தனிமை

தனிமை தனிமை
எங்கில்லை தனிமை
யாருக்கில்லை தனிமை!

மனிதா உன்
ஆரம்பம் ஒரு தனிமை
உன் முடிவும் ஒரு தனிமை

பத்து மாதம் தாயின்
கருவரையும் தனிமையே.
இறந்த பின் உன்
கல்லறையும் தனிமையே.

அனாதையாக பிறந்தவனுக்கு
வாழ்க்கையே தனிமை.
உடன் பிறப்படற்றவனுக்கு
சிறுவயதும் தனிமையே.

பசியுடன் பிறந்தவனுக்கு
பள்ளி வாழ்க்கையும் தனிமையே.
உண்மையாக இருப்பவனுக்கு
நண்பர்களால் தனிமையே.

நிறமற்று பிறந்தவனுக்கு
வாலிபமும் தனிமையே.
பணமற்று பிறந்துவிட்டால்
உறவுகளால் தனிமையே.

உருக்கமாக சொல்லி விடவா
தனிமையின் வலியை
நயவஞ்சகன் கூட
நகைத்து வாழ்கிறான்
உண்மையுள்ளவன் ஏன்
தனித்து நிற்கிறான்.

உண்மையின் ஊதியம்
தனிமையா?

Rifkhan (Rahmani)
(SEUSL)

Leave a Reply