கொரோனா

கொரோனா நீ எம்மைத் தாக்க வந்த எமனா?? ஹிட்லரின் தங்கச்சி மவனா??? உன்னை முட்டியில் அடக்கி ஆற்றில் போட்டாங்க… உன் நல்ல நேரம், நீரில் மிதந்து தப்பி வந்தாய்! பாணியில் பிரட்டி உன்னை நக்கிடப் பார்த்தாங்க… உன் நல்ல காலம், நாக்கின் ஓரத்தில் புகுந்து ஓட்டைப் பல்லினூடு காற்றில் பறந்தாய்! எரித்தாலும் எரியாத எரிமலையே! புதைத்தாலும் நிலத்தடி நீரில் கலந்துவிடும் ‘கல்கிரி’யே (කල් කිරි) ! உன் பெயரால் ஏற்பட்ட கடன் கோடி அதனால் மக்கள் போகிறார்கள் … Read moreகொரோனா

ஓட்டைக் குடிசையினுள் இருந்து ஓர் ஓலம்

பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன் தூசி‌ படாது காத்து வளர்த்தேன் ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன் அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன் எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய் வளர்த்தேன் அவனைக் காண ஏங்குது மனசு கண்டா வரச் சொல்லுங்க! தவழ முயன்று உருண்டு பிரண்டான் நடக்க முயன்று விழுந்து போனான் ஓட முயன்று தடுக்கி விழுந்தான் தூக்கி விட்ட கை ஒருமுறையேனும் தடவிப் பார்க்கத் துடிக்குது அவனை கண்டா வரச் சொல்லுங்க! பால்குடி வயதில் பசியெடுத்து முகத்தைப் … Read moreஓட்டைக் குடிசையினுள் இருந்து ஓர் ஓலம்

நியூற்றன் விதியும் பொலிஸ்காரனின் சதியும்

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.  இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம். பொலீஸ் காரர் காலால் உதையாது, ஏன் குதித்துப் பாய்ந்தார்? பொலிஸ் காரரின் நிறை (mg) கீழ்நோக்கித் தாக்குவதால் சமப்படுத்தப்படாத புறவிசை ஒன்று தாக்குகிறது. எனவே, நியூட்டனின் விதிப்படி அவர் கீழ்நோக்கி ஆர்முடுகலுடன் இயங்கி, பெரிய வேகத்தில் கீழே இருப்பவரைத் தாக்குவார். எனவே பெரிய வயிறுடைய அவர் பெரிய உந்தத்துடன் கீழே இருப்பவரை அடிப்பதால், உந்தக்காப்பு … Read moreநியூற்றன் விதியும் பொலிஸ்காரனின் சதியும்

உன்னால் முடியும் முன்னால் வா டா!

அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். எமது வீட்டுக்கு அருகாமையில் ஒரு வீட்டுடன் இணைந்து சில்லறைக் கடை இருந்தது. அந்த வீட்டில் கேபிள் செனல் இருந்தது. எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் நாநாமார் அந்த வீட்டில் ஒன்று சேர்ந்து பார்ப்பது வழக்கம். அன்றெல்லாம் எல்லா வீடுகளிலும் டீ.வி இருக்காது. அதுவும் கேபிள் செனல் ஊருக்கே ஓரிரு வீடுகளில் தான் இருக்கும். அப்போது ஒருநாள் இரவு மஹ்ரிப் வேளையில் ஆகாரம் எடுப்பதற்கு அந்தக் கடைக்குச் சென்ற போது, … Read moreஉன்னால் முடியும் முன்னால் வா டா!

முகப்புத்தகமும் பெண்களின் முகமும்!

இன்றைய நாட்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை தான், முகப்புத்தகத்தில் பெண்கள் முகத்தைக் காட்டலாமா? இல்லையா? எனும் விவாதம்! காட்டுங்க, காட்டாமல் இருங்க, அது தனிமனித சுதந்திரம். காட்டித் தான் ஆகனும். காட்டாமல் இருந்துதான் ஆகனும் என்றெல்லாம் கட்டாயப்படுத்துவதென்பது ‘தம்மிக பாணி’யை இலங்கை மக்கள் குடித்துத் தான் ஆகவேண்டும் என்பதற்கு சமனானது. குறிப்பிட்ட சில பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களில் அங்கத்துவம் வகிக்கும் மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளிக்காட்டப்பட்டும் முகங்கள் வெளிக்காட்டப்படாததால், ஒரு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது முகப்புத்தகத்தில். இங்கு … Read moreமுகப்புத்தகமும் பெண்களின் முகமும்!

சூபர் ஒவர் வரை சென்ற லங்கா பிரிமியர் லீங்க் முதல் போட்டி

ஒரு‌ T20 League இல் ரசிகர்கள் பிரதானமாக எதிர்பார்ப்பது. அதிரடி ஆட்டங்கள், அதிக ஓட்டங்கள், விறுவிறுப்பான போட்டிகள், சூப்பர் ஓவர்கள். இதெல்லாமே சீசனின் முதல் போட்டியிலேயே கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். நூறு ரூபா சோற்றுப் பார்சலுக்காக லைன்’ல நிற்கும் போது சுடச்சுட மணமணக்கும் பிரியாணி சஹன் கிடைச்சது போல இருக்கும்’ல. அப்படித்தான் இருந்தது, நேற்றுமுன்தின (26.11.2020) Lanka Premier League (LPL) இன் முதல் போட்டி. Colombo Kings கெப்டன் Anjelo Mathews நாணயச் சுழற்சியில் … Read moreசூபர் ஒவர் வரை சென்ற லங்கா பிரிமியர் லீங்க் முதல் போட்டி

உந்தக்காப்புத் தத்துவம் (Law of Conservation of Momentum)

ஆரம்ப உந்தம் பூச்சியம்! பாரமான Bag வேகமாக கீழே போகும் போது, இறுதி உந்தத்தைப் பூச்சியமாக்க பாரம் குறைந்த கை அதிவேகமாக மேலே போகும்! (மூக்கு பத்திரம்!) Physics is Simple Ifham Aslam

சுகாதார அமைச்சரின் பார்வையில் சக்திக் காப்புத் தத்துவம் – விஞ்ஞான அமைச்சரவை

அமைச்சர் குடத்தை மெதுவாகத் தான் எறிகிறார். ஆனால், குடமானது கீழே செல்லும் போது வேகம் கூடி, பெரிய வேகத்துடனேயே நீரை அடிப்பதை அவதானிக்க முடியும்! “பசக்க்” என்று பெரும் சத்தம் அதனால் தான் கேட்டது) Physics விளக்கம் சக்திக் காப்புத் தத்துவம்: மொத்த சக்தி காக்கப்படும். இங்கு, பொறிமுறைச் சக்தியே (இயக்கம் (or வேகம் u) காரணமான இயக்க சக்தி, பொருளின் நிலை (உயரம் h) காரணமான அழுத்த சக்தி) காணப்படும்! அத்துடன், இயக்க சக்தி + … Read moreசுகாதார அமைச்சரின் பார்வையில் சக்திக் காப்புத் தத்துவம் – விஞ்ஞான அமைச்சரவை

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! நீண்ட நாளாக ஒரு ஏக்கம். ஒரு வலி. யாரிடம் கூறுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்தப் புலம்பலானது எனது புலம்பல் மாத்திரமல்ல, ஒரு ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமொன்றின் புலம்பல். அவர்களுக்கும் தெரியவில்லை, யாரிடம் கூறினால் அவர்களின் புலம்பலுக்குத் தீர்வு கிடைக்கும் என்று. நான் ஒரு இலங்கைக் குடிமகனாக இருப்பதால், எமது ஜனாதிபதியான உங்களிடமேயே நேரடியாகப் புலம்பி விட முடிவெடுத்து விட்டேன். உங்களால் மாத்திரமேயே எனது புலம்பலுக்கு, மன்னிக்க வேண்டும் எமது புலம்பலுக்குத் … Read moreஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

சிறுபான்மையின மாணவர்களிடமிருந்து சிங்கள மொழி தூரமாக்கப்படுகிறதா?

எத்தனை அதிபர்கள் கவனித்திருப்பார்களோ,  தெரியவில்லை. எத்தனை ஆசிரியர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. எத்தனை சிறுபான்மையின கல்வியியலாளர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. சிங்கள மொழியானது மாணவர்களிடம் இருந்து தூரமாகும் வகையிலேயே சாதாரண தரத்திற்கான பாடத்தெரிவுகள் அமைந்திருக்கின்றன. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற சிங்களப் பாடத்துடன், வணிக (commerce) பாடமே pool Subjects ஆக இருக்கிறது. சிங்களம் அல்லது வணிகம். இரண்டில் ஒன்றையே தெரிவு செய்ய வேண்டும். உயர்தரத்தில் Commerce செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்களும், “சிங்களம் தெரியாத மொழி – … Read moreசிறுபான்மையின மாணவர்களிடமிருந்து சிங்கள மொழி தூரமாக்கப்படுகிறதா?

போதையால் மாறிய பாதை (தொடர் 3)

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’ என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பகல், வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி. உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து, தங்கச் சவடியை‌ எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கிளம்பி விட்டேன். நேரடியாக அவனிடம் சென்று, நகையைக் கொடுத்து “ஐஸ்” எனும் போதைப்பொருளை‌ அதிகமாக வாங்கினேன். அந்தச் சவடி மூன்று நான்கு லட்சம் பெறுமதியிருக்கும். அது மூன்று நான்கு ஐஸ் பக்கெட்டுக்கு முன்னே பெரிதாகத் … Read moreபோதையால் மாறிய பாதை (தொடர் 3)

போதையால் மாறிய‌ பாதை (தொடர் 1)

பெனால்டி பொக்ஸ் (Penalty Box) இற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் (Free Kick). கோல்கீப்பராக சினாஸ். என் நண்பன்! எனக்குத் தெரிந்த சிறந்த கோல்கீப்பர்களில் அவனும் ஒருவன். அவனைத் தாண்டி கோல் அடிப்பது சற்றுக் கடினம். இடது, வலது, மேலே, கீழே என எந்தப் பக்கமாக அடித்தாலும் பாய்ந்து பாய்ந்து பந்தைப் பிடிக்கும் லாவகம் உடையவன். “ஒலிவர் கான்” என்று அவனை அழைப்பதில் இருந்து அவனது திறமையைப் புரிந்து கொள்ளுங்கள். சினாஸ் மூன்று பேரை கோல் … Read moreபோதையால் மாறிய‌ பாதை (தொடர் 1)

சிங்கள மொழிப் புலமை: காலத்தின் தேவை

“எமது நாடு சிங்களம் பேசுபவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்பதை பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டறிந்த ஓர் முடிவாகும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கத் தேவையில்லை, அது எல்லோரும் அறிந்த உண்மை! அதேபோல், எமது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினரில் பெரும்பாலானோருக்கு இரண்டேயிரண்டு சிங்கள வாக்கியங்கள் தான் தெரியும்! “இஸ்ஸரா ஹோல்ட் பஹினவா” “பத் பார்ஸல் கீய’த?” இந்தப் பெரும் மலைக்கும் சிறு மடுவிற்கும் இடையே இனி எவ்வாறு பாலம் போடுவது. உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை சமாளிக்க பப்படத்தை … Read moreசிங்கள மொழிப் புலமை: காலத்தின் தேவை

டாக்டர் அன்பாஸ்: சமூகத்திற்காக உழைக்கும் ஓர் ஊழியன்

[cov2019] நேற்று 03.04.2020 களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வந்த ஓர் கர்பிணித் தாய் சம்பந்தப்பட்ட voice note ஒன்றினால், சற்று பதற்றம் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். யாவரும் மனிதர்களே! மனிதர்கள் தவறுகளுக்கு மத்தியிலேயே படைக்கப்பட்டவர்கள். Dr.Anfas அதற்கு விதிவிலக்கானவரல்ல. பெரும்பான்மையினருடன் இணைந்து சேவைகளில் ஈடுபடுபவர்கள் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. அது, எமது சமூகத்தில் இருக்கும் ஒருசிலர் செய்யும் முட்டாள்தனமான வேலைகளுக்காக சக ஊழியர்களிடம் பேச்சுக் கேட்பது. “ஒங்கட … Read moreடாக்டர் அன்பாஸ்: சமூகத்திற்காக உழைக்கும் ஓர் ஊழியன்

ஏன் இந்தப் பொடுபோக்குத் தனம்??

சீனா’ல தானே! எங்களுக்கு நோ ப்ரொப்ளம்! இத்தாலி’ல தானே!! எங்களுக்கு நோ கேஸ்!! அமெரிக்கா’ல தானே!! எங்களுக்கு நோ வொர்ரீஸ்!!! கடசில, கம்பஹா’ல தானே!! இங்க இல்லயே!! இவ்வாறு, ஒவ்வொரு படிமுறையாக பொடுபோக்காக இருந்து விட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட பின்னர், “அந்த ஏரியால தானே, எங்கட ஏரியா’ல இல்லயே!!” என்று வியாக்கியானம் பேசித் திரிந்து கொண்டிருக்கின்றனர், இலங்கையர்கள். ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல், ஒன்று கூடி விளையாடுவதும், ஒன்றாக உணவருந்துவதும், ஒன்றாக பேசிக்கொண்டிருப்பதுமாக நாட்களைக் … Read moreஏன் இந்தப் பொடுபோக்குத் தனம்??

உயிர் கொடுத்து, உயிர்களைக் காப்பாற்ற முனைந்தவன்!

Dr.Li Wenliang. கொரோனா வைரஸை இனங்கண்ட  டாக்டரின் 40 நாட்கள் “நீ என்ன வேலை செய்து விட்டாய்??” “மருத்துவ அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் எவ்வாறு வெளியிடுவாய்??” “பார், உன்னால் எமது வைத்தியசாலைக்கு எவ்வளவு அவமானம்!” “வீணாக வதந்திகளைப் பரப்பி, ஏன் சமூகத்தைக் குழப்புகிறாய்!” வைத்திய மேலதிகாரியின் காரசாரமான வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் வைத்தியர் லீ!! ‘சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மக்களைக் குழப்பியதாக’ குற்றஞ்சாட்டப்பட்டு, அடுத்த நாளே போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்! “நீங்கள் … Read moreஉயிர் கொடுத்து, உயிர்களைக் காப்பாற்ற முனைந்தவன்!

