உனக்காக வாழ்

அடுத்தவர் நினைப்பதை நீ சிந்தித்தால் உனக்கான கனவை நீ காண முடியாது பிறரது கனவுக்கே நீ வண்ணம் கொடுக்க முடியும் மனிதா! உனக்காக வாழ் பிறரது எண்ணங்களுக்காக நீ வாழ்ந்து உன் கனவை கானலாக்கி விடாதே! Noor Shahidha

சமாதானமும் நல்லிணக்கமும்

இன,மத வேறுபாடின்றி மனிதன் என்ற ஒற்றை நிழலில் ஒன்றித்து நிற்பது அழகன்றோ? அன்பால் இதயங்களை நிரப்பி பண்பால் மனதை வென்று வெள்ளைக்கொடி முன் வெள்ளை மனதுடன் நின்றால் தவறாகுமா? சமாதானம் வேண்டும் தாய்மண்ணுக்குள். நல்லிணக்கம் வாழும் எம்நெஞ்சுக்குள். Noor Shahidha SEUSL Badulla

சிடுசிடுவென சிணுங்குபவள்

அவள் அப்படி இல்லை தான் ஆனாலும் அவளை அப்படியே மாற்றி விட்டது உலகம் குழந்தையும் தோற்று விடும் அவளது அளவில்லா குறும்புகளுக்கு ஆனால் இன்று குறும்புகளே அடைக்கலம் தேடுகிறது அவளிடம் அவளோ கதவடைத்து விட்டாள் நொடிக்கொரு முறை புன்னகை பூத்தது அவள் இதழ் இன்று இதழ் விரிக்க தயங்கும் அவள் முகம் சட்டென்று சிடுசிடுத்து விடுகிறாள் பட்டென்று பதில் தருகிறாள் ஆச்சரியம் தான் என்றாலும் அது தான் உண்மை அவள் கோபத்துக்கு பின்னால் எத்தனையோ துரோகங்கள் மறைந்திருக்கிறது …

விடை தேடல்

மனதில் சிறு காயம் மனதின் ஒரு ஓரம் வலித்தும் வலிக்காமல் புரிந்தும் புரியாமல் விடை தெரியாது நீளும் கணம் விடை அளித்தால் நீங்கும் ரணம் விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை தேடியே அலைக்கழியும் பொழுதுகள் விடை கிடைக்குமா கிடைக்காதா தெரியாமல் விடை தேடும் நொடிகள் விடை கிடைத்தால் முற்றுப்புள்ளி வைத்திடவும் முடியாது வினாக்கள் தொடரும் வரை விடை தேடலும் தொடரும் Noor Shahidha

நிரந்தரமாக்கிட முடியாது

அந்தி மாலையில் கடலோரம் அமர்ந்து அழகிய ஒளிவண்ணம் தீட்டிய வானத்தை பார்க்கிறேன் அது எத்தனை அழகு! இரவானால் அந்த அழகும் இருண்டு விடும் வரிசையாக வந்து என் பாதம் நனைத்து செல்லும் அலைகளிடம் என் உள்ளம் பூரித்துப் போவதை யார் அறிவர் அவ் இன்பம் சில கணங்கள் மட்டுமே! பாதம் தொட்ட அலை மறுகணம் தொலை தூரம் நீண்டு சென்று விடும் போல் வாழ்வில் எல்லாம் சில காலமே இங்கு எதுவும் நிரந்தரமில்லை! நிரந்தரமாக்கிடவும் முடியாது! Noor …

மனிதாபிமானம்

சிறு வயதிலே குழந்தைகளுக்கு நல்லவை தீயவை பற்றி முன்னெச்சரிக்கை செய்கிறோம். வயதுக்கு வந்ததும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி எடுத்துரைக்கிறோம். கட்டிளமைப் பருவத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி புராணம் வாசிக்கிறோம். அந்த பிள்ளை விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கே, மற்றபடி மனிதர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பதற்கு அல்ல. சிலர் தெரிந்தும் மௌன விரதம் இருப்பார்கள். எதிரில் நிற்பவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்பதை போல, சில விடயங்கள் சுடச்சுட பேசப்பட்டால் தான் இன்னுமொரு தவறு நடக்காமல் …

நட்பின் நேசம்

தொடர்ந்து பேசுவது மட்டும் பாசம் என்றில்லை தொடரப்படாத பேச்சும் பாசம் தான். வெயிலை தினமும் காணும் நம் விழிகள் மழையை எப்போதாவது தான் காண்கிறது. அதனால் வெயிலுக்கு மட்டும் தான் பூமியின் மீது அதிக பிரியம் என்று நினைப்பதா. ஏன் மழைக்கு நேசமில்லையா? திடீர் திடீரென்று பெய்யும் மழை தான் பூமியை தெப்பமாக நனைக்கிறது. அதற்காக இவ்வளவு நாளும் மழை பொழியவில்லையே என்று பூமி எப்போதாவது முகம் சுளித்ததுண்டா? அல்லது மழைத்துளிகள் தன்னை தீண்டக் கூடாதென்று குடை …

நேசி!

ஒரு மலரை நாம் பார்த்தால் அதை பிடிக்கும் என்று ஒற்றை வரியில் சொல்வதற்கும் கொஞ்சம் தான் பிடிக்கும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? பிடிக்கும் என்றால் அது முழுமையாக பிடித்திருக்க வேண்டும். கொஞ்சம் தான் பிடிக்கிறது என்றால் அதில் சிறு பக்கமாவது பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த சிறு பக்கம் பிடிக்காமல் போக ஏதாவது காரணங்கள் இருக்கலாம். அதன் முட்கள் கூட காரணமாகலாம். என்றாலும் அதற்காக அந்த மலர் என்றாவது வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தியதை கண்டதுண்டா? …

தோழியே!

இத்தனை நாள் நீ கண்ட கனவுகள் நனவாக காத்திருக்கிறது அதன் முதல் கட்டத்தில் நீ காலடி எடுத்து வைக்க போகிறாய் இன்னும் சில தினங்களில் நீ கண்ட கனவுகள் கானல் நீரல்ல அவை ஒரு நாள் நிஜமாகும் தெளிந்த மழை நீரைப் போல உனது கனவுகளை நனவாக்க ஒவ்வொரு கணமும் நீ போராடு அதன் முடிவு வெற்றியாகும் நீ வென்றால் நான் வென்றது போன்ற மகிழ்ச்சி மனதில் நாம் வென்றால் நம் தலைமுறையே தலை நிமிர்ந்து வாழும் …

மென்மையே மேலானது

சில தவறுகள் சுட்டிக் காட்டப்படாமலேயே இருக்கிறன உறவுகள் பிரிந்து விடுமோ என்று பிரிந்த உறவே உணரும் போது மீண்டும் வரும் அணைக்க நாடி வரும் ஆனால் இழந்த நன்மைகள் மீண்டு வருமா? உன்னைப் போல் உறவுகளும் வானில் ஜொலிக்க வேண்டும் என்றால் தவறுகளை மென்மையாக சுட்டிக் காட்டு பிரிந்து விடாது உறவு புரிந்து விடும் தவறு நெருங்கி விடும் நட்பு எதிலும் மென்மையே மேலானது! Noor Shahidha SEUSL Badulla

மீண்டும் ஒரு வாழ்த்து மடல்!

என்ன தான் இரவு நிலவு பிரகாசமாக இருந்தாலும் அது விண்மீன் கூட்டத்துக்கு மத்தியில் இருந்தால் தான் இன்னும் அழகாக ஜொலி ஜொலிக்கும் அது போல் எத்தனை எழுத்தாளர்கள் இருப்பினும் அவர்களது எழுத்துக்களுக்கு வாசகர் வட்டம் இருந்தாலே அந்த எழுத்துக்களும் உயிர் பெறும் அவர்கள் வாசகர் மட்டும் அல்ல என்னை சிலையென செதுக்கும் எழுத்துலகின் சிற்பிகள் அவர்களின் சிற்பம் நானாவேன்! எண்ணங்களுக்கான எழுத்தை தருகிறேன் என் பேனா முனையின் மை தீரும் வரை அதற்கான ஆதரவை தாருங்கள் அதன் …

உரிமை

மனம் விசித்திரமான ஒரு புத்தகம் மனதில் பட்டதை எல்லாம் அதன் பக்கங்களில் கிறுக்கி எழுதி விடும் அதை எல்லோராலும் படித்திட முடியாது அனைவரும் படிக்க அனுமதியும் கிடைக்காது ஆனால் மனப்புத்தகத்தை படிப்பவர்கள் உண்மையில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராகவே இருக்க முடியும் அவர்களால் மட்டுமே கிறுக்கிய எழுத்துக்களை கூட புரிந்து கொள்ளவும் முடியும் அவர்கள் வேறு யாரும் அல்ல உன்னிடம் அதிக உரிமை எடுத்த உனக்குரிய உன்னதமான உறவுகள்! Noor Shahidha. SEUSL. Badulla.

அவளே அம்மா

அவளே………!!!! எத்தனையோ பெயர்களை நா உச்சரித்து இருந்தாலும். அச்சப்பட்ட பொழுதுகளில் அப்பட்டமாக வருவது அம்மா என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான். என்ன தான் பெரியம்மா சின்னம்மா என்று உறவுகளை வாய் நிறைய அழைத்தாலும். அம்மா என்ற தனிச்சொல்லின் அர்த்தத்தை எவரிடமும் உணர்ந்திட முடியாது எவராலும் உணர்த்தவும் முடியாது. அந்த உரிமையை பறிப்பவர் எவரும் இல்லை மறுப்பவர் யாரும் இல்லை அடித்தாலும் அரவணைப்பவள் அடிக்கா விட்டாலும் அரவணைப்பவள் அவளே அம்மா. Noor Shahidha. SEUSL. Badulla.

புன்னகை

வாழ்வில் எத்தனையோ உறவுகளை சந்தித்து விட்டேன். அதில் சிலர் சந்தர்ப்பவாதிகளாக இன்னும் சிலர் சுயநலவாதிகளாக ஒரு சிலரிடம் இருந்த அன்பும் புரிதலும் நேர்மையும் பலரிடம் காணாமல் போயிருந்தன. கானல் நீராக! அன்பு என்ற பெயரில் அக்கிரமத்தையே அதிகம் காண முடிந்தது. பண்பு என்ற பெயரில் பணமோகத்தையே பார்க்க கிடைத்தது. குணத்தை விட பணமே அதிகம் நேசிக்கப்பட்டது ஒழுக்கத்தை விட நாகரீகம கை தட்டியது. பல முகங்களை பல கோணங்களில் பல திசைகளில் கண்ட பிறகு என்னால் விரக்தியான …

ஆறுதல் அல்ல அருள்

சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு செய்த ஒரு விஷயம் பிறகு யோசிக்கும் போது உணர்த்தும். அவசரப்பட்ட அந்த நிமிடத்தை அதை உணரும் ஒவ்வொரு செக்கனும் இதயம் படபடக்கும் என்ன செய்து நடந்ததை சரி செய்வது என்பதை புரியாமல் இமைகள் தானாக மூடிக் கொள்ளும் அந்த இக்கட்டான நிலையில் எங்கிருந்தோ பறந்து வரும் சிலரது ஆறுதல் வார்த்தைகள் அந்த வார்த்தைகள் தான் விட்ட தவறுக்கான விடையை காட்டித் தரும் கஷ்டப்படுபவனுக்கு கொடுக்கும் நன்கொடை மட்டும் அல்ல – உதவி …

வீண் விரயம்

வெயில் காலத்தில் சுதந்திரமாக உணவை தேடிக் கொள்ளும் எறும்பு மழைக் காலத்துக்காக சேமித்து வைக்கும் ஆனால் மனிதன் வெளியில் சென்று சம்பாதித்து வருவதை இருளாக முன்பே செலவழித்து விடுகிறான் மனிதா! உனக்கு இறைவன் தாராளமாக தந்திருக்கும் அருள்களில் மோசடி செய்யாதே! இறை திருப்தியை நாடி ஹலாலான முறையில் அதை செலவழி! எதிர்க்காலத்துக்காக அதில் சிலதை சேமித்து வை! இன்னும் சிலதில் தர்மம் செய்திடு! ஊர் பெருமைக்காக நீ செய்யும் எந்த காரியமும் உனக்கு நலவை நாடாது இன்று …

