ஈத் கிடைக்குமா?

ஓரிரு தினங்களில் பெருநாள்
என்றாலும் எவ்வித
ஆயத்தங்களும் இன்றி
பொழுதை கழித்து
கொண்டிருக்கிறேன்.

எவ்வித பிடிப்புமின்றி
வெறுமையாகவே
இருந்தது நாட்கள்.

நாட்டின் அசாதாரண
சூழ்நிலை கருதி
பெருநாளை ஆடம்பரமின்றி
கொண்டாடினாலும்
சில நிமிட இன்பங்களும்
தொலைவாகும்
என்பதை யார் அறிவது?

பெருநாள் என்றாலே
அதிகாலையில் எழுந்து
குளித்து விட்டு
அவசர அவசரமாக
தொழுகை திடலுக்கு
செல்வதுதான் பேரானந்தம்.

தொழுது விட்டு ஸலாத்துடன்
பெருநாள் வாழ்த்தையும்
தவறுகள் நடந்திருப்பின்
மன்னிப்பையும் கேட்டு
முகமலர்ச்சியுடன்
அன்பை பரிமாறிக் கொள்வது
எத்துனை அழகு!

அந்த நொடி சந்தோசத்திற்கு
வேறு எதுவும் ஈடாகாது.
இம்முறையேனும் கிடைக்குமா
மீண்டும் அந்த பேரின்பம்?
ஏக்கத்துடனே காத்திருக்கிறேன்.

Noor Shahidha
SEUSL.
Badulla.

Leave a Reply