நமது தேசப்படம்

ஆறுகையெல்லாம்
கடல் கொண்டு போகிறது

கொக்குகளெல்லாம்
குளம் வற்றிச் செத்து போயின

வேலிகள்
பயிர்களின் ஆணி வேரறுத்து
இழுத்து பிடுங்கி எடுத்து வீசுகின்றன

அகதி முகாம்களில்
கோவணத்துக்குக் கூடத் துணியின்றிக்
குழந்தைகள் திரிகின்றன

நமது தேசப்படம்
செல்லரித்துக் கொண்டிருக்கிறது

சந்திக்கு வருவாயா சாயங்காலம்
மீண்டும் இது பற்றி
பேசிக் கொண்டிருக்கலாம்..

அஷ்ரப் சிஹாப்தீன்

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: