என்னை வீழ்த்திய வேஷங்கள்

0 Comments

நீ கூறியது ஒன்றும் கதையல்ல
என்னை ஊமையாக்க விதைத்த விதைகள்
நீ பழகியது ஒன்றும் பாசமல்ல
என்னை வீழ்த்திய வேஷங்கள்
நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல
என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள்

உன் மௌனம் ஒன்றும் விடையல்ல
என் வினாக்களின் மொத்த ரணங்கள்
உன் புன்னகை ஒன்றும் வெற்றியல்ல
என்னை கொல்ல வைக்கும் கத்திகள்
உன் வார்த்தைகள் ஒன்றும் விதியல்ல
என்னை கொன்று விட்ட சதிகள்

உன்னால் நான் மாற்றினேன்
என் விதிகளை
உன்னை வீழ்த்த அல்ல
உன் முன் வாழ்ந்து காட்ட

Shima Harees
puttalam

Leave a Reply

%d bloggers like this: