திருமணம்

மணந்து வாழ மண் வியக்கும் அளவோ மனம் விரும்பும் அளவோ மஹர் கொடுக்க வேண்டிய நியதியில்லை மங்கை மனம் விரும்பும் அளவிலே உண்டு மாளிகை கட்டித்தான் மன நிம்மதியான வாழ்வு கிட்டும் என்றில்லை மணல் வீடு கட்டினாலும் வாழும் மனநிலை – உன் மன வலிமையிலுண்டு மனையாள் மற்றவரிடம் மண்டியிட்டு கரம் ஏந்த வேண்டிய அவசியமில்லை தினசரி நீ அவளுக்கு வழங்கும் செலவு இருந்தால் மனம் மணக்க மணக்கையில் மாண்புகள் அத்தனையும் தேடிவரும் மென்மையெனும் மகுடம் சூடி … Read more

நோபல் பரிசு – 2020

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச, மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கௌரவிக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த … Read more

முதலாம் வருடம்

பெற்றாரும், உற்றாரும் கூட்டிவந்து கரைந்த கனாக்களுக்கு நனவாய் எங்களை கரை சேர்த்திட படபடப்பும் பரபரப்பும் சற்று கனதியாய் இருந்தது பதிப்பு நாளின் புதிய அனுபவம் அறிந்த முகங்கள் சில அறியாத முகங்கள் பல இந்த நாளில் புல்வெட்டும் பணியாளனும் சிரேஷ்ட மாணாக்களாகத்தான் தென்பட்டன இரு விழிகளுக்கும் யாரைக் கண்டாலும் ஸலாமும்,விலாசமும் மொழிந்ததே நாவு சிரேஷ்டமாணாவாக இருக்குமோ என்ற பீதியில் முற்றாத காய்களாக வந்த எங்களுக்கு கனிந்த கனிவான தோழமைகளையும் பரிசளித்தது பல்கலை வாழ்வுக்கு இந்த நாள் பேருந்து … Read more

என் முதல் ஆசான்

காரிருள் நிறைந்த கருவறையில் கருணையாய் காத்து உதிரத்தை உரமாக்கி உணர்வு ஊட்டிய உன்னத உறவு நீ! பட்டறிவால் பக்குவப்பட பண்புடமைகளையும் சொல்லித்தந்த பண்புடையவள் நீ! துன்பங்களால் துயருண்டு துவண்டு விடாதே! துமியாய் எண்ணி துணிச்சலோடு சென்றிடு என தைரியமூட்டிய தைரியசாலி நீ! உள்ளங்களை புண்பட வைத்துவிடாதே புன்முறுவலோடு புன்னகை செய் புதுமைகள் உனைத் தேடிவரும் என்றாய் நீ! ஏட்டுக் கல்வியையும் எழிலுறக் கற்று ஏணியாய் எனை ஏறிடச்செய்து அழகு பார்த்த என் முதல் ஆசான் நீ! என்றும் … Read more

பல்கலை

பல திசைகளிலிருந்து ஆளுமைகளை ஒரு திசை நோக்கி ஒன்று சேர்க்கும் பெருந்திடலாம் பல்கலை. பள்ளிக் கல்வியை பக்குவமாய் படித்தாலும் பண்புடைய ஆளுமைகளை அடையாளப்படுத்துமிடம் பல்கலை. ஒரு ஆளுமைக்குள்ளும் பல கலைகளையும் சங்கமித்து பல ஆளுமைகளைப் பிரசவிக்குமிடம் பல்கலை. மனிதம் எனும் வாசகத்தை மாணாக்களுக்குள் வலுவூட்டி வஞ்சனை இல்லாமல் மனித நேயத்துடன் சமூகத்தை வளப்படுத்தும் சமூக சீர்திருத்த வாதிகளையும் சமூகத்துக்கு வழங்கும் பல்கலை. பேனா முனையால் உலகை மாற்றும் இலக்கிய வாதிகளையும் துளிர்விடுகிறது பல்கலை. நாட்டின் முன்னேற்றத்தின் கருவாம் … Read more

