பாராளுமன்றத் தேர்தல் 2020 தனித்துவமும் பிரதிநிதித்துவமும்

0 Comments

நடந்தது முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் வடக்கு கிழக்குகில் “தனித்துவம்” வெளியே “பிரதிநிதித்துவம்” என்ற தொனிப்பொருளில் எமது வழிகாட்டல் பதிவுகளை இட்டுரிந்தோம். அந்த வகையில் எம்மோடு இணைந்து இருந்து பதிவுகளை வாசித்து பயனடைந்த அனைவருக்கும் எமது நன்றிகள். அத்துடன் வடக்கில் வன்னி மாவட்டத்தில் – 02 கிழக்கில் மட்டக்களப்பு – 01 திகாமடுல்லை – 04 திருகோணமலை – 02 வெளிமாவட்டம் கொழும்பு – 02 கண்டி – 02 கேகாலை – 01 அநுராதபுரம் – […]

கலநிலவரம் – அநுராதபுர மாவட்டம்

0 Comments

இம் முறை அநுராதபுர மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளும் 10 சுயாதீனக் குழுக்களில் இருந்தும் 9 ஆசனங்களுக்காக சுமார் 264 வேட்பாளரகள் போட்டியிபோட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 693 634 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்களில் இருந்து 19 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடகின்றனர். UNP – AMM. SMAIL ULF – M. SAMSUDEEN NPP – LT. NASURULLAH SJB – Ishak a rahman P. Saheedu […]

முஸ்லிம் பிரதிநிதித்துவம்

0 Comments

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 09 நாட்களே உள்ள நிலையில் எல்லா எல்லா கட்சிகளும் மும்முரமாக பிரச்சார வேலைகளில் ஈடுபடடுக் கொண்டிருக்கின்றன. COVID 19 சவால்களையும் தாண்டி எவ்வாறாயினும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளர். இந்த வேளையில் முஸ்லிம்களாகிய எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. கடந்த பாராளுமன்றத்தில் 21 உறுப்பினர்கள் SLMC, ACMC, UNP, SLFP ஆகிய கட்சிகளல் இருந்து […]

மீண்டும் எரியூட்டப்பட்டது

0 Comments

தீர்வுகள் திணிக்கப்பட்டு சிந்தனைக்கு சீல்வைக்கப்பட்டது ஒன்றிப்போதலை தவிர வழியே இல்லை – வேறு மாயைகள் போலிகளால் வழிநடாத்தப்படும் விசித்திர உலகமிது. மரங்களை சாய்க்க கோடாரிக்கு பிடிகள்தானே துணைபோகும். எரியுண்ட கடந்தகாலம் பசுமையான எதிர்காலக் கனவுகளால் மறைக்கப்பட இடை இடையே தீப்பொறிகளாய் தீவிரவாத கோஷங்கள். சகவாழ்வு தேசிய உணர்வு வேறுபாடுகள் நிறைந்த வேஷதாரிகளின் முரண்பாடுகளால் அர்த்தமற்றுப் போகின்றது. தோற்றுப்போன நல்லிணக்கம் இனவாதிகளால் மீண்டும் எரியூட்டப்பட்டது. நாச்சியாதீவு எம்.சஹ்ரின் அஹமட்

பாராளுமன்ற தேர்தல் 2020 மனசாட்சியின் பதிவு – 01

0 Comments

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த பேரம் பேசி எமது உரிமைகளையும் உடைமைகளையும் பெற்றுக்கொண்ட காலம் மாறி இன்று எமது உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு முக்கியமான தேர்தலை அண்மித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளே இனவாதம்தான். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி இருசாராரும் எம்மை பந்தாடுவார்கள். இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு பட்ட கோணங்களிலும் எமது பார்வையை செலுத்த வேண்டும். நான் இங்கு நான்கு விடயங்களை கோடிட்டு காட்டலாம் என நினைக்கிறேன். […]

நிர்வாணமாய் வெள்ளை மாளிகை

0 Comments

உலகமே அமைதியாய் மெல்ல மெல்ல மீளச்சுழல இன்னுமொரு உயிர் கதரக் கதர பிரிகின்றது மானிடத்தில். உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு. வெள்ளையனின் கறுப்புப் பாதணி கறுப்பனின் தலைமீது நசுக்க வெள்ளை மாளிகையின் கோமணம் அவிழ்ந்து உயிருடன் இழந்து நின்றது நிர்வாணமாய். மானிடமெங்கும் மனித உயிர்களை கொன்று குவித்து புனித நகரங்களை போர்க்களமாக்கி போலியாய் மனிதாபிமானம் என்ற பெயரில் லீலிக் கண்ணீர் விட்டு வளங்களை சுரண்டி சூரையாடிடும் வல்லரசுக்கு வந்ததோ சோதனைகள் பரிதாபமாக மக்கள் கொடிய நோய் கொரனாவால் […]

உம்மாவின் நினைவுகள்

0 Comments

ஆராத காயங்கள் தீராத சோகங்கள் நீங்காத நினைவுகள் உம்மா மௌத்து ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீரும் உண்மை அறிந்தும் நெஞ்சம் உங்கள் பிரிவின் துயரங்களை மறக்க மறுக்குதே ரமழான் தலைபிறை பார்த்துமே தலைநோன்பு பிடிக்கவா என்பீங்க புதுச்சாரம் தச்சிவைச்சி முன் வரிசையில தாராவீகு தொழச்சொல்லி நீங்களும் முழுமையாக தொழுதீங்க முப்பது ஜூசு ஓதி முழுசா முடிப்பீங்க தஹஜ்ஜது தொழுது விட்டு சுடச்சுட சஹர் சமைச்சி தந்திங்க பெருநாள் பிறைபார்கமுன்னே பலகாரம் தின்பண்டங்கள் கையாள உடுப்பு தைச்சி தங்கச்சிகள […]

கடைசிச் சொட்டு ஒட்சிசன்

0 Comments

கடைசிச் சொட்டு ஒட்சிசன் மனிதாபினத்தை மரணிக்கச் செய்தது மாயிக்கத் துடிதுடித்தஉயிருக்கு வாழ்க்கை வரம் கொடுத்தது மனித நேயம் இறைவனின் தீர்ப்பு வாழ்வதற்கே வாழ்க்கை ஆயுள் முடிந்தால் இறப்பு நிச்சயம் விதிவரைந்த பாதையில் சிங்களம் தமிழ் முஸ்லிம் இங்கில்லை பிரிவினைகள். நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கொடிய வறுமையின் கோரமான மறுமுகம்

0 Comments

பிரிந்த உயிர்கள் அறியத்தந்த செய்தி என்ன கொடிய வறுமையின் கோரமான மறுமுகமே கொரோனாவின் கோரத்தாண்டவம் எங்கள் தன்மானத்தையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர் வாழ்தலுக்கான உரிமையும் பறித்துக் கொண்டது பரிதாபமாக. சேர்த்து வைத்திருந்த சில்லறைகள் தீர்ந்து போக ஒரு வேளை சோறுதானே இந்த கதைகளின் சாராம்சம். அன்றாடம் கூலிக்குள் வாழ்க்கை திண்டாட்டம் ஊரடங்கி கிடக்கிறது நாங்கள் ஒருவேளை சோற்றுக்கு மன்றாட்டம் இனவாதிகளுக்கு கொண்டாட்டம் கொரோனா கோரத்தாண்டவம் இன்னும் என்னென்ன சோதனைகள் நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்