அந்தச் சாலை மூடப்பட்டுள்ளது

எதற்காக மூடப்பட்டுள்ளது
எதனால் மூடப்பட்டுள்ளது
என்பதை உணரவே முடியவில்லை

அந்த சாலை
ஒரு புதுப்பயணத்தை
ஆரம்பம் செய்யும்
அதன் ஓரங்களெல்லாம்
பூக்களினால் நிரம்பி
வழிந்துகொண்டிருக்கும்
அதில் எந்த நெரிசலையும்
காணமுடியாது
அது ஒவ்வொருவரினதும்
புதுப்பதிவை எழுதும்
தற்போது
அது மூடப்பட்டுள்ளது.

அந்த சாலையில்
போகத்தான் முடியும்
திரும்ப முடியாது
இது விதிமுறைதான்
விரும்பி ஏற்கும் மனம்

அதன் எல்லை இதுவரை
கணக்கிடப்படவில்லை
ஒவ்வொருவரும்
தமது அளவுகளை
தமக்கு விரும்பிய
மாதிரி சொல்வார்கள்

இங்கு
எந்த மதமோ
எந்த இனமோ இ்ல்லை
எந்த ஜாதியோ
இந்த சாலையை
ஆள்வதில்லை

மனிதம் என்ற ஒரு
கொள்கையை அது
கடைபிடித்துள்ளது
விரும்பியவர்கள் இதனில்
பயணம் செய்ய முடியும்
விரும்பாதவர்கள்
மற்ற சாலைகளில் செல்லலாம்

முன்னோர்கள்
இந்த சாலையைத்தான்
அதிகமாக பயன்படுத்தினார்கள்
நாம் தான் அதனை
முடக்கி வைத்துள்ளோம்

அந்த சாலையில்
இவ்வாறு எழுதி இருந்தது
“நீ என்னைக்கொண்டு
ஆரம்பம் செய்யும்
ஒவ்வொரு பயணத்தையும்
என்னோடு
அந்த உணர்வோடு
முடிவடைய செய்வேன்”

இப்போது
அந்த சாலை மூடப்பட்டுள்ளது
புன்னகை நம்பில்
எங்கயோ புதைக்கப்பட்டுள்ளது
புதுப்பயணம்
நம் புன்னகையோடு

Naveeth Raiyoos

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: