காத்திருக்கிறேன்

இன்றா நாளையா எப்போது நேர்வது உன் வரவு? என்றுதான் தீருவது என் கனவு? காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன் தொலைதூரம் நீயிருக்கையில் வலிக்கிறது இதயம் மூன்றாண்டாய் உன் முகம்காண துடிக்கிறது யென் இதயம் கடல்தாண்டி சென்ற உறவே கண்முன்னே வந்து விடு கண்வழியும் நீர்த்துளிகளை உன்கரம்கொண்டு துடைத்திடு நிறைய பணம் நீ உழைத்தும் நிம்மதியாய் நானில்லை உறவுகளென் அருகிலிருந்தும் உன் இருப்புக்கு ஈடில்லை எந்தக் குறையுமில்லாமல் எனைப் பார்த்து கொள்ள ஆசை உனக்கு ஆனால், என்னவன் நீ அருகிலிருந்தால் … Read moreகாத்திருக்கிறேன்

என் இதயப் புத்தகம்

இரவல் கேட்காதே – என் இதயப் புத்தகமதை இரங்கியும் தரமாட்டேன் உருகிக் கேட்காதே – என் இதயப் புத்தகமதை உனக்குத் தர மாட்டேன் வலிந்து கேட்காதே – என் இதயப் புத்தகமதை வாரித் தரமாட்டேன் வருபவர் போரவரெல்லாம் வாசித்துப் பார்க்க – அதுவொன்றும் சுவரொட்டியல்ல கண்டவர் கதைத்தவரெல்லாம் கரந்தொட்டு பிரிக்க – அது பத்திரிகையுமல்ல தனித்துவமானதும் இரகசியமானதுமோர் உணர்வுள்ள நாட்குறிப்பு – அது வெளிப்படையான மறைமுகமான என் வாழ்க்கையின் அடிக்குறிப்பு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வாசகருக்கு பத்திரமாய் … Read moreஎன் இதயப் புத்தகம்

செல்போன் பேய்

ஊரெல்லாம் தூங்கிடிச்சு உறக்கத்தை வாங்கிடிச்சு பகலொளித்த சூரியனோ உறவு வீடு போயிடிச்சு வெண்ணிலவின் வெள்ளொளியில் இருள் அடைக்கலமாய் புகுந்திடிச்சு அசைந்தாடும் பனைமரமோ காற்றை அசைப்போட்டிட அசைப்போட்ட இரவுக்காற்று பேய் காற்றாய் மாறிட பேய்க் காற்றின் மிரட்டலுக்கு நாய்களெல்லாம் பயந்திட பயந்த நாய்கள் ஊளையிட பதற்றமென்னுள் காளைவிட மெல்லபிடித்தேன் அம்மாவை மெதுவாய் மூடினேன் கண்ரெண்டை என்னம்மோ சத்தம் ஆந்தையலறும் சத்தம் ஆழ்மனது சொல்லிவிட அடிவயிறு கலங்கிவிட திடுக்கென்று பயந்தேன் அம்மாவைப் பிடித்தேன் பாலாப் போன மனது பேய்ப்படங்களை ஓட்டிவிட … Read moreசெல்போன் பேய்

சந்தேகம்

வாழ்க்கை எனும் பொய்கையிலே சந்தேகசாக்கடை கலக்க நம் கணவன்மனைவி உறவது சண்டைகளால் கசக்க மணவாழ்க்கையையே என்மனம் வெறுக்கிறது மணவாளனே உன்னால் மனம் வலிக்கிறது படித்தபடிப்பிற் கெனக்கு வேலை எனை கதறவிடுவதே உனக்கு வேலை வேலைக்குபோகுமெனை நீ சந்தேகப்பட்டால் வெயிலிலே வேகுமுனை நானென்ன செய்வது? கூலி செய்தாலும் எனை காப்பாற்றும் திறமை உனக்கு. கணவனின் கஸ்டத்தில் பங்கேற்கும் உரிமை எனக்கு. எத்தனையாண்களைக் கண்டாலும் என்உள்ளம் நினைப்பது உன்னைதான் என்வாழ்க்கையில் உதித்த வானவிலே நீயிலா வாழ்க்கை விஷம் தான்! உன் … Read moreசந்தேகம்

தண்ணீர்க் குடம்

பெண்: முன்னால் போற சின்னமாமா என் மூச்சு வாங்குது என்னமாமா தண்ணீர்க் குடத்தை சுமந்துவந்தா புண்ணியமா போகும் மாமா காலையில சமைக்கயில்ல கஞ்சிதண்ணி அருந்தயில்ல கல்யாண வயசாகியும் கட்டிக்கொள்ள யாருமில்ல என்ன நீயும் கட்டிக்கிட்டா உன் வீட்டில் விளக்கெறியும் நா கஸ்டப்படத் தேவையில்ல என் வீட்டில் அடுப்பெறியும் ஆண்: சின்ன அத்தைப் பெத்தபுள்ள பெண்ணா இல்ல ஊருக்குள்ள சிரித்துபேசி நீ நெலிந்தா மடங்க மாட்டேன் உன்னத்தப்புள்ள உங்கம்மா சீதனமா சேத்து வைத்த வெள்ளித் தட்ட உன்ன நானும் … Read moreதண்ணீர்க் குடம்

தேடுங்கள் காணவில்லை

தேடுங்கள்! தேடுங்கள் காணவில்லை இங்குதான்! இதோ! இந்த இடத்தில்தான் எனக்கு நேரும் என்தலைக்கு மேலுமாகத்தான் இருந்தது தேடுங்கள் காணவில்லை எங்கே அந்த சூரியன்? தேடுங்கள் காணவில்லை ஏதோ எரிகின்ற வாசனை வருகிறது சூரியன்தான் எரிகிறது போல எரிகின்ற சூரியனின் கரும்புகைதான் இருளென்ற பெயர்சூடி பரவுகிறதோ? எரிகையில் தெறிக்கின்ற தீப்பொறிகள் வின்மீன்களென வானில் ஒளிர்கிறதோ? தேடுங்கள் காணவில்லை எங்கே அந்த சூரியன்? தேடுங்கள் காணவில்லை தன்பணியை செய்வதற்கு வெண்ணிலவை நிறுத்தி விட்டு சுமையெல்லாம் இறக்கிவிட்டு தொலைந்து போன அது … Read moreதேடுங்கள் காணவில்லை

இனிமை

நீண்ட நாள் வரண்ட பூமிக்கு எதிர்பாராமல் வரும் மழை இனிமை இரவுத் தொழிலாளி நிலவுக்கு அமாவாசையின் மடியில் உறக்கம் இனிமை வெயில் மழையில் நனைந்த வானுக்கு மருந்தாக வரும் வானவில் இனிமை பட்டினியில் பதறிய மண்ணுக்கு மரணம் தரும் உணவு இனிமை கண்பார்வையற்ற குருடிக்கு கற்பனை தரும் உலகம் இனிமை மரித்துப் போன உறவினர் கனவுலகில் நடமாடும் பொழுது இனிமை தூண்டிலில் சிக்கிய மீனுக்கு அதிஷ்டத்தில் தப்பிய நிகழ்வு இனிமை நீண்ட நாள் பின்னர் ரெயில் பயணம் … Read moreஇனிமை

என் ஆசான்

அறியாமை எனும் அரக்கனை எனைவிட்டுத் துறத்து அறிவு எனும் ஆயுதத்தை தினம் எனக்குக் கொடுத்த அன்பான ஆசான் என்வாழ்வும் வண்ணமாக காரணமும் அவர்தான் அகிலத்தின் ஓருவோரத்தில் ஒழிந்திருந்த என்னை பள்ளிக்கூடமெனும் பண்புகூடத்தில் என்னப்பா சேர்த்துவிட அன்பான அவர் என்னை பிள்ளையாக ஏற்றுவிட இரண்டாவது தாயின் பாசத்தை இரண்டே நொடியில் உணர்ந்தேன் என் ஆசிரிய அன்னையிடம். தடங்கள் தவறி தடுமாற்றப்பாதையில் தத்தளிக்கும் எனை கனிவாக தண்டித்து கரையேற்ற தெண்டித்தார் என் ஆசிரிய அப்பா. அவர்தான் என்னறிவிற்கும் அப்பா. பாலரில் … Read moreஎன் ஆசான்

மழை வருமா?

