உயிர்ப்புகளின் உயிரைத்தேடி

நீண்ட நாட்களாக முகநூல் பக்கம் வரவில்லை வரவும் விருப்பமில்லை எதை எழுவதென்றும் புரியவில்லை… எதன் மீதும் ஆசையில்லை எவற்றின் மீதும் வெறுப்பும் இல்லை யார் மீதும் பாசம்

Read more

பூக்க மறந்த பூ

நாளாவித ஆசையெல்லாம் நாளுக்கு நாள் பெருகி நாணிய பருவமும் நீங்கி நரைமுடிகளும் நையாண்டி பண்ண நகர்ந்திடும் நாட்களை எண்ணியபடியே விரல்களும் தேய்ந்திடும் காலத்தின் சுழற்சியிலே கட்டவிழ்க்கப் படாத

Read more

என் தளம்

அமைதியின் ஆட்சியில் உலாவிடும் உயிர்களும் கீச்சலிடும் கிளிகளும் மூச்சுவிடும் மரங்களும் பாட்டிசைக்கும் குயில்களும் தாவிடும் அணில்களும் வண்ணமிடும் வண்ணத்திகளும் எண்ணம் போல் வாழும் அத்தனையும் கொண்டதுவே என்

Read more

கால எச்சரிக்கை

எதிர்காலம் என்னவென்று எண்ணுவதற்கு எத்தனிக்கையில் எண்ணத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் எழுகிறது விஸ்தரிப்பெனும் பெயரில் வெட்டப்பட்ட மரங்களால் பாதைகளும் பாலைவனமாகி கட்டட விருட்சங்கள் வியாபித்து நிலைத்திட விளைநிலங்களும் வீணாகிவிடும்

Read more

நாவின் அறுவடை

நேசங்களை நீடிப்பதற்காய் நீளப்பொய் உரைப்பதும் வன்முறை வார்த்தைகளால் வசைகளைப் பொழிந்து நஞ்சான சொற்களால் நெஞ்சைக் கிழித்து சுற்றத்தாரை சுட்டெரிப்பதும் சிறு குறைகளையும் சீற்றமே இன்றி சிந்தையில் உரைக்க

Read more

ஆருயிர் தங்கை

இரத்தம் சூழ்ந்த கருவறையில் என் பின்னே தங்கி தங்கையாய் தரணியில் வரம் பெற்று வந்த தேவதை புலர்ந்திடும் விடியல்களில் மலர்ந்த முகத்தோடு வாழ்வின் வண்ணம் கூட்டும் என்

Read more

சின்ன மகளின் செல்லக் கனவு

மூடுண்ட அறையில் இருந்து பிறக்கும் கதைகளாகிப் போனது சின்ன மகளின் செல்(லா)க்கனவு அவசரத்தின் அசுரத்தனத்தில் அரைநொடியும் இன்றி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆயிரத்தெட்டு வேலை விலைமதிப்பற்ற செல்வத்தை வெளிச்சத்தில்

Read more

இருளின் எச்சங்கள்

மருச்சியுற்ற இரவுகளில் வெருட்சியுற்ற விழிகள் நெஞ்சதிரும் வெடிப்பொலியில் துஞ்சிமடிந்த உயிர்கள் குண்டுகளால் முண்டங்கள் சரிய நொடிக்குள்ளே நூற்றுக்கணக்கான உடல்களும் குதறப்பட்டு கடுகளவாய் சிதறிக்கிடக்க வதையிலும் வலியிலும் சிதைந்த

Read more

அசைபோடுதல்

வரம்பு கட்டி விதை விதைச்சி மாடு கொண்டு சூடடிச்சி அறுவடைக்காகக் காத்து நின்னு அள்ளி விதைச்ச அழகு நெல்லு சுளகு கொண்டு புடைச்செடுத்து சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து ஆக்கித்தின்ற

Read more

அன்புள்ள வாப்பா

முத்தாக மூணு மகள் பெத்தீங்க வாப்பா முத்துக்களுக்கு சொத்து சேர்க்க கத்துக்கடல் தாண்டி தொலைதேசம் போனீங்களே வாழ்வின் விடியலை நோக்கி வாழும் வழிமுறை காண நாளும் உழைத்திட்ட

Read more

அம்மாவிற்கு

நொந்தென்னைப் பிரசவித்த தொப்புள்கொடி பந்தமே- உன் களங்கமற்ற கருவறைக்குள் கருவாயிருந்ததை எண்ணி கர்வமுற்று காரிகையாகி கவியுனக்காய் வடிக்கிறேன் கருத்தரித்த நாள்முதலாய் உருப்பெற்று நான்வளர இரவு பகல் போசித்து

Read more

பெற்றோருக்காய்

உறவுகளின் கருவறையில் பெற்றவர்கள் பெற்றுவிட்டார் கற்றவராய்க் காண்பதற்கே கனவுகளோடு காத்திருக்கிறார் வெள்ளத்திலே அள்ளுண்டு போகும் சருகாக அழிந்திடாமல் உள்ளத்திலே உயர்வான இலட்சியம் கொண்டு வாழ்ந்துவிடு முன்னுரிமைச் சமூகத்தின்

Read more

கருகிப் போகும் விவசாயம்

காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கிய படியே மக்கிப் போகிறது மக்களின் விவசாயம் ஆலைப் பூதகிகள் பாலைப் பூச்சுவதால் அழுக்களின் இருப்பிடமாய் ஆகிப் போனது ஆறுகள் பூமித்தாயின்

Read more

அந்திமகள்

கதிரவன் பிரிவிற்காய் காலை மலர் கண்ணீர் சிந்தும் வேளை சோலை மலர்க் குழுக்களாய் குமரிப் பெண்கள் குடமெடுத்துச் செல்லும் மாலை பாடுகின்ற பறவைக்கூட்டம் கூடுநோக்கி விரைந்திடும் மகிழ்வான

Read more

ஆறாக் காயங்கள்.

அன்றொருநாள் அரவமற்ற நள்ளிரவில் நிறைகடலின் ஆர்ப்பரிப்பும் குறைகண்ட என் ஆன்மாவும் அழுத்துக் கொண்டது நிர்வாணமாய்க் கிடந்து நீர்ச்சேலையணிந்த நீலக்கடலே ஆழிநீரிலும் குருதி கொப்பளிக்க திட்டம் போட்டதேனோ? செகத்தவரும்

Read more

குழந்தைக் கலி

குழந்தைக்கலி தீர்க்க வந்த பால் மணக்கும் குஞ்சரமே தரையில் தவழும் தங்கப்படகாய் தரணி கண்ட சத்தியமே சீராட்டிப் பாராட்டி நானும் நிலாக்காட்டி சோறூட்டி மைதீட்டி முடிக்கையிலே வண்ண

Read more

பொய்த்திடாது பெய்துவிடு

காரிகையின் கூந்தலெனத் துவளும் கார்முகில் மலைகளிடை பவனிவந்து கருவுற்றுப் பிரசவிக்கும் கார்கால மழையே மஞ்சைகள் மகிழ்வினிலே தோகை விரித்தாட மஞ்சுவெனும் பஞ்சணையில் தஞ்சம் கொண்டிருந்த விந்தை மழையே

Read more

குறிஞ்சியின் குறியீடுகள்

பனியினில் குளித்து அட்டைகளால் அழுக்காகி இரத்தம் துவைத்து வெயிலில் துடைத்துக் கொள்ளும் விந்தை மனிதர் போதிய வருமானம் போசாக்கான உணவெல்லாம் கனவாகிப் போனதால் மந்த போசணை மாவட்டமாம்

Read more

கேள்விச் சின்னம்

இருள் மாத்திரம் எஞ்சியிருக்கும் உலகமிதில் எல்லோர் முகமும் கேள்விச் சின்னமாகவே வெறித்துக் கொண்டிருக்கிறது உங்கள் துருவிப் பார்க்கும் கண்களுக்கு ஓய்வளியுங்கள் அப்போதாவது நீதி தேவதையின் கண்கள் திறக்கப்படட்டும்

Read more

மணாளனே மீண்டு விடு

காலப் பெட்டகத்தில் காத்திருக்கும் காரிகையின் கனவின் பிரசவங்கள் கானலாகிக் கரைந்திட கங்கணம் கட்டும் நம்பிக்கை மட்டும் வட்டமிடுகிறது இதழ்களில் மௌனம் வடிகட்டிய சிற்பமாய் இவள் மீது நிசப்தம்

Read more