ஏன் இந்தப் பொடுபோக்குத் தனம்??

சீனா’ல தானே! எங்களுக்கு நோ ப்ரொப்ளம்!
இத்தாலி’ல தானே!! எங்களுக்கு நோ கேஸ்!!
அமெரிக்கா’ல தானே!! எங்களுக்கு நோ வொர்ரீஸ்!!!

கடசில, கம்பஹா’ல தானே!! இங்க இல்லயே!!

இவ்வாறு, ஒவ்வொரு படிமுறையாக பொடுபோக்காக இருந்து விட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட பின்னர்,

“அந்த ஏரியால தானே, எங்கட ஏரியா’ல இல்லயே!!”

என்று வியாக்கியானம் பேசித் திரிந்து கொண்டிருக்கின்றனர், இலங்கையர்கள். ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல், ஒன்று கூடி விளையாடுவதும், ஒன்றாக உணவருந்துவதும், ஒன்றாக பேசிக்கொண்டிருப்பதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். உங்கள் மாவட்டத்தில் ஒருவர், நேற்று கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். கொரோனா தொற்றியவருக்கு அதன் அறிகுறிகள் தென்பட சாதாரணமாக 14 நாட்கள் வரையாவது எடுக்கலாம் என்பதால், இவருக்கு 7 நாட்களுக்கு முன்னர் கொரோனா எங்கிருந்தோ தொற்றியதாக எடுப்போம். கடந்த வெள்ளிக்கிழமை தான் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் வந்ததால், வெள்ளிக்கிழமை வரை அவர் பல பயணங்களை மேற்கொண்டிருக்க வாய்ப்புண்டு.

நீங்களோ, உங்களின் நண்பரோ, நண்பரின் நண்பர் ஒருவரோ அல்லது உறவினர்களோ அந்த நோயாளியுடனோ, அவருடன் தொடர்பிலிருந்த யாராவது ஒருவருடனோ நெருங்கிப் பயணித்திருக்க வாய்ப்புண்டு. இவ்வாறான சாத்தியங்கள் உண்மையிலேயே நடந்து விட்டால், உங்களுக்கும் கொரோனா தொற்றும், உங்களால் உங்கள் குடும்பத்திறாகும் தொற்றும்.

இது ஒரு சங்கிலித் தொடர், இவ்வாறாகவே சீனாவிலும் தொற்றியது. இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா போன்ற உலக நாடுகளிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றிய பலர், மருத்துவமனைக்குச் செல்லாது மறைந்து கொண்டு, திருடன் பொலீஸ் விளையாட்டு விளையாடுவது போலத் தோன்றுகிறது. அத்துடன், 14 நாட்கள் வரையில் கொரோனா நம் உடலினுள் அமைதியாக இருக்க முடிவதனால், அது தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும் போது, ஒரேயடியாக பலர் வைத்தியசாலைக்கு ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகலாம்.

அந்நிலை வந்தால், வைத்தியசாலைகளில் கட்டில் போதாது போகும். நிலைமையை கட்டுப்படுத்த முடியாதிருக்கும் இறைவன் காப்பாற்ற வேண்டும். தயவு செய்து, எல்லாவற்றையும் மூடிக்கொண்டு வீடு போய் சேரவும்.

இல்லாவிட்டால்,

“அடுத்த வீட்டுல தானே, எங்கட வீட்டில இல்லையே”

என வியாக்கியானம் பேச வேண்டி வரும்!!!

Ifham Aslam

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: