மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்

ஈழத்திருநாட்டின் உதய சூரியனாய் உமருலெப்பை கதீஜா தம்பதியினர் ஈன்றெடுத்த மாமுத்து தும்புளுவாவையூர் புனிதர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் ஹனீபா ஹஸ்ரத் உலமா தலைமுறையில் உத்தமராய் உதித்தவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் கலாம் கல்வி செல்வங்களை கல்பில் சுமந்த குடும்பமதில் கல்விமான் வாரிசாய் கண்ணியமாய் பிறந்தவர் கச்சிதமாய் கடமையிலும் கல்லூரியில் வென்றவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் இளமையிற் கல்வியதை அல் அஸ்ஹரில் பெற்று பயிற்றுனர் பயிற்சியால் பட்டமும் பெற்றவர் மறையை மனதிலேந்திய மங்காத ஆலிமவர் […]

Read More

எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் சித்தியடைந்துள்ளனர். பாடசாலையிலிருந்து பரீட்சை எழுதிய 26 மாணவர்களில் நான்கு பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர். S.F. MANHA. (152), M.M.A. WALEEDH (151), M. R.F. MANAL (147), M.R. HAFSA,(145)  ஆகிய மாணவ […]

Read More

பாரியா செலவில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா காலத்தின் தேவைதானா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல சவால்களை எதிர் கொண்டு, காலத்தை ஓட்டி வந்தனர். தற்போது இவ்வமைப்பானது நூறு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், இதில் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய மூத்த உலமாக்கள், புத்திஜீவிகள், அனுபவசாலிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்கள் அங்கம் வகித்து சமூக நலன்களையும் சமூகப் பொறுப்புக்களையும். நிறைவேற்றி, ஓயா அலைகளில் ஓடும் […]

Read More

ஆட்டிடையன் அறிஞராக, வரலாற்றில் தடம்பதித்தார்

கல்வி கற்க வயது தடையில்லை இமாம் அல்-கிஸாயீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 40 வயது வரும் வரை,  ஆட்டிடையனாகவே  இருந்தார். ஒரு நாள், ஒரு தாய் அல் குர்ஆனை மனனம் செய்ய, தனது மகனை வகுப்புக்குச் செல்லும்படி, வலுக்கட்டாயப் படுத்திய சமயத்தில், மகனோ அதற்கு விரும்பவில்லை! அவள் தன் மகனை நோக்கி, பாட வகுப்புக்குச் சென்று படித்துக் கொள், எதிர்காலத்தில் இந்த ஆட்டிடையன்  போன்று மாறிவிடாதே எனக் கூறினாள். அப்போது இதனைக்கேட்ட, இமாம் அல்-கிஸாயீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்  “நான் […]

Read More

அக்குரனை மக்களே! பிரார்த்தனைக்கு முன் ஒட்டகத்தை கட்டிவையுங்கள்

ஆண்டாண்டு தொடக்கம் வெள்ளப்பெருக்கு பற்றி அறிந்திடாத அக்குரனை நகரம் அண்மைக்காலமாக ஒரு பூனைக்குட்டி சிறுநீர்கழித்தாலும் வெள்ளப் பெருக்கா மாறும் அளவில் நிலமை மோசமடைந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது கானெளிகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. பணம் மட்டும் தான் உலகம் என சிந்திக்கும் ஒரு சில சுயநல வாதிகளின் செயற்பாடே இதற்கான காரணமென உண்மைகள் வெளியாகியுள்ளன. இவர்களின் குறுகிய சிந்தனையால், தன் நலம் மட்டும் என்ற போக்கே இன்று பல குடும்பங்களை நடு வீதியில் நிறுத்தியது. அண்மைக்காலங்களில் […]

Read More

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக!

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக (ஹசன் அய்யூப் ரஷாதிக்கு) சில வரிகள் உதிர்ந்த பூவிற்காக கவி எழுதுவது கடமையல்ல, கவியாக அல்ல உள்ளத்தின் கண்ணீர் வரிகளாக மறைந்தும் மறவா மாமனிதராய் மனித மனங்களில் நீர் வாழ வேண்டும் என்பதற்காய் கடைசித் தங்கையாய் என் அகவரிகள் உமக்கு சமர்ப்பணம் ஜமாதுல் அவ்வல் பௌர்ணமி அன்று பௌர்ணமியாய் மிளிர்ந்தது உம் பூமுகம் அந்த நாள் அன்றைய நாள் இருண்ட நாள் எம்மை கடந்து சென்ற அந்நாளில் ஏற்றுக்கொள்ள முடியாத அச்செய்தி கேட்டு […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 16

வீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து புன்னகைத்த சிப்னா, ”ஒன்டும் பயப்புடாத… எல்லம் ஹைர்ஆ முடியும்” ”நீங்க வேற… அவளுக்கு பயமன்டியதே இல்ல… சும்ம சீன் காட்டிய…” பரீனா கூறியதுமே, ”போதும்…. போதும்…. வெளாடினது அவங்க வாற…” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டுச் சென்றாள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த பெண்கள் பர்ஹாவின் அறையில் உட்கார்ந்து கொண்டனர். வந்தவர்களுக்கு […]

Read More

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு (SEUIARS) இன்று (2022.12.06) கலை கலாசார கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘நிலைபேறான அபிவிருத்திக்கான தற்போதைய தெருக்கடியை சிறந்த பங்காளிகளுடன் சமாளித்தல் (Coping with Current Crisis for the Sustainable Development with Partners in Excellence)’ எனும் கருப்பொருளில் சர்வதேச ஆய்வரங்கு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் M.M. Fazil தலைமையில், இணைப்பாளர் M.L. Fouzul Ameer, மாநாட்டு ஆலோசகர் பேராசிரியர் M.I.M.Kaleel, […]

Read More

உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

அரபு மொழியில்: உஸ்தாத் ஸலாஹ் ஆபிதீன் தமிழாக்கம்: அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ) பயங்கரக் காட்சி (தயவுசெய்து, இதனை வாசிக்கும் போது  மனதையும், சிந்தனையையும் ஒருமைபடுத்திக் கொள்ளுங்கள்) சிந்தனைக்கான பதிவு: اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ. ( سورة الجاثية ٢٩) நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்” (என்று கூறப்படும்). என்ற அல்குர்ஆன் வசனத்திற்கான கருத்து. நான் அமெரிக்காவின் (நியூயோர்க் நகரில்) வசித்தபோது, ​​எனக்கு தபாலில் ஓர் கடிதம் […]

Read More

போதை விழிப்புணர்வா? போதை விளம்பரமா?

இன்று ஒரு ஜும்ஆ உரையை கேட்டேன். போதை பாவனை தொடர்பான குத்பா. அதனை கேட்கும்போது போதை விழிப்புணர்வு உரையா? போதை விளம்பர உரையா? என்ற சந்தேகம் எழுந்தது என்னில். Prevention என்ற பெயரில் Promotion செய்தார் பேச்சாளர். பூரண தெளிவின்றி நான்கு இணைய கட்டுரையை வாசித்துவிட்டு புனாத்தியது புரிந்தது. மேலும் கண்ட கண்ட பேச்சாளர்கள் பேசிய கட்டுக்கதை பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு கதையளந்தார். இருக்கின்ற எல்லா போதை பொருளின் பெயரையும் புட்டு புட்டு வைத்தார். அங்கு இருந்த சிறுவர்கள், […]

Read More

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு தேசிய மட்டத்தில் இலக்கிய போட்டித் தொடரில் முதலாமிடம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 15

ஷரீப தாத்தா ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்தார். கடந்த காலத்தை நினைக்கவே சற்றுப் பயமாக இருந்தது. ‘சீ… எல்லம் அவசரமா நடந்து முடிஞ்சிட்ட… அல்லா தான் ஏன்ட புள்ளேட மனச கலங்கபடாம பாத்துகொலோணும்’ கண்களிலிருந்து இலேசாக எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளை கைகளால் துடைத்துக் கொண்டாள். அவளது கண்களின் முன்பாக ஷிப்னாவின் முகம் நிழலாடியது. வட்டமுகத்தில் நீண்டிருந்த நாசி அதற்கேற்றது போல கண்ணிமைகளால் மூடியிருந்த பெரிய கண்கள் அடர்த்தியான புருவம் என அவளது அழகில் எந்தக் குறையையுமே சொல்ல […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 14

”சிப்னதாத்தா…” பர்ஹா அவளைக் கண்டதும் ஓடிச் சென்று கையைப் பற்றினாள். ”ஹேய். தாத்தாக இன்னும் வரல்லயா?  ” ”இன்னும் இல்ல… இப்ப வாராச்சும்…” ”ஹா… நாளேக்கென்டு தான் சென்ன… ஆனா இன்டேகி மறுபடி வாரன்டு….” அவள் பெருமூச்சு விட்டாள். ”ஹா… அதுகும் ஹய்ர்… எல்லம் நலவு தானே அல்லா நாடினா…” ”அதுகும் சரிதான்…” வீட்டின் முன்பு சத்தம் கேட்டு திரும்பியவர்கள், ”ஹா… வந்துட்டா… எந்தேன் கத…” பர்ஹாவைக் கண்ட சிப்னா சிரித்தாள். அவளது முகத்தில் பதற்றத்தைக் கண்டவள், […]

Read More

வாழ்க்கை

வாழ்க்கை என்பது என்ன. இந்தக் கேள்விக்கான பதில் பெரும் புலம்பலாக இருக்கலாம். வாழ்க்கையின் கடினத்தை உணர்த்த நேர்த்தியான வார்த்தைகள் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை. நாம் தான் கடினப் படுத்திக் கொள்கிறோம். என்னை பொறுத்தவரை இந்த வாழ்க்கையை கால நிலைக்கு ஒப்பிடுவேன். இங்கே வசந்த காலங்கள் வரும் ,அதே சமயத்தில் இலையுதிர் காலங்களும் வரத்தான் செய்யும். அடை மழை பெய்யும் சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும். இதோ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 13

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”போ புள்ள, அத உடு எல்லம் அவன்ட நாட்டம் நலவுக்கு தான் பழய கதய இழுக்க விரும்பல்ல எப்டீக்கும் நான் தான் ஒங்கள்ட மன்னிப்பு கேக்கோணும். நான் தானே அவனபத்தி செல்லி” அதற்கு மேல் பேசாமல் பஹீமா வாயை மூடிக் கொண்டாள். ”நீ எந்துகன் மன்னிப்பு கேக்கோணும். எல்லம் […]

Read More

கலபொட தமிழ் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

இரத்தினபுரி கலபொட தமிழ் வித்தியாலயத்தில் 2022.10.12ம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இச் சிறுவர் தினவிழாவில் மாணவர்களுக்கு இன்னோரன்ன போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் பரிசாக அளிக்கப்பட்டமை எல்லோராலும் வரவேற்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மத்தியில் சேமிப்பை ஊக்குவிக்க மேற்கொண்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாணவரும் பூக்கொத்து வழங்கப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது மட்டுமன்றி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி, மரவள்ளிக்கிழங்கு அவித்து சம்பல் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மிக மகிழ்வாக அமைந்த இச்சிறுவர் தினம் […]

Read More

கொண்டாடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சமர்ப்பணம்

இந்த நாட்களில் ஆசிரியர் சிறுவர் தினங்கள் கொண்டாடப்படுவதால் தனிப்பட்ட விடுமுறையில் இது தொடர்பாக பாடசாலை ஆசிரியர் குழாமை தெளிவுபடுத்தும் பொறுப்பு எமது கரங்களை வந்து சேர்ந்தது. குருநாகல் மாவட்ட சில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே நாம் சென்றோம். அது குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலை. நாம் பாடசாலைக்கு செல்லும் போது வாயிற்காவலர் ஒருவர் கூட இல்லை. பாடசாலையின் நிலைமையை புரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு. அந்த பாடசாலை அதிபரால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 12

சித்தியும்மாவின் முகத்திலிருந்த பதற்றத்தை அவதானித்தவள், ”எந்தேன் விசயம் உம்மா… இவ்ளோ அவசரம்? ” ”இல்ல… மாப்ள ஒன்ன நாளேக்கி பாக்க வாராம்… இன்டேகி அவர் நாட்டுக்கு வாராம்… அப்டியே நாளேக்கி ஊட்டுக்கு வாரன்ட…. அதுதான்… ஒனக்கு நல்லொரு கிட் எடுக்கோணுமேன்…. வா டௌனுக்கு போக…” அவளுள்ளம் சற்று அதிர்ந்து நின்றது. ”அவசரமா…. இப்பவேவா?” ”ஓ…. வா போம்….” அவள் மௌனியாக நின்றுகொண்டிருந்தாள். ”தாத்தா…. வாசி தான் அப்ப…. போ… போ….” ”இவளொன்டு…. எப்ப பாத்தாலும் அவள கொளப்பி […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். ”அல்ஹம்துலில்லாஹ்… நாங்க நல்லம்…. நீங்க இப்டி திடீரென்டு வந்தீச்சி நம்பேலா….” ”நான் வார தானே இனி….” சிரித்துக் கொண்டே சமாளித்தவளை, ”போதும்… நீ கடசியா சிப்னாட கலியாணத்துக்கே வந்த…. அது நடந்தே ரெண்டு வரிஷமும் ஆகீட்ட….” பெருமூச்சுடன் கூறியவளின் கைகளைப் பற்றிக் கொண்டவள், ”சரி….சரி… அத உடுங்கோ…. எங்கேன் […]

Read More

சீதாராமம்

யார் சொன்னது சீதாவும் ராமனும் இணைவதற்கு பிறவியெடுக்காதவர்கள் என்று?? எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும், எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும், உயிரோடு உயிராக உள்ளத்தால்! உண்மையாய்! உத்தமமாய்! உயிர்கொடுத்து காதலித்து இணைந்தே வாழ்ந்திட பிறவியெடுத்தார்கள்! பிறவியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! இன்னும் பிறவியெடுப்பார்கள்! ஆனால் காலம் தான் ஏதோ ஒரு வகைக் கோலத்தினால் சதி செய்து! விதியை மாற்றி! ராமன்களை உயிர் துறக்கவைத்து சீதாக்களை விதவைகளாக்குகின்றன! இன்னும் ராமன்களை தபுதாரன்களாக்குகின்றன! அதனையே இந்த சீதாராமும், பறைசாற்றுது உலகுக்கு! “மாதம் 600 ரூபாய் சம்பளம் […]

Read More