மர்மம்

ஏன் இந்த புறக்கணிப்பு? எதற்காக இத்தனை மௌனம்? எப்படி உடைந்தது உறவு? எங்கு பிழைத்தது விம்பம்? எதனால் நீண்டது தூரம்? எதனை கேட்க? எவரிடம் விடை தேட? எதுவுமே புரியவில்லை எதையுமே எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் மனம் வலிக்கிறது என்பதை சரி உணர மாட்டாயா? என்று கேட்டு நிற்கிறது என் மனம் என்னை வெறுப்பது எங்கனம்? என்னை தடுப்பது தலைக்கனம் என்றாலும் கதைப்பேன் மறுகணம் எப்போது நீ என்னை புரிந்திடும் அக்கணம்! Noor Shahidha SEUSL Badulla

எதிரும் புதிரும்

அடிக்கடி வேண்டுமென்றே அவளை சீண்டிப் பார்ப்பவன் அவள் கோபம் கொண்டு முகத்தை திருப்பி விட்டு சென்றாள் இவனுக்கு தான் சாதித்து விட்ட பெருமை! அவள் அவனைப் பொருட்படுத்தாது இருந்தால் தான் அலட்சியம் செய்யப்பட்ட கவலை! அவள் பதிலுக்கு தன்னை சீண்டினால் தான் மட்டுமே வாய்ச்சொல் வீரன் என்று கவிபாடும் கொடுமை! ஆனால் அவள் கண்களில் இருந்து நீர் சிந்தினால் அவனை விட்டு நீங்கும் அவன் செழுமை! அவள் தான் அவனது உலகம்! அவள் தான் அவன் தேடும் …

தனிமை

எல்லோரும் அருகில் இருந்தும் நீங்கள் சில வேளை உணரலாம் இனம்புரியாத ஒரு தனிமையை! அது உங்களை பல நிமிடங்கள் மௌனமாக்கிடும் உங்களது மனதை காரணம் இன்றி காயப்படுத்தும் காரணம் கேட்டால் அது உங்களுக்கே புரியாமல் இருக்கும் இன்றைய சிறு தனிமைக்கே உங்களால் தீர்வு காண முடியவில்லை அப்படி இருக்கும் போது நாளைய கப்றுடைய வாழ்வில் யாரும் அற்ற தனிமையில் எப்படி தனித்திருக்க போகிறோம்? எதைக் கொண்டு தீர்வு காணப் போகிறோம்? தனித்திருப்பது முக்கியம் அல்ல மாறாக நாம் …

வெறுக்காதே வாழ்வை!

நீங்கள் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா? குற்றவாளிகளின் வாழ்க்கை முறையை அறிந்துள்ளீர்களா? அவர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு ஏதும் உண்டா? அந்த வாழ்க்கை எவ்வளவு கரடுமுரடானது என்பதை உணர்ந்ததுண்டா? அவர்களது வாழ்க்கை காட்டில் தனித்து விடப்பட்ட மரத்தை போன்றது அந்த மரத்துக்கு உற்றார் உறவினர் என்று எவரும் இல்லை மழையோ வெயிலோ பாராது அது நிமிர்ந்து நிற்கும் வசந்தமோ வரட்சியோ அதை ஏற்று வாழும் எதிர்பாராத நேரத்தில் மரம் வெட்டியின் கோடாரி அம்மரத்தை பிளக்கும் விறகு வெட்டியின் கரங்களுக்கு …

