இதயத்தில் ஓர் நினைவு….. அதுவே இறை நினைவு

உடலுக்கு உணவு பல
வகை வகையாய்-வழங்கும் நாம்
உள்ளமெனும் பாசறைக்கு
வழங்கத் தவறுவதேனோ?

அழுக்கடைந்த உடலுக்கு
அழகாய் சோப் பூசும்-நாம்
மாசுபடிந்த ஆன்மக் கறையை
மாற்றத் தயங்குவதேனோ?
அகவிழி நாம் திறந்து
அறியாமை நாமகற்றி
அருளாளன் அருட்கொடையை
அனுதினமும் நினைத்திட்டால்
கண்களும் குளமாகும்
நெற்றியும் ஸஜ்தாவில் வீழும்
அல்ஹம்துலில்லாஹ்-நாவுகள் உரைக்கும்
நாசகாரியம் எம்மை விட்டகலும்

நிரந்தரமில்லா உலகம் புரியும்
நிஜமான அமைதி பிறக்கும்
தனித்தவன் அல்லாஹ்விடம்
தனிமையில் கண்ணீர் மழ்கிட்டால்
நிழலற்ற மஹ்ஷரிலும்
நிம்மதியாய் நிழல் பெறலாம்
இதயத் துடிப்புக்குள்
இறைநினைவு இருந்திட்டால்
ஈருலகில் நீயும் நானும்
இளவரசியாய் வாழ்ந்திடலாம்
இன்ஷா அல்லாஹ்

இறப்பு வரை இறைநினைவில்
இம்மியளவும் இழப்பின்றி
இறையோனை சந்திக்க
இருகரம் ஏந்திடுவோம்

J.Noorul shifa
2nd Year
SEUSL

Leave a Reply

%d bloggers like this: