அல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்

அல்குர்ஆன் கூறும் அற்புதங்கள்

அண்ணல் நபிகளுக்களித்த
அற்புதங்களில் ஒன்றாம்
அழகிய திருமறையிலே
ஆழமாய் பொதிந்துள்ள அற்புதங்களோ
ஏராளம் தாராளம்….

அறிவியல் கண்களை
அகழத் திறந்து
மறை வேதம் தந்த
மறுக்க முடியா அற்புதங்கள்
ஒன்றா… இரண்டா…???

கருவறையின் தனித்தன்மையை
திருத்தமாய் உரைத்து
உள்ளங்களை உருகச் செய்வதிலும்
துல்லியமாய் தெரிகிறதே
அல்குர்ஆனின் அற்புதம்…..

பெருவெடிப்புக் கொள்கையை
தெட்டத் தெளிவாய் காட்டி
அற்புதத்தை தொட்டுச் சென்றதே
சாந்தி மார்க்கத்தின்
சத்திய வேதம்….

தெவிட்டிடும் தேனின் உற்பத்தியினை
தரணிக்கே உணர்த்தி நின்றிடும்
தகவலதுவும் அற்புதமே….

புவி ஈர்ப்புச் சக்தியை
தீர்க்கமாய் மொழிந்து
உலகுக்கே உண்மையை இயம்பிடும்
உன்னத செயலும்
விண்ணவன் மண்ணுக்குத் தந்த அற்புதமே….

மலைகளை முளைகளாக்கி
கலைஞனின் கலைகளையும் தோற்கடித்ததில்
திரையின்றித் தெரிகிறதே
மறை வேதத்தின் அற்புதம்….

விண்ணவனின் தூதினூடே
மண்ணின் மனிதனுக்குத் தந்த
எண்ணில் கொள்ள முடியா அற்புதங்களை
அளவேதுமின்றியே செப்பிடலாம்….

Ilma Anees
SEUSL
[products]
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்