கொரோனாவும் உளவியல் ஆக்கிரமிப்பும்

இன்று முழு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெயர் தான் கொரோனா. கொவிட் 19 என்ற பெயரால் அறிமுகமான வைரஸ் இதுவாகும். இது சுமார் இரு வருட காலமாக இலங்கையை மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. இதனூடாக இன்று உலகலாவிய ரீதியில் இன்னுமொரு மறைமுக ஆக்கிரமிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்? கொரோனாவின் ஆக்கிரமிப்பையும் தாண்டி இன்று தனிப்பட்ட ரீதியில் உளவியல் ரீதியான போர் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் … Read moreகொரோனாவும் உளவியல் ஆக்கிரமிப்பும்

பெண்ணே துணிந்தெழு!

பெண்ணே உன்னை நான்கு சுவற்றுக்குள் முடக்கிட நினைப்பவர்களுக்கும் அடுப்பங்கரையில் அடைத்திட நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை காம வேட்டையில் சிறைபிடிக்க நினைப்பவர்களுக்கு அவமானங்களால் சிதைக்க நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை வதந்திகளால் வென்றிட நினைப்பவர்களுக்கும் வார்த்தைகளால் மயக்க நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! மிரட்டல்களால் மானம் இழக்க நினைப்பவர்களுக்கும் உன் கனவை பெண்மை உரிமையை கற்பை இலக்கை கூருபோட நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! எதற்கும் துணிந்து நில் – ஆயினும் பணிந்து நில்லாதே! … Read moreபெண்ணே துணிந்தெழு!

வாட்ஸ்அப் க்ளாசும் வளரும் மாணவிகளும்

அவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்டாள். முக்கியமாக அது பெண்களுக்கான வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இணைய முன்னர் அவளது பெயர், ஊர், வயது, கல்வி தகைமை என்பன தனிப்பட்ட முறையில் அட்மினுக்கு குரல் பதிவிட (Voice clip) வேண்டும் என்று கட்டளை இடப்பட்டதை அடுத்து அவளும் கேட்கப்பட்ட … Read moreவாட்ஸ்அப் க்ளாசும் வளரும் மாணவிகளும்

காத்திருப்பேன் நீ வரும் வரை!

நீ யாரென்று தெரியாமல் தான் உன்னை நினைக்கிறேன் ஏனென்று கூட புரியாமல்! நீ இப்போது எங்கிருக்கிறாய்? ஏன் இன்னும் என்னை தவிக்க வைக்கிறாய்? நீ இப்போது என்ன செய்கிறாய்? இன்னும் என்ன தான் செய்கிறாய்? என்னிடம் வந்து சேராமல்! நீ இப்போது எப்படி இருக்கிறாய்? எப்படியும் நீ நலமாக தான் இருப்பாய். உனக்கான என் பிராத்தானைகள் தொடரும் வரை! நீ எப்படி இருப்பாய் என்று எனக்குள் தேடுகிறேன். நீ எப்படி இருந்தாலும் எனக்காக நீ இருப்பாய் என்று … Read moreகாத்திருப்பேன் நீ வரும் வரை!

நான் உன்னை நேசிக்கிறேன்

இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. எனது உள்ளத்தால் உணர்ந்து உனக்காக கூறும் என் இதய வாசகம். என் வாழ்க்கை பயணத்தின் முடிவு வரை உன்னால் என்னோடு பயணிக்க முடியாது என்று தெரியும். நம் பயணம் எப்போது, எச்சந்தர்ப்பத்தில், எங்கு, தரிப்படையும் என்று எனக்கு தெரியாது. எந்த தரிப்பிடத்தில் நீ இறங்கினாலும், இறக்கி வைக்க முடியாது நீளும் உன் நினைவுகள். நீ என் இதயத்தோடு கலந்த பின்னும் எப்படி இறக்கி வைப்பது உன் நினைவுகளை? உன்னை நான் … Read moreநான் உன்னை நேசிக்கிறேன்

ஓர் விபத்தில் அடிபட்ட பறவை பேசுகிறது

எனது பெயர் என்னவென்று எனக்கு தெரியாது. நான் வானில் பறப்பதாலோ என்னவோ மனிதர்கள் என்னை பறவை என்று அழைத்தனர். அதனால் நானும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டேன். அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் பிறந்த பின் எனது தாயும் தந்தையும் என்னையும் விட்டுச் சென்றனர். ஏன் என்று தான் இதுவரை தெரியவில்லை. எனவே நான் அநாதையாகவே வளர்ந்தேன். எனது பெற்றோரை தேடி அலைந்தேன். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கப் போவதில்லை. கிடைத்தால் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் என்னிடம் … Read moreஓர் விபத்தில் அடிபட்ட பறவை பேசுகிறது

சிந்திக்க சில வரிகள்

ஒரு சிறு தலை வலிக்கும் மருந்து மாத்திரை பிராத்தனையை விட மாந்திரீகத்தை நம்பும் மக்கள் தனது வாழ்க்கை விதியில் இறைநிழலை விட மாந்திரீக நிழலிலே கழிக்க வேண்டி ஏற்படுகிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல மூடநம்பிக்கையில் மூழ்கியவனுக்கு சோதனைகள் எல்லாம் சூனியமாக தான் தெரியும். இறைவிதியை நம்பினால் இறைநெருக்கத்தையும் நிம்மதியையும் பெறலாம். இன்றேல் இறைக்கோபத்தையும் குழப்பத்தையும் தான் பெற வேண்டி ஏற்படும். கண்மூடித்தனமான நம்பிக்கைக்கும் கண்திறந்த நம்பிக்கைக்கும் வேறுபாடுகள் உண்டு. எனவே எதை நம்ப … Read moreசிந்திக்க சில வரிகள்

விதியின் நிழலில்

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி என் வாழ்க்கை பக்கங்களை கிறுக்கியும் கிழித்தும் போனதால் சில காலமாக திறக்கப்படாத புத்தகத்தை தூசி தட்டி படிக்கையில் கண்ணீரால் என் எழுத்துக்களும் கலங்கிப் போனது மிஞ்சிய பக்கங்களை எழுதாமலேயே விட்டதால் பல பக்கங்கள் வெறுமையாய் கிடக்க எதிர்ப்பார்க்காத நேரத்தில் எதேக்சையான எழுதுகோல்கள் என் கைப்பிடியில் எழுதிப் பார்க்கையில் எங்கெங்கோ செல்லும் கை எழுத்து என்றாலும் எழுதப் பிடிக்கிறது எங்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டேனோ அங்கிருந்து ஆரம்பித்தேன் என் வாழ்க்கை புத்தகத்தை எழுதும் போது மை … Read moreவிதியின் நிழலில்

வரமாய் வருவாய் நீ

கண்ட கனவுகள் நிஜமாகும் நேரம் வாழ்வின் மைல்கற்களை அடையும் நேரம் நீண்ட காத்திருப்புக்கு பதில் கிடைக்கும் நேரம் மொட்டுக்கள் இதழ் விரித்து பூக்கும் நேரம் புரியாப் புதிர்களுக்கு விடை கிடைக்கும் நேரம் குறுக்கிட்ட தடைகள் உடைக்கப்படும் நேரம் தொட முடியாத தூரத்தில் இருந்த இரு இதயங்கள் தொடக்கூடிய நெருக்கத்தில் சந்திக்கும் நேரம் என் கன்னிக் கனவுகளை விண்மீனாக மின்னச் செய்து கண் சிமிட்ட செய்ய நீயும் வருவாய் ஓர் உயிரில் ஈருடலாய் ஓர் தட்டில் இரு பசியாய் … Read moreவரமாய் வருவாய் நீ

காத்திருக்கிறேன்

எனது கண்கள் காத்திருக்கிறது எனக்காக இறைவனால் படைக்கப்பட்ட என்னவனை காண்பதற்காக! எனது இதயம் காத்திருக்கிறது என்னவனின் அன்பிற்காக எனது மனக்காயங்கள் காத்திருக்கிறது என்னவனின் ஆறுதல் வார்த்தைகளுக்காக! எனது கடந்த காலம் காத்திருக்கிறது என்னவனின் மார்பில் முகம் புதைத்து அழுவதற்காக! எனது மழலை கனவுகள் காத்திருக்கிறது என்னவனின் தோள் சாய்ந்து சொல்வதற்காக! அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாது என்றாலும் அவனுக்காக நித்தமும் காத்திருக்கிறேன் அவனை ஹலாலான முறையில் ஒன்று சேரும் நாளுக்காக காத்திருக்கிறேன் எனது வாழ்வின் திருப்பு முனையாக … Read moreகாத்திருக்கிறேன்

எனக்குள் தாகிக்கிறது

இது தண்ணீரை தேடிய தாகம் அல்ல மாறாக எனது இலக்குகளை அடைவதற்கான தாகம் எனது இந்த தேடல் பயணத்தில் எங்கு பார்த்தாலும் கானல் நீர் தான் தெரிகிறது ஏற்கனவே கானல்நீரைக் கண்டு ஏமாற்றம் அடைந்த என் விழிகள் இப்போது முன் எச்சரிக்கையாக இருக்கிறது நான் தேடுவது கானல் நீரை அல்ல அடிபட்ட என் வாழ்க்கை காயங்களுக்கு மருந்திடப் போகும் நீரை தான் அது தான் எனது இலக்குகள் ஆம் எனக்குள் தாகிக்கிறது எனது வாழ்வின் மைல்கற்களை அடையும் … Read moreஎனக்குள் தாகிக்கிறது

பார்த்தாலும் பார்க்காதே

நீ என்னை பார்க்கிறாய் என்று நான் அறியாத வரை நான் நானாகத் தான் இருந்தேன் நீ என்னை தான் பார்க்கிறாய் என்று தெரிந்த பிறகு நான் நானாகவே இல்லை இத்தனை பேருக்கு நடுவில் நீ என்னை மட்டும் பார்க்கிறாய் எனில் என்னிடம் ஏதோ ஒன்று உன்னை கவர்ந்திருக்கிறது அது தான் உன்னை அடிக்கடி பார்க்க வைக்கிறது நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியும் எனக்குள் மின்சாரம் தாக்குகிறது புத்தகத்தை தேடும் என் விழிகள் இப்போது எல்லாம் உன்னை தேடுகிறது … Read moreபார்த்தாலும் பார்க்காதே

மொட்டுக்களை சிதைக்காதே

பறவைகளை சிறைப்பிடித்தால் விடுதலை கிடைத்து விடும் கனவுகளை சிறைப்பிடித்தால் விடுதலை யார் தருவாரோ? கட்டிலில் குழந்தை அழுதால் கண்ணீரை தாய் துடைப்பாள் கடலுக்குள் மீன் அழுதால் கண்ணீரை யார் துடைப்பார்? மலர்ந்த பூக்களை விட்டு விட்டு மலரக் காத்திருக்கும் மொட்டுக்களை சிதைப்பது ஏனோ? உணவுகளை விட்டு விட்டு உணர்வுகளால் பசி தீர்க்க நினைப்பது ஏனோ! வேண்டாம் மனிதா! நிறுத்தி விடு! மொட்டுக்கள் இராட்சத மலராக மலர்ந்தால் உன்னை சிதைக்கக்கூடும்! Noor Shahidha SEUSL Badulla

பணமும் குணமும்

பணம் தேடும் உலகிலே மனிதா நீ எதை தேடி அலைகிறாய்? குணம் தேடும் ஒருவரை எப்போது காண்பது? பணத்தின் கம்பீரம் எதற்கு? படைத்தோனை மறக்கவா? மனமே காயம் எதற்கு? நற்குணம் தோற்று போகுமா? மனிதம் ஒன்றை பேசும் இதயமிது! மனிதனை வீழ்த்தும் காசு அது! பணம் சேர்க்கும் கைகளும் குணம் சேர்க்கும் நெஞ்சமும் சிலகாலம் சென்றதும் குணம் வெல்லும் பணம் வந்தவன் ஆடுவான் பணம் போனதும் வாடுவான் குணம் ஒன்றே தீர்வென உணர்ந்து பேசுவான்! கைதியாய் மாற்றும்பணமும் … Read moreபணமும் குணமும்

முகமன் எனும் ஸலாம்

தெரிந்தோர் தெரியாதவர் என எல்லோரையும் பிணைத்திடும் கயிறு ஸலாம் வீட்டில் பாடசாலையில் வேலைதளத்தில் கடைத்தெருவில் என்று எங்கும் பரந்து காணப்படும் வார்த்தை ஸலாம் பெற்றோரிடம் நண்பரிடம் ஆசிரியரிடம் உறவினரிடம் சிரேஷ்ட மாணவரிடம் கூறும் வாசகம் ஸலாம் தொலைபேசி அழைப்பின் முதல் வந்தனம் ஸலாம் மேடையில் முதல் ஒலிப்பதிவு ஸலாம் சண்டையின் போதுள்ள சமாதானம் ஸலாம் கற்பாறைக்குள் ஊருவிச் செல்லும் பசுமையான வேரைப் போல மனதிற்குள் உள்ள குரோத மனப்பான்மையை அழித்து அன்பையும் நேசத்தையும் விதைக்கக் கூடியது ஸலாம் … Read moreமுகமன் எனும் ஸலாம்

நான்

எனக்கான சிறு உலகின் பல்லாயிரம் விண்மீன்களுக்கு மத்தியில் உதித்த நிலவும் நான் எனக்கான வாழ்க்கைப் பயணத்தின் கனவுகளுக்கான தேடலும் நான் எனக்கான வினாக்குறிப் புதிர்களின் விடையும் நான் எனக்கான உறவுகளின் எழுதப்படாத உரிமையும் நான் எனக்கான காயங்களின் கரையாத கண்ணீரும் நான் எனக்கான புன்னகையின் அடையாளமும் நான் மொத்தத்தில் என்னை நேசிக்கும் முதல் ஜீவனும் நான் Noor Shahidha SEUSL Badulla

என் கல்வி

தொலைவில் நீ இருக்கும்போது பல ஏக்கம் வாழ்வில் எட்டி விடும் தூரத்தில் நீ இருக்கும்போது சிறு கவலை மனதில் அதற்காக உன்னை விட்டு விடவும் முடியாது உன்னை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் முடியாது ஏனென்றால் உறங்காமல் தினமும் நான் கண்ட முதல் கனவே நீ தானே உன்னை எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் மனநிலை எனக்கில்லை எத்தனை பேர் மூளையை சலவை செய்ய வந்தாலும் என் மனதிலிருந்து உன்னை நான் சலவை செய்திட மாட்டேன் Noor Shahidha

புரிய முடியாது

அளவோடு பேசுகிறாள் அர்த்தமாய் பேசுகிறாள் பண்போடு பேசுகிறாள் பவ்வியமாக பேசுகிறாள் பலதை மறைக்கிறாள் காரணத்துடன் சிலதை உரைக்கிறாள் காலநிலையுடன் அதிகமாக பேச நினைத்தால் அதிகமாக மௌனம் கொள்கிறாள் அதற்காக என்னை உதாசீனப்படுத்தவும் இல்லை திட்டினாலும் புன்னகைக்கிறாள் வாழ்த்தினாலும் புன்னகைக்கிறாள் எல்லை தாண்டி அவளோடு பேச முடியாது எண்ணிலடங்கா கேள்வி கேட்டு வதைத்து விடுவாள் சில போது தவிர்ப்பாள் சில போது எதிர்ப்பாள் அவளை புரிந்திட முடியாது புரிந்தால் பிரிந்திட முடியாது வினாவும் அவள் தான் விடையும் அவள் … Read moreபுரிய முடியாது

தோழி

நட்பால் என்னை வென்றவள் அன்பால் என்னை அணைப்பவள் தக்க தருணத்தில் கை தருபவள் தவறு செய்தால் சுட்டி காட்டுபவள் அவளிடம் எதையும் மறைத்து சமாளிக்க முடியாது கழுகுப் பார்வையால் கண்டுபிடித்து விடுவாள் என் முகம் வாடினால் அவள் விழி கலங்கும் என் இதழ் புன்னகைத்தால் அவள் உள்ளம் குளிரும் சில போது கோபித்தும் கொள்வாள் சில போது திட்டியும் தீர்ப்பாள் ஆனாலும் அவள் என்னை விட்டுக் கொடுக்கவும் மாட்டாள் நட்பை விட்டு விடவும் மாட்டாள் என்னை சீண்டி … Read moreதோழி

தேடல்

எதற்காக என்னை விட்டு பிரிந்தாய் ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய் உன்னை சுமை என நினைத்த கணங்களை பொய்ப்பித்து விட்டாய் நீ கசக்கிறாய் என்று எண்ணி முகம் சுளிக்கையில் இனிக்கிறாய் நீ சுமையானவன் தான் நீ கசப்பவன் தான் உனது அருமை தெரியாத வரை உன்னை புரிந்து கொண்டு வரும்போது ஏன் தள்ளி போகிறாய் ஆனாலும் நீ தொலைந்து போகவில்லை தொலைவில் நின்று என்னை ஏங்க வைக்கிறாய் உனக்காக உன்னை தேடி வர வேண்டும் என்பதற்காக தூரம் … Read moreதேடல்

மழையின் காதல்

கருமேகத்தில் காத்திருந்த பிறகு பல எதிர்ப்பார்ப்புகளுடன் பூமியை நனைக்க வந்தேன் மழையாக இல்லை இல்லை பூமியில் பவனி வரும் என் குட்டி தேவதைக்கு செல்ல முத்தம் கொடுக்க ஆவலோடு வந்தேன் ஆனால் என்னவானது என் வருகையைக் கண்டவள் உடனே குடையைப் பிடித்து விட்டாள் என் முகம் காணாது கவலையில் கலங்கிப் போனேன் ஏமாற்றத்தால் என்னை அவளுக்கு பிடிக்கவில்லை என்றும் கூற முடியாது தான் பிறகு எதற்காக என் சாளரை மட்டும் ரசிக்கிறாள் விடைபெறுவோம் என்று நான் நினைக்கையிலே … Read moreமழையின் காதல்

விடியல்

சில பிரிவுகளின் தூரம் நீண்டது வானத்தை போல சில பேச்சுக்கள் மறைந்து போனது கானலாக அருகில் இருந்தாலும் அருகாமையை தேடும் மனம் தொலைவில் இருந்தும் ஒரு போதும் நட்பை தேடவில்லை புரிந்துணர்வுகள் தவறாக புரியப்பட்டதால் இருண்டது நட்பு வானம் இருளை போக்க ஒளி விளக்கு கிடைத்தாலும் தீபம் ஏற்ற இயலவில்லை ஏனெனில் காற்று வந்து அணைத்திடும் என்பதால் இருண்ட வானம் தான் விடியலை தருகிறது இங்கு தீபம் தேவையில்லை விடிவு தான் தேவை அது புரிதலில் மறைந்துள்ளது … Read moreவிடியல்

போற்றும் மாற்றம்

மாற்றத்திற்கான மர்மம் மறைந்தே இருக்கிறது மாயமாய் இல்லை- என்றும் மாற்றனும் என எண்ணம் கொண்ட மனிதருக்கெல்லாம் அது மலிவாய் கிடைப்பதில்லை காலத்தின் கடமை இதோ இல்லை காயத்தின் கரையாய் வந்த ஆழம் அதோ மாற்றம் ஒன்றே மாறாதது உண்மை மறுமை எண்ணமும் மாநபி வண்ணமும் மனதில் உறுதியும் ஒருநாள் மல்லிகையாய் மாற்றம் மலரும் காலம் நகரும் கவலையும் கணப்பொழுதாகும் கடிகார முள் மாறும் முடக்கும் அதிகாரமும் மூடநம்பிக்கையும் முடியும் அந்நாள் நீ விரும்பிய மனிதம் கிடைக்கும் திருநாள் … Read moreபோற்றும் மாற்றம்

ஏக்கம்

நான் புன்னகைத்தேன் உன் முகத்தில் இருள் சூழ்ந்து கொண்டதால் உன் அழு குரலை கேட்க ஆவலுடன் காத்திருந்தேன் நீ இதழ் பிதுங்கி அழுவாய் என நினைத்தால் இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் ஏளனமாக இப்போது நான் அழுகிறேன் ஏமாற்றத்தால் என் கண்ணீரை கண்டாவது நீ அழ மாட்டாயா? நீ அழுதால் என் கண்ணீரும் கானலாகும் என்பதை நீ அறிவாயா? ஓ மழையே! உன் கண்ணீரால் என்னை நனைத்து முத்தமிட வருவாயா? உன்னில் நனைந்து உள்ளம் தொலைக்க ஏங்கும் … Read moreஏக்கம்

கடலே!

ஓ கடலே! அடுக்கடுக்காய் வரும் உன் அலைகளிடம் கேள் ஏன் குழந்தை மனதை அலைபாய செய்கிறாய் என்று? அலையே உன்னை அணைக்க ஓடி வந்த பிஞ்சு பாதங்களை கண்டதும் ஏன் நீ கடலுக்குள் ஒழிந்து கொள்கிறாய்? உன்னுடன் கோபித்து முகம் சுளிக்கையில் மீண்டும் வந்து பாதம் நனைக்கிறாய் உள்ளம் குளிர்ந்து உன்னை அள்ளி எடுத்து முகம் நனைக்க நினைக்கையிலே சட்டென்று தூரம் செல்கிறாய் ஒரு வார்த்தையேனும் சொல்லாமல் ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு? கொஞ்சம் பாதம் … Read moreகடலே!

Select your currency
LKR Sri Lankan rupee