அவகாசம்

இடி, மின்னலுடன் கூடிய பெருமழை பொழிந்த மறு கணமே வெயில் அடித்திடுமா? ஏற்கெனவே வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் கலைந்து மழையில் நனைந்து தெப்பமாகிப் போன பூமியை சூரியனது ஒளிக்கதிர்கள் முத்தமிட்டு தழுவிக் கொள்ள ஒரு சிறு கால அவகாசம் தேவை. அது போல் தான் நம் வாழ்விலும். இருளிலிருந்து விடிவை காணவும் புதிரிலிருந்து விடையைக் தேடவும். கால இடைவெளி அவசியம். பழையன கழிந்தால் தான் புதியன உள்வாங்கப்படும்! புதியன வரவேற்கப்பட முன் நீ உன்னை தயார்படுத்திக் கொள்ள …

இறைநாமம் சுமந்த இளம் இதயம

உன் மூன்று வருட கால மத்ரஸா வாழ்வில் நீ கண்ட கனவை ஏக இறைவன் நனவாக்கி விட்டான் இறைவனுக்கே முதற் புகழ் அல்ஹம்துலில்லாஹ் உன் கனவை நனவாக்கிய தாருஸ் ஸலாமிற்கும் உன் அயராத முயற்சிக்கும் இறைநேச நெஞ்சங்களின் பிராத்தனைக்கள் என்றும் இருக்கும் இறைமறையை சுமந்த இளந்தளிரே இமயம் தொட்டாலும் பெற முடியாப் பாக்கியத்தை பெற்ற தோழனே! எதிர்க்கால சமூகத்தின் கண்ணாக நீ இருந்து பிறருக்கு முன்மாதிரியாக நீ வர வேண்டும் புன்னகை பூத்த முகத்துடன் சிறப்பாக இறை …

பள்ளிக் காலமும், பசுமையான நினைவுகளும்

அடிக்கடி சண்டை போட்ட நொடிகள் அதை மறந்து மீண்டும் நட்பில் கை கோர்த்த கணங்கள். பாட வேளையில் திருட்டுத்தனமாக உண்ட உணவுகள் இடைவேளையில் நண்பர்களின் அறுசுவை உணவுகளால் நா தட்டிய சுவைகள் பரீட்சையில் கொடை வள்ளலான தோழமைகள் வகுப்பறையில் போட்ட கலாட்டாக்கள் மேசைகளில் கிறுக்கிய நட்பின் சின்னங்கள் இன்று நினைத்தாலும் ஏங்க வைக்கும் நட்பின் ஏக்கங்கள் பள்ளி செல்ல முடியாது என்று அடம்பிடித்து விழிகள் அழுதது முதல் நாள் பள்ளியை விட்டு பிரிய மனமின்றி மீண்டும் முதலில் …

பொறுமை

கண்ட கனவுகள் தொலைவாகி நிற்கிறது இன்றைய சூழ்நிலையில். இறைவன் நிர்ணயித்த விதி தான் என்றாலும் இன்று சிலரது சுயநல முடிவால் சதிவலை வீசப்பட்டது. இனி வரும் காலங்கள் எல்லாம் வெற்றுத் தாளில் கீறப்பட்ட கேள்விக்குறியாக மாறி விட்டது. அத்தனை பக்கங்களும் விடை தெரியாத புதிராக இருக்க. மனம் கேட்கிறது அதற்கான விடையைத் தான் கிடைத்தது விடை! நடப்பதெல்லாம் நன்மைக்கே.. நீ பொறுமையாக இரு என்று. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான்! Noor Shahidha SEUSL Badulla

நம்பிக்கை

உனது சிந்தனைகளை குறுகிய வட்டத்திற்குள் நடமாட விடாதே! தொலைநோக்கு பார்வையுடன் எப்போதும் எதையும் கவனிக்க தவறாதே! வரக்கூடிய பந்து காலடியில் இருந்தாலும் நீ திருப்பி எறியும் தூரமே உனக்கான ஓட்டத்தை தீர்மானிக்கும் அதுவே வெற்றியையும் உறுதி செய்யும் உனது வெற்றி உனது கையில். அது உனது வேகத்தை பொறுத்தது அந்த வேகம் உனது நம்பிக்கைக்கு அடுத்தது! Noor Shahidha. SEUSL. Badulla.