ஆளுமை அஷ்ரப்

பல்கலையில் ‘நானும் ஒருத்தராய்’ என விழித்தோன்றல்களில் தோன்றிய அத்தனை கனவுகளும் கச்சிதமாய் குடியேறி நனவானது எத்தனையோ உள்ளங்களில். காரண கருத்தாவாம் மர்ஹூம் அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கம்பீரமாய் திகழ்கின்றது உம் கனவுகளில் ஒன்றாய் நனவாகி இருபது வருடம் உம் மண்ணறை வாழ்வு இன்றுடன் நீர் மறைந்த தினத்திலேயே பட்டதாரிகள் படைசூழ இருக்கிறார்கள் இன்று கோடிகோடி நன்மைகள் வந்து சேரும் என்றும்தான் உம் மண்ணறைக்கு கல்விக்காய் நீர் செய்த இம்மாபெரும் சிற்பம் இப்பல்கலை பிரார்த்தனைகள் என்றும் உமக்கு இருக்கும் … Read more

முற்றுப்பெறுமா கனா?

மிதமிஞ்சிப் போனவைகளையெல்லாம் மீள் பார்வை செய்யப்படவேண்டிய உள்ளம் அது வாடிய மலராயிருந்தும் நறுமணங் கமழும் மென்மையான உள்ளம் அது மாற்றுக் கருத்துக்களையும் பிரித்தறியா வஞ்சமில்லா உள்ளம் அது கண்ணீரையும் பளிங்குக் கற்களாய் கொட்டுகிறதடி அவ் உள்ளம் நித்தம் நித்தம் சல்லடை நீராய் வீசும் காற்றும் ஓர் நாள் சிற்பமாய் வந்து நிற்குமென்றெண்ணி நப்பாசை கொண்டதேனோ? முற்றுப்பெறுமா கனா? N.SOHRA JABEEN AKKARAIPATTU SOUTHEASTERN UNIVERSITY OF SRILANKA

என் கேள்விகளுக்கு பதில் நீ

எழுத்துக்களின் கோர்வையில் அர்த்தம் தெரியாதவளாய் கோர்க்கப்பட்ட வினாக்களுக்கு விடை தேடிக் கொண்டிருந்தேன் சமுத்திரத்தைக் கணிக்க. தேடல்கள் செறிந்து போய் என்னுள் அதிகம் புதையுண்டு போனது ஏனோ வளங்களோ கரிசனையோ வெறுங்கையாய் இருந்தது பதில் பெற. கருத்தியல் மட்டுமின்றி யதார்த்த வாழ்வின் சுவாரஸ்யமான பக்கங்களை தூசு தட்டிப் பார்க்கும் வினாக்களே அவை வினாக்களுக்கும் விடிவு கிட்டும் என விடை எதிர்பார்த்து என் தாகம் தணிக்க வழி தேடினேன் அவற்றிற்க்கு ஒற்றை பதில் நூலகம் தான் ஏனோ காலம் செய்த … Read more

சமூக நலனும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியமும்

ஒரு கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமெனில் அஸ்திவாரம் உறுதியாக காணப்பட்டால் அது சாத்தியமாகும். அவ்வாறே ஒரு சமூகத்தின் நிலையான உறுதியான இருப்பிற்கு சமூகத்தை வழிநடாத்தும் தலைமைகள் வலுவானதாக இருக்க வேண்டும். இருந்தாலே சமூகத்தினை நன்னெறி கொண்ட சமூகமாக ஆக்க முடியும். ஆகவே சமுகம் என்பது என்ன? தலைமைத்துவம் என்றால் என்ன? தற்கால சமூகமும் தலைமைத்துவமும் எவ்வாறு காணப்படுகின்றது? தலைமைத்துவத்திற்கு எவ்வாறு கட்டுப்படவேண்டும்? கட்டுப்படுவதன் அவசியம் என்ன? என்பதை இக்கட்டுரை அலசுகின்றது. சமூகம் என்பது எல்லா வகையான உறவுகளையும் … Read more

%d bloggers like this: