மன்னிப்பாயா?

இதயம் மண்டியிடுகிறது
இறைவனிடம் கையேந்துகிறது
கண்ணீர் வடிகிறது
கன்னத்தை நனைக்கிறது

இரவின் இருளிலும் தௌபா
ஒளி விளக்காக மாறுகிறது

அது லைலத்துல் கத்ர் இரவு
நல்ல அமல்களுக்கான உறவு

என்றோ ஓர் நாள் நான்
ஒரு இதயத்தை காயப்படுத்தி விட்டேன்.
கூரிய ஆயுதங்களால் அல்ல
பாரிய வார்த்தைகளால்

அதை நினைத்து இன்று
என் உள்ளம் காயப்படுகிறது.

மனிதன் தவறுக்கு
மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்.
எனவே இருகரம் ஏந்துகிறேன்.
இறைவனிடம் கேட்கிறேன்.

என்னால் உடைக்கப்பட்ட
அந்த இதயத்துக்கு நானே
மருந்திட ஆசைப்படுகிறேன்.

இந்த இரவின் விடியல்
சாந்தமாக இருக்கும்.
அது போல் அறுபட்ட
உறவும் சமாதானமாகும்.

Noor Shahidha
Badulla

Leave a Reply