மழை வருமா? மழை வருமா? களையாளும் முழைத்திடுமா? தூசடைந்த நாசிக்குள் மண்வாசம் நுழைந்திடுமா? வெப்பமது உலகாள வியர்வையது உடலாள வரண்டு போன பூமிநிலை வானம்தான் நினைத்திடுமா? முரண்டு பிடிப்பதை நிறுத்தி விட்டு நிலத்தினையது நனைத்திடுமா? தேகமெல்லாம் உஷ்ணத்தில் வெந்துதான் போகுது. மழைமேகமெல்லாம் உலகத்தை வெறுத்துதான் இருக்குது. தாகத்தில் உயிர் துடிக்கிது இதயமும் மடங்காய் அடிக்கிது மேகத்தின் உயிர் பிச்சையையே இவ்வுலகெல்லாம் வேண்டி நிக்குது. முகிற்களின் சிறையிட்குள் அடைபட்ட மழைத்துளியே! உயிர்களின் நிலையறிந்து பூட்டுடைத்து வாவெளியே! சக்கரையை நாடி … Read moreமழை வருமா?

அதுதான் என் ஓலைவீடு

ஒன்பதுபேர் வந்துநின்று ஒவ்வொன்றாய் எண்ணினாலும் தொகையறிய முடியாத துளைகளைக் கொண்ட ஒரு ஓட்டை வீடு அதுதான் என்னோலை வீடு. அதிகாலை நேரத்தில் துயிலெலுந்து தடுமாறும் சூரியனின் தரிசனம். என்வீட்டுக்குள் என்பதே நான்கூறும் நிதர்சனம். அந்திமாலை நேரத்தில் விண்ணுலகில் தோன்றுகிற வெண்ணிலவின் ஒருபாதி. என் ஓட்டையான வீட்டுக்கூரையை நிரப்ப இறைவன் தந்த ஒரு மீதி. என்வீடும் ஒருவகையில் எனக்குள்ள மாளிகைதான். என்வீட்டின் பெறுமையினைக் கண்டவர்கள் சிறுதொகைதான். வீட்டைச் சுற்றி கிடக்கும் கம்புவேலிகள். அந்த வேலிகளிலே படர்க்கும் வண்ண பூக்களின் … Read moreஅதுதான் என் ஓலைவீடு

இன்றைய பெஷன்

இரவெல்லாம் விழித்திருந்து எவனோ ஒருவருடன் காதலென்ற பெயரில் கைத்தொலைபேசியில் கண்டதையெல்லாம் கதைப்பதே இன்றைய பெஷன் காலங்கள் கடக்கிறது நாகரீகம் வளர்கிறது காதலென்ற நாசத்தைத் தேடி இளசுகள்நாம் விரைகின்றோம் இருபது வருடமாய் கட்டிக்காத்த கற்பை இரண்டுமாத பழக்கத்தில் இலகுவாக இழக்கின்றோம் இதுதான் இன்றைய பெஷன் சாத்தானின் சதியினால் இளமனசு துடிதுடிக்க எவனையோ கண்டதும் ஹோர்மோன்கள் கொதிகொதிக்க காதலென்ற தீயினிலே குளிர்காய ஆசைப்பட்டு நரகத்துத் தீயினை மனம்மறந்து போகின்றோம் விழிகளிலே கவர்ச்சி விதவிதமான செல்ஃபி எவனோ ஒருவனுக்கு உடம்பெல்லாம் காட்சி … Read moreஇன்றைய பெஷன்

இந்தக் காலத் திருமணங்கள்

திருமணவீட்டை நாடி ஊரே வருகிறது ஒன்றுகூடி ஆண்களுக்கு ரெண்டு பந்தல் பெண்களுக்கு ரெண்டு பந்தல் மொத்தமாக முற்றத்தில் இருக்கிறது நாலு பந்தல் பந்தலிலே பாய்மேலே இருக்கிறது நெய்ச்சோறு உன் கையிலுள்ள மொய்போட்டு வந்தாலுனக்கு வாய்ச்சோறு நபிகால வலீமாக்கள் எங்கேயோ போனது அழகாக நடைப்போட்டு புதுவலீமா வந்தது திருமணத்தை பகிரங்கப்படுத்தி அன்று கொடுத்த வலீமா ஏழையின் பசியதனை ஒருநேரம் தடுத்தது திருமணத்தை பெருமிதப்படுத்தும் இன்றைய வலீமா மொய்யென்ற பெயரினிலே ஏழை வயிற்றைக் கடித்தது உணவுண்டு கைகழுவி மொய்கொடுக்க நான் … Read moreஇந்தக் காலத் திருமணங்கள்

