இறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை!

நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி மணம் கமழச் செய்யும் வண்ணங்கள். இவை யாவுமே தனக்காக வாழ்வதில்லை. இயற்கையில் எதுவும் தனக்காக வாழ்ந்ததில்லை. சுயநலன்கள் அதற்கில்லை. பிறர் நலன் பேணுவதே இயற்கையில் காணப்படும் இறைவன் படைப்புக்களின் இயல்பm கடல் வளம் ஒரு நாட்டை தலைநிமிர்ந்து வாழ வாரி வழங்குகிறது. … Read moreஇறை படைப்புக்கள் தனக்காக வாழ்வதில்லை!

தேசத்தின் மீதான நேசத்திற்கு நபிகளார் ஒரு முன்மாதிரி

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். இறை தூதின் பணிகளை முன்னெடுக்கும் அடிப்படைத் தளமாக மக்கா பூமி அமைய வேண்டும் என்ற ஆசை நபிகளாரின் மனதில் வேரூன்றியிருந்தது. ஆனால் மக்காவாசிகளின் எல்லைமீறிய கொடுமைகள்; நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட … Read moreதேசத்தின் மீதான நேசத்திற்கு நபிகளார் ஒரு முன்மாதிரி

வலிகள் உன்னை செதுக்கும் உளிகள்

வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி வந்தது ? சோதனைக்கு நன்றி சொல். கல்லும் முள்ளும் காலணிகளை தரவில்லையா! இதழோரம் விரியும் புன்னகை துயரம் தந்த பரிசு வேதனைகளுக்கு வாழ்த்துக் கூறு சாதனைகள் படைக்கும்போது வேதனைகளை நினைத்துப் பார் ரத்தக் கண்ணீருக்கு மரியாதை கொடு கனிதரும் மரங்கள் எப்படி வந்தன? நிலத்தை கீறிக் கிழிக்காமல் விதை போட முடியாது பூத்துக் குலுங்கும்போது பூரிப்பு எங்கிருந்து வந்தது சேற்றுக் கால்களுக்கு நன்றி கூறு பிள்ளை பிறந்ததும் ஆனந்தக் கண்ணீர் யார் தந்தது? … Read moreவலிகள் உன்னை செதுக்கும் உளிகள்

மனிதன் சுதந்திரம் ஈன்றெடுத்த பிள்ளை

சுதந்திரம், கண்ணியம், சுயமரியாதை மனித வாழ்வின் உயர் பெறுமானங்கள். அவமானம், அடிமைத்தனம், இழிந்த வாழ்வின் அடையாளங்கள். இரண்டையும் மனிதன் விலை கொடுத்தே பெற வேண்டும். அதற்கு அர்ப்பணங்கள் தேவை. கொடுக்காமல் எதுவும் கிடைக்காது. சில பலவீனமான உள்ளங்கள் சுயமரியாதைக்கும் சுதந்திpரத்திற்கும் அதிக விலை கொடுக்க வேண்டும் என தப்புக்கணக்கு போடுகிறது. எனவே அந்த பாரிய விலையை ஏன் கொடுப்பான் என்று நினைத்து தன்னை அதிலிருந்து தப்பிக்க அவமானத்தையும் அடிமைத்துவத்தையும் தங்கள் விருப்ப தேர்வாக தெரிவு செய்கின்றன. அதனால் … Read moreமனிதன் சுதந்திரம் ஈன்றெடுத்த பிள்ளை

பழகுவதற்கு எளிதானவர் பாக்கியசாலி

முஹம்மத் பகீஹுத்தீன் சில மனிதர்கள் பழகுவதற்கு எளிதானவர்களாகவும் நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களிடம் காணப்படும் நல்ல குணமாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் பாக்கியம் நிறைந்த மனிதர்கள். சொர்க்கத்திற்கு அருகதை உள்ளவர்கள். அத்தகைய மனிதர்களுடன் கலந்துரையாடல் செய்வது எளிதானது. அவர்களுடன் கருத்துப் பரிமாறுவதும் எளிதாகவே இருக்கும். அவர்களிடம் ஏதாவது தேவையைக் கேட்பது எளிது. அவர்களை சந்திப்பில் கஷ்டங்கள் இருக்காது. அவர்களை திருப்திபடுத்துவது எளிதானது. எதையும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். எளிதானவர்கள் மன்னிக்க தெரிந்த மனம் உள்ளவர்கள். மனிதர்களுள் அவர்கள் … Read moreபழகுவதற்கு எளிதானவர் பாக்கியசாலி

மரணித்த உடல்களை ஏன் நல்லடக்கம் செய்ய வேண்டும்

இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இறந்த உடலை புதைப்பதுதான் வழக்கமாக வந்துள்ளது. மரணித்தவர்களின் உடலைப் புதைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை மனிதனுக்கு கொடுத்தவன் அல்லாஹ் ஒருவனே. சூரா “அபஸ” வில் அவன் தான் மரணிக்கச் செய்தான். அவன் தான் … Read moreமரணித்த உடல்களை ஏன் நல்லடக்கம் செய்ய வேண்டும்

தயவு செய்து எங்களையும் எங்கள் மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்

தமிழில்: முஹம்மத் பகீஹுத்தீன் இது சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அவர்களால், பிரான்ஸ் ஜனாதிபதி திரு மெக்ரோனையும் ஏனைய சர்வதேச அறிஞர்களையும் விழித்து எழுதிய பகிரங்க மடல் பிரான்ஸ் தலைவர் திரு மெக்ரோன் அவர்களே, மதிப்புக்குரிய பிரெஞ்சு குடிமக்களே, சர்வதேச தலைவர்களே, அரசியல் வாதிகளே, அறிஞர்களே, புத்திஜீவிகளே, ஊடகவியலாளர்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வாழ்த்துக்கள். உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான நீதியான உடன்பாடான விவகாரங்கள் … Read moreதயவு செய்து எங்களையும் எங்கள் மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்

மீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்?

நபிகளார் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மீலாத் விழா சம்பந்தமாக எதிரும் புதிருமான கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாமிய சட்டக் கலை வல்லுனர்கள் இது குறித்து பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக அணுகியிருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே மீலாத் விழா விவகாரத்தில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் அதனை அணுகியுள்ள முறைகளையும் சரிவர புரிந்து கொள்வது அவசியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு மிகச் சரியான புரிதல் தான் முதன்மை தேவையாகும். அவ்வாறே இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளில் உள்ள கிளை … Read moreமீலாத் விழா ஏன் கொண்டாட வேண்டும்?

கொத்தமங்கலம் சுப்பு ஒரு பன்முக ஆளுமை

கொத்தமங்கலம் சுப்பு மக்கள் புரியும் பாஷையில் எழுதியவர் கொத்தமல்லி குழம்பில் மணக்கும், அண்ணன் சுப்பு கவிதையில் மணப்பார் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி கொத்தமங்கலம் சுப்புவை வாழ்த்திப் பாடியுள்ளார். கன்னாரியேந்தல் என்ற ஊரில் பிறந்தவர் கொத்தமங்கலம் சுப்பு. (1910 – 1974) கவிதைகளில் மணத்தவர். அவர் ஒரு எழுத்தாளர், இயக்குனர், நடிகர், வில்லுப்பாட்டிசைக் கலைஞர், பத்திரிகையாளர் என, பன்முகத் திறமை கொண்டவர். அந்தக் காலத்தில் வாசகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றவர். மக்களுக்குப் புரியும் வகையில், … Read moreகொத்தமங்கலம் சுப்பு ஒரு பன்முக ஆளுமை

செக்கச் செவந்தவளே கூத்துப் பார்க்க வாரியா?

ஒரு கிராமத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், அழகுகள், சுவடுகள் சிலபோது நிலைக்கும். பலசமயங்களில் மங்கி மறைந்து அழிந்து விடும். ஆனால் அதன் நினைவுகள் நிழலாய் தொடரும். இன்பம் தரும். கிராமத்து வாழ்வின் சுவையே அதில் தான் இருக்கிறது. அந்த வகையல் வெலிகாமத்தில் இருந்த கிளாஸ் லாம்பு பவணி என்னால் மறக்க முடியாது அனுபவம். அதிகாலைப் பொழுதில் ஊரார் வழித்துக் கொண்ட வேலையில் கடலோரமாய் சுற்றி வந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் இன்பமாய் இருக்கிறது. இந்த அருமையான … Read moreசெக்கச் செவந்தவளே கூத்துப் பார்க்க வாரியா?

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதற்கு மக்கள் சாட்சியாக வரும் நாள் எப்போது?

