உயிர்பெற்ற உன்னத உறவு

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுத்தாலும் இனம்புரியா இருளொன்று அவளது உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது. தன் அறைத்தோழி ஆய்ஷாவுடன் அதே பெல்கனியில் அமர்ந்து அரட்டையடித்த வண்ணம் தேனீர் பருகிய அந்த அழகிய நாட்கள் உள்ளத்தில் இனித்திட, ஸுபஹ் தொழுகையின்றி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆய்ஷாவை கவலையுடன் நோக்கினாள். … Read moreஉயிர்பெற்ற உன்னத உறவு

வெளிநாட்டுப் பயணம்

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு அமர்ந்தவன், “ஸாறா எனக்கு குடிக்க தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்களே” என்று உள்நோக்கி தன் அன்பு மனைவிக்கு குரல் கொடுத்தான். அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தவள் தன் பதியின் அழைப்புக் கேட்டு நீர்க்குவளையை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் ஸாறா. “இந்தாங்க தண்ணி. … Read moreவெளிநாட்டுப் பயணம்

பெண்மையை மதித்திடுவோம்

பெண்ணென்ற நாமம் தாங்கி மென்மைப் பூக்களாய் மண்ணில் உதிக்கும் மங்கைகளை கண்ணெனக் காத்திட வையகமே திரண்டெழுவாய்! நாணம் பூணும் நங்கையவள் மானமதைக் காத்திங்கு மாதர் குலம் போற்றிட மானிடமே துவண்டெழுவாய்! வீரியம் மிக்க விடலையே – நீர் விளக்கென்றால் திரியாகி இருளென்றால் மதியாகி விண்ணென்றால் உடுவாகி மண்ணென்றால் மலராகி உம் வாழ்வினை வனப்பாக்கிடும் உன்னத பிறவியினை உயிராய் மதித்திடுவீர்! தாயாய்ப் பாலூட்டி தாரமாய் கைகோர்த்து தமக்கையாய் சீராட்டி தங்கையாய் உறவாடி வாழ்விற்கு உரமூட்டிய வானவனளித்த வரங்களை தேன் … Read moreபெண்மையை மதித்திடுவோம்

ஒரு ஜனாஸாவின் அழுகுரல்

ஆ! ஐயோ! எரிகிறதே! உடலெங்கும் வலிக்கிறதே! ஸக்ராத்தால் நொந்த உடம்பு வெந்து போகிறதே! என் சொல்லொணாத் துயர் உமக்கெல்லாம் புரிகிறதா? எனக்கான கபன் எங்கே? கரமேந்திடும் தொழுகை எங்கே? ஆறடிக் கப்ரு எங்கே? என்னைத் தவிர எல்லாமே புதைக்கப்பட்டு விட்டனவா? ஓரடி தூரத்தில் பரவாத தொற்று ஆறடி ஆழத்திலிருந்து வேரோடி விருட்சமாய் நிலத்தைக் கிழித்து வெளியேறிட கொரோனா ஒன்றும் விதையல்லவே சுகாதாரம் சொல்லும் உலக சொந்தங்களே சோகம் தெரிவிக்கையில் திருநாட்டு உறவுகளோ சகுனி வேடம் பூணுகின்றனரே இன … Read moreஒரு ஜனாஸாவின் அழுகுரல்

தன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

ஒளியிழந்த என் வாழ்வில் ஒளி தந்த விளக்கு என் தந்தை பாச மலர் வீசி பாரினிலே முத்து முத்தாய் வியர்வை சிந்தி உருகிடும் மெழுகுவர்த்தியவர் உலகு போற்றும் என் தந்தை கல்விக்காய் கை நீட்டி காசு கேட்கையிலே அள்ளித் தந்து அரவணைத்த வள்ளலவர் எதிர்காலமென்ற கட்டடத்தை தொட்டிடவே உறுதியான உறுதுணையாய் நின்று தட்டிக் கொடுத்த தலைமகனவர் தங்கமான என் தந்தை தன் உதிரத்தில் உருவான மறு உருவத்துக்காய் வாழ்வையே தாரை வார்த்த உத்தமத் தியாகியவர் ILMA ANEES … Read moreதன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

பெண்களும் சாதனை புரியலாம்

இன்று பெண் என்றாலே அவள் அடுக்களைக்குத் தான் சொந்தம் என எம் சமூகத்தினர் வரையறை ஒன்றைக் கற்பித்துள்ளனர். பெண்கள் அடுக்களைக்கு மாத்திரம் தான் சொந்தமா? அவர்களால் சாதிக்க முடியாதா? முடியும். எங்களாலும் சாதிக்க முடியும். நாம் குடும்பத்தையும் நல்ல முறையில் கண்காணித்து சாதனைகளையும் புரியும் உரிமை (மார்க்கத்தின் வரையறைகளைப் பேணி) இஸ்லாத்தில் உண்டல்லவா? நபியவர்கள் காலத்தில் எத்தனையோ முஸ்லிம் வீரப் பெண்மணிகள் திகழ்ந்துள்ளனர். நபியவர்களின் அத்தை ஸபிய்யா அம்மை கூட கைபர் யுத்தத்தின் போது இஸ்லாத்திற்காக வீரத்துடனும் … Read moreபெண்களும் சாதனை புரியலாம்

நோம்புக் கஞ்சி

“உம்மோவ்…. வாப்போவ்…. நாளக்கி நோம்பாம்…. இப்ப தான் பள்ளீல சென்ன” “மகேன் பார்த்து மெதுவா வாங்க. எந்தக்கி இப்பிடி ஓடி வார. செல்லீக்கி தானே இப்பிடி பா(f)ஸ்ட்டா ஓடினா புளுவீங்கண்டு” “இல்ல வாப்பா… நாளக்கி நோம்பாமே… அப்ப பள்ளீல கஞ்சி குடுப்பதே. வாப்பா நானும் ஒங்களோட வார. அய்ய்ய்ய் ஜோலி…” ஐந்து வயது மகன் அல்மாஸ் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “வாப்பாம் மகனும் சேந்து எந்த பேசிட்டு நிக்கிய? நாங்களும் வந்து கலந்து கொண்டா பரவாயில்லயா? எங்கட … Read moreநோம்புக் கஞ்சி

புனித றமழான்

கருநீல வான்பரப்பில் வெண்ணிறச் சுடரொளியாய் சட்டென மின்னி மறைந்திடும் சிறு கீற்றுப் பிறையின் வருகையால் சங்கை மிகு றமழானும் உதயமாகிறதே…. இதயங்கள் துள்ளிக் குதித்திட இதழ்களில் புன்னகை தவழ்ந்திட இஸ்லாமிய நெஞ்சங்கள் இன்பமாய் வரவேற்றிடும் றமழானிது…. பசித்திருந்து தாகித்திருந்து பகலிரவாய் கரமேந்தி பாவக் கரைகளை நீக்கி சுவனத்தை சுவைத்திட வந்ததே எமக்கு றமழான்….. வேலைப்பளுவின் சுமையாயினும் வேதனை தரும் வெயிலாயினும் பெருமை மிகு றமழானை பக்குவமாய் கடைபிடிக்கனுமே இன்ஷா அல்லாஹ்…. உள்ளங்களை உயிர்ப்பித்து இல்லங்களை ஒளியூட்டி உதித்திடும் … Read moreபுனித றமழான்

முஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பாதுகாத்தல்

வந்தேறு குடிகளென்ற வாதங்களைத் தகர்த்தெறிந்து பூர்வீகச் சொத்துக்களை சேதங்களின்றி காத்தல் வேண்டும் புனிதம் மிகு புண்ணிய பூமிகளும் மனிதம் போற்றும் வாசிகசாலைகளும் தொன்மை நிறை நூதனசாலைகளும் மேன்மையென ஏற்றுதல் வேண்டும் விசித்திரம் நிறைந்த சரித்திரப் புரட்டுகளை சான்று கொண்டு பதித்திடல் சாலச் சிறந்ததன்றோ??? அடிச்சுவடுகளே இன்றி அடியோடு அழிக்கப்படும் வரை நொடிப்பொழுதில் கண்ணிமைத்திடாது விடி கொண்டிட விழித்தெழுவோம்! தார்மீகப் பணிகள் ஏராளமதை தாராளமாகப் புரிந்து பூர்வீக முஸ்லிம்கள் நாமென்றே யுகம் முழுதும் உரைத்திடுவோம்…. ILMA ANEES WELIGAMA … Read moreமுஸ்லிம்களின் பூர்வீகத்தைப் பாதுகாத்தல்

நெற்றி முத்தம்

நிலம் தொட்டு நுதல் பதித்து நலம் வேண்டி பிரார்த்தித்தே நித்தமும் சத்தமில்லாத முத்தம் அதுவே உன் நெற்றி முத்தம் கண்ணின் பனித்துளியென மணி மணியாய் சிந்தும் கண்ணீர்த்துளி கொண்டு தரையினை நனைத்திடும் தருணம் திரையின்றி நிலத்தினில் பதிந்திடும் முத்தம் அதுவே உன் நெற்றி முத்தம் உளமதில் உதித்த துயரினை உருக்கமாய் உதிர்த்திட பிறை நுதல் பதித்து இறையோனிடம் இறைஞ்சியே முறையிட்டிடும் சமயம் தரையுடன் உயிர்த்திடும் உன்னத பந்தம் அதுவே உன் நெற்றி முத்தம் ILMA ANEES (WELIGAMA) … Read moreநெற்றி முத்தம்

கொரோனாவும் கூலிவேலையாட்களும்

கம்பீரமாய் காட்சி தந்த கதிரவன், மதி மங்கையவளின் வருகை கண்டு நாணி மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கும் மங்கிய மாலைப் பொழுதினிலே, தன் வீட்டு முற்றத்திலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் பாத்திமா தாத்தா. “அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா தாத்தா” சுவனத்தின் காணிக்கைகளை மொழிந்தவளாய் வந்து கொண்டிருந்தாள் கதீஜா. “வஅலைக்கும்முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ… ஆ கதீஜாவா??? வாங்க மகள். சொகமா இருக்கீங்களா?” “அல்ஹம்துலில்லாஹ் ஈக்கிறோம் தாத்தா. ஆனா, நாட்டு நடப்புகள் தான் ரொம்ப மோஷமா ஈக்கிது” “ஓ … Read moreகொரோனாவும் கூலிவேலையாட்களும்

வெறிச்சோடிப் போன மஸ்ஜித்கள்

இணை துணையில்லா இறையோனின் இல்லமதில் மறை வேதமுரைத்து மறையோனைத் தொழுத மங்காத பொழுதுகள் மறைந்து விட்டன சின்னாட்களுக்கு ஒற்றையைத் தவிர்த்து ஒற்றுமையைப் பறைசாற்றி ஒன்றாய்க் கூடிய ஜமாஅத்கள் நின்று விட்டன காலவரையறை இன்றியே இரவு பகலாய் மக்களின் எண்ணற்ற வரவுகளால் அரவங்கள் குடி கொண்ட அல்லாஹ்வின் மாளிகை தாழிடப்பட்டு ஆளின்றி போனது சதா கேட்கும் அதானொலி செவிகளுக்கூட்டிய உற்சாகத்தால் நவ்வியென துள்ளிக் குதித்து பள்ளி நோக்கிய பாதங்கள் இன்று ஏங்குகின்றன நின்று தொழுத கூட்டுத் தொழுகைக்காய் உடைந்த … Read moreவெறிச்சோடிப் போன மஸ்ஜித்கள்

பல்கலைக்கழகத்தினூடாக இன நல்லிணக்கம்

பல கலைகள் கற்கவென பல்கலையில் பாதம் பதித்து சிலைகளென வடிக்கப்பட்டு சிகரம் தொடத் துடிக்கும் சக இனச் சொந்தங்களே….!!! தேசக் கொடியிலே இருக்கட்டும் வர்ண பேதம் தேச நேசர்கள் எம்மில் வேண்டாம் கர்ண பாதகம் எம்மில் ஓடும் உதிரமும் செம்மை தான் மண்ணில் விழும் நிழலும் கருமை தான் நாமம் ஒன்றே நான்காய் வேறு வேண்டாம் இனியும் இனக் கூறு இதழின் இணக்கம் மலராக மணக்கும் இறகின் இணக்கம் சிறகாக பறக்கும் பல்கலைத் தாயின் பாலகர்கள் எம்மில் … Read moreபல்கலைக்கழகத்தினூடாக இன நல்லிணக்கம்

பல்கலை நற்புகள்

சிறுகதை காலைக் கதிரவனின் செங்கீற்றொளி திரைச்சீலையின்றிய யன்னலினூடாக வதனத்தை முத்தமிட துயில் கலைந்தெழுந்தாள் ஆயிஷா. கட்டிலிலே குந்தியிருந்தவள் சக தோழிகளின் ஆழ்ந்த தூக்கத்தை ரசித்தவாறே தன் பணிகளில் மும்முராய் ஈடுபட்டாள். அது தீப்பெட்டி போன்றதொரு சிறு விடுதியறை. இரண்டு பேரே தங்க முடியுமான அவ்வறையில் ஒற்றுமையாய் நான்கு ஜீவன்கள். இடைக்கிடை குட்டிக் குட்டி செல்லச் சண்டைகளுடன் சங்கமித்து, துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் பங்கு கொண்டு ஒன்றரக் கலந்த சிநேகிதிகள். “பர்வீன்…. ரைஹானா…. அஸ்மா…. டீ ரெடி…. மூனு … Read moreபல்கலை நற்புகள்

அல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்

அண்ணல் நபிகளுக்களித்த அற்புதங்களில் ஒன்றாம் அழகிய திருமறையிலே ஆழமாய் பொதிந்துள்ள அற்புதங்களோ ஏராளம் தாராளம்…. அறிவியல் கண்களை அகழத் திறந்து மறை வேதம் தந்த மறுக்க முடியா அற்புதங்கள் ஒன்றா… இரண்டா…??? கருவறையின் தனித்தன்மையை திருத்தமாய் உரைத்து உள்ளங்களை உருகச் செய்வதிலும் துல்லியமாய் தெரிகிறதே அல்குர்ஆனின் அற்புதம்….. பெருவெடிப்புக் கொள்கையை தெட்டத் தெளிவாய் காட்டி அற்புதத்தை தொட்டுச் சென்றதே சாந்தி மார்க்கத்தின் சத்திய வேதம்…. தெவிட்டிடும் தேனின் உற்பத்தியினை தரணிக்கே உணர்த்தி நின்றிடும் தகவலதுவும் அற்புதமே…. புவி … Read moreஅல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்

சுதந்திர தேசம்

சுதந்திரக் காற்றின் சுகந்தத்தை சுகமாய் அனுபவித்திட வியூகங்களை தகர்த்தெறிந்து தியாகங்கள் புரிந்த தயாளர்களுக்கோ கோடி நன்றிகள். தாய் மண்ணின் விடுதலைக்காய் தேய் பிறையாய் தேய்ந்து போன தலைமைகளின் நேயம் மிகு பரிசிது. தாயகமே போற்றும் தூய்மையான இந்நாளின் துவக்கத்திலே தேசப்பற்றுள்ள நேசர்களாய் மாறி நல்லிணக்கத்தை நாவினமும் கை கொண்டிடுவோம். தேசக் கொடியிலே இருக்கட்டும் வர்ண பேதம். தேச நேசர்கள் எம்மில் வேண்டாமே கர்ண பாதகம். ILMA ANEES SEUSL SECOND YEAR

மீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஸாஹிரா தாய் பிரசவித்த சாந்தி மார்க்கத்தின் சகோதர சொந்தங்களுக்கு சுவனத்தின் காணிக்கைகள் அமுத விழாவின் அமிர்தம் மிகு தினத்தினிலே பால்ய பருவத்தின் பசுமையான நினைவுகளை பெருமையாய் மீட்டிச் செல்லும் அருமையான தருணமிது எங்கிருந்தோ வந்தோம் எதிர்பாராமல் சந்தித்தோம் நட்புறவை வளர்த்தோம் என்றென்றும் தொடர்கிறதே நெடுஞ்சாலையாய் மிளிரும் முத்துக்களினூடே துளிர்த்த ஆரக் கோவையாய் ஒன்றோடு மற்றொன்றாய் கைகோர்த்து நடைபயின்ற இனிமையான நாட்களின் நினைவுகள் நெஞ்சோடு முட்டி மோதி அலையென ஆர்ப்பரிக்கின்றனவே புள்ளி மானென துள்ளியோடிய பள்ளிக்கூடமதில் தோள் மீது … Read moreமீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஏழைக்கொரு குரல்

சுவையான பண்டங்கள் நாவைத் தொடும் முன் போ(f)னை அலங்கரித்து பே(f)ஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு ஈற்றில் நாகரிகம் என்ற பெயரில் நாவைத் தொட்டது கொஞ்சமும் குப்பைத் தொட்டியை எட்டியது மிகுதியுமாய். பாமரர்களின் பரிதவிப்புகள் பார் முழுதும் தலை விரித்தாட நாகரிக மோகர்களின் அநாகரிக நடத்தைகள் உண்ணும் உணவில் கண்ணும் கருத்துமாய் நின்று மண்ணின் மடிதனில் ஊணின்றி துவண்டு போகும் உயிர்கள் பலதினதும் வயிற்றை நிரப்பிட வழி செய்தலில் களி கொள்ளுதலே பேரழகு. ILMA ANEES SEUSL SECOND YEAR

ஈராண்டின் விளிம்பினிலே

அன்னை வயிற்றில் உதித்து தந்தை மடியில் துளிர்த்து உயர் கல்வியை முடித்து பல்கலையில் பாதம் பதித்தோம் அன்று. உறவுகளைப் பிரியும் நேரம் உலகினையே வெறுத்த அந்த நொடிகள் சொல்லெணாத் துயரை நெஞ்சிலே சுமந்த தருணங்கள். காலவோட்டத்தின் வேகத்தில் காற்றாய் சுழன்றன நாட்கள் கண்ணிமைக்கும் நொடியில் கண்ணெதிரே ஈராண்டின் விளிம்பில் இன்று. முதன் முதலாய் உறவுகளின் பிரிவும் புது முகமாய் அறிமுகமான உன்னத தோழிகளுடனான உள்ளங்களின் சங்கமமும். துன்ப சேற்றில் அமிழ்ந்து இன்ப ஊற்றில் நனைந்து ஈராண்டின் எல்லையைக் … Read moreஈராண்டின் விளிம்பினிலே

வாக்குரிமை

தேர்தல் என்ற தேர்வினிலே தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து தன்னுரிமையாய் புள்ளடியிட்டு துல்லியமாய் புள்ளி வழங்கிடும் குடிமக்களின் உரிமையிது நாளைய எம் எதிர்காலம் கறையில்லா நிறை வாழ்வாகிட நம் விரல் நுனியதனை நீலக் கறை கொண்டு நனைத்திடும் தேர்தலின் அடையாளமிது எட்டுத் திசைகளிலும் திட்டுத் திட்டாய் படிந்திருக்கும் அகலா அரசியல் அழுக்குகளை துகிலுரித்திடும் ஆயுதமிது வாழும் தலைமுறையின் வளமான வருங்காலத்துக்காய் தாயகம் நல்கிடும் தாய்மையின் ஓர் அங்கமிது நாளைய எம் விடியலுக்காய் நாம் செலுத்தப் போகும் வாக்கு நயவஞ்சக … Read moreவாக்குரிமை

சீதனக் கொடுமை

நட்சத்திர நிமிஷங்களிலே….. நிலா உலாப் போகும் காற்று வெளியினிலே…. ஊற்றாய்ப் பெருக்கெடுத்த கன்னியரின் அழகிய கனாக்கள் வரட்சியாய் உருவெடுத்த சீதனத்தினால் வற்றிப் போன தருணங்கள்….. முதிர் கன்னிகள் முற்றந்தோருமிருக்க முயல் பிடியாய் சீதனப் பிச்சை வாங்கும் செல்வந்த ஏழைகள்…… இருமணங்கள் இணையும் திருமணம் மனிதம் மறந்த மாந்தர்களால் தன் புனிதத்துவம் இழந்து பேரம் பேசும் வியாபாரமாய் இன்று….. பத்து லட்சம் ரொக்கமாய் தந்தால் பண்பு மகன் உமக்கே சொந்தம் பாகாய் உருகிடும் தரகரின் வார்த்தைகள் ஈயமாய் பெண்ணின் … Read moreசீதனக் கொடுமை

மனித நேயம்

நீதம் பொசுக்கப்பட்டு அநீதம் போஷிக்கப்படுவதில் ஒடுக்கப்பட்டு ஒடிந்து விட்டது மனித நேயம்…. நாயை வீட்டில் வைத்து பணிவிடைகள் செய்யும் மனிதன் தாயைக் கூட்டில் அடைத்து தயவு காட்ட மறுத்ததில் மரணித்து விட்டது மனித நேயம்…. மது, மாதில் மோகம் கொண்டு மழலைகளால் வெறித் தாகம் தணித்து மங்கைகளின் மானங்களை பாகம் பிரித்ததில் காற்றில் கரைந்து விட்டது காசு கொடுத்தும் கிடைக்கா மனித நேயம்…. அறப்போர் என்ற பெயரில் அழிவுகளை அள்ளித் தூவி விட்டு உயிர்களை உறிஞ்சிக் குடித்ததில் … Read moreமனித நேயம்

நரகம்

நெருப்பு நாக்குகள் சிவந்து நெடுஞ்சாலையாய் அகன்று கனல் கம்பளமாய் விரிந்திருக்கும் பாவிகளின் அரண்மனையிது அகிலத்தில் அன்புப் பானம் சுரக்காத கல்நெஞ்சங்களின் சொந்தங்களுக்கு அன்பளிப்பாய்க் கிடைத்திடும் அழியா அரியாசனமிது தரணியில் சுவனத்தை தேடி தம் கவனத்தை சொகுசுகளால் மூடி மறுமையை மறந்த மாந்தர்களின் முகத்திரை முழுதாய் கிழிக்கப்பட்டு முத்திரையிடும் கொடூர தளமிது சிற்றின்பச் சோலையில் புகுந்து சிந்தனையில் வஞ்சனைகள் கொண்டோர்க்கு சங்கையாளன் நிரந்தரமாய் நல்கிடும் சர்ப்பங்களின் சந்நிதானமிது வாழ்க்கை என்ற தேர்வினிலே தோற்றுப்போன தேகங்கள் வேகமாய் நுழையும் தளமும் … Read moreநரகம்

கல்வி

அறிவுக்கோர் உரமாய் இறை தந்த வரமே கல்வி…. ‘இக்ரஃ’ என்ற நாதமும் சான்றன்றோ இதற்கு…. அறியாமை என்ற இருளகற்றி அறிவுத் தாகம் தணித்து உச்சி குளிரச் செய்திடுமே உண்மை நிறைந்த கல்வி….. மடமையில் மதி இழந்து மாதர்களைக் கொலை புரிந்த மனிதர்களைப் புனிதர்களாக்கியதே மறை தந்த மாசற்ற கல்வி…. சுனையென ஊற்றெடுத்து சுகமாய் வரை பாய்ந்து நில்லா நதியாய் ஓடிடுமே நிலையிலா நிறைபொருட் கல்வி…. ஆதவனின் கீற்றொளியாய் இரவு வானின் விண்மீனாய் தண்மதியின் பால் நிலவாய் மங்காதே … Read moreகல்வி

Select your currency
LKR Sri Lankan rupee