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்உன்னில் முதன்முறையாககாதல் கொண்டேன்முகமுழுவதும் கழுவிமுந்தானை கட்டிமுத்தமிடும் நோக்கில்உனைப் பார்க்க வந்தேன்… வலிகள் நிறைந்த என்னிதயம்உனைப் பார்க்கையில்வனச்சோலையாய் ஆனதடா!நெஞ்சம் கனத்தாலும்உனை பார்க்கும் கணங்கள்நிம்மதியாய் இருந்ததடா! தேவையில்லைமருந்தெதுவும் தேவையில்லைஉனைசந்திக்கும் பொழுதுகளில்இதயத்தில் பாரமில்லைஎனைக்கெஞ்ச வைத்துப் பார்ப்பதில்உனக்கு ஆசைதான்உனைக்கெஞ்சி கெஞ்சி கேட்பதில்எனக்கும் பேராசைதான் கேட்பதையெல்லாம் தராமல்கெட்டதையெல்லாம் நீக்கிவிட்டுநல்லதையே தருகிறாய்.கஸ்டப்படும் வேலையிலும்மற்றவெல்லா பொழுதுகளிலும்அன்பாய் நீ இருக்கின்றாய். அலங்கார உலகத்தில்ஆசைகளின் உறைவிடத்தில்அடைக்கலம் புகுந்த என் ஆன்மாஅன்பே உன்னிடம்கேட்பதெல்லாம் ஒன்று தான்! காலமெல்லாம் உன் காதல்குறையாமல் கிடைக்க வேண்டும்சலிக்காமல் நானும்தான்சஜ்தாக்கள் செய்ய வேண்டும்உன்நினைவை மட்டும் தான்என் … Read moreகாதல் கொண்டேன்

பெண்ணே விழித்தெழு

அடுப்பங்கரையிற்கு அடிமைப்பட்டு திறமைகளையெல்லாம் மூட்டைக்கட்டி முந்தானை முடிச்சுக்குள் முடிந்து வைத்துள்ள பெண்ணே! முதலில் நீ விழித்தெழு! பெண்ணென்று பெயர் பெற்று பூமியில் நீ பிறந்து விட்டால் பிள்ளைகள் வளர்ப்பதுதான் உன் பணியென்று நினைத்தாயா? இல்லை கணவனவன் வீடுதான் உன்னுலகென்று நினைத்தாயா? கணவனுக்கு கட்டுப்படு கட்டாயக் கடமையது. பிள்ளைகளை வளர்த்துவிடு இறைவனின் கட்டளையது. இவற்றிற்கு மேலதிகமாய் இருக்கிறது பணியுனக்கு. இதையறியாத நீயும்தான் இன்னுமறியாமலே இருப்பதெதற்கு? அந்நிய ஆண்களிடம் அறிவைதேட பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் மனம்சிரிக்க ஆசானாக விழித்தெழு! இல்லை … Read moreபெண்ணே விழித்தெழு

மேகத்தின் ஒப்பாரி

மின்னல் வந்து பல்லைக் காட்டிப் போனாலும் இடியோசையது பல்லைக் கடித்து போனாலும் ஐந்தாறு வருடமாய் காத்திருந்தும் இன்னும் தொடங்கவில்லையம்மா அந்த மேகத்தின் ஒப்பாரி. சுவாசிக்கும் மனிதனே – நீ சுவாசிப்பதை நிறுத்தி விடு சுத்தமான ஆக்ஸிஜன் இங்கு சுத்தமாகவே குறைவடா! நிழல் தேடும் மனிதனே- நீ நிழத்திற்கடியில் ஒழிந்திடு நீ தேடும் நிழல் இங்கு நிச்சயமாய் குறைவடா! இயற்கையை துன்புறுத்தி இங்கே நீ வாழ்ந்தாலும் இறக்கத்தான் போகிறாய் இரக்கமற்ற மடையா! அறிவிருந்தும் அறியாதவனாய் புத்தியிருந்தும் புரியாதவனாய் இன்னும் … Read moreமேகத்தின் ஒப்பாரி

Select your currency
LKR Sri Lankan rupee