அல்-குர்ஆன் அடிப்படையில் ஒரு சமாதான உலகைக் கட்டியெழுப்ப விழைகிறது. பிற சமூகங்களுடன் இணங்கி, சகிப்புடன் வாழ்வதே குர்ஆனிய சிந்தனையின் அடிப்படை. அது பரஸ்பரம் உதவி ஒத்தாசைகள் புரிந்து வாழும் சர்வதேச நாகரிகங்களைக் காண விரும்புகிறது. அற்புத மறை அல்குர்ஆன் உலகின் வரலாற்று ஓட்டத்தையே மாற்றி மாபெரும் சமூகப் புரட்சியைச் சாதித்தது. உயிர்த் துடிப்புள்ள அந்த நூல் பிற மதங்களோடும், நாகரிகங்களோடும் கலந்து உரசி உறவாடியது. ஆக்கபூர்வமான அந்த உறவுகளை காத்திரமாக கட்டியெழுப்பும் பணிக்கான அடிப்படைகளாக சகவாழ்வையும், சகிப்புத்தன்மையையும் … Read moreமுஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதற்கு மக்கள் சாட்சியாக வரும் நாள் எப்போது?

கோள் மூட்டுதல் பெரும் பாவங்களில் அடங்கும்

கோள் சொல்லுவதையும் புறம் பேசுவதையும் அல்-குர்ஆனும் சுன்னாவும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையில் பிரச்சனைகளை, பிணக்குகளை ஏற்படுத்தும் நோக்கில் கதைகளைப் பரிமாறுவது கோள் சொல்லுதல் என்பதன் அர்த்தமாகும். கோள் சொல்லுதல் ஹராம் என்ற கருத்தில் அனைத்து அறிஞர்களும் உடன்பட்டுள்ளனர். கோள் சொல்லுவதால் வரும் ஆபத்துக்கள் : பிரிவும் பூசல்களும் மனக் கவலை துருவித் துருவி குறைகளை தேடும் அவலம் மக்களின் வருமான வழிகளை முடக்கத் தூண்டும் கொலை செய்யத் தூண்டும் மக்கள் மத்தியில் கோள் பேசும் … Read moreகோள் மூட்டுதல் பெரும் பாவங்களில் அடங்கும்

நிச்சயம் இரவுக்கு பகலுண்டு

இரவு எவ்வளவு நீண்டு சென்றாலும் விடியாமல் இருப்பதில்லை. இரவு வளர்ந்து இருள் கடுமையாக படர்ந்த பின்னர் விடிவெள்ளி தோன்றும். எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது தான் இறை உதவி வரும். முன்னால் கடல் பின்னால் படை இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் மூஸாவிற்கு (அலை) கடல் பிளந்து வழி தந்தது. உனது முயற்சிகள் தோல்விகண்டு நெஞ்சம் கனக்கும் போது, வலிகள் முள்ளாய் உன்தன் நெஞ்சில் குத்தும் போது நீ … Read moreநிச்சயம் இரவுக்கு பகலுண்டு

வல்லவன் அல்லாஹ்வோடு தனியாக கொஞ்ச நேரம்

அகிலத்தின் அதிபதியான எல்லோருக்கும் பொதுவான இறைவனோடு கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்கு முன்பதிவுகள் தேவையில்லை. நீ விரும்பும் எந்த நேரத்திலும் தனியாக சந்தித்து உறவாடலாம். இறைவா நீ எவ்வளவு கண்ணியமானவன்! நீ இறைவனோடு நீண்ட நேரம் எடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அவன் உன்னை நேசிக்கிறான். உன் உறவாடலை விரும்புகிறான். இறைவா நீ எவ்வளவு பெரிய கருணையுள்ளவன். நீ அவனோடு தனிமையில் உறவாடும் போது ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது இறைவனுக்கு … Read moreவல்லவன் அல்லாஹ்வோடு தனியாக கொஞ்ச நேரம்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன. ஒன்று: மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது. இரண்டு: மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம் மூன்று: ஒரு ஆயத்தை விட குறைவாக ஓதலாம் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது இது ஷாபிஈ மற்றும் ஹனபி மத்ஹபுகளின் கருத்தாகும். ஆனால் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஓதிக் கொடுப்பதற்கு ஹனபி மத்ஹபினர் அனுமதி கொடுத்துள்ளனர். ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமனா கருத்து … Read moreமாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?

கொரோனா முடிவுத் தேதிக்கு சட்ட ஆதாரம் கிடையாது

அண்மைக்காலமாக சமூக ஊடகத்தில் சுரையா நட்சத்திரத்தின் வருகை சம்பந்தமாக பரபரப்பான செய்தியொன்று உலா வருகிறது. கேட்டதெல்லாம் சொல்பவர் ஒரு பொய்யனாக மாறலாம். எனவே வட்ஸப்பில் வருவதெல்லாம் பகிரும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் கேட்டதெல்லாம் சொல்பவன் பொய்யனாக இருப்பான் என்ற ஹதீஸ் மிகவும் ஆதராபூர்வமானதாகும். (முஸ்லிம்) தொற்று நோய்களின் ஆரம்பம் அல்லது அதன் முடிவு தேதியை நிர்ணயிக்கக் கூடிய சட்ட ஆதாரங்கள் ஷரீஆவில் காணமுடியாது. உலகத்தில் சோதனைகள் வருவது இறை நியதியாகும். அல்லாஹ் நாடியது நடக்கும் … Read moreகொரோனா முடிவுத் தேதிக்கு சட்ட ஆதாரம் கிடையாது

கொரோனா கோவிட் 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?

இந்த கேள்விக்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னர் இது சம்பந்தமான இன்னும் சில விடயங்களை நோக்குவோம். கொரோனா காலத்தில் கோவிட் 19 தொற்றாதவர்கள், அவர்களுக்கு நோன்பை முறிக்கும் வேறு நோய்களும் இல்லாத போது வழமை போன்று நோன்பு பிடிப்பது கட்டாயக் கடமையாகும். இதிலிருந்து நம் விளங்குவது கொரோனா தொற்று நோய்க் காலம் நோன்பை விடுவதற்கான ஒரு சலுகை அல்ல. நோன்பு வைப்பது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவிதல்லை. பதிலாக நோன்பு உடலில் எதிர்ப்பு சக்தி … Read moreகொரோனா கோவிட் 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?

“பிக்ஹுல் இஃதிகாப்” கொரோனா காலத்தில் இஃதிகாபின் நடைமுறை வடிவம்

உள்ளே: இஃதிகாபின் மகிமையை கூறும் ஹதீஸ்கள். இஃதிகாப் இருப்பதற்கான காலம். இஃதிகாப் இருக்கும் இடங்கள். பெண்கள் இஃதிகாப் இருத்தல். கொரோனா காலத்தில் ஆண்கள் வீட்டில் இஃதிகாப் இருத்தல். இஃதிகாப் ஏன் ஏதற்கு? இஃதிகாபை முறிக்கும் கருமங்கள். இஃதிகாப் இருப்பவரை பாதிக்காத செயற்பாடுகள். ஒரு மனிதன் தனது பொது வாழ்வின் சந்தடிகளை விட்டுத் தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும். குறிப்பாக ரமழான் … Read more“பிக்ஹுல் இஃதிகாப்” கொரோனா காலத்தில் இஃதிகாபின் நடைமுறை வடிவம்

இச்சை என்பதும் தெய்வமாகலாம்

கொரோனா வைரஸ் ஒரு கொடிய தொற்று நோய். அது ஒரு சோதனையா? அல்லது வேதனையா? அல்லது அது ஒரு தண்டனையா? அல்லது அது ஓர் அருளாக வந்ததுவா? உண்மையில் கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஓர் இறை அத்தாட்சியாகும். அதில் படிப்பினை உள்ளது. நாம் படிப்பினை பெற்றோமா என்பதே கேள்வி. ஈமான் பற்றிய எமது புரிதல் சரிதானா? தீன் பற்றிய எமது அறிவு சரிதானா? தலைமை பற்றிய எமது நிலைப்பாடு சரிதானா? கொரோனா எமது சிந்தனைக் கிளர்ச்சியை … Read moreஇச்சை என்பதும் தெய்வமாகலாம்

நேரலை ஒளிபரப்பை இமாமாக கொண்டு தராவீஹ் தொழுதல்

Online Tharavih வானொலி அல்லது டிவி நேரடி ஒளிபரப்பை பின்தொடர்ந்து வீட்டில் இருப்பவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ முடியுமா என பலரும் கேட்கின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் இப்படி சிந்திப்பதும் நியாயம் தான். இந்த விவகாரத்தை ஷரீஆ சட்டப்பரப்பின் நிழலில் நின்று எப்படி பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். கூடுமா, கூடாதா என்பதற்கு அப்பால் இந்த பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் விரும்பிய ஒரு … Read moreநேரலை ஒளிபரப்பை இமாமாக கொண்டு தராவீஹ் தொழுதல்

அறியாமை எரிந்து சாம்பலாகட்டும்

இருள்படர்ந்த ஒரு எதிர்காலம் கண்களில் நிழலாடுகிறது. ஏப்ரல் 21ல் ஒரு திருப்பு முனை வந்தது. அதனை ஒரு இறை அடையாளமாக கண்டோம். அதில் பாடம் கற்கும் போதே கொரோனா இன்னொரு திருப்பு முனையாக குறுக்கிடுகிறது. இதுவும் இறைவன் தந்த மற்றுமொரு அடையாளமே. கசப்பான அனுபவங்கள் தான் இரண்டிலும் கிடைத்துள்ளது. ஆனால் பாடம் பெற்றோமா? பாதை மாறினோமா! மாறும் வரையில் அடையாளங்கள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டே இருக்கும். இரவு எவ்வளவு நீண்டு சென்றாலும் விடிவெள்ளி உதிக்கும். அந்த நம்பிக்கை … Read moreஅறியாமை எரிந்து சாம்பலாகட்டும்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல் நல்லுறவுக்கான ஓர் உபசாரம்

பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துகள் கூடாது என சில அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். கூடாது என்பதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது மத ரீதியான பண்டிகைத் தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஒப்பாகுவதற்குச் சமனாகும் என்றும, பிற சமூகத்திற்கு ஒப்பாகுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளனர். அவ்வாறே வாழ்த்துத் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் பண்டிகையில் நாம் பங்கேற்கின்றோம் என்றே அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறுவது அல்லது பிற மதத்தவர்களின் விஷேட … Read moreபுத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல் நல்லுறவுக்கான ஓர் உபசாரம்

நோயாளிகளை அல்லது மரணித்தவர்க​ளை ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தல் மக்கள் சேவையல்ல

[cov2019] இன்று செய்திகள் ஒரு நொடி பிந்தும் போது பழசாகி விடுகிறது. சமூக வளைத்தளங்களில் முதலிடம் பெறுவதற்கும், முதல் செய்தி நமது பதிவுதான் என்ற பெயரைப் பெறுவதற்கு ஆர்வம் மிகைத்துள்ளது. எனவே பின்விளைவுகளை கவனத்தில் எடுக்காமல் சுயநல நோக்கங்களுக்காக செய்திகளையும் படங்களை பதிவேற்றும் செய்வதில் கடும் போட்டியும் வளர்ந்துள்ளது. இதனால் அடுத்தவர்களின் உரிமை, கண்ணியம், மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் பெறுமானங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலில் வருவதற்கு முந்துவது ஒன்றே இலக்காய் கொண்டு செய்திகளை … Read moreநோயாளிகளை அல்லது மரணித்தவர்க​ளை ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தல் மக்கள் சேவையல்ல

பராஅத் இரவு

[cov2019] ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு ‘பராஅத் இரவு’ என அழைக்கப்படுகிறது. அது பொது மக்கள் மத்தியில் அதிவிசேட நாள். பல்வகை அமல்கள் கொண்டு அந்த நாள் அலங்கரிக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருநாளாகவே மாறியுள்ளது. அந்த நாளில் விசேட துஆ பிராத்தனைகள், தொழுகைகள், மூன்று யாஸீன்கள், பராத் நோன்பு என பல்வகை அமல்கள் நாடலாவிய ரீதியில் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மிகுந்த ஈடுபாடோடு நிறைவேற்றும் இந்த அமல்களின் உண்மை நிலை என்ன? … Read moreபராஅத் இரவு

கெட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு பற்றி எரியும் ஆன்மா

சீனா தேசத்தின் வுஹான் நகரத்தில் பிறந்த கொரோனா இத்தாலி வழியாக இலங்கை வந்து சேர்ந்தது. இலங்கை மண்ணின் புகழ்பெற்ற தரணியின் உழைப்பால் மதத்தில் ஏறியுள்ளது. ஆனால் மத சுதந்திரம் வழங்கப்பட்ட வேகத்தில் ஈமக்கிரியைகளுக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை. இறக்கும் அதன் புத்திரர்கள் கொத்தடிமைகள் போல இறுதிச் சடங்கை சுதந்திரமாக செய்ய முடியாமல் அங்கும் இங்கும் அலைய வேண்டியுள்ளது. இஸ்லாமிய சட்டப் பரப்பில் காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு நெகிழ்ந்து கொடுக்கும் பண்பு இருப்பதால் சமூகம் வீழ்து விடாமல் பயணிக்கிறது. … Read moreகெட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு பற்றி எரியும் ஆன்மா

Select your currency
LKR Sri Lankan rupee