பிக்ஹ்

  • 8

‍‍‍‍‍‍பிக்ஹ் என்ற வார்த்தையை பலர் மார்க்கசட்டங்கள் விஷயத்தில் உபயோகிக்கப்படுவதை தான் செவிமடுத்து இருப்பார்கள். ஆனால் அது குர்ஆன் ஸுன்னாஹ்வில் இருந்து எடுக்ககூடிய சட்டம் என்பதைவிட விசாலமான ஒன்று, (பஃஹ்ம்) மார்க்க விளக்கம், புரிதல், மார்க்க ஞானம் என்ற கருத்திலும் பயன்படுத்தப்படும்.

‍‍பின்வரும் ஹதீஸில் உலமாக்களுடைய உயிர்களை கைப்பற்றுவதன் மூலம் (மார்க்க) அறிவை அல்லாஹ் உயர்த்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வது இதைபற்றி தான்.
‍‍‍‍‍‍ ‍‍
நிச்சயமாக அல்லாஹ்தஆலா கல்வியை மக்களிடமிருந்து ஒரேயடியாகப் பிடுங்கி எடுத்து விட மாட்டான். எனினும், உலமாக்களைக் கைப்பற்றுவான். அவர்களுடன் மார்க்க அறிவும் உயர்த்தப்படும். அதன் பின் மனிதர்கள் மத்தியில் அறிவீனமான தலைவர்கள்தான் மிஞ்சுவார்கள். அவர்கள் (மார்க்க) அறிவில்லாமல் பத்வா வழங்கித் தாமும் வழிகெடுவதுடன், பிறரையும் வழிகெடுத்து விடுவார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 7307, முஸ்லிம் 2673)

அல்குர்ஆனும் ஹதீஸ் கிரந்தங்களும் இருக்கதக்க எப்படி உலமாக்களின் மரணத்தால் அறிவு உயர்ந்துவிடும் என்பதே நாம் சிந்திக்கவேண்டிய இடம். எனவே, குர்ஆனும் ஹதீஸும் போதும் யாரு வேண்டுமானாலும் விளங்கிட்டு போகலாம் என்று ஆகிவிடாது, துறைதேர்ச்சி என்று ஒன்று இருக்குது. எனவே இ்ந்த இஸ்லாமிய அறிவை அல்லாஹ் புத்தகங்களில் மாத்திரம் தனித்து பாதுகாக்கவில்லை மாறாக உலமாக்கள் எனும் மனிதர்களின் உள்ளங்களையும் ஒரு ஊடகமாக எடுத்திருக்கிறான்.

அல்லாஹ் வெறமனே குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் பாதுகாக்கவில்லை, அதன் சரியான விளக்கத்தையும் சேர்த்துதான் பாதுகாத்திருக்கிறான்.

‍‍சரி எல்லாரும் ஏற்றிருக்கும் இந்த சின்ன விஷயத்தை ஏன் சொல்லவேண்டும்? என்று கேட்டால். நிலைப்பாடுக்கும் நிர்பந்ததுக்கும் வித்தியாசம் தெரியாமல் உலமாக்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், நீங்க பிக்ஹ் படிங்க, பிக்ஹ் காஇதாக்களை படிங்க இரண்டுக்கும் வித்தியாசம் புரியும் என்டு ஒரு உபதேசம் செய்யப்பட்டால், நீங்க சுன்னாஹ்வை படியுங்கள் என்று உபதேசிப்பதை விட்டுவிட்டு பிக்ஹ் படிங்க காஇதா படிங்க என்டு உலமாக்களின் பக்கம் வழிகாட்டுகிறீர்கள் என்று ஸுன்னாஹ்வில் இருந்து பிக்ஹை பிரித்தெடுத்து பேசுகிறார். அவங்கட பஃஹ்ம் அவள்ளவு தான்.

‍‍‍சரி நாங்க உலமாக்கலின் பக்கம் அழைக்கிறோம், நீங்க நபியவர்கள் எச்சரித்த அறிவீனர்களின் பக்கம் அழைக்கிறீர்கள்!

பிக்ஹும் அதன் காஇதாக்களும் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ்வில் இருந்து தான் எடுக்கப்பட்டது, துறைல தேர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பும் ஒரு மாணவன் ஆரம்பத்திலையே காஇதாக்களை வாதாட முன்வரக்கூடாது சில பொழுதுகளில் வழி தவறி விடலாம். முதலில் காஇதாக்களை ஏற்று பிக்ஹ் துறையில் படிக்கவேண்டு துறையில் தேர்ச்சிபெற்ற பின்னறே காஇதாக்களை பற்றி வாதாட முடியும்.

இந்த சின்ன சின்ன விஷயம் எல்லாம் எதுக்கு சொல்றேன் என்றால், நமது தமிழ் உலகில் இருக்கும் பலருக்கு தெரிந்தது “இது ஸுன்னாஹ், இது பித்அத்” என்பது மட்டும் தான், தெரிந்த அந்த ஓன்றை வைத்துக் கொன்டு மார்க்கத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் அதே பாணியில் அனுகுவது.

ஹவாரிஜ்களுடைய வழிமுறையும் கிட்டதட்ட இதே போன்றது தான், காஇதாக்கள் உஸூல்கள் புரிதல்கள் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, தான்தோன்றித்தனமாக குர்ஆன் ஹதீஸை அனுகுவது.

எனவே ஸுன்னாஹ்வுடைய உலமாக்களின் கருத்துகளுக்கு முன் தேவையில்லாம வீர வசனம் பேசுவதை விட்டுடு, என்னமோ எமக்கு மட்டும் தான் பித்அத் விஷயத்தில் கவனமும் ஸுன்னாஹ்வுடைய விஷயத்தில் ஆர்வமும் இருக்கிறது, இமாம்கள் எல்லாம் பித்அத் விஷயத்தில் கவனமில்லாதவர்கள் என்ற பீஜே கற்றுதந்த அகங்கார அனுகுமுறையை விட்டுடு ஒரு நிதானமான போக்கை கடைபிடிப்போமாக.

‍‍‍‍‍‍Hamdhan Hyrullah,
Paragahadeniya

‍‍‍‍‍‍பிக்ஹ் என்ற வார்த்தையை பலர் மார்க்கசட்டங்கள் விஷயத்தில் உபயோகிக்கப்படுவதை தான் செவிமடுத்து இருப்பார்கள். ஆனால் அது குர்ஆன் ஸுன்னாஹ்வில் இருந்து எடுக்ககூடிய சட்டம் என்பதைவிட விசாலமான ஒன்று, (பஃஹ்ம்) மார்க்க விளக்கம், புரிதல், மார்க்க…

‍‍‍‍‍‍பிக்ஹ் என்ற வார்த்தையை பலர் மார்க்கசட்டங்கள் விஷயத்தில் உபயோகிக்கப்படுவதை தான் செவிமடுத்து இருப்பார்கள். ஆனால் அது குர்ஆன் ஸுன்னாஹ்வில் இருந்து எடுக்ககூடிய சட்டம் என்பதைவிட விசாலமான ஒன்று, (பஃஹ்ம்) மார்க்க விளக்கம், புரிதல், மார்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *