கறுப்பு ஏப்ரல்

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை முதலாம் தவணையின் இறுதி நாள்; அனைத்து அரச பாடசாலைகளும் விடுமுறை வழங்கும் நாள்… அன்று தன் தந்தையிற்கு மட்டும் தான் பாடசாலை இருந்தது (அவர் ஒரு பிரதி அதிபர் என்பதால்). மற்றவர்கள், தங்கைக்கும், 2 சகோதர தம்பிகளுக்கும் முன்னேற்ற அறிக்கை (Progress … Read moreகறுப்பு ஏப்ரல்

அவள் தான் என் “அம்மா”

உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து சிரிக்கின்ற பொழுது முத்தங்கள் கொடுத்தாய்! படிப்படியாக வளரும் பொழுது ஆனந்தத்தைக் கொடுத்து பருவம் அடையும் பொழுது அரவணைப்பையும் கொடுத்து மனம் தடுமாறும் பொழுது ஆதரவும் கொடுத்தாய்! வளர்ந்து வரும் பொழுது தவிப்பைக் கொடுத்து இளமையில், தனிமையைக் கொடுத்து உன்னை பிரியும் பொழுது கண்ணீரைக் கொடுத்து அடிக்கடி கண் எதிரே … Read moreஅவள் தான் என் “அம்மா”

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ரமழானே!

ஷஹ்பானிற்கு விடை கொடுப்போம் ரமழானை வரவேற்போம் ரமழானில் நோன்பிருப்போம் ஐவேளை தொழுதிடுவோம் குர்ஆனை ஓதிடுவோம் நற்பயனை அடைந்திடுவோம் நன்மைகள் பல செய்திடுவோம் தானதர்மங்களும் கொடுத்திடுவோம் கறைபடிந்த மனதினை நன்மைகளால் தூய்மையாக்கிடுவோம்! இல்லையெனச் சொல்லாது இருப்பதைக் கொடுத்திடுவோம் பசியென்றால் என்னவென்று பாடத்தை படித்திடுவோம் பசியாற உணவு பகிர்ந்தெங்கும் கொடுத்திடுவோம் எமை படைத்த இறைவா உனை மட்டும் கதியாய் உன் நினைவோடு நோன்பை நிறைவோடு முடித்திட அனைவருக்கும் அருள் புரிந்திடுவாய்! உருவில்லா இறைவா உளமார உருகி உன் நிழல் தேடும் … Read moreவருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ரமழானே!

புன்னகை

மொழிகளால் நொறுக்கப்படாத பொது மொழி புன்னகை! வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய் மொழி புன்னகை! உள்ளத்தின் விதைகளை உதட்டில் விரிக்கும் உன்னத மொழி புன்னகை! மகிழ்வின் வாடைக் காற்றைத் தொட்டு மொட்டுப் பூட்டை உடைத்து, பட்டென்று வரும் பரவசப் பூ தான் புன்னகை! ஒரு வார்த்தையில் சொல்லும் நட்பின் வரலாறு தான் புன்னகை! உதடுகளை விரியுங்கள் புன்னகை புரியுங்கள் சிரிப்புக்கு அது தான் தாய் வீடு! மகிழ்ச்சிக்கு அது தான் மறு வீடு! கை இல்லாதவர் ஊனமானவரல்ல புன்ன”கை” … Read moreபுன்னகை

மன்னிப்பு

ஒவ்வொறு சந்திப்பின் போதும் எப்படியாவது வந்துவிடுகிறது சின்னச் சின்ன சண்டைகள் நமக்குள் சில சமயம் செல்லச் சண்டைகள் கூட வீண் பிரச்சினைகளில் – போய் முடிந்ததும் உண்டு. தவறு செய்தது நீதான் என்று நானும் நான் தான் என்று நீயும் மாறி மாறி சுமத்திக்கொள்கிறோம் குற்றச்சாட்டுகளை! இப்படியே வெகுநேரம் பேசிப்பேசியே முடிவு தெரியாமலே பிரிவோம்! அதன் பிறகு என்ன நேருமோ? என் இமைகள் அரித்துக்கொண்டிருக்கும். பிஞ்சு மனசு உறுத்திக்கொண்டிருக்கும். நான் – உன்னைக் காயப்படுத்தியதில் என் இதயம் … Read moreமன்னிப்பு

என் அகிலமே என் அன்னை!

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே! இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே! அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே! புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே! மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே! அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே! கருமை … Read moreஎன் அகிலமே என் அன்னை!

தாய்!

பிள்ளை முகம் பார்த்து தொல்லை பல சகித்தவளே! என் எல்லை எதுவென்று சிந்தை மேல் செதுக்கி – பெரும் விந்தையாகி நிற்பவளே! என் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறும் – வித்திய புத்தகமே!. கிடைக்காத சொல்லுக்கும் பொருள் கூறும் அகராதியே! வானுயர் வேதனையை என்னுயிர் நிலையெண்ணி தன் துயர் மறந்தவளே! தடம் மாறும் பூவுலகில் தடுமாறா தனித்துவமே! என் நிலை மாறும் வேளையிலும் தன்னிலை மறவா நன்னிலமே! என் பாசத்தை பொழிய முன் என்னை விட்டுப் பிரிந்த … Read moreதாய்!

முத்தான முத்து நபி!

தூனில்லா வானினிலே நள்ளிரவு வேளையிலே கண் எட்டாத் தொலைவினிலே விண்மீன்கள் மத்தியிலே சுடர்விட்ட வெண்மதியாம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! பாலைவன தேசத்திலே அறியாமைக் காலத்திலே பொன் போன்ற தோற்றத்திலே குறைஷிக் குலத்தினிலே தோன்றிய குல விளக்காம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! நற்குணத்தின் தாயகமாம் நல்வழியின் வழிகாட்டியாம் நானிலத்தின் மரகதமாம் நம்பிக்கையின் நாணயமாம் அகிலத்தின் எடுத்துக்காட்டாம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! ஷஹ்னா … Read moreமுத்தான முத்து நபி!

என் அன்புத் தாயே!

கண்பார்க்கா எனக்காக உயிர் வலியை பரிசாகப் பெற்று இந்த உலகைக் காண வா மகளே என அழைத்தவள் அவள். ஊரே என்னை எதிர்க்கும் போதும் என் மகளை எனக்குத் தெரியும் என வீண் சண்டை போடும் விசித்திரம் அவள். அம்மா அம்மா என தொந்தரவு செய்தாலும் என்னடா கண்ணு என அலட்சியம் இல்லாமல் அன்பு செய்பவள். என் அனைத்து பொருட்களும் எங்கு உள்ளது எனக் குறித்து வைத்துக் கொள்ளும் பெரிய புத்தகம் அவள். நான் எதையும் மறந்து … Read moreஎன் அன்புத் தாயே!

அநாதை

புண்பட்ட இதயத்தில் இன்னொரு பூ தான் மலருமா? வாடிக்கிடக்கும் என் மனதினில் இன்னொரு வாசனை தான் வீசுமா? தேய்ந்து போன பாதையில் இன்னொரு தேர் தான் ஓடுமா? ஈரமற்ற என் மனதில் இன்னொரு விதை தான் முளைக்குமா? மீளமுடியாத சோகமும் சொல்ல முடியாத தாகமும் என்னுள் தவித்திருக்க வெற்றுப் பிணமாக வீதியில் உலா வந்து கொண்டிருக்கிறேன் நான் அநாதையாக! பெற்ற தாயையும் இழந்து மாரடிக்கும் இந்நிலையிற்கு நான் அநாதையாக இருப்பது என் விதியா! திசை மாறிய பயணங்களாய் … Read moreஅநாதை

என் முதல் பந்தம்

தோழமையோடு தோள் கொடுத்தான் நான் துவண்டெழும் பொழுது வல்லமையோடு வலிமை கொடுத்தான் நான் வீழ்ந்தெழும் பொழுது பரிவோடு பாசம் கொடுத்தான் தனிமையில் நான் தவிக்கும் பொழுது அன்போடு அரவணைத்தான் என் மனம் உருகும் பொழுது போர்வையாக எனை அரவணைத்தான் குளிரில் நான் நடுங்கிய பொழுது நண்பனாக நன்னெறிகள் தந்தான் நான் பாதை தவறிய பொழுது தந்தையாக அறிவுரை தந்தான் தவறுகள் நான் செய்த பொழுது அன்னையாக ஆறுதல் தந்தான் கண்ணீரில் நான் கலங்கிய பொழுது சண்டைகள் பல வந்தாலும் அன்பின் ஆழம் குறைவதில்லை பந்தங்கள் பல … Read moreஎன் முதல் பந்தம்

Select your currency
LKR Sri Lankan rupee