ஒரே ஒரு ஸைன் பண்ணு

யார் நீ
காட்சி :- 02
களம் :- ரஞ்சித்தின் ஆபிஸ், ப்ரைவட் ஹாஸ்பிடல்
கதாபாத்திரக்கள்:- ரஞ்சித், தேவா, ரோஷன் (ரஞ்சித், தேவா இருவரினதும் நண்பன்), ரமனி, கெளஷல்யா, தேவராமன்(டாக்டர்)

(காலையில் எழுந்தவுடன் மிகவும் வேகமாக புறப்பட்டு வீட்டை விட்டு ஆபிஸை நோக்கி புறப்பட்டான் ரஞ்சித்) (அதிக வேகத்தில் ரஞ்சித் வந்திருப்பதைக் கண்ட ரொஷன் ரஞ்சித் கொலை செய்யக் கூடிய அளவில் சீற்றமாய் இருப்பதை உணர்ந்தான் ரஞ்சித்)

ரஞ்சித்:- டேய் ரோஷன்! இங்க வாடா அந்த திருட்டு நாய!

ரோஷன்:- இந்தா பஸ்டு இந்த காபிfய சாப்புடு. அப்புறமா நாய இழுத்துக்கலாம்.

ரஞ்சித்:- ஒனக்கு அறிவுங்குறது கொஞ்சமாவது இருக்கா? நா அவன இழுத்துட்டு வர சொன்னா நீ காபிfய நீட்டுர! இடியட்.

ரோஷன்:- அவசரப்பட்டு எதயும் செய்ய முடியாது நண்பா. பொறுமயா தா காரியம் சாதிக்க முயற்சி பண்ணனும்.

ரஞ்சித்:- நீ இப்ப எனக்கு க்ளாஸ் யெடுக்குறியா? ஒலராம போய் அவன இழுத்துட்டு வா.

ரோஷன்:- அப்பிடி என்னதான் பண்ணிட்டான்? அந்த பழய கோட்ட போட்டுகிட்டு கொஞ்சம் ரமனிய பார்க்க போயிட்டான்! அவளவு தானே. விடுடா.

ரஞ்சித்:- அட பைத்தியமே ரமனி மட்டும் ஒவ்வொரு தடவயும் கத்தல! நாம எல்லாம் கும்பலா ஜெயில்கு போய் கலி திங்க வேண்டியது தா!

ரோஷன்:- அது தான் டா, நண்பா இவன எப்படி சரி அடக்கிறனும். பfஸ்டு சொத்த எல்லாம் ஸைன் வெச்சி எட்த்துட்டு ஆள முடிச்சுறனும்!

தேவா:- அடேய் ரஞ்சித்! உன்ன அந்தளவு தூரம் போக நான் விட மாட்டேன் டா. ஒங்க எல்லாரோடயும் எல்லா விதமான திட்டங்களையும் வெளிய காட்டத்தான்டா போறே!

ரோஷன்:-அது வரைக்கும் நீ உயிரோட இருக்கனுமா? அப்பிபின்னா இப்ப வாய மூடு சும்மா பெனாத்திட்டு.

தேவா:- கூட பொறந்த பொறவிங்களுக்கு எடயுல வெஷத்த மூட்டிடு குளிரா காய ப்க்குற?

(இந்த வார்த்தையை கேட்டவுடன் கோபம் கூடிய ரஞ்சித் எழுந்து தேவாவை கண்ணத்தில் அடித்தான்)

ரஞ்சித்:- எவ்வளவு தா அடி வாங்குவ? திருந்த மாட்டியா? ஒரு ஸைன் ஒரே ஒரு ஸைன் இத பண்ணிட்டு மூடிட்டு போவியா? அது இல்லாம தொல்ல பண்ணிட்டு! ச்சசசச.

தேவா:- நீ என்னோட சொத்த மட்டுமா யெடுத்துக்க பாக்குற? என்னோட உயிரான ரமனியையும் ஏமாத்திட்டு இருக்கியேடா! யெதுவுமே தெரியாம கெடக்குற யே ரமனிய யேன்டா சோதிக்குற?

ரோஷன்:- இவன் மட்டுமா ரமனிய சோதிக்குறான்? ஒன்னோட அத்த ரம்னியோட அம்மா அவளும் கூட்டு சேந்து தா ஒன்ன இந்த நெலமக்கி ஆளாக்கிட்டு ரமனிய சோதிக்கிறா! போயா சும்மா.

தேவா:- ஆண்டவ இதெல்லா பாத்துகட்டு தா டா இருக்கான்.

ரஞ்சித்:- இங்க பாரு இது என்னோட ஆபிஸ். இங்க இப்புடி ஒரு யெடம் இருக்குறதே யாருக்கு தெரியாது! இங்க யிப்பிடி கத்தவும் முடியாது! இதோட இந்த கூத்த நிறுத்திக்க. சொல்லிட்டன்!

ரோஷன்:- ஒனக்கு கோட் போட்டு ஆழையனும்னா இந்த ரூம்லயே ஆழஞ்சிக்க! வெளில அடி வெச்ச அப்புறம் மகனே!

தேவா:- என்னடா பண்ணுவிங்க? நான் இந்த உலகுக்கு யெடுத்து காட்ட தான்டா போறே! நீங்ங யெல்லா யாருன்னு.

ரஞ்சித்:- நீ பண்ணுன எல்லா நல்ல காரியத்தயும் ஒம் பொண்டாட்டியே கெடுத்துட்டா! நீ ஒன்னும் உலகுக்கு யெடுத்து காட்ட வேனாம். போய் கெடடா ரூமுல!


(என்று கூறிய படியே தேவாவை அறைக்குள் தள்ளி விட்டனர்.அதே வேலை கெளஷல்யா ரமனியை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவ மனை ஒன்றிற்கு வருகிறாள்.

தேவராமன்:- சொல்லங்க ரமனி என்ன ப்ராப்ளம்??

ரமனி:- அத யெனக்கு சொல்ல பயமா இருக்கு!

கெளஷல்யா:- அது வந்து தேவராமன்.

தேவராமன்:- இல்ல இல்ல ரமனி நீங்களே சொல்லுங்க யெதுக்கு பயப்பட வேறாம்.

ரமனி:- நீங்க என்னோட பெfமிலி டாக்டர் ஒங்களுக்கே தெரியும் தேவா எறந்துடாருன்னு. அனா மறுபடியும் அதே தேவா என்ன மீட் பண்ண வராரு!

தேவராமன்:- அடடா, என்ன ரமனி இது புது கதயா இருக்கு? எறந்து போன ஒருத்தர் எப்படி வருவாரு? ஹா ஹா ஹா.

ரமனி:- என்ன நீங்க என் தேவா பேர் சொன்னா சிரிக்க ஆரம்பிச்சிட்டிங்க. நிறுத்துங்க தேவராமன்!

கெளஷல்யா:- ரமனி உன் கோபத்த கொற.

தேவராமன்:- இது தா சொல்றது கணவன் மேல ஒரு அளவு பாசம் வெக்கணுன்னு.

ரமனி:- என்னது?

தேவராமன்:- நீ அதிகமா இறக்கம் வெச்ச ஒன்னோட புருஷன் ஒன்ன விட்டு திடிருன்னு பிரிஞ்ச கவல தா ஒன்ன இப்ப இப்படி தாக்கி இருக்கு. இது ஒன்னும் பெனிய ப்ராப்ளம் இல்ல சரி பண்ணிடலாம்.

ரமனி :- என்ன சொல்லுறிங்க.

தேவராமன்:- நீ தேவா கூட ஒரு பத்துவருஷம் தா வாழ்ந்திருப்ப but அவன் மேல நீ வெச்ச பாசம் அதவிட அதிகமா இருக்கு. சோ ஒன்னால அவன மறக்க முடியல. அவன பத்தி நெனச்சு நெனச்சு நீ தூங்காம இருந்து இருக்கனும். அது தா இது எல்லா. இத கொணப்படுத்தலாம். டான்ட் வொறி.

தேவராமன்:- ரமனி நீ இப்ப வெளிய போகலாம். ஒங்க அம்மா கூட நா கொஞ்சம் பர்சனலா பேசனும்.

ரமனி:- ஓகே..

(அவள் வெளியே சென்றவுடன்)

தேவராமன்:- அடியே நரச்ச கெழவியே. இப்படி தா கைதிய காட்டி கொடுப்பியா? என்னடி இது எல்லா?

கெளஷல்யா:- நான் என்ன பண்ண? ரஞ்சித் தா நடந்த எல்லா சொல்லிருப்பானே!

தேவராமன்:- சரி சரி. அந்த தேவா இடியட். ஒரு ஸைன் வெச்சி தொலக்க மாட்டங்குறானே.

கெளஷல்யா:- சீக்கரமா யேதாவது ரெண்ணு மாத்தரய கையில தா. இல்லனா அவ உள்ள வந்துடுவா.

தேவராமன்:- அதுவும் சரி தா. இந்தா சீக்கரமா போ! நா யெல்லா ரஞ்சித் கிட்ட சொல்லிக்கிறேன்.

கெளஷல்யா:- ஓகே ஓகே நா கெலம்புறே பாய்.

(தன்னை சுற்றி என்ன நடக்கிறது என சொல்ல முடியாமல் பதறுகின்ற தேவாவின் உள்ளத்துடனும், தன்னிடம் வந்து தேவா என்று பேசுபவன் உண்மையிலேயே யார் என அறியத் துடிக்கும் ரமனியின் கவலையுடனும். இன்றைய காட்சி நிறைவடைகிறது.)

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: