உன் வாழ்விலும் ஓர் ஸம் ஸம்

மனித சஞ்சாரமே மக்கி வெறித்துப் போன வெற்றிடமே உருவாய் கொண்ட வெட்டவெளிப் பாலைவனத்தில் தன்னந்தனியே பெண்ணொருத்தி தட்டுத் தடுமாறி விட்டுவிடப்பட்டாரே. உஷ்ணத்தால் உழன்று விறைத்திடும் சிசுவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடை நடுவே வியாபித்த பூலோகமதில் உண்ணவோ பருகவோ சிறிதன்றி வேறில்லையங்கு!! இதுவே தனக்கான இறை நியதியென்றறிந்ததும் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான் ” என்றே பதிலுரைத்தார். அன்னை ஹாஜரா. பொறுமையே இவர் பொறுமை கண்டு பெருமை கொண்டது. இறையோன் தனக்கென இயம்பிய தாங்கொணாக் கஷ்டத்தையும் இஷ்டமென்றேற்றார் புனிதமிகு … Read moreஉன் வாழ்விலும் ஓர் ஸம் ஸம்

மின்மினி தேசத்தின் மகாராணி

இம்சிக்கும் இழிவு கழைந்து பெண் மகிமை பூண்டு கசந்திடும் கேவலம் கழைந்து பெண் கல்வி பூண்டு மாதுவெனப் பிறந்த சிசுவின் சுவாச நரம்புகளூடு நித்தம் மண்யாத்திரையாய் மரணம் வரை மறவாமல் பயணித்து மூச்சுத் திணறி மரிக்கச் செய்யும் வழக்கமாம் மண்ணுள் உயிருடன் புதைத்தலெனும் மானுடமற்ற மரபு கழைந்து பெண் பாதுகாப்பு பூண்டு ஆண் அடிமைத்துவம் கழைந்து பெண் சுதந்திரம் பூண்டு பெண்மையை சங்கையென முழங்கி தினம் தினம் புன்னகையுடன் அவள் வலம் வந்திட ஓங்கி முழங்கிய முரசொலியே … Read moreமின்மினி தேசத்தின் மகாராணி

இயந்திரத் தாய்மை

இன்றைய அன்னையர் தினத்திற்காகவல்ல இன்றைய தினத்தில் அன்னைக்காக தாய் பற்றியோ தாய்மை பற்றியோ தயாள குணம் பற்றியோ திரும்பத் திரும்பக் கவிபாட நான் வரவில்லை! தாய்மைக்கு அது ஈடுமில்லை! புத்தம் புதியதொரு புதுமை தாங்கிய புன்னிய உறவொன்று புகழ் பாடப்படாது புதைந்து கிடக்கும் புனித கருப்பொருளே இவ் இயந்திரத் தாய்மை! சூரியனே அசதியில் அயர்ந்திடும் சுகமான பின்னிரவில் சுமைபாராது தன்னவன் சுவைத்து ருசித்திட சமைத்துக் கழுவி வீட்டையும் சீர் செய்து விடியலோடு வேலைக்குப் போகிறது உழைப்பாளித் தாயின் … Read moreஇயந்திரத் தாய்மை

பிரார்த்தனை செய்!

பிந்தாமல் பிதுங்காமல் பின்னிரவில் பிடரி உயர்த்திப் பிரார்த்தனை செய்! விதியது தலை விதி யாம் பிறப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகள் முன்னரே அழகாய் கற்சிதமாய் எழுதப்பட்டு விட்டது ஏகோன் இறைவனால்! மறைக்கவும் முடியா மறக்கவும் முடியா மாற்றவும் முடியா பேருண்மையிது! தலை விதியே தலை எழுத்தென தலை குனிந்து வாழாதே! விதியை மதி! விதியை மாற்று! விண்ணகம் வரை வியாபித்துச் சேரும் பிரார்த்தனை மூலம்! பிரார்த்தனை தவிர வேறெந்த சக்தியும் சக்தியற்றதே விதியை மாற்றிட! முக்கி முனகிக் கொண்டிருக்கும் … Read moreபிரார்த்தனை செய்!

பேரழகு

நேசித்தல் அழகு! நேசிக்கப்படுதல் பேரழகு! முகம் மலர்தல் அழகு! அகம் மகிழ்ந்து முகம் மலர்தல் கொள்ளை அழகு! நெஞ்சுடைந்து சதா நம்பிக்கைகளும் தன்னைத் தானே தகனித்து தவ்ர் குகையில் தடுமாறிய அபூபக்ரை (ரழி) நோக்கிட்ட நபியின் (ஸல்) நன்மொழி “கவலைப்படாதே!” தேற்றினார் நாயகம் (ஸல்) தேறினார் அபூபக்கர் (ரழி) புன்னகை அழகு! சந்தோஷம் பேரழகு! மகிழ்ச்சி அழகு! மனநிறைவு கொள்ளை அழகு! இழப்பதற்கு ஏதுமின்றி இழப்புக்களே சளைக்குமளவு இழந்து விட்ட மூஸாவை (அலை) நோகாமல் நொறுங்காமல் அமைதியாய் … Read moreபேரழகு

அதிகாலைப் பொழுது

ஸூறதுல் பஜ்ரால் வருடப்பட்ட இதய ஓசை அழகோடிணைந்த அடிவானின் உதயம் சுமந்த அம்சமானதோர் அதிகாலைப் பொழுது சத்தியம் தாங்கியது எட்டிப் பிடிக்க முடியா எட்டோடிரண்டு ஏகாந்தமாய் போன எழில் பொங்கும் இரவுகள் சத்தியம் தாங்கியன. இரண்டிரண்டாகிய இரட்டைகளும் ஒவ்வொன்றாய் ஒன்றித்துப் போன ஒற்றைகளும் கரிகாலன் காலைப்போல் காரிருள் சூழ்ந்து கடந்து செல்லும் இராத்திரிகளும் சத்தியம் தாங்கியன. அனைத்துமே ஆறறிவும் ஆளுமையும் ஆழ்ந்த புலனும் அம்சமாய் ஒன்றித்த அறிவுடையோர் அகந்திறந்து பார்த்திட பூலோகம் முளுதும் புதிதாய் திடமாய் பூத்திட்ட … Read moreஅதிகாலைப் பொழுது

பார்வை ஒன்றே போதும்

பாரிலே எம்மை பக்குவமாய்ப் படைத்து பார்ப்போர் தன் பார்வை குளிர்ந்திடச் செய்த என் றப்பே உக்கிப்போய் மக்கிவிடாது எம் உண்டிகளுக்கு தினமும் மணமாய் உணவளிக்கும் என் றப்பே சிக்கலின்றிச் சிரம்மின்றி சிதறிடாமல் திணறிடாமல் சிறப்பாய் சீராய் சுவாசமளிக்கும் என் ரஹ்மானே துக்கமின்றித் துயரமின்றி தினம் தூயவழி வாழ்ந்திட தூது கொண்டு வழிகள் தூவி விட்ட என் ரஹ்மானே பார்த்து செய்த பாராது செய்த பாவங்கள் அறிந்து செய்த அறியாது செய்த தவறுகள் விரும்பிச் செய்த விரும்பாது செய்த … Read moreபார்வை ஒன்றே போதும்

அந்த இரவு

ஸூறாத்துல் கத்ரின் கருத்துக்கள் கவி அமைப்பில் இரவுகள் ஆயிரம் இனிய கதைகள் பேசும் இவ்வாண்டின் இன்பம் தரு அந்த இரவின் கதை இது வெட்கித் தலை குனியாது வெடுக்கென முகம் சுழியாது வெற்றிக்காய் என்றெண்ணி வெறுமனே கொஞ்சம் கேளீர் அழகிய இராப்பொழுது அவனின் பேச்சின் மகிமை அவனின் அன்புக் கட்டளைகள் அவனின் எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் சுமந்த அல்குர்ஆன் இறங்கிய அற்புத இரவே அது லைலதுல் கத்ர் ஆடிக் கழிவு போல் ஓடி வந்து கோடி நன்மைகள் பெருக்கித்தரும் … Read moreஅந்த இரவு

இங்கிதம்

இஸ்லாத்தின் பெருமிதம் இறை தீனின் அடித்தளம் இறையோறின் போதனை இங்கிதம் பேரிடி விழுந்தாலும் பெருமழை சூழ்ந்தாலும் ஷிர்க் தவிர்ந்து சிறு அசைவிலும் பெற்றோராய் எம்மைப் பார் பார்த்திட பெற்றெடுத்தோர் சொல் புரளாமை இங்கிதம் உன்னை நம்பி உன்னுடன் வந்து உனக்காய் வாழ்ந்து உன்னுள் கலந்திட்ட மனைவி உன்னால் கலங்கிடாமை இங்கிதம் உன்னை தாங்கி உனக்காய் உழைத்து உன்னுடன் பயணிக்கும் கணவன் சொல் மதித்தல் இங்கிதம் உம்மை பெற்றோராக்கி உம்மால் வந்து உம்முடன் வாழ்ந்து உம்மைக் காதலிக்கும் பிள்ளைகளுடன் … Read moreஇங்கிதம்

மரணம் மறந்த மாந்தராய்

யாம் விடும் எம் சுவாசம் எம் மண்ணறைக்கான வாசம் யாம் கடக்கும் நாழிகைகள் எம் மரணத்திற்கான நாட்குறிப்பு யாம் கொண்டாடும் ஜனனதினம் எம் நினைவு தினம் நோக்கிய வருடாந்த விரைதல் யாம் எடுத்தியம்பும் பாதச்சுவடுகள் எம் மண்ணறை நோக்கிய நகர்வு யாம் கண்ணயர்ந்து துயிலும் தருணம் எம் மரண ஒத்திகை பூமாதேவியின் வயிற்றில் யாம் பூத்திட்ட கணம் தொட்டு பூமிக்குள் மண்ணாய் அடங்கி புண்ணாகி மண்ணுக்கிரையாகி மக்கி விடும் கணம் வரை மறந்தே மகிழ்கிறோம் மரணமெனும் தூதை … Read moreமரணம் மறந்த மாந்தராய்

சிறகில்லா தேவதை அவன்

அண்மையில் ஒரு பதிவு அதைக் கண்டு கலங்கியதென் உள்ளம்! இதோ அது: பெண்களை விட ஆண்கள் பலமாக படைக்கப்பட்டது ஏன்? தேங்கா உடைக்க துதல், மஸ்கத் கெண்ட்ட சிலின்டர் தூக்க குப்பை பேக்க புலக்கட பக்கம் இருந்து ரோட்டுக்கு தூக்கி வர கோழி மாடு அறுக்க அரிசி மூடை தூக்க ஊடு கழுவுர டைம் தையமிசின், சோபா சாமான தூக்கி வெக்க. கரண்ட் இல்லாத டைம் கிணத்துல தண்ணி அல்ல தண்ணி டாங்கி கழுவ பலாப்பழம் அறுக்க … Read moreசிறகில்லா தேவதை அவன்

Lockdown விசாரணைக்கு நீ தயாரா?

விசாரணையா? என்ன விசாரணை? யாருக்கு விசாரணை? வாங்க பார்க்கலாம்… தொழுகை அற்ற அதானுக்கும் (பிறப்பு) அதான் அற்ற தொழுகைக்கும் (இறப்பு) இடைப்பட்ட சொற்ப காலமே வாழ்க்கை. இன்று நாம் பலரும் பலருக்காக பல விதங்களில் ஓடிக்கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, பிள்ளைகள் படிப்பிற்காக, கணவன் மனைவிக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, தலைவர்கள் மக்களுக்காக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும் எவ்வளவு பம்பரமாட்டம் ஆடினாலும் இறைவனால் எழுதப்பட்ட நேரம் வந்ததும் ஆடாமல் அசையாமல் நிற்கத்தானே வேண்டும். … Read moreLockdown விசாரணைக்கு நீ தயாரா?

வாழ்தல் உனக்கு சாத்தியமே…

சில நேரம் குருடனாகவும் சில பொழுது ஊமையாகவும் இடைக்கிடை கொஞ்சம் செவிடனாகவும் பாத்திரம் ஏற்க நீ தயாரெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே… இராப்பொழுதுகள் கனத்திட கன்னம் பழுத்திட அழுது வெதும்பிக் கழிந்தாலும் விடியற்காலை உந்தன் செவ்வதனமதில் ஒற்றை ரோஜாவாய் இதழோரப் புன்னகை பூக்குமெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே… நாழிகைகளின் நையாண்டிகளுக்கும் நபர்களின் நசுக்குதல்களுக்கும் நடுவில் நீ தலை கவிழாது நடந்திடுதல் இயலுமையெனில் வாழ்தல் உனக்கு சாத்தியமே… சங்கடங்கள் சல்லடை செய்யும் போது சாயாத மனமும் றணங்கள் றணகளப்படுத்தும் … Read moreவாழ்தல் உனக்கு சாத்தியமே…

பிரார்த்தனைகளுக்கும் லொக் டவுண் ஆ??

நடுநிசித் தூக்கம் துறந்து நடுங்கும் குளிரில் கதகதப்பான போர்வை விலக்கி கஷ்டத்தை இஷ்டமாய் ஏற்று எழுந்தேன். அழகிய தஹஜ்ஜுத் தொழுகையை அம்சமாய் நிறைவு செய்து அவ்விடமே அமர்ந்து அமைதியாய் ஆர்வமாய் ஆர்ப்பாட்டமற்று இறையோனிடம் இருகரமேந்தி இனிதே பிரார்த்தக் கொண்டிருந்தேன் எம் முழு மனித வர்க்கத்திற்குமாய் அக்கணமே என் நினைவலைகளில் ஓர் குறுக்கலை சங்கமித்து கொஞ்சம் சிந்திக்கவும் நெஞ்சம் துயர் கொள்ளவும் இருகரங்களை இன்னும் கொஞ்சம் உயர்த்திடவும் செய்தது. Lockdown! Lockdown! Lockdown! எங்கும் Lockdown எதிலும் Lockdown … Read moreபிரார்த்தனைகளுக்கும் லொக் டவுண் ஆ??

தொழுகையில் இல்லை லொக் டவுண்!

பூரண வாழ்க்கைத் திட்டம் சம்பூரண வழிகாட்டியான இஸ்லாம் மார்க்கமானது பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு அல்லாஹ்வால் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இம் மார்க்கம் ஆன்மீகம் லெளஹீகம் என்று வாழ்க்கையைக் கூறுபோடாது அதே நேரம் ஆன்மீகத்திற்காக லெளஹீகத்தையோ; லெளஹீகத்திற்காக ஆன்மீகத்தையோ விட்டுக்கொடுக்காது ஈருலக வாழ்க்கைக்குமே சமானமான வழிகாட்டல்களைக் கொடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் மூலமாக நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளது. எமது பரிசுத்த மார்க்கமானது இயல்பான வாழ்க்கையை எப்படி இச்சைகளுக்கு அடிமையாகி விடாமல் இயல்பாகவே வாழவதென்றும் இன்னும் … Read moreதொழுகையில் இல்லை லொக் டவுண்!

துன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 02

துன்பமே உருவாய் துவண்டு கிடக்கும் உள்ளங்களே! துன்பங்களுக்கு சற்று விடுமுறை தான் கொடுக்கலாமே. கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்! ( 9 : 40 ) முழு பிரபஞ்சத்தையும் உன் தலையில் தூக்கிச் சுமக்காதே! இன்றைய நாள் தான் உனக்குரியது! முதலில் எமது நாட்களைச் சரிசெய்து கொள்வோம். பின்பு முழு வாழ்நாளையுமே பற்றி யோசித்துப் புலம்புவதைப் பார்க்கலாம். கவலைப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. கொஞ்சம் சிரி… இன்னும் கொஞ்சம்…. இன்னும் கொஞ்சம் சிரி… இந்த முழு உலகிலுமே … Read moreதுன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 02

துன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 01

  தனக்கும் சரி பிறருக்கும் சரி துன்பம் துடைத்திடும் பயணமொன்றில் சேகரித்த அம்சங்கள் இவை வாழ்தல் எனும் நீழ்தலில் அனைவருக்கும் உதவிடும் சில கருத்துக்கள் இங்கே! எம்மில் பலரும் நாள் தோறும் கொஞ்சம் சந்தோஷம் கொஞ்சம் போராட்டமென வெளிப்படையாகவோ உள்ரங்கமாகவோ ஆழ்மனதில் நின்று கொஞ்சம் திக்குமுக்காடிக் கொண்டு எம்மை பலவீனப்படுத்தும் கவலைகளில் இருந்தும் எம்மைத் துழைத்திடும் துன்பங்களில் இருந்தும் விடுமைறை எடுக்க பெரிதும் ஆசை கொண்டுள்ளோம். அல்லாஹ் எம் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருளும் மனமகிச்சியும் புரிவானாக என்று … Read moreதுன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 01

அஸ்தஃபிருல்லாஹ்…

ஓ மானிடா! அர்த்தம் அறிவாயே அஸ்தஃபிருல்லாஹ்…. நித்தம் சொல்வாயே அஸ்தஃபிருல்லாஹ்… உந்தன் மனக்கறை நீங்கிட அஸ்தஃபிருல்லாஹ்… படைத்தோன் றப்பிடம் நெருங்கிட அஸ்தஃபிருல்லாஹ்… உந்தன் மீஸான் கதித்திட அஸ்தஃபிருல்லாஹ்… உன் பாவச்சுமை இழகிட அஸ்தஃபிருல்லாஹ்… நபிவழியாம் நொடிக்கொரு அஸ்தஃபிருல்லாஹ்… நாவை இலகுவாய் தூக்கிச் செல் அஸ்தஃபிருல்லாஹ்… மனதால் மெதுவாய் நினைத்திடு அஸ்தஃபிருல்லாஹ்… ஏன் மறக்குது அஸ்தஃபிருல்லாஹ்… பாரிய பொக்கிஷமாம் அஸ்தஃபிருல்லாஹ்… சுவனப்பாதையும் அஸ்தஃபிருல்லாஹ்… அஸ்தஃபிருல்லாஹ்… அஸ்தஃபிருல்லாஹ்… இக்கணமே உந்தன் பத்தோடு ஐந்து(15) பாவங்கள் மன்னிப்புக் கோரியதை அறிவாயோ நீ??? … Read moreஅஸ்தஃபிருல்லாஹ்…

வாழ்தலெனும் நீழ்தல்.

ஊரடங்குச் சட்டமாச்சி… ஊரோ அடங்கிப் போச்சி… தெருவோ வெறிச்சிப் போச்சி… அவள் மனதோ ஒடஞ்சி போச்சி! அவள் சாலையோரப் பூவாய் சாய்ந்து கொண்டு கிடக்க சாரம் போட்ட நாநா சாசகசமாய் மணமுடிக்க சகஜமாய் ஆனது வாழ்க்கையும்! இரண்டே வருடங்களில் இரட்டை இரட்டைக் குழந்தைகள் இரட்டிப்பாய் இயைந்துவிட்டு இறையடியில் இரையாகிட்டான் இரைந்து வந்த லாறிக்காரனின் இரக்கமற்ற போதையாட்டத்தில்… பிஞ்சி போன மனதினில் பிரிவின் நுனி தனில் பிரயத்தனமாய் ஒட்டிக் கொண்டது பிரிவொலியும் பிரி(வு)வலியும் வலுவானதோர் துயரமாய்… நாற் குழந்தைகளையும் … Read moreவாழ்தலெனும் நீழ்தல்.

மீட்காப்பின் வழியினிலே……

(ஓர் மனச்சத்தம்) தனிமைக்கஞ்சி தானாகவே உறவுகளை ஏற்படுத்தி தயங்காமல் தாமதியாமல் அவர்களுடன் தினம் தினம் உறவாடி அவர் துன்பங்களையும் என் துன்பமென்றேற்று என் துன்பமதைக் களைந்து ஓரளவுக்கு எனை தினம் தினம் சரிசெய்து எந்நாட்களை நன்நாளென வடித்த காலம் மலயேறிப்போய் இன்று உறவுகளுக்கஞ்சி துரோகங்களுக்கஞ்சி போலிகளுக்கஞ்சி தனிமையை விரும்பி ஏற்று தலையணையைத் துயர் துடைப்பானாக்கி யாதையும் விட்டொதுங்கி சிறிதொரு தனிமையில் எனை நானே தனிமை செய்து எனை நானே வாரியணைத்து எனை நானே சரி செய்து எனை … Read moreமீட்காப்பின் வழியினிலே……

அரச ஊழியரின் (துர்)அதிர்ஷ்ட பிறவி!

அரச ஊழியர்களின் பிள்ளைகளால் மட்டும் உணரமுடியுமான வலியின் கோலங்கள் இவை காலைக் கண்விழித்து தாயவள் அரவணைப்பில் தயங்காமல் மீண்டும் சுருண்டு படுத்திட… பாசமாய் தலை வருடி பக்குவமாய் வாரியணைத்து நெற்றிப் பொட்டில் நெருக்கமாய் முத்தமிட்டு அன்பான காலை வந்தனம் கேட்டதில்லை… அவளோ அரச ஊழியரின் (துர்)அதிர்ஷ்ட பிறவி! ஈரைந்து மாதம் வயிற்றில் சுமந்தாலும் ஓரைந்து மாதம் மட்டுமே ஒழுங்காக தாய்ப்பால் குடித்தாள்… இவளோ அரச ஊழியரின் (துர்)அதிர்ஷ்ட பிறவி! தாய்மையின் மணத்திற்கும் தாயின் குணத்திற்கும் தங்கமகள் ஏங்கிப் … Read moreஅரச ஊழியரின் (துர்)அதிர்ஷ்ட பிறவி!

பறைசாட்டவா? படுத்துறங்கவா?

ஓரிரவு தொலைந்து போனதால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை ஆயிஷா… அல்லாஹ்வின் கட்டளையை வயிற்றில் சுமந்ததால் இட்டுக்கட்டப் பட்டார் அன்னை மரியம்… மக்கிப்போன மனிதமே உக்கிப்போன உணர்வுகளே சிக்கிக் கொண்டேன் நானும் முக்கிவிட்டனர் வீண் கதைகளில் எனை… யான் பத்தினி யான் பரிசுத்தவாளி யான் கபடமற்றவளென யாவரின் வீட்டுக்கதவுகளிடமும் யாசகனாய் பறைசாட்டவா?? பேசுவோன் பேசட்டும் பெண்ணாப் போண்சேயென பேதையிவள் நாற்சுவருள் பேதலித்துப் படுத்துறங்கவா? பறைசாட்டவும் மாட்டேன் படுத்துறங்கவும் மாட்டேன் பலியாகவும் மாட்டேன் பங்கப்படவும் மாட்டேன் மெய்யாகவென்றை மெதுவாய்ச் சொல்லிவிட்டுக் … Read moreபறைசாட்டவா? படுத்துறங்கவா?

கண்கள் திறந்திடு… கண்ணீர் துடைத்திடு…

பெண்ணே! நீ அழுதது போதும் துடைத்துக் கொள்! கலங்காதே! கரையாதே! இன்று காலத்தின் தேவை ஆளுமை மிக்க ஈமானியப் பெண்! ஆனால் ஈமானுடன் நீ விசித்திரமாய் ஏதும் செய்து பார் இருப்பார் உன்னை தூற்றும்! கலங்காதே! நாலுசுவர்களில் அடங்கி கிடப்பது உன் விதியல்ல உன் விதியை தேடி பயணிக்க துவங்கு! உன் விதியை மதி! இரு கோட்டுக்குள் இச்சமூகம் உன்னை வழைத்து உனக்குள் சிறு வட்டம் வரைந்து உன்னை இருளில் முடக்குகிறதே இதுவா உன் விதி??? இல்லை… … Read moreகண்கள் திறந்திடு… கண்ணீர் துடைத்திடு…

மனிதம்

இயலுமையில் பிரிந்தாலும் இயலாமையில் பிரிந்தாலும் இயற்கையில் யாமெல்லாம் மானுடரே பண்பிலே பகைத்தாலும் பணத்திலே பகைந்தாலும் பக்குவத்தில் யாமெல்லாம் மானுடரே மொழியாலே தாழ்ந்தாலும் மதத்தாலே உயர்ந்தாலும் குணத்தாலே யாமெல்லாம் மானுடரே நிறத்திலே பிரிந்திருந்தும் நிஜத்திலே பிரிந்திருந்தும் உணர்விலே யாமெல்லாம் மானுடரே பல கோடி வீதி சில நேரம் மோதி பரிதாப நீதி இங்குண்டு சில நேரம் குழப்பம் பல நேரம் சண்டை சில்லறைச் சல்லடைகளும் இங்குண்டு அரசியல் அடிதடி அரசாங்க குளறுபடி அடுத்த தெருவில் குண்டுவெடி அந்தியில் தீப்பொறி … Read moreமனிதம்

காதலே ஜெயம்

பொய்க்காதல் வலம்வரும் இந்நாட்களிலே மெய்க்காதல் ஒன்று நான் சொல்லவா? பொய்யன்பே போற்றப்படும் இந்நாட்களிலே மெய்யன்பு எதுவென நான் காட்டவா? பனி அடர்ந்த தஹஜ்ஜத் பொழுதொன்றில் குளிர் தாங்கிப் போர்வையில் மிதமான கொஞ்சம் சூடுதனில் மனதிற்கு இதமான பஞ்சணையில் நிம்மதியான தூக்கத்தில் மனம் ஒப்பும் ஓர் கனவுலகில் மிதந்து கொண்டிருக்கையில் எம் றப்பு வரும் வேளையாகியதை உள்ளத்தால் உணர்ந்து எம் றப்புக்காய் அந்த அதிகாலை தூக்க சுகம் துறந்து குளுகுளு வெண்பணியில் ஜில்லென்ற காற்றோடு கொஞ்சம் உடல் நடுங்க … Read moreகாதலே ஜெயம்

Select your currency
LKR Sri Lankan rupee