நபிகளார் வாழ்வியலை எழுத்துருப்படுத்திய தமிழ் புத்தகங்கள்

0 Comments

நபிகள் நாயகம் தொடர்பான பன்முகப் பார்வை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அதிக தேவையுடையதாகவே காணப்படுகிறது. “நபிகளாரின் ஸுன்னா” என்ற வார்த்தை பள்ளிவாசலுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு சமூக, அரசியல், பொருளாதாரம், குடும்பவியல் கருமங்களில் பொருட்படுத்தப்படாமல் தொடர்கின்ற நிலைமை நபிகளார் தொடர்பான முழுமையான புரிதல் இன்மையினையே குறிக்கிறது. நபிகளார் அனேகமான முஸ்லிம் வீடுகளில் மார்க்க போதனைகள் மற்றும் தஃலீம் கிதாப் போன்றவற்றினூடாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவ் அறிமுகத்தில் நபிகளார் தொடர்பான குறுகிய சிந்தனைகள் மற்றும் தனிநபர்களின் சிந்தனை தலையீடு போன்றன […]

அபியும் நானும்.

0 Comments

பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் 2008 இல் வெளிவந்த திரைப்படம் தான் இது. இப்படத்தில் புதுமையாகக் குறிப்பிட்டுக் கூறும் படி எதுவும் இல்லை. நாம் நாளாந்தம் காணும் அப்பாக்களின் ஏக்கம், பிள்ளைகளின் எதிர்பார்ப்பு, அம்மாக்களின் பக்குவம் இவற்றை வைத்து நகைச்சுவையாகவும், இடையிடையில் கண்கலங்கும் படியாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. “வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா” இது, அப்பாக்களுக்கு தன் பெண் பிள்ளைகள் […]

தசாவதாரம்

0 Comments

‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ (Butterfly Effect) கமல் நடிப்பில் வெளியாகிய பிரமாண்டமான படைப்புக்களில் ஒன்று தசாவதாரம். பத்து மாறுபட்ட வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ள இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு படைப்பு என்பதை கடந்த ஒரு வரலாறு எனலாம். அற்புதங்களும், புத்தாக்கங்களும் காட்சிக்கு காட்சி குமிந்த இத்திரைப்படம் முன்வைக்கின்ற ஒரு கோட்பாட்டு மையக்கருத்து கவனிக்கத்தக்கது. ‘தசாவதாரம்’ படத்தை அவதானமாகப் பார்த்திருந்தீர்களானால், படத்தின் எழுத்து ஆரம்பிக்கும்போது, ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துச் சென்று கொண்டே இருக்கும். அது படத்தின் இறுதியில் மீண்டும் வரும். […]

Difference between being passive, aggressive and assertive.

0 Comments

Difference between being passive, aggressive and assertive Passive Being passive means we are not able to express our feelings in front of others because we think other will be annoyed, or they will feel bad or because they are superior to you. Being passive we think we have to swallow our feelings otherwise we will […]

நடிகை ஜோதிகாவின் சர்ச்சை

0 Comments

கோயில்களுக்காக செலவலிப்பதைப்போல பள்ளிக்கூடங்கள் , வைத்தியசாலைக்கும் செலவு செய்யுங்கள். -நடிகை ஜோதிகா- சினிமா பற்றி பேசினாலே வாயிற்கு மண்ணென்னை போட்டு கழுவச்செல்பவர்களுக்கு மத்தியில் ஒரு சினிமா நடிகையைக்கு வாழ்த்துக்கூறுவது என்பது பயம் தான்.ஆனாலும் தமிழ் சினிமாவில் கதையே இன்றி படம் தயாரித்து பணம் பார்ப்பவர்களுக்கு மத்தியிலும் தமது சினிமா வியாபாரத்தில் இலாபம் பார்ப்பதற்காக ‘அது தவறு ; இது தவறு’ என கருத்து கூறும் முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் சமூக நலனிற்கான மனப்பாங்குகளை வெளிப்படுத்தும் பிரபலங்கள் என்றும் […]

இறைத்தூதர் யூனுஸ்​ஸை மீனின் வயிற்றினுள் Lock Down செய்த போது

0 Comments

இறைத்தூதர் யூனுஸ் ஒரு சமயம் மீனின் வயிற்றினுள் Lock down செய்யப்படுகிறார். அப்போது அவர் இறைவனிடம் மன்றாடிய பிரார்த்தனை இதுவே. “ْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏” (லா இலாஹ இல்லா அன்த ஸுப்(B)ஹானக இன்னி குன்து மினல் ழாழிமீன்) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை ; நீ மிகவும் தூய்மையானவன் ; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.” (21 : […]

நிகழ்வுகளுக்குப் பதில் கூறக் கற்றுக்கொள்வோம்!

0 Comments

“நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (2 : 216) மனிதன் தனது வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புக்களை வழங்குகிறான். உதாரணமாக: ஒரு இழப்பு நேர்ந்தால் கவலையினைப் பிரதிபலிக்கிறான். மேலும் வெகுமதிகளைப் பெறும் போது மகிழ்ச்சியடைகிறான். நிகழ்வுகளுக்கும் பிரதிபலிப்புகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது மனச்செயன்முறையாகும். நிகழ்வுகளுக்கான பதிலை […]

அவதிகள் தொடர்வதில்லை!

0 Comments

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” (94:6) ஒரு கதையுடன் கருத்திற்கு செல்லலாம்! உலக அளவில் பாராட்டப்படும் மிகப் பெரிய பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியைத் தோற்றுவித்தவர் மதன்மோகன் மாளவியா? தனது கஷ்டமான வாழ்விலும் அவரது கனவு ஒரு பல்கலைக்கழத்தினை நிருவ வேண்டும் என்பது! பல செல்வந்தர்களிடம் நிதி உதவிக்கு சென்றார். எதுவும் பலனில்லை. அன்றைய புகழ் ஹைதராபாத் நவாப்பிடம் சென்று உதவியை நாடினார். “என்ன தைரியம் இருந்தால் இந்து பல்கலைக்கழகம் கட்ட என்னிடமே வந்து நிதி கேட்பாய்” என்று […]

செல்வந்தராக மாறுவதன் முதல் படிமுறை

0 Comments

முயற்சி செய்து பாருங்கள் “செல்வம் என்பது அதிகப் பொருட்களை வைத்திருப்பதல்ல, மாற்றமாக செல்வம் என்பது நிறைவான உள்ளமாகும்” (புகாரி , முஸ்லிம்) நான் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியின் போது , அதில் கலந்துகொண்டோரிடம் ஒரு வினாவை எழுப்பினேன். “நீங்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு அவசியமானவை எவை? அத்தோடு; உங்கள் குடும்பம் , சமூகம், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வியாபாரப் பங்காளிகள் அனைவரையும் திருப்திப்படுத்த உங்களிடம் இருக்க வேண்டிய செல்வங்கள் எவை?” நீங்களும் பதில் கூறிப் பார்க்கலாம்! பட்டியல் தொடர்ந்தது. […]