சூழல் தாயே

வருடாந்தம் ஜுன் மாதம் 5ஆம் திகதி உலக சற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தின கவிதை.

சூழல் வளமே
இறையளித்த கொடையே
புவித்தாயே

நீரும் நிலமும்
விண்ணும் மண்ணும்
எல்லாம் ஒற்றைப் பிறவிகளே

இயற்கையின் இருப்பிடமே
உயிரினங்களின் உறைவிடமே
சூழல் தாயே

புல்பூண்டு முதல்
மானிடர் வரை
நிலைத்திருப்பிற்கு ஏது நீயே

நீ பச்சைப் பசேலாகத்
திகழ வேண்டும்
உயிரினங்கள் நலமாக
வாழ வேண்டும்.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: