என் கால்கள் போடும் நடனமிது

நடைப்பயணமாகவே நீண்ட தூரம் வெகு நாளாக செல்கிறேன். பேரிரைச்சல் இல்லா கடலலையை தேடி அலைகிறேன் கால் நனைக்க. அதோ அங்கே! கறுத்த முகத்தோடு பார்க்கவே பயங்கரமாக கடலலை தொட்டு விட்டு செல்லும் ஈரலிப்பான உடலோடு கரும்பாறை எனக்காக காத்திருக்கிறது. என் நடமாட்டத்தை சுருக்கிக் விட்டேன். என் இருப்பிடத்தை அடைந்து விட்டேன். என் பயணத்தின் எல்லையை வரையறை செய்து விட்டேன். புத்தகங்களோடு தன்னந்தனியே தனித்தீவில் ஒதுங்குகிறேன். எனைத் தேடுபவர் யாராவது இருந்தால் காகிதத்தில் எழுதி கடலலையிடம் கொடுத்து விடட்டும். … Read moreஎன் கால்கள் போடும் நடனமிது

பிராத்தனை துஆ

தனியாக விழுகிறேன் தனியாக அழுகிறேன் மௌனமாக பேசுகிறேன் அருகினிலோ தூரத்திலோ யாரும் கண்ணுக்கு பட்டதாய் இல்லை! ஆனாலும் என் முறைப்பாடுகள் நீள்கிறது ஆறுதல் கிடைக்கிறது மௌன மொழியின் அர்த்தம் புரிகிறது மனதின் பாரம் குறைகிறது பிராத்தனைகள் என் வலிகளை ஏந்தி நிற்கிறது என் இருப்பிடம் சுஜூது செய்யும் இடமாகிறது எனக்கு அருகிலல்ல! என்னுடனே; என் இறைவன் உள்ளான்! வார்த்தைகளை இப்போது பத்திரப்படுத்துகிறேன். அடுத்த பிராத்தனையில் ஒப்புவிப்பதற்காய். மருதமுனை நிஜா

சுதந்திர தினத்தன்று சுதந்திரமடையட்டும் பெண்கள்!!

நாடு சுதந்திரம் அடைந்து; நாட்டவரும் சுதந்திரமடைந்து பலவருடங்களாயிற்று. ஆனால் இன்னும் அடிமைத்தனத்தினுள் கட்டுண்டு அடுப்படியில் காலத்தை கடத்துகின்றனர் பெண்கள். பெண்கள் வலுவடைந்து அடிமைத்தனம் ஒழிந்து இன்று பிரகாசிக்கின்றனர் என்று வெறுமனே அதிகரித்துள்ள பெண்களின் பல்கலைக்கழக நுளைவு விகிதத்தை மாத்திரம் காட்டி மாயாஜாலம் செய்யப்படுகிறது. பெண் இன்னும் சுதந்திரமடைய வில்லை அவள் சிறைப்படுத்தப் பட்டுள்ளாள். ஊடகத்துறையிலோ அரசியலிலோ மேலும் உயர்பதவியில் அவளின் விகிதாசாரம் மற்றும் பங்கு பற்றும் தன்மை குறைவே. சிலபோது அவளின் கல்வி பயணம் பல்கலைக்கழக கற்கையோடு … Read moreசுதந்திர தினத்தன்று சுதந்திரமடையட்டும் பெண்கள்!!

சுதந்திர தினத்தில் சகவாழ்விற்கு வித்திடுவோம்!

சுதந்திர தினம் சுதந்திரமாய் கொண்டாடப்பட வேண்டும். மாறாக ஒரு கையில் சமாதானப் புறாவும் மறு கையில் புறாவினை பிடித்து அடைக்க கூண்டும் வைத்தாற் போல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. எமது நாடு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். எனவே சுதந்திரம் என்பது ஒரு இனத்துக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றது அன்று. அனைத்து இனமக்களும் சுதந்திரம் பெற்றவர்களே என்ற அடிநாதத்தை உயிர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை இனம் நாட்டின் சட்டத்தை மதித்து வழ்தலுடன் பன்மைத்துவ சமூக அமைப்பில் எமது தனித்துவத்தை இழந்துவிடாமல் … Read moreசுதந்திர தினத்தில் சகவாழ்விற்கு வித்திடுவோம்!

வர்க்க வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இஸ்லாம்!

மனிதன் மண்ணில் பிறக்கையிலும் அவனுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவன் ஒரே தாய் வயிற்றில், ஒரே ஊரில், குறிப்பிட கால சூழ்நிலையில் பிறப்பவன் அல்ல. எனவே அவன் இன, நிற, மொழி ,வர்க்க வேறுபாடுகளை இயல்பாகவே கொண்டுள்ளான். “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் … Read moreவர்க்க வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இஸ்லாம்!

பொறுமை பெண்ணுக்கு பெருமை!

பெண்ணுக்கு நிகராக பூக்களை வர்ணிப்பது அவர்களின் மென்மையினாலே! மேன்மை தாங்கிய மென்மை இனமான பெண்ணினத்திற்கு அழகு சேர்பபது அவர்களின் பொறுமையே!!! பொறுமைக்கு பெண் உவமையாக கொள்ள காரணம் அவளின் தாய்மைப் பேறே!! தன் தாய்மை அடையும் போது தன் வயிற்றுச்சுமையை பத்து மாதமும் பக்குவமாய் சுமக்கிறாள். தாய்மைக்கு தலையசைப்பது இப் பொறுமையே! ஆகவே பெண்கள் அணிகலனாய் அணியவேண்டியது பொறுமையையே. பொறுமை இல்லையேல் வாழ்வின் எத் தருணத்திலும் வெற்றியை சுவீகரித்துக் கொள்ள முடியாது. பொறுமை இல்லையேல் இவ்வுலகிலும் சரி … Read moreபொறுமை பெண்ணுக்கு பெருமை!

இவள் மலர்

கொள்ளை அழகு கொஞ்சிட துடிக்க வைக்கும் வசீகரம் பார்த்த நொடியே மனதை இழுக்கும் மென்மை இதழாலே ஆயிரம் மொழி பேசும் தோரணம் மணம் வீசி மனதை பறிக்கும் அற்புதம் நான் பெண் அல்ல மலர் தான் என்னை வர்ணிப்பதுடன் நிறுத்தி விடுங்கள் !! என்னை பறித்து கசக்கி விடாதீர்கள் மருதமுனை நிஜா

தந்தை – மகள் உறவு

உலகில் தோன்றிடும் உறவுகளுள் இரத்தபந்தமானது உன்னதமானதே! அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதே தந்தை – மகள் உறவு. ஒரு பெண் திருமணமாவதற்கு முன் ஹலாலான முறையில் முதற்தடவையாக காதல் கொள்ளும் முதல் ஆணுடனான உறவு என்றால் அது தந்தை உறவே! இதில் காமம் கிடையாது. ஆனாலும் இவ்வுறவில் அன்புக்கு பஞ்சமில்லை இதுவே இவ்வுறவின் அற்புதம். தந்தையின் கடல் அளவு கோபமும் சுமையும் நொடிப்பொழுதில் மறைந்து விடும் தன் மகளின் சிறு புன்னகையில். எப்படிப்பட்ட திடமான தந்தையாக இருந்தாலும் … Read moreதந்தை – மகள் உறவு

வேறெதுவும் தேவை இல்லை

எதிர்பார்ப்புக்களின் பட்டியல் நீள ஆசைகளின் கனவுகள் தொடர கற்பனையில் உடலிருக்க உயிர் தொலைக்க ஏங்குகிறேன் நிஜத்தை அறிய!!! அழுகையில் இரவு விடயலாய் மாற காத்திருப்புகள் வரையறை இன்றி பயணிக்க வாழ்விற்கான விடியலை தேடுகிறேன்!!! முதற் படியே தள்ளிவிட சொந்தங்களே முட்டுக்கட்டை போட துரோகிகள் நண்பர்களாக வேஷம் போட தோல்விக்கு நான் சொந்தக்காரன் என நடப்பவை சொல்ல வெற்றியை தேடி அலைகிறேன்!!! காலத்தின் ஓட்டத்தின் தான் ஒரு பயணி இறைவனின் படைப்பில் நான் ஒரு அடியான் படைத்தவனை நம்புகிறேன்! … Read moreவேறெதுவும் தேவை இல்லை

திருமண வாழ்வை அலங்கரிக்கும் மனைவி!

கணவன் மனைவி அமைவது இறவனின் அருட்கொடையாகும். தன் விலாப்புறம் சொந்தமானவளை தன்னவளாக உரிமை பாடும் உரிய வேளை கணவன் மனைவி உறவுக்கு உத்தரவாதம் இடப்படுகின்றது. காலம் செல்ல முடிச்சுகள் அறுபட்ட கயிறாய் உறவுகள் அறுபட்டு விவாகரத்தில் முடிகினறன இவ் உன்னதமான உறவுகள்! இவர்கள் திரைமறைவில் போலியான வாழ்வும் வெளியுலகில் வெற்றிகரமான வாழ்க்கையும் என்று இலவம் பஞ்சுக்காயாய் வெளியில் பச்சை போர்த்தி வாழ்கின்றனர். இப்போதய திருமணங்கள் அரங்கேறும் போதே அதற்கான முடிவுத் திகதியும் குறித்தாற் போல் பெரும்பாலும் ஒரு … Read moreதிருமண வாழ்வை அலங்கரிக்கும் மனைவி!

அவதூறினால் அவதிப்படும் பெண்கள்.

பெண்ணின் உரிமைக்கான போராட்டங்களும் பெண்ணின் நிலை குறித்தான நலனோன்பு காரியங்களும் கடலளவு பெருகி கோசங்கள் எழுப்பப்பட்டாலும் இன்று சமூகத்தில் பெண் தன் இனத்தாலோ அல்லது ஆணாலோ அவதூறு கூறப்பபட்டு அவதிப்படும் நிலை குறைந்ததாய் இல்லை. பெண்ணுக்கே வரப்பிரசாதமாய் கிடைக்கப்பெற்றது போன்று இதனுள் அகப்பட்டு விடுகினறனர். தைரியமான பெண்ணையும் இச்சொல்லால் அவதியுறச் செய்து அவளை ஒரு மூலையில் தள்ளிவிடுகிறது எம் சமூகம். அவதூறை பரப்புவதும் இட்டுக்கட்டுவதும் இன்று மலிந்து விட்டன. சகோதரன் சகோரி என்று போலி உறவில் உரையாடல் … Read moreஅவதூறினால் அவதிப்படும் பெண்கள்.

ஏன் இன்னும் தாமதம்!!!

நிலவினை தொட்டுவிட மேகங்கள் ஓடினாலும் அது தொட்டு விடுவதும் இல்லை! அது தன் ஓட்டத்தை நிறுத்துவதும் இல்லை! பார்க்கும் நம் கண்தான் ஏமாற்றம் அடைகின்றன. கண்களில் மாயையை விரித்து விட்டு பிறரை தப்பென கொள்வது – கோழை தன்னை வீரன் என மார்தட்டிக் கொள்வதற்கு சமமாகும்!!! இந் நோயுள்ளவனின் பார்வைக்கு அஞ்சாதே! உனக்கு உன் இரட்சகன் போதுமானவன். சிட்டுக் குருவியும் சிறகடிக்கின்றன வானம்பாடியும் ஒய்யாரமாக பறக்கின்றன இங்கு பயணிக்க தடை அல்ல! அவரவர் தேவைக்கும், விருப்புக்கும் ஏற்ப … Read moreஏன் இன்னும் தாமதம்!!!

தத்தெடுக்கப்பட்ட என் மகன்.!!

மழலை உலகில் கால்பதித்து சிட்டாய் சிறகு விரித்து பறந்து திரிந்த என் இரண்டரை வயது மகன் திடீரென சுகவீனமுற்று நள்ளிரவில் தொடங்கிய அவனது கதறல் ஓயாமல் விடியும் வரை இருந்தது. அவன் முகத்தில் சிரிப்பினை மீட்டி; அவனின் சுகத்தை மீளப் பெறுவதற்காக விடிந்ததும் வைத்தியரிடம் ஓடினோம். அவனுக்கு போட்ட ஊசி பிஞ்சுக்கையை பதம் பார்க்க என் கண்ணிலும் கண்ணீர் வடிந்தது. பிள்ளைக்கு ஒன்றென்றால் துடித்துப்போவது பெற்றோர் தானே! இதனை அங்கே வயதான கணவன்-மனைவி இருவரும் இருவிளி அகல … Read moreதத்தெடுக்கப்பட்ட என் மகன்.!!

இஸ்லாம் தேசப்பற்றை போதிக்க மறக்கவில்லை!!

பற்றற்ற வாழ்க்கை என்று சொல்லி தேசம் கடந்து எங்கேனும் மானிடர் சென்றுவிட முடியாது. காடாயினும், மண்ணாயினும் தேசத்தின் எல்லை உண்டு. எனவே மனிதன் மண்ணின் பிறக்கையிலே தேசப்பற்று குடிகொள்கிறது. தான் பிறந்த மண்ணை, தேசத்தை நேசிப்பது மனித இயல்பே! இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானோர் அல்ல. தேசப்பற்றை இஸ்லாமிய மார்க்கம் அங்கிகரிக்கின்றது. அன்பு பரஸ்பரம் கருணை போன்றவற்றை போதிக்கும் இஸ்லாம் தேசப்பற்றையும் போதித்துள்ளது. தேசப்பற்று என்பது நிலத்தோடு மாத்திரம் சுருங்கிக் கொண்டது அன்றி தன் தேச மக்களை இன … Read moreஇஸ்லாம் தேசப்பற்றை போதிக்க மறக்கவில்லை!!