அவளும் ஓர் சிங்கப்பெண்ணே!

நான்கு சுவற்றினுள் தன் உலகையே வடிவமைத்திருந்தாள் உலகை மறந்து! உறவு ஆண்கள் வருகை தந்தாலும் தன் உலகான நான்கு சுவர் அறையை நோக்கி ஓடினாள் தன்னை மறந்து! சிறு தும்மலுக்கும் அன்புத் தாயையே நாடினாள் அரவணைப்பு புரிந்து! சிறு தேவைகளுக்கும் தம்பியே கடைக்குச் சென்றான் அக்காவின் பாசமறிந்து! தேவையான அனைத்தும் கேட்காமலேயே அறையை நோக்கி வந்தன ‘அவளது பாசத் தந்தை’ மூலம்! பாசத்துடன் பரிசுப்பொருட்களும் வீடு நோக்கி வந்தன ‘அவளது அண்ணன்’ மூலம்! பாதையில் நடந்தால் பாதம் … Read moreஅவளும் ஓர் சிங்கப்பெண்ணே!

இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்!

இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்! தூங்கா பாலகனை “ஆராரிராரோ” சொல்லித் தாலாட்டும் தூக்கம் மறந்த அன்னையும் ஒரு காவியம்! பொறுப்புக்கள் சூழ் வாழ்வதனை‌ நித்தம் எண்ணியே தூங்க மறந்த தந்தையுமொரு காவியம்! இளசுகளின் திருமணத்தைத் தினந்தோறும் பார்த்து தனக்குமமையாதோ எனக் கண்ணீருடன் எண்ணவோட்டங்களைப் படரவிட்டுக் கொண்டு ஓட்டைக் கூரை வழியே நட்சத்திரங்க ளெண்ணும் ஏழை வீட்டு கன்னியும் ஓர் காவியம்! மணமுடித்து குழந்தைகள் பெற்று கையிலொன்றும் காலிலொன்றுமென கொஞ்சிக் குலாவ வேண்டிய வயதில் குடும்பப்பாரமதை தலையி லேற்றி … Read moreஇரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்!

காலத்தின் தேவை “படித்த” சமூகமே!

நேற்றொரு சம்பவம்! நண்பர்களுடன் சேர்ந்து நேரம் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எமது ஊரிலுள்ள ஒரு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வது வழமை. நேற்றும் அவ்வாறே காலை ஆறரை மணிக்கெல்லாம் சென்று விட்டோம். ஒன்பதரை மணி வரை விளையாடினோம். அம்மைதானத்திற்குப் பக்கத்தில் ஓர் பாடசாலை இருக்கிறது. ஏழரை மணிக்கு பாடசாலையில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது! கூடவே பழைய ஞாபகங்களும் திரும்பி வந்தது! காலையிலேயே உற்சாகமாக நின்றுகொண்டு, அதிபர் மைக்கில் சீராப்புராணம் வாசிக்கும் போது, நண்பர்களுடன் அடித்த … Read moreகாலத்தின் தேவை “படித்த” சமூகமே!

மதிப்பிற்குரிய பெண்மை

மரணத் தருவாயிலும் மகனுக்காய்க் கவலைப்படும் அன்பானவளவள்; மணிமகுடம் சூடிடுனும், கணவனுக்கு மதிப்பளிக்க நினைப்பவளவள்!! அன்னைக்குச் சிறந்த தோழியவள்! தம்பி தங்கைக்கு இரண்டாம் அன்னையவள்!! அப்பாவின் சம்பளம்பெறா ஆலோசகராகரவள்!! அண்ணா அக்காவின் அன்புத்தங்கையவள்!! குடும்பத்தினைத் தலை நிமிர்த்தும் தூணவள்!! இலவசக் கல்வியைப் பெறவும் பல வசைகளைக் கேட்கிறாளவள்!!! அடுப்பங்கறைக்குளடக்க முயலும் சமூகத்தில் தடைகளைத் தகர்த்தெறிந்து, துறைகளனைத்திலும் நட்சத்திரமாய் மிளிர்கிறாளவள்!! அவதூறுகள் பல கேட்டும், அரக்க கண்களுடையோர் பலரைத் தாண்டியும் தனை நிரூபிக்கும் வீரப்பெண்ணவள்!! மாதமேழுநாள் உடலைக்கிழிக்கும் வலியைத்தாங்கும் தேவதையவள்!! … Read moreமதிப்பிற்குரிய பெண்மை

Select your currency
LKR Sri Lankan rupee