பலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

மனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்ரேல் என்று நாமமிட்டு தலைமுறையாய் நாங்கள் வாழ்ந்த தேசத்தையே உலக வரைபடத்தில் இருந்தே அகற்றினாய்! சொந்த மண்ணிலே எங்களை அகதிகளாக்குகின்றாய் அடிமைகளாக்குகின்றாய் அடித்து துன்புறுத்துகின்றாய்! உன் வஞ்சத்தை தீர்க்க சின்னஞ் சிறு பாலகர்கள் பெண்கள் என்றும் பாராது ஏவுகனைகளால் மாய்க்கின்றாய்! எங்கள் தேசத்துக்கும் எம் எதிர்கால தலைமுறைக்கும் இன்னும் … Read moreபலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

கல்யாணம்

திருமணம் சொர்க்கத்தில நிச்சயிக்கப்பட்டது என்பாங்க. ஆனா அது நிச்சயமா இறைவனால் எழுதப்பட்ட நேரத்தில நிகழ இருப்பது என்றது எல்லோருமே நம்புற விசயம். ஆனால் நாம் அதை பரிசோதிக்கும் விதமாய் தான் நடக்கிறோம் என்றால் அது தான் உண்மை. யாருக்கு? எப்ப? நடக்கனுமோ அப்போ தான் நடக்கும். அதை தவிர்த்து ஏன்? திருமணம் பேசாத மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்களிடம் “எப்போ உங்களுக்கு கலியாணம்?” என்ற கேள்வி! எதற்கு? உங்களுக்கு அது கேள்வி மட்டும் தான்! புரிந்து கொள்ளுங்கள். மடியும் … Read moreகல்யாணம்

மூடிய புத்தகப் பரீட்சை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் – ஓர் ஆய்வு

MSF. Sahara MAF. Sumaiya

கன்னியின் காலத்தண்டனை

ஏன் பிறந்தோம் என்ற வெறுப்பு அது ! விதியில்! அதுவும் பெண்விதியில் திருத்த முடியாத சட்டம் அது! பிறக்கையில் தெரியாது வளர்கையில் தான் வளைத்திடும். என்னவென்று கேட்கிறீரா? நரம்புகள் நாடிகள் மேல் நோக்கி இழுப்பதாய் ஓர் உணர்வு வலிக்கிறது ! இன்னும் வலிக்கிறது! ஆஹ்! அம்மா! என்ற சினுங்கல்கள் ஆனால் வாய் திறக்க முடியவில்லை நெழிகிறாள். உயிர் பிரிந்தாலாவது வலி அடங்கும் என்று அதற்கும் ஆயத்தம் அவள்! கன்னியின் காலத்தண்டனை அது! தானாக நின்றாலும் நிறுத்திட முடியா … Read moreகன்னியின் காலத்தண்டனை

மஷுராவின் மடியில்

இறைவன் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கை மறுமையை மரணத்தை நோக்கியே நகர்ந்தபடி உள்ளது. அதற்கிடைப்பட்ட வாழ்வை அடுத்தவர் மனம் கோணாது வாழத்தான் இறைவன் வழிகாட்டல்களை வேதத்தினூடாகவும் நபியின் போதனை ஊடாகவும் தெளிவுபடுத்துகின்றான். என்னதான் நமக்கு நாம் நல்லவர்களாக இருந்தாலும் ஒருசிலருக்கு கெட்டவர்களாக மாறியிருப்போம்.அது நாம் தெரிந்து செய்த தவறாக இருக்கலாம். அல்லது புரிதலில் தடங்கள் இருந்திருக்கலாம். எவ்வாறெனினும் மஷுரா என்ற ஒன்றை விட்டு விலகி தன் கால் போன போக்கில் தன்னிச்சையாக நடந்தேர இன்றைய காலம் நம்மை … Read moreமஷுராவின் மடியில்

எரிந்தது நூலகமா ? இல்லை தாயகம்

தெற்காசியாவிலேயே அறிவுப் பொக்கிஷமாக வர்ணிக்கப்படுகின்ற, இலங்கையின் ஓர் உன்னத சொத்தே யாழ்ப்பாண நூல்நிலையம். இலங்கையில் ஏற்பட்ட இனமுருகலில் இழந்த அதி உன்னத சொத்தும் இந்த யாழ் நூல்நிலையமாகும். இந்த நூல்நிலையம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி எறியூட்டப்பட்டது. இஸ்லாமிய உலக வரலாற்றிலும் முஸ்லிம்களை வீழ்த்த மேற்கொண்ட பணிகளில் ஒன்றே பக்தாதில் பல்லாயிரம் நூல்கள் அழிப்பு, அவ்வாறுதான் இலங்கை தமிழர் வரலாற்றிலும் ஓர் இனத்தை முடக்க மேற்கொண்ட பணியாகத்தான் இதுவும் உள்ளது. இது பற்றி … Read moreஎரிந்தது நூலகமா ? இல்லை தாயகம்

கொரோனா கெத்துடா

மத்தியானம் 11 மணி இருக்கும். உச்சி வெயில் நச்சுனு நடு மண்டைலயே விழும் வெளியில போனா. அதனால வெளில எட்டிப் பார்த்தபடி ஜாஹிர் நானா, “ஸைமா…! ஸைமா…!” னு மகள கூப்பிட்டாரு. “என்ன வாப்பா! வேலையும் இல்ல வெட்டியும் இல்ல தானே! நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்க” னு நக்கலா கிண்டல் செய்ய, கடுப்பான வாப்பா, “நாம இப்படி இருக்குற ஆள் தானே… சரி என்னமா கறி பகலைக்குனு” கேட்க, “மீனுமில்ல, இறைச்சும் வாங்கலாது. கறுவாட்ட போட்டு அவியல் … Read moreகொரோனா கெத்துடா

எச்சரிக்கை இது

ஏவல்களும் விலக்கல்களும் இறைவனிடம் இருந்து வரமாய் வரைந்திருப்பது வாழும் வாழ்வை செவ்வனே சீரமைத்திட ஆட்சியின் அதிபதி அல்லாஹ்வால் ஹராம் ஹலால் இயம்பிட்ட அற்புத இஸ்லாம் – இன்று ஆராய்ச்சியின் பின்னே மாட்சிமை மலர்கிறது குருதியை குடித்து கொன்றொழித்து குவித்து கொரோனாவெனும் கொல்லை அசைவத்தை சைவமாக்கி சாவை சோ…வாக்கிட்டது என்று மிருதனாய் மனிதன் மாறினானோ அன்றே அழிவையும் தனக்குத் தானே தலைவிதியாய் எழுதிட்டான் உணவு வலைக்குள் உள்ளதையெல்லாம் மனிதனே மாமிசமாக்கினால் மிகுதியாய் மிகும் மிருகம் விசமாகாது என்னவாகும்? காற்றில் … Read moreஎச்சரிக்கை இது

பட்டதாரிங்கன்னா சும்மாவா?

வேல செஞ்சு கலைச்சு போனவங்கள விட வெட்டியா இருந்தே வீணா போய்டுவோம் போலஜனவரிக்குள் பட்டதாரிகளுக்கு நியமனம் னு மெசேஞ் தட்டிவிட்டாங்கல்ல எங்க பதியனும்னு தல தெரிக்க கச்சேரிக்கும் கவுண்டருக்கும் அலையுதுங்க புள்ளைங்க அங்க சுத்தி இங்க சுத்தி அடுப்பங்கரை தான் கெதின்னு பொண்ணுங்க பேச்சு வாங்கவும் படிச்சத்துக்கு பட்டு போட்டுட்டு பசங்க கிடைச்ச வேலைய செய்யவுமா பதினாறு வருடம் படிச்சது? இதுக்குள்ள காலேஜ் போயிருக்க இந்த நிலம வந்திருக்குமான்னு வசை வேற! பொழுது போகலன்னா கெளம்பிடுறது படிச்சு … Read moreபட்டதாரிங்கன்னா சும்மாவா?

சாபமா?

என்னை நானே சபிக்கிறேன் ஏனிந்த பிறவியின்னு ஏழெட்டு வயசுல தெரியல கால ஓட்டத்துல வீட்டுல தல புள்ளயா பொறந்திட்டன்னு பரிதாபமா அடுத்தவன் சொல்லிக் காட்டுறப்போதான்  புரியிது பொட்ட புள்ளங்களுக்கு அப்பனுக்கு அடுத்த அந்தஸ்த்து நான் தான்னு பெத்தது அவரு தானேன்னு விட்டுட்டு ஒதுங்கவும் முடியல- மூனு தங்கச்சிங்க முகத்த பார்த்தா வீடு கட்டாமையும் இருக்க முடியல காலங் காலத்துல கலியாணம் முடிச்சி கொடுக்கனும்னா அதுதான வேணும் இங்க பட்டம் படிச்சி என்னத்த கிழிச்சம் இன்னும் நம்ம ஊரு … Read moreசாபமா?

மலையகத்திற்கு

வேலிகளே பல நாள் பயிர்களை மேய்ந்தபடி ஆயினும் மேட்டுகளில் லயன்களானாலும் அறிவில் மேதைகள் நாம் அறிவிற் சிறந்தோர் தன்னறிவினை பலருக்கு அமுதூட்டியோரே இனம் என்று எடுத்தெரியாது ஏடுகளை ஏழைகளும் ஏந்த தன் மண்ணையும் தமக்கே உரிய மாண்புகளையும் மாநிலம் அறிய நினைவது தவறோ? விண்ணிலும் வீடு கட்டினீர் கடலைக் கூட பாலை நிலமாக்கினீர் ஏரைக் கூட இன்று எந்திரமாக்கினீர் அட்டையால் உறிஞ்சப்பட்ட உதிரத்தையே உரமாக்கும் எங்களின் எண்ணங்களை சாத்தியமாக்கிட முடியாதோ உம்மால்? சிறு துளியாக உதிர்ந்த நாம் … Read moreமலையகத்திற்கு

மலிவு விலையில் சந்தேகம்

எங்க பார்த்தாலும் சந்தேகம். யாரை பார்த்தாலும் சந்தேகம் தான். இந்த சந்தேகம் தோன்றியது தவறா? தோன்றாமல் இருப்பது தவறா? காதலனுக்கு காதலி மேல கணவனுக்கு மனைவி மேல பெற்றோருக்கு பிள்ளைகள் மேல ஆசிரியருக்கு மாணவர்கள் மேல வாங்குவோனுக்கு விற்பவன் மேல மக்களுக்கு ஆட்சியாளன் மேலனு அடிக்கிக்கிட்டே போகலாம். இதில் குறிப்பாக கணவன் மனைவி மேல் படும் சந்தேகம் கொஞ்சமில்ல. அதுலயும் குறிப்பா காதலித்து திருமணம் முடித்தவர்கள். (எல்லோரையும் அல்ல சிலர்) காதலிக்கிறப்போ போடுற ரூல்ஸ் இருக்கே! அப்பப்பா…. … Read moreமலிவு விலையில் சந்தேகம்

Select your currency
LKR Sri Lankan rupee