ஓர் அநாதையின் அழுகுரல்…

நிஜங்களை நினைவில் வைத்து நிழல்களை சுமந்து உறவின்றி நிற்கின்றோம் சொந்தமாய் சத்தமாய் உறவாய் உயிராய் “வாப்பா” என அழைத்திடும் உறவின்றி மௌனமாய் அழுகின்றோம் சிறுவயதில் சிந்திய கண்ணீர் காலம் சென்றும் ஓயவில்லை அது ரத்த உறவின் பிரிவின் தாக்கம் என்பதால் என் வயதின் பதின்மம் கடந்தது இருபதும் கடக்கிறது நாட்கள் சென்று – தான் ஏற்கும் பாத்திரம் மாறுபட்டாலும் வாப்பா என்று அன்பாக சொல்லிப் பார்க்கும் ஆசை இன்னும் நீங்கவில்லை என் தந்தை பணத்தை விட்டுச் செல்ல … Read moreஓர் அநாதையின் அழுகுரல்…

கூழாங்கல்லாய் போன மாணிக்கக் கல்!!!

அறைகுறை ஆடையில் கைதட்டல்களை ஏராளம் சம்பாதிக்கும் நடிகை – அழகு முழு உடல் போர்த்தி முக்காடு இட்டவள் பட்டிக்காட்டாள இது உலகின் இன்றய நியதி கர்வம் கொண்டு அகந்தையுடன் நடப்பவள் தங்கம் கலவரம் இன்றி பொறுமை காப்பவள் வெறும் செல்லாக்காசு உன் வாழ்வில் வேண்டாம் என ஒதிக்கியவர்கள் நீ தொலைக்கும் பொக்கிஷமாக இருக்கலாம் நீ யாரிடம் தகுதி பார்த்தாயோ! யாரிடம் அந்தஸ்து பார்த்தாயோ! யாரை இழிவாக பேசினாயோ! யாரை பொய்யான பழியில் அகப்பட செய்தாயோ! அவர்கள் உன்னை … Read moreகூழாங்கல்லாய் போன மாணிக்கக் கல்!!!

பேனா துளியில் அடுக்கப்படும் கதை

ஒற்றை நிலவு ஓராயிரம் நட்சத்திரம் அத்தனையும் சாட்சிசொல்லும் பெண்ணின் அழகு அவளின் பொறுமையே!!! ஆணுக்கு அழகு அவன் கோபத்தை அடக்குவதே!!! அன்பு கொண்டு இறைநேசத்திற்காய் இணைந்த ஜோடி ஒரு போதும் தலாக் என்னும் பிரவினைக்கு செல்லாது!!! காமுகரின் கைகளில் சிக்கினாள் அழகிய கோதை!!! ஆசை காட்டினான் அடிமையானாள் பக்குவம் இழந்தாள் பைத்தியகாறியாய் மாறினாள் கற்பை இழந்தாள் விபச்சாரியாய் மாறினாள் அவனோ ஊருக்கு நல்லவனாய் பக்குவப்பட்டவனாய் காட்டப்பட்டான் மணமேடை ஏறினான் மாப்பிள்ளையாய்!!! பாவம் பைத்தியகாறி உயிர் துறந்தாள்!!! இம்மையும் … Read moreபேனா துளியில் அடுக்கப்படும் கதை

பணப்பந்தலில் திருமணம்…

சீதனம் என்ற சொல்லிலே “சீ”… எனக்கூறி சீற்றமாய் சுறண்டுகின்றனர் பெண் வீட்டாரின் சொத்தை பதவிக்கு பத்தும் படிப்புக்கு பத்தும் பரம்மரைக்கு பத்தும் தன் தோற்றத்திற்கு பத்துமாய் இலட்சத்தில் மதிப்பு போட்டு தம்மை மாப்பிள்ளை எனும் பெயரில் விற்கின்றனர் தனக்கு சொந்தமானவளுக்கு சீர் கெட்ட சீதன சொத்தில் ஆடம்பர திருமணம் அரங்கேறுகின்றன – அது ஊமைக் கண்ணீர் துளிகள் மறைக்கப்ட்டு திருமணம் எனும் பெயரில் அரங்கேற்றப்படும் நடகமாகும் மஹர் கொடுத்து மணமகள் பெற்றவன் மனங்களில் இடம் பிடிக்க பட … Read moreபணப்பந்தலில் திருமணம்…

Select your currency
LKR Sri Lankan rupee