Covid – 19 – Stay Home

இன்று பல இளைஞர் யுவதிகளின் நிலை மன வேதனை தரும் ஒன்றாக மாறிவிட்டது.வானில் ஒரு காகம் பறந்தால் கூட இன்று அவர்களின் whatsapp, facebook status ஆக மாறிவிடும். அது போலவே இந்த corona virus ம் ஊரடங்கு சட்டமும் மாறிவிட்டது. வெற்று பேச்சும் அர்த்தமற்ற கவிதைகளும் ஆக்ரோஷமான கட்டுரைகளும் எந்த விதமான முடிவுகளையும் தர போவதில்லை. அது மட்டுமன்றி Social Media வினால் எந்த வைரஸ் இனை கட்டுப்படுத்த முடியும். வெறும் விழிப்புணர்வுகளை மாத்திரமே ஏற்படுத்த … Read moreCovid – 19 – Stay Home

பெண் நிலை

நீதி கேட்க தயங்குறேன்டி நாலு பேர் முன்னால் தன் நிலை கூற நடுங்குதடி இத்தனையும் விட  தன் மானம் மீது பாயும் கயவர்களை தட்டி கேட்டிட செத்து பிழைக்கிறேன்டி காரணம் நான் ஒரு பெண் பொட்ட புள்ள உனை வளர்க்க உன்  தாயின் அடி மடியில் கனமேறுதடி ஆனாலும் துடிக்குதடி நெஞ்சம் தடையற வாழ்ந்திட வீட்டுக்குள்ள பூட்டி வச்சி சுதந்திரம் தந்த ஆண்களே கொஞ்சம் கண் தொறந்து பாருமைய்யா இந்த பொட்டபுள்ள வாழ்கைய மாதவிலக்கும் அவளை வலியோடு … Read moreபெண் நிலை

உறவுக்காரன்

பசிச்சாலும் பத்து பைசா தர மனமில்லை ஆனா பஞ்சாயத்து பன்ன மட்டும் பறந்தோடி வருவாங்க துவண்டவன தூக்கி விட வக்கனையில்ல ஆனா காரணத்த மட்டும் கச்சிதமா கேட்பாங்க உதவிக்கு ஆள் தேடி ஊரெல்லாம் அலைந்தாலும் உறவுக்காரன் என்டு தள்ளித்தான் நிப்பாங்க ஆறுதலா பேசுறதா சொல்லி வழவு மண்ணை எடுத்திட்டு ஊரெல்லாம் நம்ம கதைய பரப்பிடுவாங்க உறவுக்கார பயலுங்க அழையாத வைபவம் நடந்திட்டா போதும் ஊரெல்லாம் நம்ம குலம் பேசுவாங்க உபத்திரமும் உறவுக்காரனும் ஒன்டு உணர்ந்தா தான் நமக்கு … Read moreஉறவுக்காரன்

தனிமை

கடந்த பொழுதுகளும் இழந்த உறவுகளும் துணையாய் நிற்கும் ஆனாலும் அறை முழுவதும் நிசப்தம் மாயை நிறைந்த இப்பாரில் ஒதுக்கப்படுகின்றேன் உன்னோடு சேர்த்து என் சிரிப்பில் தோழியாய் என் சலனத்தில் சகோதரியாய் என் வாழ்நாள் முழுதும் என்னுள் கலந்து விட்டது என் தனிமை என் விழித்திரை விம்பகள் முழுதும் கருமை மட்டும் படர்ந்திருக்கும் காரணம் நான் மட்டும் வாழும் தனி உலகமது துரோகங்கள் எனை வதைக்க நான் எனக்கிட்ட கோடு தான் தனிமை விஷமிகள் நிறைந்த உலகம் என்பதை … Read moreதனிமை

தந்தை

தந்தை ஆண் என்றாலும் உனை வளர்க்கையில் அவரும் ஓர் அன்னையே சிறு வயதிலிருந்நது உனை கஷ்டங்கள் அறியாது வளர்த்தால் என்னவோ முதுமையிலும் அவர் கஷ்டங்களை நீ அறியமால் போய்விட்டாய் நீ விழுந்திடும் போதெல்லாம் உனை தூக்கி விட்ட கரம் இன்று வீதியில் தன் வயிற்றுப்பசி தீர்க்க ஏந்தி நிற்க்கிறது வலிகள் நிறைந்த அவரது வாழ்க்கை புத்தகத்தில் எப்போதும் உனக்காக அன்பின் பக்கங்களை மட்டும் எழுதி வைத்தவர் இன்று வரை அவரது தேகம் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் திருப்தியாக … Read moreதந்தை

அவள் கல்லறையின் குமுறல்

என் மேனி என்ன செய்தது உனக்கு? கொய்து விட்டாயே பூவிலும் மேலான – என் பொன் மேனியை எட்டி அடில் வைத்து – எட்டு வயது கூட எட்டவில்லை பதினெட்டு வயது மாது என நினைத்து பதம் பார்த்து விட்டது – உன் காமம் பாலியல் என்ற சொல்லின் அர்த்தம் கூட உணராத வயதில் படுக்கையில் கிடந்த சோகம் எனக்கு மட்டும் வந்ததேனோ சின்ன தேகம் – என் மீது சிறுத்தையாய் பாய்ந்தாயே சிறுகணமேனும் சிந்தித்தாயா நானும் … Read moreஅவள் கல்லறையின் குமுறல்

முயற்சி

நித்தமும் உனை குறை சொல்லும் சுற்றத்தில் போராடா நண்பா விடியும் பொழுதுகள் உனை பாராட்டும் வாடாதேடா நண்பா உனை ஆழும் தடைகள் உனை செதுக்கிடும் உளிகள் தழராதேடா நண்பா தோல்வி கண்டு அனுபவம் பெறு அப்போது தான் சிறந்திடுவாய் துவண்டு விடாதே நண்பா இழி சொல்லும் பழி சொல்லும் உனை அம்புகளாய் நோக்கிப் பாயும் தடை உடையா நண்பா இன்னல்கள் பல வந்தால் என்ன வெற்றிகனி தான் உனது நோக்கம் முன்னேறடா நண்பா அண்டமும் உனை போற்றும் … Read moreமுயற்சி

முதியோர் இல்லம்

வருடங்கள் ஓடின வயதும் கடந்தன ஆனால் இன்னும் மாறவில்லை இந்த ரணங்கள் உனக்கென ஓர் வலி வந்தால் உடைந்து போகும் பதுமை அவள் ஆனால் – அவள் முதுமை கண்டால் விரட்டுகிறாய் முதியோர் இல்லத்திற்க்கு பத்துமாதமும் உனை பத்திரமாய் பார்த்தவளை மாதத்தில் ஒரு முறை – என கணக்கிட்டு பார்க்க செல்கிறாய் அவள் இரவுகளும் பகலும் உனக்காய் போனது நீ அழுதிடும் வேளையில் இன்று அவளின் ஒவ்வொரு பொழுதும் தனித்து போனது அந்த முதியோர் இல்லத்தில் உதிரத்தை … Read moreமுதியோர் இல்லம்

ஹிஜாப்

ஹிஜாப் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்கும் ஒரு கேடயமாகும். இன்று சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது நெருப்பின் மேல் நடப்பதை விட வலி மிகுந்தது. இந்த சூழலில் பெண்ணின் பாதுகாப்பு பற்றி சிந்திக்க வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. பெண் சுதந்திரம் மட்டுமன்றி அவளிற்கான பாதுகாப்பு அனைத்தையும் பற்றி இஸ்லாம் தெளிவாக விளக்கியுள்ளது. அவை தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது எனலாம். அந்த வகையில் இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றையும் நாம் மதரீதியில் சிந்திப்பதை விட்டுவிட்டு … Read moreஹிஜாப்

விடியலை நோக்கி

சில நொடிகள் மௌனித்துப் பார் இப்பாரினிலே -நீ வசிக்கும் நாட்களை உதட்டில் தேனாய் சொட்டும் வார்த்தைகள் கண்களில் – அன்போடு கலந்த வஞ்சனை உறவாடுவதில் வெள்ளையனை மிஞ்சிடும் விருந்தோம்பல் அத்துனையும் – சட்டென கலைந்திடும் பணம் எனும் போர்வை உனை விட்டு விலகையில் பணத்திற்காக விற்கப்படும் – பாசங்களே இங்கு அதிகம் அதற்காக நீ கால்மார்க்ஸ் – ஆகி வர்க்க முறை பேசி வாதிட வேண்டாம் காத்திரு நாளைய விடியல் உனக்கானது போராட்டம் நீளட்டும் உன் விடியலை … Read moreவிடியலை நோக்கி

காத்திருக்கின்றேன்

தவிக்கின்றேன் தட்டி ஆறுதல் சொல்ல யாருமில்லை துன்பங்கள் மட்டுமே எனை புடை சூழ்ந்து கொண்டது காத்திருக்கின்றேன் அந்த விடியலிற்காய் இம்மானுட வர்க்கமின்றிய தனிக் காட்டினில் நானும் தொலைந்திட காத்திருக்கின்றேன் என்றோ நான் இழந்தவைகள் இன்று வரை எனை வதைக்கின்றது நினைவுகளாக ஆனாலும் காத்திருக்கின்றேன் அந்த விடியலிற்காக தினம் தினம் கண்ணீராலே என் நாட்குறிப்புக்கள் நனைகின்றன நனைந்த சுவடுகள் மட்டும் மீதமிருக்கிறது ஆனாலும் காத்திருக்கின்றேன் அந்த கண்ணீர் துடைக்கும் கரத்திற்காக வேட்கையுடன் போராடிய காலம் போய்விட்டது வேதனை மடடுமே … Read moreகாத்திருக்கின்றேன்

பெண்

வருடங்கள் ஓடினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத ஒன்று பெண்ணிற்கான சமூக விலக்குகள் ஆசைகள் அத்தனையும் பூட்டப்பட வேண்டும் அடுப்பங்கரைதான் அவளுக்கான ஒரு சொத்து இது தான் அவளது நியதி வீடூ தாண்டினால் ஒழுக்கமற்றவள் உரிமைக்காக பேசினால் அடக்கமில்லாதவள் இத்தனையும் நினைத்து கண்ணீர் வடித்தால் பாசாஙகுகாரி என்று பட்டம் சூட்டுகின்றார்கள இன்பங்கள் துறந்த துறவி அவள் அவளது இரவும் பகலும் அடுத்தவருக்காக மட்டும் கொடுக்க வேண்டும் இது தான் அவளது வித அவளிற்கான கல்வி கனவாகவே போனது அவளிற்கான … Read moreபெண்

என்னை நெகிழ வைத்த புனித உயிர்கள் இரண்டு

இரவு நேரம் தேவை நிமித்தம் குடும்பத்துடன் வெளியில் சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு வேளை என்பதால் அவ்வளவு வாகன நெரிசல் இல்லை. பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடை அருகில் வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது தான் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த எனது கண்களின் திசை அவர்களின் பக்கம் சென்றது. பார்வைகளற்று இரண்டு கால்களும் நடக்க முடியாமல் இன்று வரை தந்தை மட்டுமே தன் முழு உடலும் உயிரும் என நம்பி வாழும் ஒரு சிறுமியும் மகளை தாயாக நினைத்து … Read moreஎன்னை நெகிழ வைத்த புனித உயிர்கள் இரண்டு

உறங்க தவிக்கும் என் தெருவோர உறவுகள்

தேவைகளும் மோகங்களும் அதிகரித்து விட்டதனால் இன்று மனித நேயமும் உணர்வுகளும் புதைக்கப்பட்டுவிட்டன. பாசத்திற்காக ஏங்கி உறவுகளுக்காக சண்டையிட்ட காலம் அம்புலி பார்த்து வயல் உழுத காலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. சக்கரம் போன்ற வாழ்வில் மனிதனின் நிலை என்னதான் மாறினாலும் இன்னும் மாறவில்லை சில வறுமையின் அடையாளங்கள் அதன் தொடர்கதையே இந்த தெருவோர உறவுகள். சில இரவுகளில் அந்தப்பாதையை கடந்து வரும் போது என் நெஞ்சின் மீது இரும்பு துளைத்த கனமும் வலியும் உணர்கின்றேன்.சட்டென நிகழும் நிகழ்வல்ல. அது … Read moreஉறங்க தவிக்கும் என் தெருவோர உறவுகள்

Select your currency
LKR Sri Lankan rupee