பலஸ்தீன் பலம் பெற

உலக மேடையில் உதாசீனமாய் உதரப்பட்டுள்ள உன்னத தேசம் அதிகாரம் எனும் அகழியில் அடக்கப்பட்டுள்ளன அப்பாவி உயிர்கள் பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பாலகர்கள் பாதைகளில் இரத்தம் சிந்துகின்றனர் சொந்த மண்ணுக்காக இம்மையின் இன்பங்களை […]

தொழிலாளி

உலகம் உயர ஓயாது உழைப்பவன் தொழிலாளி விவசாயம் முதல் விண்வெளி வரை வியர்வை சிந்துபவன் தொழிலாளி குடும்ப வண்டி ஓட சக்கரமாக சுழல்பவன் தொழிலாளி தேசம் எழுந்திட ஏர் கொண்டு உழைப்பவன் தொழிலாளி உழைப்பையும் […]

ஏப்ரல் 21

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம் […]

பிரசவம்

உலகம் உயிர் பெற மங்கையர் மறுபிறப்பெடுக்கும் மகத்தான மணித்துளிகள் தாரத்தை தாயெனப் போற்றும் தருணம் பெண்மையின் பூரணத்தை பூமி போற்றும் பொன்னான நிமிடம் புது உயிர் இதழ் விரிக்கும் இரம்மியமான பாெழுது உறவுகள் ஒன்றுபட […]

உள்ளங்கள்

நான் கேட்கிறேன் வாய் இருந்தும் இங்கே எல்லோரும் ஊமைகளாக நான் பேசுகிறேன் செவி இருந்தும் இங்கே எல்லோரும் செவிடர்களாக என் இலட்சியமும் கனவுகளும் காணாமல் போயின சில கள்ளத்தனமான உள்ளங்களால் என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும் […]

மெளனம்

வெற்றியில் மெளனம் பணிவு தோல்வியில் மெளனம் அனுபவம் பிரிவில் மெளனம் வேதனை இன்பத்தில் மெளனம் களிப்பு துன்பத்தில் மெளனம் இயலாமை வாக்குவாதத்தில் மெளனம் விட்டுக்கொடுப்பு வறுமையில் மெளனம் கொடுமை இளமையில் மெளனம் இம்சை இலட்சியத்தில் […]

சொன்னதில்லை

தன்னை நாட வேண்டாம் என கரை சொன்னதில்லை அலையிடம். தன்னை தொட வேண்டாம் என கடல் சொன்னதில்லை வானத்திடம். தன்னை மறைக்க வேண்டாம் என நிலா சொன்னதில்லை மேகத்திடம் தேனை உறிஞ்ச வேண்டாம் என […]

என் தந்தைக்கு ஓர் மடல்

இளம் வயது முதல் இன்று வரை கடமையில் கண்ணாய் இருந்து கண் இமை போல் என்னை(எம்மை) காக்கும் தந்தையே கேட்டபோதெல்லாம் பணம் தந்து கேட்டதையெல்லாம் வாங்கி தந்து ஐம்பது வருட வாழ்க்கையில் உமக்காக எதையும் […]

விடுதி

முதல் அறிமுகத்தில் முகமன்கள் பரிமாறி நட்பெனும் முகவரியில் முழந்தாளிட்டோம் கலகலப்பாய் கதை பேசி கைகோர்த்து நடைப்போட நண்பர்களானோம் பல்கலைப் பூங்காவில் கேலியும் கிண்டலும் குறும்பும் கூத்தும் குடிகொண்டது விடுதி அறைகளில் பாத்ரூமில் காத்திருப்பு வொஷ்ரூமில் […]

பல்கலையில் முதல் நாள்

ஈராண்டு முடிந்தாலும் இன்று வரை அழியாத நினைவுகள் அன்றைய முதல் நாள் முதல் நாள் முதல் அனுபவம் முகத்தில் தெரிய இதய படபடப்புடன் முதலடி எடுத்து வைத்தேன் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளுடன் இலக்கை நோக்கிய பயணத்தில் […]

அந்த மழை நாள்

கதிரவன் காணாமல் போக கருமேகங்கள் படை சூழ மின்னல் கீற்றுடன் இடியின் மேளதாளத்துடன் தரணியை நோக்கி கார்மேகம் பொழிந்த மழை நாளொன்றில். சிறார்களின் காகிதக்கப்பல்கள் காற்றில் ஆட மழை நீர் மண்ணில் ஓட வெட்டவெளியில் […]

மழலையின் புன்னகை

நாம் கடந்து செல்லும் பல புன்னகை முகங்கள் மனதை புண்ணாக்கிச் செல்கின்றன. நல்லவன் கெட்டவன் அழகு அலங்கோலம் சிவப்பு கறுப்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என தராதரம் பார்த்து தான் பலர் புன்னகைக்கிறார்கள். […]

அழியாது எம் ஆன்மா

நீதியும் நியாயமும் இங்கே நீர்மூலமாக மனிதனும் மனித நேயமும் மாண்டுவிட்டன சில சந்தர்ப்பவாதிகளின் சொல்லும் செயலும் மாறிவிட்டன உணர்வுகளும் உரிமைகளும் ஊமையானது இங்கே இனமும் மதமும் இரத்த நாளங்களில் ஊறிவிட்டன அக்கிரமும் அநீதியும் ஆழ்கின்றது […]

இறுதி வாகனம்

சாய்ந்து கொள்ள நாற்காலி படுத்துறங்க பஞ்சு மெத்தை சுற்றி திரிய சொகுசு வாகனம் வேண்டும் போது வேலையாட்கள் எல்லாம் சந்தூக்கு எனும் இறுதி வாகனத்தில் பயணிக்கும் வரையில் தான் சிரித்து பேசி பார்த்து மகிழ்ந்து […]

மரணம்

மரணம் அதை நீ மறந்தாலும் அது உன்னை மறக்காது. உரிய நேரத்தில் உன்னை அடையும் அது வரை தான் இந்த ஆட்டம் ஆராவாரம் போட்டி பொறாமை கூத்து குதர்க்கம் துரோகம் வஞ்சகம் இன்பம் துன்பம் […]

ஆகாயம்

தூரத்தே தெரியும் தூண் இன்றி நிற்கும் தூய்மையின் அடையாளம். பரந்து விரிந்த பாரினை அடைகாக்கும் பாதுகாவலன். நிலம் செழிக்க நீர் பாெழியும் கார்மேகக் கடலோன். பறந்து திரியும் பட்சிகளின் மைதானம். நீலக் கடலின் நீண்ட […]

அன்று – இன்று

உள்ளதை உள்ளபடி உபயோகப்படுத்தினான் – அன்று குளம் குட்டை ஆறு கடல் கடந்து கிடைத்ததை உண்டு காலார நடந்து இயற்கையோடு இணைந்து இன்புற்றான். இருப்பதை மாற்றி புதியதை புகுத்தி புரட்சி செய்கிறான் இன்று. கண்டதை […]

திசை மாறும் வாழ்க்கை

எதிர்ப்பாராமல் திசை மாறும் வாழ்க்கைப் பயணம் திடுமென நிகழும் திருப்பங்கள் சில சமயம் தித்திக்கும் சில சமயம் திண்டாட்டம் முடிவுகள் எடுக்க வேண்டிய முக்கிய நிமிடங்கள் – முடிவு சரியா தவறா படைத்தவன் பக்கம் […]

மக்காவின் மைந்தர்

மக்காவில் மலர்ந்தார் மாந்தர்கள் போற்றும் மாநபி. அறியாமை எனும் இருள் அகற்றி அறிவொளி பரப்பினார் அவனியிலே. அன்னையின் அரவணைப்பில் ஆறு வயது வரை அகிலத்தை அறிந்தார் அண்ணல் நபி உண்மையும் நம்பிக்கையும் உயிராக கொண்டு […]

வாசிப்பை நேசிப்போம்.

“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.” நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ […]

மனிதத்தோடு மரணித்திடுங்கள்

சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஒரு மனிதனை வாழவைப்பதும் சமூகமே , அதே மனிதனை அடையாளம் தெரியாமல் அழிப்பதும் சமூகமே. மனிதன் தவறுக்கும், மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், […]

காதலர்களே!

கண்கள் மோதி காதலில் விழுந்து காயங்கள் தேடும் காதலர்களே! பகட்டான வேஷம் போலியான பாசம் கண்டவுடன் தேசம் சுற்றும் காதலர்களே! முத்தங்கள் பரிமாறி முகவரிகள் வழிமாறி பாதைகள் தடம்மாறி தடுமாறும் காதலர்களே! அவசரத்தில் அலைந்து […]

காந்த கரு விழிகள்

அந்திசாயும் நேரம் சாலையோரமாக ஒத்தையாய் நடக்கையிலே கருமேகங்கள் சூழ இடியின் மேளதாளத்துடன் மின்னலும் சேர்ந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வர – கையில் குடை இல்லை. கொட்டும் மழையின் காட்டம் நிற்கும் வரை பாதையோர […]

முதல் மேடையேறலில்

இதயப் படபடப்புடன் கண்களில் கலக்கத்துடன் பின்னிய கால்களை முன்னேவைத்து மொழிய வேண்டியதை மெளனமாக ஞாபகப்படுத்தி தருணத்தை எதிர்ப்பார்த்து அடிகளை எடுத்து வைத்து முயன்று மேடையேறி முன்னே சென்றால் முன்னிருந்து முகங்களைப் பார்த்ததும் மொழிகள் முள்ளாய் […]

ஏழையாய் பிறந்து விட்டேன்

ஏழு தினமும் போராட்டத்தில் ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில் போராடி தோற்றுவிட்டேன் யார் செய்த சதி? ஏன் இந்த கதி? ஏழையாய் பிறந்து விட்டேன். ஆசைகளை அடக்கி விட்டு கனவுகளை கலைத்து விட்டு கால் வயிறு […]

Open chat
Need Help