இன்றைய காலத்தில் நடப்பது என்ன?

வீடுகள் பெரிதாகிவிட்டன. குடும்பங்கள் சிறிதாகிவிட்டன. மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆரோக்கியம் மோசமடைந்துள்ளது.

சொத்து செல்வங்கள் அதிகரித்துள்ளன. மன நிம்மதி தொலைந்து விட்டது. வசதிபடைத்தவர்கள் பெருகியுள்ளனர். வறுமையும் உயர்வடைந்துள்ளது. விவேகம் உயர்ந்திருக்கின்றது. உணர்வுகள் குன்றிவிட்டன. அறிவு பெருகியுள்ளது. சமயோசிதம் குறைந்து விட்டது.

கல்விமான்கள் அதிகரித்துள்ளனர். பண்பாடுகள் அகன்றுவிட்டன. விதவிதமான கடிகாரங்கள் உள்ளன. நேரம் கிடைப்பதோ அரிதாகி விட்டது. மனிதர்கள் அதிகரித்துள்ளனர். மனிதநேயம் செத்துவிட்டது.

மார்க்கம் படிப்பதற்கான வழிகள் நிறைந்துள்ளன. ஆனால் மார்க்கப் பற்று குறைந்து விட்டது. சுவனத்துக்கான வழிகள் தாராளம். நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகளும் ஏராளம். நம் வாழ்வு நம் கையில். மரணத்தருவாயில் கைசேதம் சரிவராது. மரணத்தின் பின் எதுவுமே சரிவராது( நன்மைகள் தவிர).

இறைவா! எமது நிலைமைகளை சீராக்கி எம் இறுதி முடிவினையும் நன்மையாக ஆக்கிவிடு.

பாஹிர் சுபைர்

Leave a Reply