விவாகம்- விவாகரத்து- ஆரோக்கியமான சமூக நகர்வில் அதன் போக்குகள்

0 Comments

அறிமுகம் இந்த உலகைப் பொறுத்தவரையில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றின்பால் தங்கியிருக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. அவ்வகையில் தான் மனிதனாக பிறந்த நாமும் ஏதோ ஒன்றில் தங்கி வாழக் கூடியவர்களாக இருக்கிறோம். ஓர் ஆண் இன்றி பெண்ணிணாலும் ஒரு பெண் இன்றி ஆணினாலும் தனித்து வாழ்வது என்பது ஓர் கடினமான விடயமாகும். பெண் என்பவள் தன் பெற்றோருக்கு அடுத்ததாக தனக்குரிய பாதுகாவலனை தேடிக் கொள்ளவும் ஓர் ஆண் தனக்குரிய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக […]

பாராளுமன்றத் தேர்தல்

0 Comments

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது நாட்டின் எமது இருப்பை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு சிந்தனைகளையும் வழிக்காட்டுதல்களையும்எம் சமூகத்தில் சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா. தேர்தல் பற்றிய விழிப்புணர்வுகள் அற்ற சமூகமாகவும் வாக்குகளை வீணடிக்கும் சமூகமாகவும் எமது இருப்பை கேள்விக்கு உட்படுத்த கூடிய ஒரு கட்டற்ற சமூகமாக நாம் மாறி விடக் கூடாது. கற்ற வர்க்கத்தின் தார்மீக கடமை மற்றைய மக்களுக்கு இது போன்ற சமூக விடயங்களை எத்தி வைப்பதாகும். எமது […]

புத்தியை மழுங்கச் செய்யும் போதை

0 Comments

என்ன தான் இஸ்லாம் மனிதர்களுக்கு அழகிய முறையில் மிகச் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி இருந்தும் அந்த வழிமுறையை ஓர் அணுவளவேனும் பின்பற்றாத பலர் நம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள். முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரபல நகரத்தில் இன்று நடந்த சம்பவம். இஸ்லாம் எதை தடை செய்துள்ளதோ அதில் பற் பல நன்மைகள் உள்ளன. ஒரு தாய் மற்றும் அவளது மகன் அவர்களுடைய குடும்பம் பாதை வழியாக வந்து கொண்டிருந்தார்கள். நானும் பஸ் தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். […]

கல்வி ஏன் எதற்கு?

0 Comments

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள […]

புரிதல் உடனான திருமண வாழ்க்கை

0 Comments

இன்றைய காலச்சூழலில் திருமண வாழ்வியல் என்பது ஓர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றது , என்பது தான் உண்மையாகும். அதன் உள்ளடக்கம் மறைக்கப்பட்டு விட்டது. அதன் புனிதத்தன்மை கூட இன்றைய கால சூழலில் இல்லாமல் தான் உள்ளது. அந்த அளவு அதன் புனிதம் மாற்றப்பட்டு விட்டது. இதை எமது உள்ளம் ஏற்காமல் விட்டாலும் இது தான் யதார்த்தமாகும். அல் குர்ஆன், நபி மொழி, வாழ்க்கை வரலாறு என பலதும் சிறந்த முறையில் இதைப்பற்றிப்பேசி இருந்தும் ஏன் அதை […]

பெண் என்பவள் யார்?

0 Comments

ஒரு கவிதையுடன் ஆரம்பம் செய்கிறேன். ஒரு ஆண்மகன் தகப்பனாய் மாறுவது தாய்மை என்னும் பெண்மையினாலே. காதலன் கணவனாய் மாறுவது மனைவி என்னும் பெண்மையினாலே. உயிர் தோழன் உயிர் தரும் காதலனாய் மாறுவது காதலி என்னும் பெண்மையினாலே. நட்பின் முழுமையை உணர்த்துவது தோழி என்னும் பெண்மையினாலே. மழலையை ஈன்றெடுக்க மரண எல்லை வரை செல்லும் பெண்மையை மனித சதையிற்காக சித்திரவதை செய்பவர்கள் ஆண்கள் அல்ல மனிதனை உணவாய் உண்ணும் அகோராக்களை காட்டிலும் பெரும் அரக்கர்கள் பெண்கள் இப்பிரபஞ்சத்தை பிராகாசிக்க […]

அந்த இரவு எது ?

0 Comments

அந்த இரவு இந்த இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத் இரவு என்றும், ரமழானில் ஓர் இரவென்றும், ரமழானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமழானில் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவு என்பதுதான். إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۝لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ […]

ரமழானும் பாவமன்னிப்பும்

0 Comments

குர்ஆன் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222) பாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதோடு அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கேட்டுத் திரும்புங்கள். (66.8) பாவமன்னிப்புக் கேட்பது ஈடேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழியாகும். அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே! (இதில் எந்த விசயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் […]

தாய்மையே

0 Comments

தாய்மை தீபமேற்றி அன்புச் சுடர் தந்த எந்தன் அன்னையே! ஈரைந்து மாதங்கள் கருவறைப் பொக்கிஷமாய் என்னைக் கட்டிக் காத்த என்னருமை அன்னை நீ உன் உதிரத்தை பால் அமுதாய் சுரந்து பாசத்துடன் ஊட்டிய காசினி போற்றும் அன்னை நீ என் பின்னாலே உலா வந்து நிலா காட்டி நிறை குடமாய் என் வயிறு நிரப்பிய என்னினிய அன்னை நீ என் வாழ்வு செழிக்க கார்கால மழையாய் பாரினில் திகழ்ந்த என்னினியவர்கள் மிஸ்ரியா மின்ஸார் நளீபா நளீர் என்ற […]