நரகம்

நரகம்

நெருப்பு நாக்குகள் சிவந்து
நெடுஞ்சாலையாய் அகன்று
கனல் கம்பளமாய் விரிந்திருக்கும்
பாவிகளின் அரண்மனையிது

அகிலத்தில் அன்புப் பானம் சுரக்காத
கல்நெஞ்சங்களின் சொந்தங்களுக்கு
அன்பளிப்பாய்க் கிடைத்திடும்
அழியா அரியாசனமிது

தரணியில் சுவனத்தை தேடி
தம் கவனத்தை சொகுசுகளால் மூடி
மறுமையை மறந்த மாந்தர்களின்
முகத்திரை முழுதாய் கிழிக்கப்பட்டு
முத்திரையிடும் கொடூர தளமிது

சிற்றின்பச் சோலையில் புகுந்து
சிந்தனையில் வஞ்சனைகள் கொண்டோர்க்கு
சங்கையாளன் நிரந்தரமாய் நல்கிடும்
சர்ப்பங்களின் சந்நிதானமிது

வாழ்க்கை என்ற தேர்வினிலே
தோற்றுப்போன தேகங்கள்
வேகமாய் நுழையும் தளமும் இதுவே…..

இல்மா அனீஸ்
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்