம்மதி என்று பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதனால் கடமைக்குத் திருமணம் முடித்தாற்போல் துணைகள் வாழ்கிறார்கள்.” ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பது போல் ஆரம்பத்தில் இனிக்கும் கணவன் – மனைவி உறவுகள் பிற்காலத்தில் விரிசல் காண்கிறது. ஏன்? பொருத்தமானவர்களை … Read moreஇலட்சியக் குடும்பத்தை நோக்கி தொடர் – 02

இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 01

இன்றைய தொழிநுட்ப உலகம் பல சாதனைகளை எமக்கு தந்தாலும், எமது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது என்பதே கவலைக்கிடமான விடயம். அவரவர் வெவ்வேறு போக்கில் சென்று குடும்ப உறவின் சங்கிலியை முறித்து வாழ்வதில் எங்கே அன்பு மலரும்? எவ்வாறு வீட்டை இலட்சிய குடும்பமாக மாற்றுவது? பல கனவுகளுடன் திருமணம் முடிக்கிறோம். குடும்பத்திற்காக உழைக்கிறோம், கஷ்டப்படுகிறோம். ஆனால் இலட்சிய குடும்பமாக, நிம்மதியை தக்கவைக்கும் குடும்பமாக மாற்றுவதற்கு உழைப்பதில் கவனமின்மையே இன்று குடும்ப வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் காணாமல் போன … Read moreஇலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 01

திருப்தியடைந்த உள்ளம்

பொதுவாக மனிதன் தனது வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும், கஷ்டப்பட வேண்டும் ஆயினும் தனக்குக் கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாகும். இன்று எமது வாழ்க்கையில் நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் பாரிய தாக்கம் செலுத்துகிறது. திருப்தியில்லாத மனம் நிம்மதியை இழக்கும். எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் திருப்தியில்லை, யாரைப்பார்த்தாலும் ஏதாவது குறை, அதிருப்தியை வெளிக்காட்டுவார்கள். பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை எடுத்தும் திருப்தியில்லை, வசதி வாய்ப்புக்கள் … Read moreதிருப்தியடைந்த உள்ளம்

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து, எப்படி வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அவர்களிடத்தில் இல்லை. மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைப்பார்கள், சிலர் உடைமைகள், வீடு மற்றும் வாகனம் போன்ற விடயங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைப்பர். ஆனால் அது … Read moreமகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

பிள்ளைப் பாசத்தை விஞ்சிய தந்தையரின் உழைப்பு

இன்றைய காலத்தை பொருத்தவரை எத்தனை பிள்ளைகள் தந்தை மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதிலும் அன்பு, பாசத்தை தந்தைக்கு காட்டுவதற்கு, தந்தையோடு சிறிது நேரம் சேர்ந்து இருப்பதற்கும் முடியாமல் பல ஆசைகளை சுமந்து மறைத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலும் பார்க்கிறார்கள் ஆனால் அவ்வாறு பார்க்கப்படுவதற்கான காரணம் புரியாமல் இருக்கிறோம். தந்தைமார்களே! ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். … Read moreபிள்ளைப் பாசத்தை விஞ்சிய தந்தையரின் உழைப்பு

வாழ்க்கையின் இலக்கு என்ன?

மாணவர்களுக்கான வழிகாட்டல் ஊக்குவிப்பு நிகழ்வொன்றில் சில ஆழமான கேள்விகளை எழுப்பினேன். முதலாவது ஆண் மாணவர்களிடம் கேட்டேன். வாழ்க்கையில் காணப்படும் பெரிய இலக்கு எது? அதற்கான பதில்கள் கவலைக்கிடமாக காணப்பட்டது. பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் சிந்தனை புதிய வாகனங்களின் பெயர் கூறல், இந்த மொடல் தொலைபேசிகள் என்று சடப்பொருட்களை பெற்றுக்கொள்வேதே இலட்சியமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் மாணவிகளிடம் கேட்டேன் அதற்கான எந்த பதிலும் இல்லை ஏதோ கடமைக்கு படிக்கவந்தது போல காணப்படுகிறார்கள். O/L, A/L படித்தால் போதும் என்ற மனோநிலையே … Read moreவாழ்க்கையின் இலக்கு என்ன?

எமக்கான தெரிவு இறைவனிடமே உள்ளது

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வடிவங்களில் கவலை, கஷ்டம், துன்பம் போன்றவைகளை அனுபவிக்க நேரிடுவான். அது நாம் ஆசைப்படும் பொருள் அல்லது உறவுகளின் மூலமாவது எம்மை வந்தடையும். கிடைக்கப் பெற்றுள்ளதைக்கொண்டு இறைவன் எங்களை சோதிக்க விரும்புகிறான். அல்லது அதை எம்மிடமிருந்து பறித்து நலவை நாடுகிறான் என்பதே நிதர்சனம். இதனால் ஏற்படும் கவலைகளை ‘மனதில் சுமந்து கொண்டு, வெளியில் சிரித்து உள்ளே அழுபவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை. அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள், அவனின் பக்கம் நெருங்குங்கள், உங்கள் கவலைகளை … Read moreஎமக்கான தெரிவு இறைவனிடமே உள்ளது

தந்தையை நேசிக்கும் மகன்மார்களுக்கு சமர்ப்பணம்

“நானும் தான் இங்கு பலரும் தான் தாய்க்கு கொடுக்கும் பாசத்தை தந்தைக்கு கொடுப்பதில் தவற விடுகிறோம்.” தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலே பார்க்கிறோம். ஆனால் அவ்வாறு தோன்றுவதற்கான காரணத்தை புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘தன் மகனோ, மகளோ வளர்ந்து பெரியவனான பிறகும் சிறு பிள்ளையாகவே பார்க்கிறார்.’ ‘நான்பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது’, நல்ல பிள்ளைகளாக வளரவேண்டும் என்பதற்காகவே எங்களோடு கோபமாக நடக்கிறார். நாங்க நல்லா வரவேண்டும் என பாடுபடும் தந்தைக்கு … Read moreதந்தையை நேசிக்கும் மகன்மார்களுக்கு சமர்ப்பணம்

நிம்மதியின் இருப்பிடம்

“உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை, துக்கம், துன்பம், விரக்தி என்று ஏராளம் காணலாம்”. கல்வி பயிலும் மாணவன் பாடங்களை, பரீட்சை மற்றும் பெறுபேற்றை நினைத்து கவலை, துன்பப்படுகிறான். ‘நட்பு, ‘காதல் தோல்வி இதனால் கவலை, விரக்தி. ‘ஒழுங்கான தொழில் அமையவில்லை என்றாலும் இதே நிலமை. அது மட்டுமா! எதிர்ப்பார்த்த துணை கிடைக்கவில்லை, பிள்ளை பாக்கியம் இல்லை, திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை, கடன் தொல்லை இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் பல பிரச்சினைகளையும், சவால்களையும் தந்து … Read moreநிம்மதியின் இருப்பிடம்

இஸ்லாஹியாவின் நினைவலைகள்

நீளமாக இருக்கும் பொறுமையாக வாசியுங்கள். ஏதோ விருப்பு வெறுப்போடு இஸ்லாஹியா எனும் வளாகத்தில் காலடிவைத்தேன். காலம் கடந்தும் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளது. வாழ்கை என்பது அழகானது அதை ரசிப்பவர்களுக்கு மாத்திரம். நாம் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்லும் போது பல அனுபவங்கள், சுவாரஷ்யங்களை உணர்கிறோம். அவ்வாறு எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு வித்திட்ட என் கல்லூரி விடுதி வாழ்க்கையின் ஒரு சில நகைச்சுவை அனுபவங்களையும் ஆக்கபூர்வமான விடயங்களையும் பதிவிடுகிறேன். அல் ஹம்துலில்லாஹ் நினைவுகள் எப்பொழுதும் அழகானது Hostel ல் இருந்து … Read moreஇஸ்லாஹியாவின் நினைவலைகள்

போதும் என்ற மனம்

“பொதுவாக மனிதன் வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும். ஆயினும் எமக்கு கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே ஒரு முஃமினின் பண்பாகும். ‘எமது வாழ்க்கையில் இன்று நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் பாரியதாக்கம் செலுத்துகிறது. திருப்தியில்லாத மனம் நிம்மதியை இழக்கும்.’ எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் திருப்தியில்லை, யாரைப்பார்த்தாலும் ஏதாவது குறை, அதிருப்தியை வெளிக்காட்டுவார்கள். பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை எடுத்தும் திருப்தியில்லை, வசதி வாய்ப்புக்கள் பெற்றிருந்தும் திருப்தியில்லை, நல்ல தொழிலை பெற்றிருந்தும் திருப்தியில்லை, இவ்வாறு … Read moreபோதும் என்ற மனம்

வெற்றியின் இரகசியம்

“இன்று பலருக்கு சாதிக்கும் ஆசை நிறைய காணப்படுகிறது.” “நான் அப்படியாகவேண்டும், இவரைப்போல் சாதிக்கவேண்டும், இந்த அடைவை அடையவேண்டும். என்று பலவிதமாக கனவு கண்டுக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.” ஆனால் அதை அடையும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல். அதே போல் அதை அடையும் போது ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தடுமாற்றம். போன்ற விடயங்களால் பின்வாங்குகின்ற பலரைப் பார்க்கலாம். லட்சியத்தை சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தின் மீது குறியாக இருக்க வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் இது … Read moreவெற்றியின் இரகசியம்

வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 04

“மேலும் அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக அமைத்துள்ளான். ” (நஹ்ல் :80) ‘நிம்மதியை பெற்றுக்கொள்ளும் அடுத்த விடயம் அன்பை பறிமாறிக்கொள்ளல், அன்பு நிறைந்த குடும்பமாக மிளிருதல் ஆகும். “அன்பு செலுத்துங்கள் நிம்மதி தானாக வரும்.” இன்று உலகில் எத்தனையோ மனிதர்கள் வசதிகள் இருந்தும் சண்டைகளும், தற்கொலைகளும் நிகழக் காரணம் அன்புக்கான ஏக்கம் தான். “நபி ஸல் அவர்கள் யாருக்காவது உபதேசிக்க நாடினால் முதலில் புன்முறுவல் அல்லது அன்பை வெளிப்படுத்தி ஏதாவது ஒரு விடயத்தை … Read moreவாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 04

ரமழான் பேசுகிறேன்.

உன்னை நெருங்கி வரப்போகிறேன் என் தவணை ஆரம்பமாக இன்னும் சில தினங்களே இருக்கின்றன.  எல்லாரையும் போல என்னை வரவேற்க வீட்டை சுத்தம் செய்கிறாய், பொருட்களை சேமிக்கிறாய் ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை கழிவுகளை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறாயா?? வர காத்திருக்கும் கண்ணயமிக்க என் இரவுகளில் கண்ணீர் சிந்து. தொலைக்காட்சிக்குள்ளேயே தொலைந்துபோய்விடாதே. திக்ர் செய்யக்கூடிய நாவுகளாக உன்னை மாற்றி விடு. தூசி படிய வைத்திருக்கும் நான் சுமந்து வந்த அல்குர்ஆனை திறந்து விடு. ஆன்மாவின் வெற்றிடத்தை நிரப்ப படைத்தவனை … Read moreரமழான் பேசுகிறேன்.

வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 03

“மனதைக்கட்டுப்படுத்தி மறுமை வாழ்க்கைக்காக உழைக்கின்றவரே புத்திசாலி, மனம் போன போக்கில் வாழ்ந்து இறைவன் மீது கற்பனையாக நம்பிக்கை வைப்பவன் அறிவிலி”. (திர்மிதி) எமது வாழ்க்கையை இறைவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் அமைத்துக்கொள்வதினூடாக நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று இதற்கு முன்னுள்ள பதிவில் பார்த்தோம் அதே போல் இரண்டாவது செய்ய வேண்டிய விடயம். ‘ இலட்சியவாதியாக இருத்தல் இலட்சியமற்றவர்களே நிம்மதியற்றவர்கள்.  எமக்கான உயர்ந்த இலட்சியத்தை இனம் கண்டு கொண்டால் பின்னர் அதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றும் மன நிம்மதியை பெற்றுத்தரும் … Read moreவாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 03

வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 02

“நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இறைவா!! நிம்மதியான வாழ்வை உன்னிடம் நான் கேட்கிறேன்.” ( திர்மிதி) ‘எவ்வளவு தான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் நிம்மதி இல்லாவிடின் அந்த வாழ்க்கை நரகமாக தான் இருக்கும்.’ ‘தனிமனித வாழ்க்கை ,குடும்ப வாழ்க்கை, அதே போல் சமூகமாக வாழ்ந்தாலும் நிம்மதி அவசியம்.’ “எனவே’ எமது வாழ்க்கை யில் நிம்மதியை பெறுவதற்காக நாம் செய்ய வேண்டிய விடயங்களில் முதலாவது இறைவனுக்காக வாழ்தல் “எமது வாழ்க்கையை இறை திருப்தியைப்பெற்றுக்கொள்ளும் வண்ணம் அமைத்துக்கொள்ளல்.” குடும்பம், பணம், புகழ், … Read moreவாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 02

வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 01

“எந்த மனிதன் உலக வாழ்க்கை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி மறுமை குறித்து அதிகம் கவலை கொள்கிறானோ அவனுடைய வாழ்க்கையில் தன்னிறைவை, சந்தோஷத்தை ஏற்படுத்துவான். “ ‘உலக அலங்காரங்கள் அவனை முட்டி மோதும், அவனுக்கு முன்னும், பின்னும் கவர்ச்சியாக தோற்றமளிக்கும். ‘ ‘என்றாலும்’ அவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். “ஆனால்’ யார் உலகத்தை நினைத்து கவலை கொள்கிறார்களோ!! அவரது கன்னுக்கு முன்னால் எவ்வளவு தான் சொத்து, செல்வம் இருந்தாலும் அவனுடைய உள்ளம் ஏழ்மை தன்மையை, திருப்தியற்ற, நிம்மதியற்ற … Read moreவாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 01

திருப்தியடைந்த ஆத்மா

கர்ப்பப்பையிலிருந்து வெளியே வந்தோம், உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஒரு நாள் அந்த மண்ணறைக்கே செல்ல வேண்டும் என்பதை மறந்து வாழ்கிறோம் ‘ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம்’ ‘enjoy பன்னோம்’ என்ற எண்ணமே நம் மனதில் புடைசூழ்ந்துள்ளது. ஏன் படைத்தான்? ‘இந்த உலகத்தில் எங்களிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறான்’? என்று சற்று சிந்தித்து பார்த்திருக்கிறோமா? “நாம் உங்களை வீணாக படைத்தோம் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களா? ” (முஃமினூன்:115) ‘எனவே நாம் வேடிக்கை மனிதரல்ல. படைத்த … Read moreதிருப்தியடைந்த ஆத்மா

பெற்றோர்களே! குழந்தைகளிடம் பாகுபாடு காட்டவேண்டாம்

இன்று அதிகமான பெற்றோர்கள் விடும் தவறுகளில் மிகப்பயங்கரமான ஒன்றே பிள்ளைகளுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதாகும். இதனை சர்வசாதாரணமாக காணக்கூடியதைப்பார்க்கலாம். பொதுவாக எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சில பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து அந்நியமாகிவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். ‘எவ்வளவோ பாசத்தை கொட்டினாலும் என் குழந்தை என்னிடம் நெருங்கி பழகுவதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள். அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்க்க வேண்டும். குழந்தைகள் … Read moreபெற்றோர்களே! குழந்தைகளிடம் பாகுபாடு காட்டவேண்டாம்

Select your currency
LKR Sri Lankan rupee